Monday, September 9, 2019

ச்சும்மா ஜாலிக்கு! கொஞ்சம் பாட்டு! கொஞ்சம் கேள்வி!

சிலவருடங்களுக்கு முன்னால் பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கத்துக்கும் எனக்கும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் யார் யார் குரல் எந்தெந்த நடிகர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் நடந்ததுண்டு. கதா நாயகனுக்குப் பாடவென்றே பாடகர்கள் வந்ததெப்போது என்ற கேள்வியும் கூடவே வந்ததுண்டு! 



சீர்காழி கோவிந்தராஜன்! வெண்கலக் குரலோன்! சில படங்களில் கதாநாயகனுக்காகவும் பாடியிருக்கிறார்! கொஞ்சம் கேலி கிண்டல் கலந்து பாடுவதென்றால் சீர்காழிக்கு குஷி வந்துவிடும் போல! 


மனிதன் மாறவில்லை படத்துக்காக ஜெமினி கணேசனுக்கு சீர்காழி பின்னணி பாடியிருப்பது அத்தனை பொருத்தமாகவா இருந்தது? 


அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் மாதிரி டைட்டில் சாங் பாடுவது சீர்காழிக்குக் கொஞ்சம் ராசியாக இருந்ததுண்டு! ஆனால் முத்துராமன் மாதிரி   நடிகர்களுக்குப் பாடியதை என்னவென்று சொல்வது?


சீர்காழி கோவிந்தராஜன் மாதிரியே அந்தநாட்களில் கதா நாயகனுக்கும் பாடியதுண்டு பின்னாட்களில் காமெடியனுக்கும் பாடியதுண்டு! A L ராகவன்! திறமையான பாடகர்!


மனிதன் மாறவில்லை படத்தில் A நாகேஸ்வர ராவுக்காக இந்தப்பாடலை A L ராகவனும், ஜமுனாவுக்காக P சுசீலாவும் பாடிய டூயட் இது!  

         
பதிபக்தி  படத்தில் ஜெமினி கணேசனுக்காகவும் இந்தப் பாடலை  A L ராகவன்சுசீலாவுடன் இணைந்து  பாடி இருக்கிறார். எப்படி இருக்கிறது? 



கல்யாண் குமாருக்காக  A L ராகவன் பாடிய இந்தப்பாடல் அந்த நாட்களில் ரொம்பவுமே பிரபலம்! காதல் தோல்வியில் துவண்ட விடலைப்பையன்களுடைய இதயகீதமாகவே அந்த நாட்களில் இந்தப்பாடல் இருந்தது. நம்ப முடிகிறதா? 


காசே தான் கடவுளடா! இந்தப் படத்துக்காக  A L ராகவன் கோஷ்டியாக பாடிய பாடல் இது. ஆனாலும் தனித்துத் தெரிவதைக் கேட்க முடிகிறதா?

எனக்கென்னவோ சீர்காழியை விட A L ராகவன் தான் சிறந்த பாடகராகத் தோன்றுகிறது! உங்களுக்கு??

மீண்டும் சந்திப்போம்.
   

14 comments:

  1. ஏ எல் ராகவன் குரல் நாகேஷுக்கு வெகு பொருத்தம்.   அவர் பாடல்களில் எங்கிருந்தாலும் வாழ்க பாடல் போலவே பாப்பா பாப்பா கதை கேளு ஒன்ஸ் எ பாப்பா, போன்ற பாடல்களும் பிடிக்கும்.  நாகேஷுக்காக அவர் பாடிய பாடல்களில் அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம் சுவாரஸ்யம்!
    சீர்காழி பாடல்களில் பல பாடல்கள் இனிமை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! இந்தப்பதிவில் சொல்லவந்தது, ஆனால் சொல்லாமல் விட்டவிஷயம் இன்னாருக்கு இன்னார் குரல்தான் பொருத்தம் என்பதே நாமாகக் கற்பித்துக் கொள்ளும் ஒரு விஷயம் தான்!

