Friday, September 20, 2019

ஊரோடு ஒத்துவாழ்! மாரிதாஸ்! கோபிகிருஷ்ணன்! கமல் காசர்!

ஊரோடு ஒத்துவாழ்! ஊரைப் பகைக்கின் வேரொடு கெடும்! என்பதெல்லாம் காலாவதியாகிப்போன வழக்கு!  எதிர் நீச்சல் என்று சொல்வதற்கும் முதலில் சொன்னதற்கும் எத்தனை முரண்பாடு என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்தது உண்டா?  முதலில் பிஜேபியின் நாராயணன் திருப்பதி இங்கே என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிடலாம்! 


   
முக.ஸ்டாலின் - வைகோ கூட்டணி.. மிக மோசமான வியாபாரம் என்று இந்த வீடியோவின் சாரமான தலைப்பாக தலையங்கம் என்கிற யூட்யூப் சேனல் சொல்கிறது. உண்மை தான் என்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் என்னென்ன விஷயங்களை முதலீடாக வைத்து அரசியலில் வியாபாரம் செய்கிறார்கள் என்று கேள்விகேட்டால் என்ன சொல்வீர்கள்?
சுபவீ செட்டியாருக்குத் தன்னுடைய பேச்சு வியாபாரத்தின் முதலாக இருப்பது திராவிடம், தமிழ் என்று கலந்துகட்டி அடிப்பது தான் என்பது மிகத்தெளிவாகவே தெரியும். ஆனால் அவர் பேசுவதைக் கேட்கிற எத்தனைபேருக்கு அது தெரியும்?


அங்கே தான் துண்டுச்சீட்டை வைத்துக் கொண்டு இசுடாலின் பேசுகிற அரசியலாகட்டும், அம்பேத்கர், தலித் என்று திருமா செய்கிற அரசியலாகட்டும், சுபவீ மாதிரி பேசுவதை மட்டுமே முழுநேரத் தொழிலாகட்டும், இவர்கள் எல்லோரும் என்ன மாதிரி அரசியல், வியாபாரம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள மாரிதாஸ் மாதிரியான இளைஞர்கள் தேவைப் படுகிறார்கள்! ஊரோடு ஒத்துவாழ் என்கிற வழக்கை நாம் எவ்வளவு தவறாகப் புரிந்துகொண்டு மந்தைத்தனமாக இருப்பது என்றே சாய்ந்தால் சாயுற பக்கமே சாயுற செம்மறி ஆடுகளாகவே ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் கூடப் புரியும்!


இந்த 37 நிமிட வீடியோவை அவசியம் பார்க்க வேண்டுமென்று பரிந்துரை செய்கிறேன். தி பயனீர் நாளிதழில் நிருபராகப் பணி புரிந்து வருகிற J கோபிகிருஷ்ணன், அவிழ்த்துவிட்ட கோவில் காளையாக வலம் வந்துகொண்டிருந்த சால்வை அழகர் சீனாதானாவுக்கு மூக்கணாங்கயிறு மாட்ட முயற்சித்த ஒருசிலரில் (முதல் பெயராக டாக்டர் சுப்ரமணியன் சுவாமி) ஒருவர்! சிலகாலத்துக்கு முன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். பானாசீனா மற்றும் அவரது மனைவி நளினி இருவரும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் என்ற அந்தஸ்தை வைத்துக் கொண்டு நிறைய முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள், அதை விசாரித்து சீனியர் அட்வகேட் அந்தஸ்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்ததில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பார் கவுன்சில் ஒரு 4 நபர் குழுவை அமைத்து இந்தவிஷயத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சொல்லியிருக்கிறார். INX Media வழக்கு குறித்தும் (நேற்றைக்கு சிபிஐ நீதிமன்றத்தில் சீனாதானாவின் பரிதாபமான முறையீடுகளை கொஞ்சம் சிரித்துக் கொண்டே சொல்கிறார்) அப்புறம் சீனாதானா எதிர்கொள்ள வேண்டிய வழக்குகளைப் பற்றிக் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்கிறார். ஊரார் வாய்மூடி அமைதியாக இருப்பது போல, தானும் இருப்பானேன் என்று ஒருசிலர் முனைப்பாகச் செயல்படுவதுதான் மாற்றத்துக்கு முன்னோடி என்பதை இந்தப் பக்கங்களில் Change Management என்ற தலைப்பில் ஒரு பதினோரு பதிவுகளில் ஒரு புத்தகத்தின் மீதான என்னுடைய சிந்தனைகளாகச் சொல்லி இருந்தேன் என்பது விளம்பரம் தான்! ஆனால் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமாக இருக்கிற விளம்பரம்!


நடிகர் விஜய் தனது பிகில் படைப்பு பாடல்கள் வெளியீட்டில் அரசியல் வாடை தொனிக்கிற மாதிரிப் பேசியதோ, அதை எதிர்த்தோ ஆதரித்தோ சிலர் பேசியதோ விஷயமே இல்லை! மக்கள் நீதி மையம் என்றொரு கட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே கமல் காசர் விஜய் பேச்சை ஆதரித்துப் பேசியிருப்பதுதான் மேட்டரே!

