Saturday, November 30, 2019

உள்ளூர் அக்கப்போர்களின் சிறப்புத் தொகுப்பு!

ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தி.மு.கழகம் செய்து வந்த பிரசார பாணியிலேயே அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பதென்று கச்சை கட்டிக்கொண்டு களம் இறங்கிவிட்டமாதிரியே இங்கே தெரிவது இருவர்! ஒன்று கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் மாரிதாஸ். அடுத்தது காவேரி நியூஸ் சேனலிலிருந்து திராவிடங்களால் துரத்தப்பட்டு இப்போது WIN News சேனலில் பணியாற்றி வரும் மதன்  ரவிச்சந்திரன்! எத்தனை நாட்கள் தனிமனிதர்களாகத் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கவலையும் கேள்வியும் எனக்கிருந்ததுண்டு. ஆனால் இருவரும் வெகுஜன ஆதரவுடன் இன்னும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பது ஊடகத்துறையில் பார்த்துவரும் அதிசயம்! வீடியோ 43 நிமிடம்

    
வத்திக்குச்சி பற்றிக்கொள்கிற மாதிரித் தலைப்பு வைக்கத் தெரிந்தவருக்கு, அதற்கேற்ற மாதிரி பங்கு கொள்கிறவர்கள் வேண்டாமா?  கிஷோர் கே சுவாமி ஒருவரைத் தவிர  எவரும் கிடைக்கவில்லை என்பது மைனசாகத் தெரிந்தாலும்,  தொய்வில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திவருவது பெரிய ப்ளஸ்! 

 

உபிக்கள், ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் இமேஜ் எல்லாம் சின்னதாக ஒரு ஊசிக்கு குத்துக்கே தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்பதைப்  பார்க்கவே பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் கர்மா விடாமல் துரத்துகிறதே! 

                                                        


இந்துக்களை மட்டும் அவமானம் செய்து அதன் மூலம் மதம்மாற்றும் இயக்கங்களை மகிழ்ச்சி அடைய செய்து, அந்த மக்களின் வாக்குக்கு வெக்கம் இல்லாமல் நாக்கை தொங்க போட்டு திரியும் கேடுகெட்ட இயக்கம் திமுக மதசார்பின்மை பேச எந்த தகுதியும் கிடையாது.
சமீபத்தில் ஆ ராசா பேச்சியதற்கு என்பக்க எதிர்வினை இந்த பதிவு.
இந்துகளின் ஒற்றுமையின்மையே பெரும் கேடு. ஒன்றிணைந்து ஒழித்துகட்டப் படவேண்டிய முதல் கும்பல் திமுக தான். - மாரிதாஸ் 
ஏசு பிறப்பிற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை - போப் ஃபிரான்ஸிஸ்.
ஏசு பிறப்பிற்கு ஆதாரம் இருக்கிறது - ஆண்டிமுத்து ராசா.
சொந்தமாக உளறி மாட்டிக்கொள்வது போக , கூடவே இருப்பவர்கள் உளறலும் கூட இசுடாலின் தலையிலேயே விடிகிறதாம்! மாரிதாஸ் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்! வீடியோ 15 நிமிடம்.இது சீமான் கட்சிக்காரர் துரைமுருகன்  (சே)சாட்டை சேனல் லந்து வீடியோ 6 நிமிடம்தான்!
                                                         
மும்பை அரசியலையே பேசிக்கொண்டிருப்பதாக பதிவைப் படிக்க வராமலேயே இருக்கும் நண்பர்களுக்கு உள்ளூர் அக்கப்போர்களின் சிறப்புத் தொகுப்பு! மகிழ்ச்சிதானே! 

மீண்டும் சந்திப்போம்.       

அரசியல் என்றால் பொய் சூது களவு துரோகம் இல்லாமலா?

நேற்று முன்தினம் இங்கே எழுதிய பதிவுக்கு நண்பர் திருப்பூர் ஜோதிஜி பின்னூட்டங்களில் ஸ்வராஜ்யா இதழிலிருந்து சில தகவல்களை மேற்கோள் காட்டிக் கேள்விகள் எழுப்பியிருந்தார். இங்கே அரசியல்  என்றால் பொய், சூது, களவு, துரோகம் இல்லாமலா என்கிற கேள்வி இரண்டுநாட்களாக என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது.


இந்த 26 நிமிட வீடியோவில், பத்திரிகையாளர் மணி, சிவசேனா விவசாயிகளுக்கு ஆதரவு என்ற போலியான போர்வையில் மாநிலத்தின் தொழில்வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை  போட்டுவந்தது குறித்துக் கொஞ்சம் சொல்கிறார். ஆரே என்கிற இடத்தில் புல்லெட் ட்ரெயின் திட்டத்தின் ஒரு அங்கமாக ஒரு பார்க்கிங் ஷெட் அமைப்பதற்காக சிலநூறு மரங்களை வெட்டுவதில் பிரச்சினை கிளப்பப்பட்டு, நீதிமன்றத்த தடை அப்புறம் தடை நீக்கம் என்றானாலும் சிவசேனா ஆட்சிக்கு வந்தவுடன் அறிவித்த முதல் விஷயங்களில் ஆரேவில் மரங்களை வெட்ட அனுமதிக்கப்போவதில்லை என்பதும் ஒன்று. ஆக ஜப்பான் நிதிஉதவியோடு துவங்கப் படும் ஒரு திட்டத்துக்கு, மறுபடியும் சிவசேனாவால் முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது. 


அதேபோல ரத்னகிரி பகுதியில் உள்ளூர் எண்ணெய் நிறுவனங்களுடன் சேர்ந்து சவூதி ஆராம்கோ அமைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் கூட விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற போர்வையில் சிக்கலுக்கு ஆளாகப்போகிறதா? அப்படி ஆகுமேயானால் சர்வதேச அளவில் என்னென்ன பிரச்சினைகள் எழும் என்கிற கேள்விகளை திரு.மணி முன்வைத்திருக்கிறார். 

  
துக்ளக்50 நிகழ்வை ஒட்டி அதன்  ஆசிரியர் திரு குருமூர்த்தி திருச்சியில் பேசிய வீடியோவை இரண்டு வலைப்பக்கங்களிலும்   முன்னமே பதிவு செய்திருக்கிறேன். சரத் பவாரைப் பற்றித் தமிழக மக்களுக்கு சரியாகாது தெரியாது என்று குறிப்பிட்டுச் சொன்ன பகுதிக்காகவே  இன்னொரு முறை பார்த்து விடலாமே!


அஜித் பவாரை வைத்து சித்தப்பூ சரத் பவார் ஆடிய உள்ளே வெளியே ஆட்டத்தைப் பற்றி மெல்லமெல்ல  பின்னணித்தகவல்கள் கசிய ஆரம்பமாகி இருப்பதில் சரத் பவாரின் குள்ளநரித்தனம் எப்படிப்பட்டது என்பதுமே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு இருக்கிறது.

மகள் சுப்ரியா சுலேவை மத்திய விவசாயத்துறை அமைச்சராக ஆக்கவேண்டும், தேவேந்திர ஃபட்னவிஸ் மீண்டும் மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக ஆகக் கூடாது என்ற இரண்டு கோரிக்கைகளோடு சரத் பவார் தொடர்ந்து பிஜேபியோடு தொடர்பில் இருந்திருக்கிறார். அந்த இரண்டையும் பிரதமர் நரேந்திர மோடி ஏற்பதற்கு உறுதியாக மறுத்துவிட்ட பின்னால் தான் காங்கிரசின் தயக்கம், பயத்தையும் மீறி, சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து அரசையும் அமைத்திருக்கிறார் என்று சொல்வதும் கூட அதே ஸ்வராஜ்யா இதழ் தான்! ப்ப்பூ! இன்னொரு கான்ஸபிரசி தியரி என்று ஒதுக்கித்தள்ள முடியாதபடி சரத் பவாரின் வஞ்சக நரித்தன அரசியல் கடந்த கால சரித்திரம் இருக்கிறது.  


