இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்! அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே! பாமக நிறுவனத் தலைவர் Dr ராமதாஸ் சிலகாலமாகவே கதைகள் சொல்லி அரசியல் நடப்பை சொல்லாமல் சொல்வதென்ற பாணியைக் கடைப்பிடித்து வருவதும் தெரிந்திருக்கும்.
மதுநீதி என்ற தலைப்பிட்டு மருத்துவர் ராமதாசு இன்று முகநூல் பகிர்வில் ஒரு கதை சொல்லி இருக்கிறார்:::
நவீன மதுநீதிச் சோழன்!
அந்த சோழமன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அந்த பசு அடித்தது.
அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர்.
அந்த பசு கூறியது,” மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள். அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சற்று முன் தேரில் வந்த இளவரசர் நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று என் மனம் திருப்தியடைந்திருக்கும். ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ் வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார். நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று பசு முறையிட்டது.
மந்திரிமார்களும் மன்னனிடம் சென்று பசு நீதி கேட்ட கதையை கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், மந்திரியாரின் காதுகளில் எதையோ கூறி, ‘’ நான் கூறியது போல அந்த பசுவுக்கு நீதி வழங்குங்கள்” என்று கட்டளையிட்டார்.
அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்தனர். பசுக் கன்றை கொன்ற இளவரசனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றிக் கொல்ல மன்னர் ஆணையிட்டிருக்கிறார் என்று நினைத்தனர்.
மந்திரியாரும், சேனைத்தலைவரும் தேரை எடுத்துக் கொண்டு பசுவின் இருப்பிடத்திற்கு விரைந்தனர். அதைப் பார்த்த மற்றவர்கள், ‘’ பார்த்தாயா எங்கள் மன்னர் அடித்த சிக்சரை! பசுவின் இருப்பிடத்தில் வைத்து இளவரசர் மீது தேரை ஏற்றி நீதி வழங்கப்போகிறார் எங்கள் மன்னர்” என்று கதையளந்தனர்.
ஆனால், நேராக பசுவின் இருப்பிடத்திற்கு சென்ற மந்திரியாரும், சேனைத் தலைவரும் அங்கு நடக்க முடியாமல் நலிவடைந்த நிலையில் படுத்துக் கிடந்த இன்னொரு கன்றுக் குட்டி மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டு வெற்றிக் களிப்புடன் அரண்மனைக்கு திருப்பினர்.
எங்கோ ஒரு மூலையிலிருந்து முழக்கம் எழுந்தது.
’’ எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!”
எனக்கென்ன ஒரே வருத்தமென்றால், நாளைய தமிழ் பேசும் ஊராட்சி ஒன்றிய முதல்வராக அறியப்படுகிற தியாகராஜனைப் போயும் போயும் அந்த யூட்யூப் வாயன் ஜெயரஞ்சனிடம் பட்ஜெட் ஆலோசனை கேட்கச் சொல்லி விட்டாரே இந்த ஸ்டேன்லி ராஜன் என்பது மட்டும்தான்!
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பது அமைச்சர் பெருமக்களுக்குப் பொருந்தாது போல இருக்கிறதா? கொரோனா முதல் அலையில் (அதிமுக ஆட்சி) நோய்த்தொற்று எண்ணிக்கையை விட இப்போது 2வது அலையில் ( திமுக ஆட்சி) தொற்று பல மடங்கு அதிகம் உயிரிழப்பும் மிக அதிகம் என்பதை மறந்த மறைக்கும் பேச்சு. ''அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தாதது ஏன்? கடந்த ஆட்சியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். தற்பொழுது கரோனா குறைந்த காரணத்தால் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்று செந்தில் பாலாஜி கேட்டதாக நக்கீரன் வெளியிட்டிருக்கிறது
எல்லாவற்றுக்கும் உங்களையே நம்பியிருக்கிற கரூர் MP ஜோதிமணியை இப்படி வெறும் அஞ்சு பேரோடு வீதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை.க் கண்டித்துப் போராட விட்டுவிட்டீர்களே! அது ஏன் அமைச்சரே என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல இருக்கிறது. நல்ல கதைதான்!
இது இந்தப்பக்கங்களில் 700 வது பதிவு
மீண்டும் சந்திப்போம்.
700 பதிவுகள்...
ReplyDeleteஇன்னும் பலவாகப் பெருக வேண்டும்..
அன்பின் நல்வாழ்த்துகளுடன்..
அன்பான வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி துரை செல்வராஜு சார்!
Deleteபொருளாதார மேதை (பொருளாதாரப் புளி) NO பல் பரிசு வாங்கப் போயிருக்கிறாராம். திட்டக் குழுவில் இருப்பதால், இன்னும் ஆறு மாதங்களில் ஒவ்வொரு தமிழனுக்கும் வாழ்க்கையைச் சிறக்க வைத்துவிடுவாராம் (சந்தடி சாக்கில் அவரது வாழ்க்கையை மட்டும் சிறப்பித்துக்கொண்டுவிடுவார்னு நம்புகிறேன்)
ReplyDeleteஜெயரஞ்சனை எப்போதிலிருந்து பொருளாதார மேதையாக இவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்களாம்? வளர்ச்சிக்கொள்கைக்குழுவுக்கெல்லாம் வாழ்க்கை வசதியைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பிருக்காது என்றுதான் நினைக்கிறேன் நெல்லைத்தமிழன் சார்!
Deleteஇப்போதெல்லாம் ஜெயரஞ்சனுடைய பேட்டிகள் விவாதங்கள் எதையும் காணோமே!