      Delete
    2. ஸ்ரீராம் இங்கு சார் பகிர்ந்திருக்கும் பாடல் ஊமைப்பெண்ணல்லோ பாடலில் ஏ எல் ராகவன் குரல் ஜெமினிக்கு நன்றாகவே பொருந்திப் போகிறதே!

      கீதா

      Delete
    3. பின்னணிக்குரல்கள் பொதுவாக அச்சு அசலாக இன்னொருவதுக்கு போருந்துவதே இல்லை! ஒரே குறளைத் தொடர்ந்து கேட்டால் பொருந்துவதாக நாமாகக் கற்பித்துக் கொள்கிறோம். ஜெமினிக்கு PBS குரல் மிகவும் பொருத்தமாக இருந்ததாக நாம் நினைப்பதையும் சேர்த்தே!

      Delete
  2. இன்னாருக்கு இன்னார் குரல்தான் பொருத்தம் என்பதை விட
    இனிய பாடல்களைக் கேட்டதில் மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை செல்வராஜூ சார்! பழசுன்னாலும் கூட இந்தப்பாடல்களை இன்றைக்கும் கேட்க, பகிர்ந்து கொள்ள முடிவதில் ஒரு சந்தோஷம்!

      Delete
  3. காசேதான் கடவுளடா படப் பாடல் சீன் எல்லாம் இன்னிக்குத்தான் முதல் தடவையா பார்க்கிறேன் ஸார். பாட்டு ரொம்ப நல்லாருக்கு...இசையும் எனக்குப் பிடித்தது..

    இந்தப் பாட்டு இப்ப கூட ரொம்பவே பொருந்திப் போகுதுல்ல? ரொம்ப நல்லாருக்கு பாட்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. காசேதான் கடவுளடா ஒரு நல்ல காமெடிப்படம்! சந்தேகமே இல்லை! காசேதான் கடவுளப்பா அந்தக்கடவுளுக்கும் அது தெரியுமப்பா என்று இன்னொரு TMS பட்டும் கூட இதே ரகம் தான்! சில Universal statements எந்தக்காலத்திலும் பொருத்தமாக இருப்பது போலத்தோன்றுவது சகஜம்தான்!

      Delete
  4. கூடவே ஒரு விஷயமும் புரிந்தது...நம்ம ஸ்ரீராம் அப்பப்ப சொல்லும் அதே அதே சபாபதே வின் மூலமும்!!!!!!!!!!!!ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எபியில் இன்னும் இதுமாதிரி பல ஆச்சரியங்கள் ஸ்ரீராம் உபயத்தில் இருக்கிறதே!

      Delete
  5. எங்கிருந்தாலும் வாழ்க படா ஃபேமஸ் பாட்டாச்சே....எங்க காலேஜ்ல கூட காதல் பிசுபிசுத்துப் போச்சுனா இந்தப் பாட்டைத்தான் பாடிட்டு அலைவாங்க. அத்தனை ஃபேமஸ்...நீங்க சொல்லிருப்பது போல்.

    அருமையான பாடலும் கூட. ஏ எல் ராகவினின் குரலும் தான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. காதலைவிட காதல் தோல்விப்பாட்டுக்கள் மிகவும் பிரபலமாக இருந்தது, இருப்பது ஏன் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? AL ராகவன் மிக்கது திறமையான பாடகர்தான் என்பதில் சந்தேகமே இல்லை!

      Delete
  6. பகிர்ந்திருக்கும் எல்லா பாட்டுமே அருமை சார்.

    கா க படத்துப் பாடலைத் தவிர மற்றது எல்லாம் கேட்டிருக்கிறேன். மீண்டும் இங்கு பல வருஷங்களுக்குப் பிறகு கேட்டு ரசித்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே மனதில் நின்ற பாடல்கள்தான்! ரசனைக்கு நன்றி!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)