கருத்துசுதந்திரம் பற்றி வாய்கிழியப்பேசும் தமிழகப் பிரபலங்கள் பலருடைய முகமூடியை ஒரு வெப் சீரீஸ் கிழித்தெறிந்திருக்கிறது. அமேசான் பிரைமில் நேற்று முன்தினம் வெளியான The Family Man 2 சீரீசைத் தடை செய்யவேண்டும் என்ற கூக்குரல் முதலில் நாம் தமிழர் கட்சி சீமானிடமிருந்து, அடுத்து வேலைவெட்டி இல்லாமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் வைகோ இவர்களிடமிருந்து ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தக் கூக்குரல்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பிரபலங்கள் மற்றும் அனாமதேயங்களிடமிருந்து கிளம்பின. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் சீரீசின் ட்ரெயிலரை மட்டுமே பார்த்துவிட்டு இந்த அறிவுக்கொழுந்துகள் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான்.
ஒன்பது பகுதிகளாக ஸ்ட்ரீமிங் வீடியோவாக OTT தளத்தில் அறிவிக்கப்பட்டபடியே ஜூன் 4 அன்று The Family Man 2 வெளியாகிவிட்டது. வெள்ளிக்கிழமை முதல் 4 பகுதிகளையும் நேற்றைக்கு மிச்சம் 5 பகுதிகளையும் பார்த்து முடித்ததில் ஈழத்தமிழரை இழிவுபடுத்தும் இந்த சீரீசை அனுமதிக்கமாட்டோம், மத்திய அரசே உடனே தடை செய் என்றெல்லாம் இங்கே உள்ள கோமாளிகள் சிலர் எதற்காகக் கூவினார்கள் என எனக்கு மட்டுமல்ல எவருக்குமே சுத்தமாகப் புரியவில்லை! இந்த லட்சணத்தில் தமிழ்நாடே The Family Man 2 வை எதிர்த்துக் கொந்தளித்ததாகவும், மத்திய அரசுக்கு வைகோ உள்ளிட்ட சிலர் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் செய்திகள்! செய்திகள் ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உங்கள்பக்கத்தில் உணர்ந்தீர்களா என்ன!!
சைமனும் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களும் இன்னும் சிலரும் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியஸ் விடுதலை புலிகளை கொச்சைபடுத்துவதாக கிளம்பிவிட்டனர். புலிகள் இயக்கம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா கனடா ஏன் ஐரொப்பிய யூனியனில் கூட தடைசெய்யபட்ட இயக்கம் என்பது உண்மை
என்ன சொல்லி தடை செய்தார்கள்?
மிக மோசமான தற்கொலை போராளிகள் என்பது முதல் சொந்த இனமான லட்சுமண் கதிர்காமர் எனும் தமிழரை கொன்ற இயக்கம் என ஏகபட்ட குற்றசாட்டுகள். அதுவும் 2005ல் நார்வே தூதுகுழு புலிகளை சாடிவிட்டு வெளியேறியதும், ஆனானபட்ட அமெரிக்க தூதர் "புலிகள் மோசமான தோல்வி நோக்கி நகர்கின்றார்கள்" என்பதும் பெரும் குற்றசாட்டு.
பிரபாகரன் தனக்கு தானே வைத்து கொண்ட சூனியம் 2002 கிளிநொச்சி மாநாடு, அதில் உலகம் ஒப்புகொண்ட விஷயம் இந்த கோஷ்டி மொத்தமாக ஒழிக்கபட வேண்டியது மற்றபடி ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள் என்பதே! புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிக்கும் தொடர்பு உண்டா என்றால் நிச்சயம் உண்டு என்பதற்கு ஆதாரம் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மேலான துப்பாக்கி சூடு
அப்பொழுது இலங்கை அரசு புலிகள் மேல் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது, அப்பொழுது பாகிஸ்தானிலில் இலங்கை வீரர்களின் பேருந்து தாக்கபட்டபொழுது புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு உலகுக்கே தெரிந்தது.
இது ஆச்சரியமல்ல, ஒரு தீவிரவாத இயக்கம் இன்னொரு இயக்கமில்லாமல் வளரமுடியாது இயங்க முடியாது
அவ்வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு அல்ல, பின்லேடனின் சில தீவிரவாதிகள் உலகமெல்லாம் சுற்ற புலிகள் உதவினர் எனும் வகையில்தான் அமெரிக்கா அவர்களை கட்டம் கட்டியது. சக போராளி குழுக்களை கொன்றது, ராஜிவ் பிரேமதாசாவினை கொன்றது கடைசியிலும் திருந்தாமல் லட்சுமண் கதிர்காமரை கொன்றது உலகெல்லாம் தீவிரவாதிகளுடன் வலம் வந்தது என புலிகள் செய்த அட்டகாசம் ஏராளம்.