சரத் பவார் காப்பாற்றிக் கொண்டு வருவது சொந்தக் குடும்ப நலன் மட்டும்தான் என்பது புரியாமல் சதீஷ் ஆசார்யா செய்கிற கார்டூன் டிராஜெடி ரசிக்கிற மாதிரியாகவா இருக்கிறது? !!

         
இப்படி லந்தடித்து மட்டும்தான் நம்முடைய ஆற்றாமை கோபம் இவைகளை வெளிப்படுத்த முடியும் போல. பொய் சூது களவு துரோகம் நாலும் கலந்தது தான் அரசியல்! அப்படித்தானே? 

மீண்டும் சந்திப்போம்.  

Friday, November 29, 2019

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! ச்ச்சும்மா ஜாலிக்கு!

இன்றைய தினமலர் முதல்பக்க விளம்பரம் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்ததில் நிறைய காமெடிகள் இருப்பதைக் கவனித்தீர்களா? எதிராளிகளைக் குறிப்பிட்டே குத்துகிறமாதிரியான விளம்பர உத்திகள் எப்போதிலிருந்து இங்கே ஆரம்பித்தது என்று நினைவு வருகிறதா?

    
இந்த விளம்பரம் யார் யாரைக் காயப்படுத்தியதோ  தெரியாது, ஆனால் கவலைகள் களேபரங்கள்  வரிசைகட்டி வலம்வரத் தொடங்கிவிட்டன என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.


கொஞ்சநாட்களுக்குமுன் ரங்கராஜ் பாண்டே ஒரு நேர் காணல் அல்லது கேள்விபதில் வீடியோவில் இங்கே தமிழ் செய்தி சேனல்கள் எதுவும் லாபத்தில் இயங்க ஆரம்பிக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஏதோ ஒரு சார்புநிலை எடுத்துக் கூவுவதற்காக தரப்படும் காசு கணக்கில் வருவதில்லை போலும்!  #2 லாபம் வராத செய்தி சேனல்கள் இப்படி புற்றீசல் போல வரிசை கட்டி வருவதன் பின்னணி, மர்மம் என்ன?  


மகா இழுபறிக் காமெடி இன்னும் ஓய்ந்தபாடில்லை! இது ஹிந்து ஆங்கில நாளிதழுக்காக சுரேந்திரா போட்ட கார்டூன்! காங்கிரஸ் சார்புள்ள மவுண்ட்ரோட் மாவோ ஊடகம் தான் என்றாலும் அவர்களாலும் நமட்டுச் சிரிப்பு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. #3 உங்களுக்கும் சிரிப்பு வந்ததா? 

  
பிஜேபி ஆதிக்கம் செல்வாக்கு சுருங்குகிறது என்று தம்பட்டம் அடிப்பது இன்றைக்கு ஒரு ஊடக ஃபேஷன்! மொகலாய சாம்ராஜ்யம் அதன் இறுதிநாட்களில் டில்லியிலிருந்து பாலம் வரை வெறும் 7 கி.மீ. எல்லைக்குத் தான் இருந்தது என்ற வரலாறு காங்கிரஸ் கட்சிக்கல்லவா கனகச்சிதமாகப் பொருந்துகிறது!?
காசுக்கு கூவுவதென்றால் வரலாற்றையும் மாற்றிப் போடுகிற வேலையை முன்னெல்லாம் இடதுசாரிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் செய்து கொண்டிருந்த வேலை! பரிணாம வளர்ச்சியில் இன்று கார்டூனிஸ்டுகள் வரை வந்திருக்கிறது. #4 சரியா? தவறா?


சாணக்கியர் அமித் ஷா இல்லை! கூந்தலில் ஊஞ்சல் ஆடுகிறாரே சரத் பவார், அவர்தான் என்கிறார் சதீஷ் ஆசார்யா கார்டூனிஸ்டுகள் சொல்வதற்கெல்லாம் அர்த்தம் தேடுவது வீண்வேலை! #5 சரியா? தவறா? 

      
இந்தப்படம் பார்க்க ரசிக்க சிரிக்க மட்டுமே! கேள்வி எதுவும் இல்லை!

2,3,4,5 என்று வரிசையாகக் கேள்வி இருக்கிறதே! முதல் கேள்வி எங்கே போனது என்று இதைப் படிப்பதற்கு முன்னாலேயே கேட்கத் தோன்றியதா? நீங்களே என் அபிமானத்துக்குரிய வாசகர், நண்பர், புரவலர், எல்லாம்! 

விடுபட்ட  கேள்வி எங்கே? அதற்கான விடை எங்கே? சொல்லுங்களேன் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்.  
  

Thursday, November 28, 2019

முதுகில் குத்தப்போவது முதலில் யார்? #மஹாராஷ்டிரா

மாலை மயங்கும் 6.40 மணிக்கு தொடங்குகிறது உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்வு.எந்த சிவாஜி பார்க்கில் 1966 இல் பால் தாக்கரே மராத்திய மக்களுடைய உணர்வுகளை தென்னிந்திய மக்களுக்கெதிராகத் திருப்பி விட்டு சிவசேனா கடையை ஆரம்பித்தாரோ அதே சிவாஜி பார்க்கில் இன்று தனது பதவியேற்பு நிகழ்வை மிக ஆர்ப்பாட்டமாக நடத்தவிருக்கிறார்.


டைம்ஸ் ஆப் இந்தியாவில் சந்தீப் அத்வர்யு வரைந்திருக்கும் கார்டூன் கனகச்சிதமாக விஷயத்தை சொல்லிவிடுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 வருடங்களில் ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க முடிந்த தேவேந்திர ஃபட்னவிசுக்கு, ஊழலுக்குப் பெயர்போன  சரத் பவாரை, ஊசலாட்டத்துக்குப் பெயர் போன தாக்கரேக்களை சமாளிக்கிற சூது தெரியவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

      
ஹிந்து ஆங்கிலநாளிதழுக்காக சுரேந்திரா போட்ட கார்டூனில் ஒரு பகுதி மட்டும் உண்மை. முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்திருக்கிற சிவசேனா கூட்டணி அந்த முரண்பாடுகளாலேயே முடிந்து விடும் என்பது வரை சரிதான்! 

  
இந்தப்படத்தைப் போட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸில் Sharad Pawar-Sonia Gandhi axis can revive Congress, NCP | Opinion எழுதியிருக்கிறார் அபய் வைத்யா.There was enormous hesitation in the Congress to ally with the Shiv Sena to stake claim to power in Maharashtra. That, however, became a reality, only because of Pawar’s political acumen, his persuasive skills and his ability to accommodate disparate interests. காங்கிரஸ் சார்பு ஊடகத்தில் இப்படிக் காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுகிற மாதிரியான கற்பிதங்கள் தம்பட்டம் அடிக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்! ஆனால் சரத் பவாருக்கு காங்கிரஸ் முடிந்து போனாலென்ன? பிழைத்தால் தான் என்ன? இருபது வருடங்களுக்கு முன்னால் சோனியாவின் பிரதமர் கனவுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அவருடைய இத்தாலிய பூர்வீகத்தை எதிர்த்துக் கலக்க கொடி எழுப்பியவர் சரத் பவார். ராகுல் காண்டி மாதிரி ஒரு உதவாக்கரைப் பிள்ளையை வைத்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் மறுபடியும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதென்பது குதிரைக் கொம்புதான்! அண்ணன் மகன் அஜித் பவாரை மஹாராஷ்ட்ரா அரசியலுக்கும் ஒரே மகள் சுப்ரியா சுவேவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி மத்திய ஆட்சியில் பங்கெடுக்கிற பழைய நினைப்பெல்லாம் இப்போதும் சரத் பவாருக்கு இருக்கிறதா? இந்தக்கேள்விக்கு விடைதெரியாமல்  Opinion என்று எத்தையாவது எழுதிவிட்டால் சரியாகப் போய்விடுமா?  உத்தவ் தாக்கரேவின் பேராசையைப் பயன்படுத்திக் கொண்டு மஹாராஷ்டிராவில் மீண்டும் மறைமுகமாக ஆட்சியை பிடித்திருக்கிற சரத் பவார் இதேபோல இதர மாநிலங்களிலும் காங்கிரசை உயிர்த்தெழ வைத்து விட முடியுமா?  

