இங்கே ஒவ்வொரு ஊடகத்திலும் எது தலைப்புச் செய்தி ஆகிறது அல்லது ஆக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் கவனித்தாலே அரசியலை மட்டுமல்ல, செய்திகளின் அரசியலையும் சேர்த்தே சரியாக எடை போட முடியும், சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்பது என்னுடைய அனுபவம்.
செய்திகளோ, செய்திகளின் அரசியலோ கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைகிற தூரிகைக் கனவு, கற்பனை மாதிரி இல்லை என்பதை நிச்சயமாகச் சொல்ல முடிகிற அதே நேரம் செய்திக்கும் தலைப்புச் செய்திக்கும் என்ன வித்தியாசம் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டாமா?
Great comment bro..
இந்த ட்வீட்டர் செய்தியையே எடுத்துக் கொள்ளுங்கள்! இதை ட்வீட் செய்த மிலிந்த் தியோரா, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன். 2006 இலிருந்து 2011 வரை இருமுறை மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்தவர். இந்திரா குடும்ப விசுவாசி! 2014 இல் இறந்த பிறகு, மகன் மிலிந்த் தியோரா மும்பை காங்கிரஸ் தலைவராக சமீப காலம் வரை இருந்தார். எதனால் இவருடைய இந்த ட்வீட் ஒரு தலைப்புச் செய்தியாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தச் செய்திக்கு எதிர்வினையாக மறைந்த ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் உட்படப் பலரும் என்னென்ன மாதிரி விமரிசித்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
மீண்டும் சந்திப்போம்.
நல்லதை (அப்படீன்னு மனசுல தோணுவதை) பாராட்டலைனா, வெறும் எதிர்கட்சி என்று சொல்வதில் அர்த்தம் இருக்காது. எதை எடுத்தாலும் எதிர்க்கணும் என்றால் மக்கள் மனதில் இடம் பெற முடியாது. 370 நீக்கத்தில் சிந்தியா போன்றவர்கள் எடுத்த நிலைக்கும் காங்கிரஸ் நிலைக்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.
ReplyDeleteவாருங்கள் நெ.த. சார்!
Deleteஇங்கே இந்திய அரசியலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆதரவாளர்களை அடிமைகளாகவே வைத்திருக்க முனைவதில் இன்னொரு கட்சியின் அடிமைக்கூட்டத்தை எதிரிகளாகவே வைத்திருக்கிற அவலம் புரிகிறதா? தேசமே முதலில் என்று பொறுப்புடன் கூடிய அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகச் சொல்வதற்கு எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேயும் கழகங்கள் அப்படிக் கூறுகட்டி அரசியல் செய்வதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
Sir, Appreciating the good , opposing the bad is not the virtue of indian politicians. opposition party means oppose What ever ruling party does, is the understanding here. for this partly , the public has to be blamed for this
ReplyDeleteவாருங்கள் சரவணன்!
Deleteஇந்திய நாடாளுமன்ற/சட்டசபை நடைமுறைகளில் இப்போதிருக்கிற மாதிரியே ஆரம்ப நாட்களில் இருந்ததில்லை. நேரு நாட்களில் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கையில் மிக்க குறைவாக இருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை மிக்க கண்ணியமாக நிறைவேற்றத் தவறியதே இல்லை! இப்போதிருக்கிற அசிங்கம் இந்திரா பதவிக்கு வந்து காங்கிரசை உடைத்து, எதிர்க்கட்சிகளையும் உடைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, இங்கே கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஆரம்பம்!