இந்தியப் பிரதமராக இருந்த அரசியல்வாதிகளிலேயே இன்றைக்கும் மிகவும் குறைத்து மதிப்பிடப் படுகிறவர் பி வி நரசிம்ம ராவ் ஒருவர் மட்டும் தான் என்கிற கசப்பான உண்மையை அவர் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிற ஜூன் 28 இன்று, ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
புதிய தறுதலை தொலைக்காட்சிக்கு 17 மொழிகளில் பேச தெரிந்த முன்னாள் பி.வி.நரசிம்ம ராவ் என்று மட்டுமே தலைப்புக் கொடுக்கத் தெரிவதில் வியப்பு ஒன்றுமே இல்லை. முன்னாள் என்ற வார்த்தைக்கு அடுத்து பிரதமர் என்ற வார்த்தையைக் கூடச் சேர்க்க முடியாத அலட்சியத்தைப்போலவே தேச மக்களும் அவரைக் குறைவாக மதிப்பிட்டு அலட்சியப்படுத்தி வருகிறோமா?
நரசிம்ம ராவ் : இந்தியாவை மாற்றி அமைத்த சிற்பி என்ற தலைப்பிலேயே நூலின் மொத்தக் கருத்தையும் சொல்கிற மாதிரி வினய் சீதாபதியின் ஆங்கிலநூலைத் தமிழில் மொழி பெயர்த்த ஜெ . ராம்கியின் அறிமுக உரையோடு போன சனிக்கிழமை ஒரு நூல் மதிப்புரை விவாதம் நடந்தது என்ற தகவலை சற்றுத்தாமதமாகத் தான் தெரிந்து கொள்ள முடிந்தது . வலையேற்றியது Tamil EBookery யூட்யூப் தளத்தில் நேற்று வரை தேடி இன்றிரவு தான் கிடைத்தது.
மீண்டும் சந்திப்போம்.
இந்தியாவை பல மஹான்களின் புனிதக் கரங்கள் முக்கியமான நேரங்களில் காத்து வருகின்றன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நரசிம்மராவ் பிரதமர் போட்டியிலேயே இல்லை. 1991 எலெக்ஷனில் ராஜீவ் அவரை ஒதுக்கி வைத்து போட்டியிட தேர்தலில் சீட் கொடுக்கவில்லை. வெற்றி பெறுவதற்கு முன்னே ராஜீவ் அகால மரணம் அடைந்ததால் வெற்றி பெற்றவுடன் கட்சியில் சீனியராக காங்கிரஸ் பெருந்தலைகளின் சாய்ஸ் என் டி திவாரி யாக இருந்தது. கிட்டதட்ட அவர்தான் வருவார் என்று பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அந்த நேரத்தில், என் டி திவாரி சிம்லாவில் எம் பி எலெக்ஷனில் தோற்றுப் போனார். அதனால் அவர் போட்டியில் இருந்து விலக்கப் பட்டு அடுத்து யார் என்று யோசிக்கும்போது போட்டியில் இல்லாத சீனியர் அரசியல்வாதியான நரசிம்மராவின் மடியில் பிரதமர் பதவி விழுந்தது!
ReplyDeleteநரசிம்மராவ் இந்தியாவை வடிவமைத்த சிற்பி! அவரை போன்றவர்களுக்கு சோனியா போன்ற அற்பப்பதர்கள் மதிப்பு கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன?
உண்மைதான் பந்து! இந்தப்புண்ணிய பூமியை தெய்வ அருள்தான் காப்பாற்றி வருகிறது.
Deleteவெற்று சோஷலிஸத் தம்பட்டங்களில் இந்திரா கஜானாவைக் காலிசெய்த விவரத்தை அடுத்து வந்த ராஜீவுக்கு அதிகாரிகள் சொன்னார்களா என்று தெரியாது. சொல்லி இருந்தாலும் நேருவுக்கு வாய்த்த வாரிசு காதில் ஏறியிருக்குமா என்பது சந்தேகமே.
1980களில் சீனாவில் டெங் சியாவோ பிங் இதைவிட மோசமான சூழ்நிலையில் பொறுப்பேற்றவுடன் அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதைவிட அந்நிய முதலீட்டை தொழில்நுட்பத்தை அனுமதித்திருந்தாலும், தங்கள் கைகளை மீறிச் செயல்பட விடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சாமர்த்தியம் இன்றைக்கும் கூட வேறெந்த நாட்டிலும் சாத்தியமாகாதது. முப்பதே ஆண்டுகளில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா வளர்ந்த கதை அது.
ஆனால் இங்கே இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளத்தடையாக காங்கிரஸ் அரசியல் இருந்ததையும் மீறி, செய்யத்துணிந்த ஒரேமனிதர் நரசிம்மராவ். அதைத்தவிர வேறெந்த வழியும் அவர்முன் இருக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். சீரழிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நரசிம்ம ராவின் ஐந்தாண்டுக் காலம் உதவியாக இருந்தது.
சோனியா அவரை மதிக்கவில்லை என்பது இங்கே விஷயமில்லை. ஒரு செல்வாக்கான அரசியல் குடும்பத்துக்கு மருமகளாக வந்த ஒரு தற்குறி, பல்லக்குத் தூக்குகிறவர்கள் உதவியுடன் ஒரு முன்னாள் பிரதமராக நரசிம்மராவின் இறுதிச்சடங்குகளை டில்லியில் நடத்தக்கூட விடவில்லை என்பது காங்கிரசின் தலைவிதியாக இருக்கலாம், ஆனால் தேசத்துக்கு மிகப்பெரிய அவமானம்.
அதைவிட நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்தங்களால் கொஞ்சம் தலைநிமிர ஆரம்பத்தை 2004 - 2014 இந்தப்பத்தாண்டுகளில் சோனியா வகையறா சூறையாடியதும் அதற்கு உடந்தையாக, மன்மோகன் சிங் டம்மிப்பீசாகப் பிரதமராக இருந்ததையும் என்னவென்று சொல்ல? இந்திய அரசியல்வரலாற்றின் மிகப்பெரிய நகைமுரண்.