Breaking: 6 ministers being sworn in Maharashtra: Balasaheb Thorat, Nitin Raut (Cong), Chaggan Bhujbal, Jayant Patil (NCP), Subhash Desai, Eknath Shinde (Shiv Sena).. DCM likely to be who will be sworn in next week after confidence vote.
3:12 PM · Nov 28, 2019 from New Delhi,

அஜித் பவாருக்கு இங்கே நம்மூர் ரெண்டு முருகன் மாதிரி ஆயுசு முழுக்க இரண்டாவது இடம்தானா? இந்தக் கேள்விக்கு சரத் பவார் தனக்கடுத்து மகள் சுப்ரியா சுலேவை நம்பர் 1 இடத்துக்குக் கொண்டு வரப் போகிறாரா?  இல்லையா? இதற்கு விடைதெரிய வேண்டுமே! 

உத்தவ் தாக்கரேவுக்கு தற்போதைய கூட்டாளிகள் முதுகில் குத்துகிற வாய்ப்புக் கிடைக்குமா? அல்லது கூட்டாளிகள் அவர் முதுகில் குத்துவார்களா? விடை தெரிவதற்கான countdown மாலை 6.40  மணிக்குத் தொடங்குகிறது!      

மீண்டும் சந்திப்போம். 

நூறாவது நாள்! சில்வர் ஜூபிலி கோல்டன் ஜூபிலி தொடரட்டும்!

உச்சநீதிமன்றத்தில் இன்று பானாசீனாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்ததில் இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிமன்றம் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறது. ஆக, சீனாதானா வெற்றிகரமாக தன்னுடைய திகார் சிறை வாழ்க்கையை இன்று 100வது நாளாகத் தொடர்கிறார்.


வெற்றிகரமாக இதுவே 25வது வாரம், 50வது வாரம் என்று தொடர, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாகச் சேர்ந்து வாழ்த்துவோம்! ஜஸ்டிஸ் பானுமதி அமர்வில் இருக்கிறாரே , வாழ்த்து பலிக்குமா என்று கேட்கிறீர்களா? திருப்பூர் ஜோதி ஜி  கூட இப்படி 100 நாள் தொடர்ந்து சால்வை அழகரை உள்ளே வைத்து விட முடியும் என்று ஆரம்ப நாட்களில் நம்பவில்லை.


காயத்ரி ரகுராம்! ஒரு கட்சியாக பிஜேபி செய்யத் தவறியதை தனி ஒரு மனுஷியாக திருமாவளவனைத் தட்டிக்  கேட்டிருக்கிறார்.  விசிகவின் திருமாவளவன் இந்துக் கோவில்களைப் பற்றி இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த காயத்ரி ரகுராமுக்கு எதிராக விசிகவினர் ஆபாச மிரட்டல்கள்,வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு திருமா பெண்களை இழிவு படுத்துகிற மாதிரி ஸ்டேட்மென்ட் விட்டதையும்  இங்குள்ள அரசியல் கட்சிகளோ மாதர் சங்கங்களோ ஒப்புக்குக்  கூட கண்டிக்க முன்வரவில்லை என்பது தமிழக அரசியலின் ஈரல், மூளை இப்படி எல்லாமே கெட்டுச் சீரழிவுக்குஆளாகியிருப்பதன் அடையாளம். H.ராஜா ஒருவர்தான் காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.


என்னுடைய நல்லநேரம், ராஜதீப் சர்தேசாய், பர்கா தத் போன்ற ஊடகத் தறுதலைகளிடமிருந்துதான் அரசியல் நடப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற அவசியம் இல்லை! அந்த 39 நிமிட முழுநீளக்  காமெடியில், நான் கவனிக்கத் தவறிய ஒரு செய்தி ஸ்க்ரோலில் வருகிறது. சோனியா, ராகுல்  காண்டி, மம்தா பானெர்ஜி, கேஜ்ரிவால் போன்ற சிறப்பு அழைப்பாளர்கள் எவருமே உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு வைபவத்தில் கலந்துகொள்ளவில்லையாம்! இலவுகாத்த கிளியாக இங்கே என்னமோ தத்துப்பித்து அரசியல் செய்து கொண்டிருக்கிற இசுடாலின் மட்டும் தான் கலந்து கொள்ளப்போகும் ஒரே பெத்த பேரு என்கிறார்கள் பாருங்கள்! அதுதான் அடிக்கோடிட்டுக் காண்பிக்க விரும்பிய  செய்தி.

மீண்டும் சந்திப்போம்.         


Wednesday, November 27, 2019

பவார் பாலிடிக்ஸ்! சாணக்கியரை ஏன் வம்புக்கிழுக்கிறார்கள்?

மஹாராஷ்டிரா அரசியலில் 50 ஆண்டுகள் பழம்தின்று கொட்டை போட்டவர் சரத் பவார். இப்போது நடந்து முடிந்த மகா இழுபறியில் இன்றைய நிலவரப்படி ஜெயித்தவர் அவர் ஒருவர்தான்! இறுதிமூச்சை விடத் தயாராக இருந்த சோனியா காங்கிரசுக்கு, கொஞ்சம் அவகாசம் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தியா டுடே  முதல் இங்கே திமுகழகத்தின் ஆசிபெற்ற ஊடகங்கள் வரை என்னவோ இதுவரை தடுத்து நிறுத்தமுடியாதபடி இருந்த பிஜேபியின் அசுர வளர்ச்சியை காங்கிரஸ் அணை போட்டுத் தடுத்து விட்ட மாதிரி, மோடி, அமித் ஷா கொட்டம் அடக்கப்பட்டு விட்டதாகவும் பெரிதாகத் தம்பட்டம் போட்டுக் கொண்டிருப்பதிலேயே, நிலவரம் அப்படியில்லை என்பது புலப்படுகிறது.


உத்தவ் தாக்கரே நாளை மஹாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்கிறாராம்! இந்திய அரசியல் சரித்திரத்தில்  முதல்முறையாக ஒரு முதல்வர், அமைச்சர்கள்  பதவி ஏற்காத நிலையில், மஹாராஷ்டிர MLA க்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கப் பட்டிருக்கிறது! ராகுல் காண்டி நாளை தாக்கரே பதவி ஏற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. என்னமாதிரியான அரசியல் பூடகம் இது?  


      
தி.மு.கழகமோ, சிவசேனாவோ, NCP, காங்கிரசோ இப்படி வாரிசுகள் கோலோச்சும் கட்சிகளில் நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே முழு உரிமையும்  கொடுக்கப் படும் என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அஜித் பவார் காங்கிரசை அண்டி இருக்க வேண்டாமே என்று அடுத்தடுத்து செய்த முயற்சிகளை சித்தப்பூ சரத் பவார் லாவகமாகக் கிள்ளி எறிந்திருக்கிறார்


டெக்கான் ஹெரால்ட் நாளிதழில் சஜித் குமார் இப்படி லந்தடித்திருக்கிறார். வங்கிகளில் வாங்கிய கடன் 1951 கோடி ரூபாய்களைத் திரும்பிச் செலுத்தாமல், அழிச்சாட்டியம் செய்துவருகிற டெக்கான் ஹெரால்ட் இப்படி ஒரு கற்பனையை வெளியிடாமல் இருந்தால் தான் ஆச்சரியம்!