யாரை எங்கே வைப்பது என்று தமிழகத்தில் ஐம்பது அறுபது ஆண்டுகளாகவே யாருக்கும் புரியவே இல்லை என்பதுதான் கோளாறுகளின் ஊற்றுக்கண்ணே! கண்ணதாசன் தன்னுடைய சொந்த அனுபவத்தில் நொந்து போய் எழுதிய இந்தப்பாட்டே கொஞ்சம் யோசிக்க வைக்கும்!

மீண்டும் சந்திப்போம்.

8 comments:

  1. தலைவரே நீங்க செட்டிங் ல் ஏதோ கையை வைத்திருப்பீங்க போல. மின் அஞ்சலுக்கு எந்தப் பதிவும் வருவதில்லை. என்னடா பதிவே காணோம் என்று இப்போது நேரா ட்விட்டர் போய் இங்கே வந்தேன். சரி பார்க்கவும். நாளை வந்து விட்டுப் போன ஒவ்வொன்றையும் படிக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. செட்டிங்சில் நான் எந்த மாற்றமுமே செய்யவில்லை ஜோதிஜி! இன்னொரு முறை மின்னஞ்சலில் பதிவுகளைப் பெறுகிற ஆப்ஷனை முயற்சிக்கவும். பதிவைப் பின்தொடர்கிற ஆப்ஷனில் உங்கள் பிளாக்கர் ஐடியில் சேர்ந்துகொண்டால் reading list இல் பதிவை வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். இந்த இரண்டு வழிகளிலும் பயனில்லை என்றால் ஆபத்பாந்தவனாகப் பதிவர் திண்டுக்கல் தனபாலனை நாடவேண்டியதுதான்!

      Delete
    2. FeedBurner
      Email Subscription Confirmed!
      A message will be delivered to texlords@gmail.com if the publisher has produced new content on that day. No new content, no email for you.

      Delete
    3. பிளாக்கரில் என்னமோ நடக்கிறது ஜோதிஜி! நேற்று முன்தினம் வரை டேஷ் போர்டில் stats பகுதியில் google analytics சேர்ந்து வந்து கொண்டிருந்தது. நேற்று ஒருநாள் மீண்டும் பழையமாதிரி, இன்றைக்குப் பார்த்தால் மறுபடியும் analytics சேர்ந்து!

      எனக்குத் தெரியாத சமாசாரங்களில் நான் கைவைப்பதில்லை. DDயைக் கேட்கவேண்டும்!

      Delete
  2. இந்தி மொழி குறித்து தமிழகத்தில் பேசக்கூடிய எவரும் தெளிவாக உண்மையை உணர்ந்து பேசுவதாக தெரியவில்லை. சுபவீ திமுக ஆதரவு என்றாலும் அவர் சொல்லும் ஆழ்ந்த கருத்துக்களை நம்மால் மறுக்க முடியுமா? திருப்பூரில் ஐந்து வருடமாக பணிபுரியும் ஹிந்தி தொழிலாளி நான் எதற்கு உன்தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்? நீ ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டியது தானே என்கிறான். சம்பளம் ரெண்டு ஷிப்ட் குறைத்து போட்டு நாலைந்து முறை அலைய விட்டதும் தமிழ் தன்னால் வாயில் வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. மொழி என்பது ஒரு communicating means அவ்வளவே! தாய் மொழி என்பதால் எனக்கு நன்றாகப்புரியும் என்பதற்குமேல் உணர்ச்சிக் கொந்தளிப்பாக பார்க்கவேண்டிய அவசியம் சாமானியனுக்கு இருக்கிறதா? சுபவீ மாதிரியானவர்கள் சொல்லித்தானா மொழிவிவாதங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்?

      இந்தக் கேள்வியின் லாஜிக் புரிகிறதா? நான் தமிழை நேசிக்கிறேன் ஆனால் உலகத்தின் முதல்குரங்கே தமிழ்க்குரங்குதான் என்ற அளவுக்குப்போகிற மொழி வெறியன் அல்ல.

      Delete
  3. krishna moorthy sir , we travel to bihar, UP, MP and converse in hindi with those people is ok . but how can we digest that we have to speak in hindi in our own state ? as jothiji rightfully pointed that even after working here for so long they dont bother to learn the language of the state where they work is not ok... if you have noticed , the rajasthani's the gujarati,the punjabi try to learn the language of the place where they live ... but not the hindi belt people .. it is their attitude towards other language is what i believe is triggering this issue .. and for your information i am a pandit (equal to BA) in hindi

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்!
      இங்கே கூலிவேலைக்கு வந்துவிட்டதாலேயே தமிழ் பேசக்கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டுமோ? தமிழ் தெரிந்தவர்கள் தான் வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்று இங்கே எந்தத் தொழிலதிபராவது தைரியமாகச் சொல்ல முன்வருவார்களா என்று கேட்டுப்பாருங்களேன்! கட்டுமானப்பணிகளில் வடக்கத்தியத் தொழிலாளர்களை முதன்முதலில் களமிறக்கிய திமுக ஆசாமிகளிடம் கேட்டுப் பார்க்கவேண்டியதுதானே!

      மொழி என்பது மனிதர்கள் பரஸ்பரம் தொடர்புகொள்ள உதவும் கருவி மட்டுமே என்பதை மனதில் வைத்துக் கொண்டால், இங்கே நடக்கும் சர்ச்சைகள், அவரவர் ஆதாயத்துக்காக நடப்பவை என்பதைப் புரிந்து கொள்ள முடியுமானால், ஆதாயப்போட்டியில் இல்லாத நீங்களும் நானும் வேறுவேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)