Tuesday, June 22, 2021

குழுவுக்கு மேல் குழுவாகப்போட்டு மக்களைக் குழப்பும் தமிழக அரசு! :: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

தமிழக அரசியல்களத்தில் மிகவும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒருவராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார். காரணம், உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிற அதே நேரம் தேசியப் பார்வை கொண்டவராகவும், அரசியலை உடனுக்குடன்  ஆராய்ந்து, சரியாக விமரிசனம் செய்கிறவராகவும் அவர் இருப்பதுதான்! பாமகவின் டாக்டர் ராமதாசும் கூட அப்படி அரசியல் செயல் பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர் மீது அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டாக்டர் ராமதாஸ் ஆதாயம் தருகிற பக்கம் சாய்ந்தே பழக்கப்பட்டவர என்பதோடு, எல்லா நேரங்களிலும் அவரது அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்ததே இல்லை என்கிற கடந்தகால வரலாறும் தடையாக இருக்கிறது. 


நான்காண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்தான்! ஒரு  consistency உடன் அரசியல் பேசுகிறவர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு என்றாலும், அப்படி அரிதானவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். வீடியோ 37 நிமிடம், டாக்டர் கிருஷ்ணசாமியைப் புரிந்துகொள்ள உதவுகிற ஒன்றும் கூட!

நேற்றைய 16வது தமிழக சட்டமன்றக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியதில்,புதிய திமுக அரசின் செயல் திட்டங்கள் எப்படியிருக்கும் என்பது வெளிப்பட்டதா? டாக்டர் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாமா?

படித்தவர் பாட்டைக் கெடுத்தார், எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்! என்பது போல,குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு நாட்டை குழப்பலாமா? 

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலோ அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில அரசோ ஆளுநர் உரையுடன் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை துவங்குவது மரபு. நேற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையுடன் துவங்கியது. ’ஆளுநர் உரை’ என்று பெயரிட்டாலும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு எழுதிக் கொடுத்த உரையே அது. ஓரிரு ஆளுநர்கள் தாங்களே அறிக்கைகளை  தயார் செய்து கொண்டு படித்த வரலாறுகளும் உண்டு. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திமுக அரசின் அறிக்கையை அப்படியே படித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர் சகாக்கள் நமது தாய் தேசத்தை ’இந்தியப் பேரரசு’ என முறையாக அடையாளப்படுத்தாமல் ’ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து இழிவுபடுத்துவதால் இத்தேசத்தின் மீது பற்று கொண்ட கோடான கோடி தேசபக்தர்கள் ஏற்கனவே பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய ’ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடர் நேற்றைய ஆளுநர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டமன்ற பதிவேடுகளிலும் இனி இடம் பெற்று விடும். இந்த ஆட்சேபனைக்குரிய தமிழ் வார்த்தை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.

நம்மை அடையாளப்படுத்தியும், பாதுகாத்தும் வரும் தாய்க்கு நிகராக போற்றப்படும் இந்தியத் தேசத்தைக் குறைத்துப் பேசி திமுகவினர் என்ன சுகம் காண்கின்றனரோ தெரியவில்லை? இப்படித் தொடர்ந்து பேசுவது தவறு என்ற  குற்ற உணர்ச்சி சிறிதும் கூட அவர்களுக்குத் தோன்றியதாக தெரியவில்லை. திமுகவின் இந்தியத் தேச விரோத போக்கு அவர்களின் வக்கிர புத்தியைக் காட்டுவதாகவே நாட்டுப் பற்றாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. அரிய பல அறிவிப்புகள் வரும் என்றே அவர்களது ஊடக தோழமைகள் ஆரூடம் சொல்லி வந்தனர். அதுபோன்று எந்த அதிசய அறிவிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த அரசிற்கு நிதிப் பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படும் என சொல்லவில்லை.

மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளைச் சொல்லவும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் அரசியல் சாசன விதிமுறைப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் இந்தியக் குடியுரிமை பணிகளில் (IAS) தேர்ச்சி பெற்றவர்களை கொண்ட   நிர்வாகக் கட்டமைப்பு (Bureaucracy) தமிழ் மாநிலம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ளது. தலைமைச் செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலும் அதன் நீட்சியாக நிர்வாக அமைப்புக் குக்கிராம தலையாரி வரையிலும் எப்பொழுதும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு மேலும், ஓரிரு துறைகளில் தகவல்களைத் திரட்டவும், அத்துறைகளை மேம்படுத்தவும் எப்பொழுதாவது சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படுவது விதிவிலக்காக கடந்த காலங்களில் நடந்துள்ளது.

ஆனால், எதற்கெடுத்தாலும் குழுவை நியமிப்பதே கொள்கையாக இவ்வரசு விதியாக்கிக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு; மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு; கருப்பு பூஞ்சையைக் கண்டறிய டாக்டர் மோகன் தலைமையில் ஒரு குழு; கரோனா குறித்து ஆராய இன்னொரு குழு என அண்மையில் தான் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் எல்லாம் போதவில்லை போலும். இப்பொழுது சர்வ தேச குழு ஒன்று புதிதாக முளைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ,  ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என நேற்றைய ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அடுக்கடுக்காக குழுக்களை மட்டும் இவ்வரசு அடுக்கிக் கொண்டே போகிறது.

இந்த குழுக்கள் எல்லாம் இலவசமாகச் செயல்படுமா? இவர்கள் எல்லாம் செயல்படக் கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டுமே? நிதி நெருக்கடியில் ஏற்கனவே மாநில அரசு சிரமப்படும் வேளையில் செலவைக் குறைப்பதற்குப் பதிலாகச் செலவைக் கூட்டிக்கொண்டே போவது எவ்விதத்தில் நியாயம்? ”அரைகுறை ஆயுள் கொண்ட இலவசத் திட்டங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டுவது; எளிதான இலக்காக விளங்கும் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வாக்குகளை ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது” தானே திராவிட சித்தாந்தத்தின் தாரக மந்திரம். ஏழை தமிழர்களின் அறியாமையின் மீதும், இயலாமையின் மீதும் தானே இவர்களின் பொருளாதார கோட்பாடும், சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. 

கழக கண்மணிகளின் இந்த அரிய கண்டுபிடிப்புகளைத் தாண்டி, கடந்த பத்து வருடமாக தமிழகத்திற்கு வரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்? அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப் படுத்தப் போகிறார்களா? இக்குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலையாகத் தானே முடியும்.

குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு இம்மாநில  மக்களைக் குழப்பவும் வேண்டாம்!மாநில நிதி ஆதாரத்தை விரயமாக்கவும் வேண்டாம்!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,  நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி.    22.06.2021   

அரசியலில் ஒரு தெளிவான பார்வையோடு இருப்பது அபூர்வம். நேர்மையாக  அரசியல் விமரிசனம் செய்வது அரிதிலும் அரிது. இப்படி அபூர்வமானவராக டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறாரே, எப்போது இவர்போன்ற அரசியல்வாதிகளைக் கண்டுகொள்ளப் போகிறோம்? சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.           

8 comments:

 1. நிதியமைச்சருக்கு ஒன்றும் தெரியாது என்பதைப் புரிந்துகொண்டு இந்தக் குழுவை அமைத்திருக்கலாம் இல்லையா? நிதியமைச்சருக்கு, பதவிக்கு வந்த பிறகுதான் 5 லட்சம் கடன் என்று தெரிந்திருக்கிறது. அவர்களது கட்சி அறிக்கையில் தேர்தலுக்கு முன்பு போட்டிருந்த 9 லட்சம் கடன் என்பதைபடித்ததே இல்லை போலிருக்கிறது. 9 லட்சம் கடன் என்று தெரிந்தும், பெட்ரோல் டீசலுக்கு 5 ரூபாய் லிட்டருக்குக் குறைக்கப்படும் என்று சொல்லியிருந்த தேர்தல் அறிக்கையையே படிக்காதவராக இருப்பதால்தான் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் ஒரு குழுவை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். அப்போ திட்டக் கமிஷன், பொருளாதாரப் புளி ஜெயரஞ்சகன்? ஒருவேளை பழக்க தோஷத்தில் தமிழக அரசைப் பற்றி ஏதேனும் விமர்சிக்கக்கூடாது என்பதற்காகவா இல்லை, கட்சிக்காரர் என்பதற்காகவா?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இந்தப்புள்ளிகளைக்குறித்து ஏகத்துக்கும் கற்பனை செய்துகொள்கிறீர்கள் போலத் தெரிகிறதே நெல்லைத்தமிழன் சார்!