மிகா அஜீஸ் ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிற இந்த கார்டூனை விட, மேலே முதல் கார்டூன் நிலவரத்தைத் தெளிவாகச் சொல்கிறது.


MIdDay இதழுக்காக மஞ்சுள் வரைந்திருக்கிற கார்டூன்! மஹாராஷ்டிரா அரசியலில் ஊடகங்களால் பெரிதாக ஊதப்படும் மிகப்பெரிய பொய் இதுவாகத்தான் இருக்க முடியும்! ஒரு  blog ஐ மேற்கோள்காட்டி இந்தப் பொய்யை முதலில் வெளியிட்டதே டைம்ஸ் ஆப் இந்தியா தான்! அஜித் பவார் பெயர் எந்த FIR இலும் இல்லாதபோது, சாமர்த்தியமாக தன்மீதிருந்த வழக்குகளை ஒன்றுமில்லாதபடி அஜித் பவார் செய்து விட்டார் என்ற தகவலை மும்பை லஞ்ச ஒழிப்புத்துறை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. ஆனாலும் பொய்க்குக் கால்கள் அதிகம் வேகமும் அதிகம் என்பதற்கு ஏற்ப பொய்ச்செய்தி இன்னமும் பரவவிடப் பட்டுக் கொண்டே இருக்கிறது. 

மஹாராஷ்டிர அரசியலில் நடந்து கொண்டிருப்பது அயோக்கியத்தனங்களின் உச்சம்! சரத் பவார் அமித் ஷா இருவருமே முற்றிலும் மாறுபட்ட அரசியல்வாதிகள். இந்தப் பிரச்சினையில் ஒரிஜினல் சாணக்கியரை ஏன் தேவையே இல்லாமல் வம்புக்கிழுக்கிறார்கள்? ஏதாவது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.              
                  

Tuesday, November 26, 2019

அரசியல் சாசனம் படும் பாடு! இன்று அரசியல் சாசன தினம்!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26 இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி இன்று மதியம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுடைய கூட்டுக் கூட்டம் நடக்கவிருக்கிறது. காங்கிரஸ் முதலான எதிர்க்கட்சிகள் இதைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது அரசியல் சாசனத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையை வெளிப் படுத்தியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.


கீழே வீடியோ The Print     தளத்தில் நேற்றிரவு சிவசேனா தனது புதுக் கூட்டாளிகளுடன் மும்பை  நட்சத்திர ஹோட்டலில் We are 162 என்று ஷோ காட்டியதற்கு கொஞ்சம் முன்னால் வலையேற்றப்பட்டது.  தெரிந்து கொள்ள  கொஞ்சம் சுவாரசியமான விஷயங்கள் இதில் இருக்கின்றன. வீடியோ 24 நிமிடம்.
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சுஹாஸ் பல்ஷிகர்  இன்று அரசியல் சாசன தினம் என்பதை ஒட்டி எழுதியிருக்கிற ஒரு செய்திக் கட்டுரை, அரசியல் சாசனமும் சட்டங்களும்  நம்மூர் அரசியல்வாதிகளிடம் சிக்கிக் கொண்டு என்ன பாடுபடுகிறது என்பதை மஹாராஷ்டிர அரசியல் நிகழ்வுகளை விளக்குகிறது. அரசியலைப் புரிந்துகொள்ள விரும்புகிற நண்பர்கள் படித்துப் பார்க்கலாம்.


இன்று உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.  அதன்படி, இடைக்கால சபாநாயகரை வைத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட MLA க்கள் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவும் நாளை மாலை 5 மணிக்கு சட்டசபையில் பலப்பரீட்சை நடத்தவும்  உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. ரகசிய வாக்கெடுப்பு இல்லை என்பதும் நேரலை ஒளிபரப்பு இருக்க வேண்டும் என்பதும் உத்தரவின் இதர அம்சங்கள்.

உச்ச நீதிமன்ற விசாரணையும் மஹா இழுபறியும்  இன்னும் தொடர்கிறது என்பது மட்டுமே தற்போதைய நிலவரம். 

மீண்டும் சந்திப்போம்.    

Sunday, November 24, 2019

மகாராஷ்டிரா: பிஜேபி சிவசேனா NCP! பின்னே துக்ளக் 50!

இன்றைக்கு அச்சு ஊடகங்களுடைய பரிதாபமான நிலைமை பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருப்பது அவர்களுடைய ஏலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறமாதிரி நேற்றைக்கு மஹாராஷ்டிராவில் பிஜேபி காட்டிய அதிரடி, ரொம்பவுமே வலிக்கச் செய்து விட்டதோ! மாதிரிக்கு ஒரு ஊடக ஊளை!


தங்களைப்பற்றிய மிதமிஞ்சிய மிதப்பில் இருந்த ஊடகங்கள், இப்போதும் கூடத்  தாங்கள் முட்டாள்களாக ஆக்கப்பட்டதை ஒப்புக்கொள்கிற மனநிலையில் இல்லை! என்னவோ பிரதமர் நரேந்திர மோடி ஜனங்களை முட்டாள்களாக ஆக்கிவிட்ட மாதிரி ஒரு பில்டப் கொடுத்திருப்பது வேடிக்கை! அது மட்டுமா? ஊடகங்கள் தங்களுடைய பாடி, பேஸ்மெண்ட் இரண்டுமே படு வீக் என்பதைக் காட்டிக் கொண்ட தருணமாகவும் இருக்கிறது.

    
DNA தளத்துக்காக மஞ்சுள் வரைந்திருக்கிற இந்தக் கார்டூன் கள யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக! இதைப் புரிந்துகொள்ளாமல் அகமது படேல் மாதிரி காங்கிரசைக் கெடுக்கவென்றே பிறந்தவர்கள் வீரமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மகாராஷ்டிரா விஷயத்தை கையாளுவோம் என்று உளறியிருப்பது இன்னொரு காங்கிரஸ் கொடுங் காமெடி!


இது ட்வீட்டரில் நீலப் பானெர்ஜி வரைந்திருக்கிற கார்டூன்! மஞ்சுள், நீலப், இருவருமே சிவசேனா அகலக் கால் வைத்து சறுக்கி, வீழ்ந்தே  விட்டது என்று அபிப்பிராயம் சொல்வதைக் கவனித்தீர்களா? சரத் பவார் நிலைமை மட்டும் ரொம்பத்தெளிவாக இருக்கிறதாமா?   

முற்பகல் இன்னா செய்யின்
:
1978
1977 தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திரா காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.உடைந்த ஒரு பிரிவிற்கு தேவராஜ் அர்ஸ் தலைவர் .காங்கிரஸ் (எஸ்) S for socialist என்றழைக்கப்பட்ட அதில் ஏ.கே. அந்தோணி (கேரளம்) டி.கே. பரூவா (அஸ்ஸாம்) பி.ஆர். முன்ஷி (வங்கம்) ஆகியோர் இருந்தனர்.மகராஷ்டிரத்திலிருந்து அதில் அங்கம் வகித்தவர் சரத் பவார். (1981ல் அவர் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற போதுதான் அது காங் (எஸ்) என்ற பெயரைப் பெற்றது . அதுவரை அது காங்(அர்ஸ்)
1978 நடந்த தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக ஜனதா கட்சி 99 இடங்களைப் பெற்றது. இந்திரா காiங்கிரஸ் 69. காங் எஸ் 62. யாருக்கும் பெரும்பானமை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது இரண்டு காங்கிரசும் சேர்ந்து மற்ற உதிரிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்தனர். வசந்த் தாதா பாடீல் முதல்வராக ஆனார்.
மார்ச்சில் முதல்வரானார். ஜூலைக்குள் பதவிச் சண்டை மூண்டது. ஜூலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரசேகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு 38 எம்.எல்.ஏக்களுடன் வெளியேறி, வேறு சில உதிரிக்கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி என்ற ஓர் கூட்டணியை அமைத்து, பாடீலின் ஆட்சியைக் கவிழ்த்து, பவார் முதலமைச்சராக ஆனார் அப்போது அவருக்கு வயது 38
1980ல் இந்திரா மீண்டும் பிரதமரானார். அதைத் தொடர்ந்து சரத்பவாரின் ஆட்சி கலைக்கப்பட்டது
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும் (திருக்குறள் 319)   