அதைத்தான் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியல் சொல்கின்றது, அதில் உண்மையினை தவிர ஏதுமில்லை
இதனால் தமிழருக்கு அவமானம் என கிளம்ப அவசியமில்லை அது முட்டாள்தனம். ஈழதமிழருக்கு கிளம்பிய போராட்ட குழுக்கள் சுமார் 40, அதில் 4 கடைசியாக தேறியது அதில் 3ஐ ஒழித்து ஒரே பிரதிநிதி என தன்னை சொல்லிகொண்டனர் புலிகள். ஆனால் உலகம் அதை ஏற்கவில்லை, எனினும் பேசிபார்க்கலாம் என வந்த மேல்நாட்டு குழுவும் இது திருந்தாத கட்ட பஞ்சாயத்து கோஷ்டி என ஓடிவிட்டது.
ஆக இது இந்திய தமிழருக்கான அவமானம் அல்ல, இந்திய தமிழரின் ஒரே அவமானம் திமுக அதை தவிர ஏதுமில்லை. மாறாக இந்த சீரியல் வந்தால் இலங்கையில் இப்படி ஒரு அடாவடி இருந்தது எனும் உண்மையில் ஒவ்வொரு ஈழ தமிழனும் தலைகுனிய வேண்டும்.ஈழதமிழனின் மானம் காற்றில் பறக்க கூடாது என அங்கிள் சைமன் குதிக்கின்றார், ஆனால் அது என்றோ கிழிந்து உலகம் எல்லாவற்றையும் கண்டு விட்டது என்பது அங்கிளுக்கும் அவரின் அடிபொடிகளுக்கும் புரியவில்லை, பரிதாபம்! இப்படி முகநூலில் ஸ்டேன்லி ராஜன் சுருக்கமாகச் சொல்லி பஞ்சாயத்தைக் கலைத்துவிட்டாரே! அதுவும் 15 நாட்களுக்கு முன்பே!
ராஜீவ் காண்டியைக் கொலைசெய்ததில் விடுதலைப் புலிகள் மீது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மீதுமே இருந்த ஆதரவு, அனுதாபத்தைப் பெரும்பாலான தமிழக மக்கள் துடைத்தெறிந்து விட்டார்கள். வெறுமனே கூவிக்கொண்டு இருப்பவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரம் செய்கிற ஆசாமிகள் மட்டும்தான் என்பதையும் தமிழக மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
அது போகட்டும்! The Family Man 2 எப்படியிருக்கிறது?
ஒரு உளவாளியின் கதை என்பதில் குடும்பம் கொஞ்சம், தொழில் ரீதியாக எதிரிகள் கொஞ்சம் என இரண்டையும் கதாநாயகன் எப்படி சமாளிக்கிறார்? இதுதான் கதை முடிச்சு! முதல் சீசனும் சரி, இரண்டாவது சீசனும் சரி கதாநாயகன் ஸ்ரீகாந்த் திவாரி என்கிற NIA வின் ரகசியக் குழு உளவாளி எப்படி தன்னுடைய குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுடன், தொழில்ரீதியாக தேசத்துக்கு ஏற்படும் தீவிரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்கிறார் என்பது மட்டும் தான் மெயின். முதல் சீசனில் வில்லன் ரசாயன ஆலையில் விஷவாயுவைக் கசிய விட முயல்வதைத் தடுப்பது, இரண்டாவது சீசனில் இந்திய இலங்கை பிரதமர்கள் செய்துகொள்ள இருக்கிற ஒப்பந்தத்தைத் தடுக்க முயற்சிக்கும் தற்கொலைப் போராளி ஒருத்தியை, கதாநாயகன் எப்படி முறியடித்து தேசத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. அங்கங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சீரீஸ் விறுவிறுப்பாக நகர்வதில் அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை.
6/10
இந்திய இலங்கைப் பிரச்சினை என்றால் ஈழப் போராளி இல்லாமலா? ஈழப்போராளியாக சமந்தா நடித்ததில் அவரையும் தமிழின விரோதியாகச் சித்தரித்து, நம்மூர் கோமாளிகள் காமெடி செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு என்றாலே கோமாளிகள் அரசியல் முதல் எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்புகிற பிரதேசம் என்றாக்கிவிட்டார்கள். இந்த வெப் சீரீசை மட்டும் விட்டுவைப்பார்களா?