   இவர்களில் எவரும் அந்த அளவுக்கு worth இல்லை!

   Delete
 2. தேர்தலுக்கு முன்பு வரை மின்சாரம் ஒழுங்காக வந்துகொண்டிருந்தது. இப்போதான், அணில் செடிகளில் ஏறி எல்லாவற்றையும் நாசம் செய்துள்ளதால் பராமரிப்புப் பணிகளுக்கு நிறைய கோடிகள் செலவழிக்கணும் என்றும் அதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு மின்சாரத் தடை இருக்கலாம் என்றும் அமைச்சர் சொல்லியிருக்கிறார். தேர்தல் அறிக்கையில் இன்ன தேதியில் நிறைவேற்றுவோம் என்று சொன்னோமா என்ன என்று கேட்கும் நிதியமைச்சர் இருப்பதால், மின்சாரத்துறை அமைச்சரும், 1 வருடத்துக்குப் பிறகு, மின் வெட்டு உங்களுக்குப் பழகியிருக்கும் என்று நம்புகிறோம் என்று சொல்லிடுவாரோ?

  ReplyDelete
  Replies
  1. தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் இவரைப்போன்றவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற சக்தியுள்ள நல்லவர்கள் நிறைந்தது என்றும் புரிந்து கொள்ளலாமே! :-)))

   போக்குவரத்து அமைச்சராக )அதிமுக) இருந்தபோது காசுபார்த்த வித்தையை மின்சார வாரியத்திலும் செ. பாலாஜி காட்ட முனைந்துவிட்டார் என்று இன்னுமா உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை நெல்லைத்தமிழன் சார்? !!

   Delete
 3. எடப்பாடிக்கும், ஓ பி எஸ்ஸுக்கும் டியூஷன் எடுக்கச் சொல்லவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. டியூஷன் எடுக்கச் சொன்னால் மட்டும்? !! அவர்கள் கற்றுக்கொண்டுவிடவா போகிறார்கள்? அப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கிருக்கிறதா ஸ்ரீராம்?

   Delete
 4. இது போன்ற குழுக்கள் பொதுவாக லிபரல்கள் ஒருவரை ஒருவரை சொறிந்து கொள்ளவும், அரசு பணத்தை கொள்ளையடிக்க போடும் ஒரு திட்டம். கடைசியில் விளக்கெண்ணெயில் கை கழுவது போல் ஒரு வழ வழ அறிக்கை கொடுத்து முடித்துக்கொள்வார்கள். பொதுவாக ஒரு பைசாவுக்கு பெறாத ஒன்று தான் இந்த குழுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் பைசா பெறாதவைதான் இந்தக்குழுக்கள், பந்து! ஆனால் பைசா தேற்றுவதற்கு உபயோகமாக இருக்குமே!

   டாக்டர் கிருஷ்ணசாமி சரியான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறாரே, கவனித்தீர்களா?

   ஆட்சியாளர்களுக்கு உதவ இங்கே இருநூறு ஆண்டுகள் அனுபவமுள்ள சிவில் சர்வீஸ் என்று இருக்கிறதே, அந்த சிவப்புநாடா ஆசாமிகளைத்தாண்டி இவர்கள் சாதிப்பார்களா? அவர்கள் விடுவார்களா? என்பது அதையொட்டி எனக்குள் எழுந்த கேள்வி.

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)