மாலன் இன்னொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லி இருக்கலாம்! ஒரு வெளிநாட்டவர் தலைமையை ஏற்க மறுத்து (சோனியாG என்றறிக) P A  சங்மாவுடன் சேர்ந்து  NCP தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று  பிரதமர் நாற்காலி மீது கண்வைத்து ஆரம்பித்த சரத் பவார், அந்தக்கனவு நிறைவேறாது என்று புரிந்தவுடன் அதே சோனியா காங்கிரசுடன் மறுபடி இழைய ஆரம்பித்தது, மஹாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முதல் தாவூத் இப்ராஹிமுடன் ஒட்டி உறவாடித் தப்பிக்க விட்டது, இப்படி ஏராளமான ஊழல் விவகாரங்களில், சில விஷயங்களில் சிவசேனாவின் பால் தாக்கரேவுக்கும் தீனிபோட்டது என்று பலவிதமான பெருமைக்கும் உரியவரை, ஒரே ஒரு திருக்குறளோடு முடித்திருக்க வேண்டாம்! ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டவைகளில் கருணாநிதி சரத் பவாரைக் கொஞ்சம் மிஞ்சிவிட்டார் அல்லது சமன் செய்துவிட்டார் என்று எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு ஒப்பீடு செய்யலாம்! 


அஜித் பவாரும் லேசுப்பட்டவர் அல்ல.  இவரோடு பிஜேபி கூட்டு வைப்பதா என்று புலம்புவதில் பயனேதும் இல்லை, நடந்துகொண்டிருப்பது பக்கா அரசியல்! உச்ச நீதிமன்றம் வந்து தலைகீழாக மாற்றிவிடும் என்று கற்பனை செய்வதே கூட ஒருவித நகைமுரண்.


திருச்சியில் துக்ளக் 50 நிகழ்ச்சியின் நேரலை. தமிழருவி மணியன் பிஜேபியைக் கண்டித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். பார்த்துக் கொண்டே பதிவை நிறைவு செய்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.                             

Saturday, November 23, 2019

ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி நான்! பாட்டு கேட்டதுண்டா?

மஹாராஷ்டிரா அரசியலில் இன்று காலை நிகழ்ந்த அதிரடி மாற்றம், ஊடகங்களை மட்டுமல்ல, காங்கிரஸ் காரர்களையும் கிறுக்குப் பிடிக்க வைத்திருக்கிறதென்பது அங்கங்கே வெளிப்படும் மனக் குமுறல்களில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. நேற்று வரை சரத் பவாரை இந்திய அரசியலின் சாணக்கியர் என்று கொண்டாடித் தீர்த்தவர்கள் , இன்று சரத் பவாரும் வாயடைத்துப் போகிற மாதிரி ஒரு அதிரடி ஆட்டத்தில் சிவசேனா அண்ட் காங்கிரஸ் கம்பனி கலகலத்துப் போயிருப்பதைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ரொம்பவும் காமெடியாக இருக்கிறதென்றும் கூடச் சொல்லலாம்! தவறே இல்லை!


பொதுவாக மீடியாக்களுக்கே அலட்டல், அலப்பறை எல்லாமே ரொம்ப ஜாஸ்தி! ஆக்கவும் அழிக்கவும் எங்களால் மட்டுமே முடியும் என்கிற மிதப்பும் கூட! காசுக்குக் கூவுகிற ஊடகங்களாய்க் குறுகிப் போன பிறகும் கூட நம்மூரில் ஊடகங்களுடைய திமிர் கொஞ்சமும் குறைந்ததே இல்லை! இன்றைக்கு செய்தியை முன்கூட்டித் தருகிற பவுசில் வெளியிட்ட மிதப்பு என்னாயிற்று? நடந்து முடிந்தபிறகுதான் அது செய்தி! எலெக்ட்ரானிக் மீடியா அல்லது சேனல்களிலாவது சிறிது நேரத்திலேயே சரிசெய்து கொண்டு விடமுடியும்! அச்சு ஊடகங்கள்?
சிவசேனாவைப் போல முகத்தில் அச்சுமையைப் பூசிக் கொள்ள வேண்டியதுதான்! 

நேற்று நள்ளிரவிலிருந்து இன்று காலைவரை என்ன நடந்ததாம்? டைம்லைன் சொல்கிறார்கள்!   IANS செய்திகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட infograph இது  நன்றி :TOI


துக்ளக்கில் சத்யா என்கிற சத்ய நாராயணன் நையாண்டி செய்து எழுதிய வாசகங்கள் நிஜமாகவே ஆகிப்போனதை என்னவென்று சொல்வீர்கள்? பரட்டை வசனம் பேசுகிற மாதிரிச் சொல்வதென்றால், அதிசயம், ஒரு அற்புதம் நிகழ்ந்தே விட்டது என்றா?😂😃

சிவசேனா மதசார்பற்ற கட்சி என்று எதிர்கட்சிகளால் அறிவிக்கப் பட்ட நாள் ! 

நாளையே சிவசேனா ஓடிப்போய் பிஜேபி யுடன் சேர்ந்து கொள்ளக் கூடும்.
அப்போது.. reference-க்கு எதிர் கட்சிகளின் இந்த quote உதவும். 
எது எப்படியோ..
போரடித்துக் கொண்டிருந்த இந்திய அரசியல் களத்தை... பரபரவென நகரும் ஆங்கில political thriller திரைப்படங்கள் போல படு த்ரில்லிங்காக மாற்றி இருக்கிறார்கள் மோடி-அமித்ஷா !  சோனியா காண்டியின் ஆலோசகர் அகமது படேல் என்ற கோமாளி  ஃபட்னவிஸ் பதவி ஏற்றதை அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் எதிர் கொள்வோம் இப்படி வீரவுரை என்றபெயரில் காமெடி செய்திருக்கிறார்.


அமித் ஷாவையும் மிஞ்சிய அரசியல் சாணக்கியர் என்று நேற்று வரை சரத் பவாரை கொண்டாடியவர்கள் முன்னால் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள இப்போது ஊடகங்களுக்கு முன்னால் விளக்கம் மதியம் 12.30 மணி வீடியோ 27 நிமிடம்.ஆனால் இதற்குச் சரியான பொழிப்புரையை முகநூலில் பார்த்தேன் ரசித்தேன்!

ஆட்டம் Deuce இல் போய்க் கொண்டிருந்தது.
Advantage – NCP, Advantage – Sena என்று ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடுதிப்பென்று Match Point ஐ BJP Score செய்து விட்டது.
இந்த Dramatic Twist இல் நிறைய ரசனையான விஷயங்கள் உண்டு.
சிவசேனாவின் வால் நறுக்கப்பட்டது முதல் திருப்தி. அவர்களின் கொள்கைகளில் சில எனக்கு முற்றிலும் ஏற்பு இல்லாதது. மஹாராஷ்டிராவில் வெளி மாநிலத்தவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று துரத்தியடிக்கும் மோசமான பிராந்திய மனப்பாங்கு அவர்களுடையது. மும்பைத் தமிழர்களின் எதிரிகள்.
அடுத்தது, மீண்டும் BJP ஆட்சி வேண்டும் என்று வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் அதைச் செய்து முடித்தது.
எல்லாவற்றையும் விட அதைச் செய்து முடித்த விதம் ரொம்ப சுவாரஸ்யமானது. காலை ஐந்தரை மணிக்குக் கூட மீடியாக்கள் அந்த மூவர் கூட்டணி ஒப்பந்தத்துக்கு வந்து விட்டது என்றும் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆகிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தன.
பா. ஜ. க தலைவர்கள் எல்லாரும் இது சந்தர்ப்பவாதக் கூட்டணி, கிச்சடி கேபினட் என்றும், நித்தின் கட்கரி இந்த ஆட்சி 8 மாசத்தில் கவிழும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்படிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் இந்த முடிவு வந்தது மட்டுமில்லை, வெடுக்கென்று பதவி ஏற்பும் முடிந்து விட்டது!
அமித்ஷாவுக்குள் இருக்கும் அற்புதமான திரைக்கதை ஆசிரியரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது! டயலாக்கே இல்லை, ஒன்லி ஆக்ஷன்!  