மீண்டும் சந்திப்போம்.
இலங்கைத் தமிழரை விற்பதில் முன்னணியில் இருந்த கோவாலசாமியும் அவரது அடிப்பொடி சீமானும் என்ன சொன்னால் நமக்கென்ன. அதிலும் கோவாலசாமிக்கு வேறு எதைப் பற்றியும் பேச இப்போ உரிமை கிடையாது. அந்த அடிமை சொன்னதற்காக ஒரு இடுகையா?
ReplyDeleteவைகோ அல்லது சீமான் சொன்னார் என்பதற்காக இந்தப்பதிவை எழுதவில்லை நெல்லைத்தமிழன் சார்!
Deleteஇப்போது தேடினால் அணுவுலை ரகசியமே கிடைக்கும் என்கிற தகவல்புரட்சி காலத்திலும் கூட நேற்று என்ன நடந்தது என்பதைக்கூடத் தேடித்தெரிந்துகொள்ள செம்மல்கொள்ளும் இளைய தலைமுறையின் கவனத்துக்காக, ஒரு போராட்டம், போராளிகள் எப்படித் திசை மாறிப்போனார்கள், நம்முடைய பிள்ளைகள் என்று நம்பிய ஜனங்களையே எப்படிக் காவு கொடுத்தார்கள் என்பதாக கொஞ்சம் நினைவு படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டது.
ஆரம்பநாட்களிலிருந்தே புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த திக இன்று அமைதியாக இருக்கிறதே, ஏன்? இப்படியும் அப்படியுமாக ஊசலாடி 2009 இல் மொத்தமாகக் கழுத்தறுத்த திமுக கூட வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை என்பதைக் கவனிக்க இந்த வெப் சீரீஸ் விமரிசனம் ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்!
/செம்மல்கொள்ளும்// சோம்பல் கொள்ளும் என்றிருக்க வேண்டும். எழுத்துப்பிழைக்கு வருந்துகிறேன்.
Deleteஇதில் பேசியிருக்கும் இலங்கை சீனா இடையேயான ஒப்பந்தம் மேலும் முன்னேறி இப்போது இலங்கையில் 660 ஏக்கர் நிலம் தற்போது முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள். அதில் இலங்கை சட்டதிட்டங்கள் செல்லாது என்பது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயமாக தோன்றுகிறது
ReplyDeleteசீனர்களிடம் ராஜபட்சே சகோதரர்கள் வலுவில் சிக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை வைத்துக்கொண்டு சீனா இந்தியாவை என்ன செய்ய முடியும் என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.
Deleteஎப்போதுமில்லாத அளவுக்கு இந்திய முப்படைகள் எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறதென்றுதான் தோன்றுகிறது.
இப்படி ஒரு சீரிஸ் இருந்ததே தெரியாமல் இருந்தேன். ஆனால் திடீரென தமிழ்நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பைக் கண்டுதான் இப்படி ஒரு சீரிஸ் இருந்ததே/இருபிப்பதே தெரியும். முதல்வேலையாக முதல் சீசன் பார்த்தேன். ரசிக்கும்படி இருந்தது. இரண்டாவது சீசனையும் பார்த்து விட்டேன். நானும் கடந்த வெள்ளி சனிகளில்தான் பார்த்து முடித்தேன்.
ReplyDeleteஇந்த வெப் சீரிஸ்களில் ஒரு பெரிய சௌகரியம் இருக்கிறது ஸ்ரீராம்! முதலாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள்/எபிசோடுகளுக்குள் கதையைச் சொல்லியாக வேண்டும். மெகா சீரியல்கள் என்ற போர்வையில் 900, 1000 எபிசோடுகளுக்கு இழுக்கக் கூடாது.
Deleteஸ்ட்ரீமிங்கில் இருக்கும் என்பதால் எப்போதுவேண்டிடுமானாலும் பார்த்துக் கொள்ள முடிவது இன்னொரு சௌகரியம்.
தூர்தர்ஷனில் வெறும் 13 எபிசோடுகளுக்குள் சித்திரப்பாவை போன்ற நாவலைக்கூட டிவி சீரியலாகப் பார்க்கமுடிந்த பழைய பொற்காலம் நினைவிருக்கிறதா?
// தமிழகமே கொந்தளித்ததாக... //
ReplyDeleteதெரியாமல் போயிற்று...