சிவாஜி கணேசனுக்காக அந்த நாட்களில் பாடிய ஒரு  பாட்டின் நடுவில் ஆட்டமென்ன சொல்லுவேன் தோழி! ஆடிடுவேன் கொஞ்ச நாழி! என்றொரு அருமையான வரிகள் வரும்! கேட்டிருக்கிறீர்களா?

   
கேட்டுவிட்டு நிம்மதியாக வேறுவேலை பார்க்கப் போகலாமா?

மீண்டும் சந்திப்போம்.         

அ முதல் அஃகு வரை! என்னைத் தெரியுமா?


நான்கைந்து நாட்களுக்கு முன்னால் தான் இந்த எ பி சி டி தொடர் விளையாட்டைஒரு பதிவில் பார்த்தேன்மல்டிலெவல் மார்கெடிங் மாதிரிஇந்தத் தொடர்ஸ்டார்ஜன் பதிவிலிருந்துகோவி கண்ணனுக்குத் தொற்றிஎன் வரை பரந்திருக்கிறதுலண்டனில் இருந்து திரு வெ.ராதாகிருஷ்ணன் சங்கிலியில் எல்லாம் இருக்கும் வரை என்ற தெம்போடு முந்திக்கொண்டிருக்கிறார்யாஹூ!360 நாட்களில்இந்தமாதிரித் தொடர்கிற அல்லது ம்யூசிகல் சேர் விளையாட்டில் என்னை அழைத்தபோதுதயங்கித் தயங்கியே எழுதின ஞாபகம் இப்போது வருகிறது! இப்போதும் கூடத் தயங்கியபடியே தான் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். அதனால் தான், ஒரு நாள் தள்ளி, இந்தப் பதிவு வெளி வருகிறது.

கோவி கண்ணன் சொன்ன மாதிரிஅடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற யோசனைகுழப்பமெல்லாம் இல்லைஎழுதபேச வேண்டுமானால்ஏராளமான விஷயங்கள் இருக்கின்றனதவிரஅடிப்படையில் நான் ஒரு வாசகன்என்ன எழுதப்படுகின்றன என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து வருவதை மட்டுமே முக்கியமாகக் கொண்டிருப்பதால்என்ன எழுதலாம்அதையும் எப்போது எழுதலாம் என்ற எண்ணங்களே எனக்கு முக்கியமாகப் படுவதில்லை!

தவிரஇப்போது எழுதுவதுஇந்த நேரத்து மன நிலையை ஒட்டி மட்டுமே இருக்கும்அதிலும்சொல்லாமல் விட்டதில் தான் அறிந்துகொள்வதற்கான தடையங்கலுமே இருக்கும் என்பதால்இதை வைத்து மட்டுமே என்னை என்றில்லைஎதையுமே முடிவு செய்து விட முடியாது என்றும் தோன்றுகிறதுஇன்னொரு வகையில்திரு கோவி.கண்ணன் சொன்ன மாதிரி, "நாலு பேருக்கு நம்மைப் பற்றித் தெரியணும்னா தொடர்பதிவு தப்பே இல்லை !" அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!இங்கே எதுவுமே .தப்பு இல்லைதப்புவதும் இல்லை!!1. A – A for Apple ன்னு சொல்வேன்னு தானே நெனச்சீங்கஉங்க ஆசைக்கு ஆப்பிள்னும்என் ஆசைக்கு Aravindhar என்று கூட வைத்துக் கொள்ளலாமேAll life is Yoga இது அரவிந்தருடைய அருமையான அமுதமொழி!

2. B – Best friend? ஒருத்தன் தானே தான் தனக்கு முதல் நண்பனாகவும்முழு எதிரியாகவும் இருக்கிறான்!.அந்த வகையில்என்னையே பிரதிபலித்து,நிறையப்பேரில் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்திருக்கிறதுஆகஎல்லோருமே!

3. C – dictionary.com இல்  C என்று மட்டும் கொடுத்துத் தேடிப்பாருங்கள்குறைந்தது பதினைந்து பிரயோகங்கள் வரும்சி எனும் போது குறைந்தது பத்து நாவலாசிரியர்கள்அவர்கள் எழுதிய புத்தகங்கள் நினைவுக்கு வருகிறது.


4. D – Distinction தனித்துத் தெரிகிற திறமையும் நினைவு வரும்! Dooms Day என்று பயமுறுத்துகிறவர்களைப் பார்த்துச் சிரிப்பும் வரும்!

5. E – அய்யேஇந்த வயசுல போயி ஈன்னு இளிச்சா நல்லாவா இருக்கும்தவிரஎனக்கு ஈ புடிக்காது!


6. F – favorites.....ஹ்ம்ம்... நிறைய இருக்கேபூக்களைப் பிடிக்கும்புத்தகங்களைப் பிடிக்கும்குழந்தைகளைப் பிடிக்கும்நல்ல தமிழ் பிடிக்கும்சொல்லிக்கொண்டே போனால் நிறைய வருஷமும் பிடிக்கும்!


7. G – G ன்னதும் Guns of Navarone, Gregory Peck ன்னு நிறைய ஞாபகம் வரும்! கோவிந்தா என்று நாமம் சொல்லும்  நினைவும் வரும்!


8. H – Hometown? சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம்பிறந்ததோ செட்டிநாடுசொந்தமாகிப்போனது,ஒண்ட வந்ததுஅடைக்கலம் தந்தது மருதேய்ய்ய்ய்ய்என்ன கொஞ்சம் அழுக்காவேர்வைக் கசகசப்பாஎங்க திரும்பினாலும் ஜனங்க கூட்டம் கூட்டமாபேச்சுல கொஞ்சம் அராத்தா...பேசிப் பழகினதுக்கு அப்புறம் ரொம்பப் பாசக்காரப்பயலுவளா,அப்புடிஇப்புடிஎப்புடிப் பாத்தாலும்மருதைமருதைதான்மருதையச் சுத்தின களுத கூட மருதயை விட்டுப் போகாதுன்னுஅதுனாலதான் சொன்னாங்களோ!


9. I – Indulgence-- ஆசைஆவலாதிஎல்லாம் காலாவதியாகிப் போச்சுஆசை அறுமின்ஆசை அறுமின்ஈசரோடாயினும் ஆசை அறுமின்இது தான் இப்ப ஓடிட்டிருக்கும் ஒரே indulgence!


10. J – ஜெ'ன்னாதி.ஜானகிராமன்அதுக்கப்புறம்,ஜெ'ன்னா ஜெய காந்தன்ஜெகசிற்பியனை மறக்கலாகுமோஜெவரிசை கொஞ்சம் பெரிசுவாசிப்பு அனுபவத்தை மிக இயல்பான தவமாக ஆக்கிக் கொடுத்தவர்கள் இவர்கள்அவ்வப்போதுஜெயமோகனும் கொஞ்சம் ஈர்க்கிறார்!


இன்னொருத்தரை இதிலும் சேத்துக்கலாம்அடுத்த எழுத்துக்கும் சேத்துக்கலாம்ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி!


11. K – Kids & their names? ஒரே பையன்தான்சரியான வால்பையன்வாசுதேவன்!


12. L – Life is incomplete without? - Life, Love எல்'லுன்னு ஆரம்பிக்கும்போதே ஒண்ணு இல்லாமமத்தது கிடையாதுன்றதும் தெரியணும்தெரிஞ்சுக்கறது தான் வாழ்க்கையோட உண்மையான தேடலேதெரிஞ்சப்புறம்இதுவேற அதுவேறன்றதே இல்லாம ஆயிடணும்!13. M – Marriage date? ஒரு படத்துல நாகேஷ் "ம்ம்ம்ம்மாட்டிக்கினான்!"ன்னு ம்ம்ல கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்வாரேநினைவுக்கு வருகிறதாநான் ம்ம்ம்ம்மாட்டிக்கினு அடுத்த மாசம் இருபத்தோராம் தேதியோட இருபத்தோரு வருஷம் நிறையுது!


14. N – No Entry! இது நோ என்ட்ரின்னும்வாத்தியார் மாதிரி,'நான் சொல்றதைத் தான் கேக்கோணும்கேள்வி ஏதும் கேக்கக் கூடாது'ன்னு சொல்லும் போதுபீச்சே மூர்னு 'இங்க திரும்பி வராதே'ன்னு சொல்லும்போது கேள்வி நிறையக் கேக்கத் தோணும்இந்த மனோபாவத்தைஆசிரியப் பணியாற்றும் சில பதிவர்களிடம் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்என்னிடம் இந்த சுபாவம்மறந்தும் ஒட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாகவும் இருக்கிறேன்!


15. O – Oranges or Apples? இதுல எதுக்கு ஓர வஞ்சனைஸ்டார்ஜன் சொன்ன மாதிரியேஇதுல ஆறு!(ஆரஞ்சி!) அதுல அஞ்சு!(ஆப்பிள்)ன்னு சொல்லிட்ட்ப்போச்சுஇங்கஇந்திய தேர்தல் முறைகளில் இருக்கும் குறைகளைக் கண்டு கொதித்துப் போன போதுஇரண்டு மூன்று வருடங்களாகத் தேர்தல் வருகிற நேரத்தில் மட்டும்ஒரு ஓவோஇரண்டு ஓவோ இல்லை 49(O) அப்படீன்னு ஒரு சத்தம் கேட்கும்ரெகுலர் தேர்தல்னா ஐநூறாஆயிரமாஇல்லே திருமங்கலம் மாதிரி இவங்க நாலாயிரம்னா அவங்க மூவாயிரம்இடைத்தேர்தல்னா ஜாலிதான்னு ஜனங்கமானாட மயிலாடற ரேஞ்சுக்குப் போன வளர்ச்சியைக் கண்ட பிறகு 
49 O' ன்னாலே  எனக்குக் கொஞ்சம் அலெர்ஜி!


16. P – Phobias/Fears? இது இல்லாத உயிரினம் எதுநேரடியாகத் தெரியாவிட்டாலும்இந்த ஒரு அச்சமேஉயிரினங்களின் வளர்ச்சிக்கும்அழிவுக்கும் காரணமாக இருப்பதை மறுக்க முடியுமாஇன்றைக்கு ஹிந்து நாளேட்டில்முதல் பக்கச் செய்திகாசாப் பகுதியில் இஸ்ரேலி ராணுவம் திட்டமிட்டே,சிவிலியன்களைப் படுகொலை செய்தது என்று ஒரு விசாரணை அறிக்கை வெளிவந்திருக்கிறதுகண்ணுக்குக் கண்பல்லுக்குப்பல்அது நேற்றுஇன்றைக்கு ஒன்றுக்குப் பத்துநூறுஆயிரம்லட்சம்எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?


17. Q – Quote for today? : “All life is Yoga” - Sri Aurobindo. வாழ்க்கை முழுவதுமே யோகம்யோகம் என்பதுஉலகத்தைத் துறப்பது அல்லஉலகத்து நடப்புகளில் இருந்து விலகி இருப்பதும் அல்ல.இந்த நேரத்தின் அவசியம்,விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றமேஸ்ரீ அரவிந்தரை வணங்கி,அவருடைய அமுதமொழிகளை உள்வாங்கிஒளிபொருந்திய பாதையில் பயணிக்கவே இவன் செய்யும் பிரார்த்தனையும்!


18. R – Reason to smile? : இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொல்லிட்டுப்போயிட்டாங்களேஅதுக்காகவாவது..:-))


19. S – Season?   இங்கே டீவீக்காரங்க அடிக்கிற கூத்துசீசன் ஒனசீசன் டூசீசன் த்ரீன்னு போயிகிட்டே இருக்கறதாலசீசன்ற வார்த்தையைக் கேட்டதுமே அலெர்ஜியாத்தான் இருக்கு!
அடநீங்க பருவகாலத்தைச் சொன்னீங்களாவசந்தகாலம் தான்!


20. T – Tag 4 People? நாலெல்லாம் கம்மிஅப்ப...நாப்பதுநானூறுநாலாயிரம்அதுவும் கூடக் கம்மியாத்தான் தோணுதுஅதனாலபடிக்க வர்ற எல்லோரையுமேஇஷ்டமிருந்தாக் கோத்துக்கலாம்!
இல்லேன்னாஒரு பின்னூட்டத்தில் சொல்லிட்டு அபீட்டாயிக்கலாம்! பெப்சி உங்க சாய்ஸ் மாதிரிஇந்தக் கோத்துக்கற சங்கிலியும் உங்க சாய்ஸ் தான்!


21. U – Unknown fact about me? அதெப்படி தெரியாத ஒண்ணை...? சொல்லிட்டாத் தெரிஞ்சதாப்போயிடுமேஅப்புறம் அதை எப்படித் தெரியாத ஒரு உண்மைன்னு பீலா வுடறது:-))
எனக்கே கூடத் தெரியாமத் தான் இருக்குஅதனாலஒரு ஒப்பந்தம் செஞ்சுக்கலாம்என்னைப்பத்தித் தெரியாத உண்மை ஏதாவது உங்களுக்குத் தெரிய வந்தாநீங்களே சொல்லிடுங்கஎனக்குத் தெரிய வந்தாநானே சொல்லிடறேன்காட் ப்ராமிஸ்போதுமா!
22. V – V for Vendetta! படம் புடிக்கும்மத்தபடிவென்டெட்டாவெண்டைக்காய் எதுவுமே புடிக்காது!


23. W – Worst habit? ஒண்ணுரெண்டு இல்ல,நிறைய இருக்குஹாபிட்ஸ்பழக்கங்களுடைய அடிமையாகவே நாம் இருந்துவிடாமல்நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறதுபழக்கங்களின் பிடியில் இருந்து விடுபடும்போதுமனிதன் இப்போதிருக்கும் நிலையைத் தாண்டி அடுத்த நிலைக்கு உயர முடியும்இந்த டாபிக்என்னுடைய பதிவுகளின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.


24. X – X கிராஸ் ரோட்னு சொல்வோமேஅது மாதிரி!வெறும் கிராஸ்சிலுவை இல்லைவாழ்க்கையின் பல தருணங்களில்எதிரும் புதிருமான விஷயங்கள் சந்தித்துக் கொள்வதைஅதன் பின் எழும் ஒரு புதிய வீச்சுவேகத்தை அனுபவித்திருக்கிறேன்!