அவங்களைப் பொறுத்த வரையில், தமிழகம் என்றால் கோவாலசாமி, அவர் பையன் துரை. அடுத்து சீமான், அவர் மனைவி. அவ்ளோதான்
Deleteதேநீர்க் கோப்பைக்குள்சுனாமி என்று சொல்வார்களே, அது இதுதான் துரை செல்வராஜு சார் !திராவிடங்கள் தமிழ்த்தேசியர்கள் குதிப்பதும் கூட இதுமாதிரி சிறு கோப்பைக்குள் தான்! அதையும் தமிழகமே குதித்தது என்று தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்
Deleteதன்னைப்போலப்பிரறை நினை என்பது நல்லவிஷயம்தான்! அதையும் கூடத் திராவிடங்களும் தமிழ்த்தேசியர்களும் தங்களுக்குள்ளாகவே குறுக்கிக் கொண்டதுதான் பரிதாபம் நெல்லைத்தமிழன் சார்!
Deleteநானும் என் மகனும் சனி,ஞாயிறில் பார்து முடித்தோம். நன்றாக இருக்கிறது,ஆனால் சிலர் கொண்டாடுவது போல் ஆஹா ஒஹோ இல்லை. தன் இமேஜை பற்றி கவலைப்படாமல் போராளியாக நடித்திருக்கும் சமந்தாவை பாராட்டலாம். அசல் குடும்பத்தலைவியாக வந்திருக்கும் பிரியாமணியையும் பாராட்டலாம்.
ReplyDeleteவாருங்கள் அம்மா!
Deleteவெப் சீரீசோ டிவி சீரியல்களோ ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்படக்கூடிய ரகமல்ல. வெறும் பொழுதுபோக்குத்தான் என்பதைப்புரிந்துகொண்டால் சர்ச்சைகளுக்கு இடமே இல்லை.
இதை ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டு பதிவிட்டதே இது கிளப்பிய அரசியல் விவகாரங்கள் குறித்தானதுதான்.
பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வது போல் காட்டுவதும், L T T E க்கும் I S I க்கும் தொடர்பு இருப்பதாக காட்டுவதும், ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்க சோரம் போவபார்க்கும் பெண் போராளி தயாராக இருப்பதாக காட்டுவதும் பலத்த எதிர்ப்பை காத்திருக்கிறது.
ReplyDeleteதமிழர்கள் என்றால் ஒரு சில அடையாளங்களை காட்டுவதும், கொஞ்சம் மட்டும்தான் என்ற வகையில் காட்டுவதும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. மனோஜ் பாஜ்பாய், ஷரீப் ஹஷ்மி நடிப்பு பிரமாதம்!
தமிழர்கள் பல விதத்தில் கொஞ்சம் மட்டம் தான் என்று தோன்றும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை தருகிறது!
Deleteஒரு புனைவைப் புனைவாகப்பார்க்க முடியாத அல்லது இட்டுக்கட்டப்பட்ட விஷயங்களையே நிஜமான வரலாறாக நம்புகிற மூடத்தனத்திலிருந்து ஒருபகுதி தமிழர்கள் விடுபடவே இல்லை என்பதைக் காட்டுவதாகத்தான் நான் பார்க்கிறேன் பந்து.
Deleteபிரபாகரனுடைய முடிவு எப்படி நிகழ்ந்தது என்பதோடு இந்த சீரீசை ஏன் முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும் சொல்லுங்கள்? கதை ஸ்ரீகாந்த் திவாரி என்கிற NIA ஏஜென்ட் வேலையிலும் குடும்பத்திலும் சந்திக்கிற பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பது மட்டும்தான்! அதில் ஈழத்தமிழர், போராளிகள் என்பதெல்லாம் டீடெயிலாகப் பேசப்பட வேண்டுமா என்ன? போராளிகள் வெறியேற்றப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்வதற்காக ராஜி கதாபாத்திரம் கொஞ்சம் அழுத்தமாகவே ப்டைக்கப் பட்டிருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது.
எதிர்ப்பு வந்து, வந்தவேகத்திலேயே கோப்பைக்குள்ளேயே சுருண்டு படுத்துக் கொண்டு விட்டதே! தமிழர்களை மட்டம் தட்டுகிற மாதிரி .....! தமிழர்கள் என்றால் மூன்று கொம்பு முளைத்தவர்களாய் நினைத்துக்கொண்டால், மட்டம் தட்டுகிறமாதிரித் தான் தெரியும்.
மிர்சாபூர் வெப் சீரீஸைப்பார்த்து வடக்கே யாரும் பொங்கினமாதிரித் தெரியவில்லையே!