25. Y – இந்த எழுத்தைக் கொஞ்சம் கவனித்துப்பார்த்திருக்கிறீர்களாஇல்லையானால், WHY?
ஒரு பாதைஒருகட்டத்தில் இரண்டு எதிரெதிர் திசைகளில் பிரிவதைச் சொல்வது போல இல்லைஏதோ ஒரு பாதையில்பயணிக்க மட்டும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதுஅந்தப்பாதை எப்படி இருக்கும்எங்கே அழைத்துச் செல்லும் என்பதுவாழ்க்கைப் பயணத்தில் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாதுநாம் செல்லுகிற பாதையில்என்னென்ன அனுபவங்கள் காத்திருக்கும் என்றும் தெரியாதுஆனால்பயணம் செய்கிறவன்அந்த அனுபவங்களைஅனுபவித்துத் தானாக வேண்டும்கொஞ்சம் யோசித்துத் தான் பாருங்களேன்!

26. Z – Zombie or Zombi..? நிறைய நேரம் கணினி முன்னாலேயே பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதால்என்னை ஒரு Computer Zombie என்று நினைத்தால்அது தவறு ஏதுமில்லைஆனால்நான் மூளை களைத்துப் போன சோம்பேறி மட்டும் இல்லை!
அன்புக்குரியவர்கள்: ......அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள் அத்தனைபேரும் தான்!
ஆசைக்குரியவர்: ...நிறையப்பேர்சின்னச் சின்ன ஆசைகளில் இருந்துபேராசைகளாக நிறையப்பேரை இந்த வகையில் என்னால் சொல்ல முடியுமேரவா முறுகல் தோசை..? நம்ம ஊட்டுல அதெல்லாம் தெரியாது!அதுனால தான் கோவி கண்ணன் சொன்ன மாதிரிச் சொல்ல முடியவில்லை:-))

இலவசமாய் கிடைப்பது: .....வேறென்னஉபதேசம் தான்ஒருத்தருக்குச் சக்கரை வியாதி இருக்கிறது என்று நாக்குத் தவறிக்கூடச் சொல்லிவிடக் கூடாதேஎத்தனை இலவச உபதேசங்கள்மருத்துவ டிப்ஸ்,கிடைக்கும் தெரியுமா?!வைத்தியருக்கே அத்தனை மருந்துவைத்தியம் தெரிந்திருக்காது!

ஈதலில் சிறந்தது: .....இந்த ஈதல்இசைபட வாழ்தல் இதை பற்றி எல்லாம் நானும் நண்பர் டாக்டர் சுந்தர வடிவேலுவுடன்கொஞ்சம் வள்ளலார் ஈடுபாடு கொண்ட அன்பர்களோடு நிறைய விவாதித்துக் களைத்துப்போயிருக்கிறேன்ஈயென்று இரங்கும்உண்மையிலேயே தேவையும் தாகமும் இருப்பவனுக்கு எதுவும் ஈயப்படுவதில்லைபுளித்த ஏப்பக்காரனும்பொய் முகம் காட்டுகிறவனுமே இங்கே ஈ'க்களை விரட்டிவிட்டுத் தாங்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு முன்னாள் மறைந்த திரு (டணால்தங்கவேலுஅன்னதானம் செய்து, "வாங்கிக்கட்டிக் கொண்டகதையை குமுதம் வார இதழில் நொந்துபோய்ச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறதுநான் கடவுள் படத்தில்விளிம்புநிலை மாந்தராக வரும் ஒரு கதாபாத்திரம் பேசுகிற வசனம் இது:"புண்ணியம் தேடுறாங்களாம்!"
இதைப்பற்றின பார்வைகளே கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது.


உலகத்தில் பயப்படுவது: ....எங்க வீட்டு வால்பையனுக்குத்தான்!


ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்ஒலகம் புரிஞ்சுகிட்டேன்கண்மணி என் கண்மணிஇதுக்குத் தனியா வேற விவரிச்சுச் சொல்லணுமாக்கும்!

எப்போதும் உடனிருப்பது: நம்ம சத்யராஜ் கணக்கா'லொள்ளு"! அப்புறம்,ஸ்பெக்ஸ்..கண்ணாடிபோட்டிருக்கிறது கூட நினைவில்லாமல் குளிக்கவும் போயிருக்கிறேன்அந்த அளவுக்கு கூடவே பழகிவிட்டது!


ஏன் இந்த பதிவு: ....அதானேஏன்ஏனிந்தக் கொலைவெறி?
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!


ஒரு ரகசியம்: ........சொல்லிட்டா அது ரகசியமா இருக்காதேன்னு தான்!!


ஓசையில் பிடித்தது: ஒருகை ஓசை!......மௌனம்!
ஔவை மொழி ஒன்று: ஔவியம் பேசேல்!


()ஃறிணையில் பிடித்தது: புத்தகங்கள்அவை அஃறிணை அல்லஉங்களையும் என்னையும் விட உயிருள்ளவைஉயிரூட்டக் கூடியவை!


இவ்வளவு தூரம் வந்தீங்க, ஒண்ணும் சொல்லாமலே  போனா எப்படி?

9 comments:

 1. //இவ்வளவு தூரம் வந்தீங்க, ஒண்ணும் சொல்லாமலே போனா எப்படி? //

  -நல்லா சொன்னீங்க போங்க.
  ReplyDelete
 2. //Guns of Navarone//

  இந்த படத்தை பற்றி சொல்லமுடியுமா?

  கேசட் இருக்கு பார்க்க ஏனோ தயக்கம்!
  ReplyDelete
 3. //ஒரே பையன்தான்! சரியான வால்பையன்! வாசுதேவன்!//

  கணக்குல ரெண்டு காட்டுதே!
  ReplyDelete
 4. உங்க பையனைவிட என்னைத்தான் அதிகம் நினைப்பிங்க போல!
  என் சேட்டையும், உங்க பையன் சேட்டையும் ஒரே மாதிரி இருக்கா!?
  ReplyDelete
 5. ஞாயிற்றுகிழமை அழைச்சிட்டு வர்றிங்களா, அமெரிக்கன் காலேஜிக்கு!
  ReplyDelete
 6. ஞாயிற்றுக்கிழமை நான் வருவதே சந்தேகம்!

  பையன் வெளியூரில் படிக்கிறான்! எனக்கு எல்லா வால் பையன்களையுமே பிடிக்கும்! ப்ரோபைலில் பார்த்திருக்கலாமே..பூக்கள், குழந்தைகள் [இங்கே வால் பையன்கள், வால் பொண்ணுகள் என்று படிக்கவும்] புத்தகங்கள் இவையெல்லாம் நிறையவே பிடிக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறேனே!
  ReplyDelete
 7. ஐயா,

  a - z, ஆ - அஃ வரை எதிர்பார்த்தை விட சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்

  //ஐஸ்வர்யத்தில் சிறந்தது: ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!//

  அருமை. கல்விச் செல்வத்தை குறைவின்று எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்
  ReplyDelete
 8. //11. K – Kids & their names? ஒரே பையன்தான்! சரியான வால்பையன்! வாசுதேவன்! //

  வாரிசுகளைச் சொல்லும் போது ஒரு குஷி வந்து விடுகிறது இல்லையா ?
  :)

  வாசுவுக்கு எனது அன்புகள்
  ReplyDelete
 9. நன்றி திரு.கோவி.கண்ணன்,

  நல்ல வேளை! வால்பையன் என்று சொல்லும்போது வாலும் முளைத்துவிடுகிறது என்று சொல்லி விடுவார்களோ என்று கொஞ்சம் பயம், அப்புறம் ட்ரேட் மார்க் உரிமை மீறல் என்று வால்பையன்களிடமிருந்து மிரட்டல் என்று வராமல்... :-))
 10. சந்தேகமே வேண்டாம்! பத்துவருடங்களுக்கு முன்னால் Consent to be...... nothing! தளத்தில் எழுதியதன் மீள்பதிவு தான்! மறைந்த பதிவர் வால் பையன் (எ) அருண் ராஜ் ஞாபகம் திடீரென்று வந்துவிட்டது காரணமாக இருக்கலாம்! 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)