Showing posts with label கவிதை நேரம். Show all posts
Showing posts with label கவிதை நேரம். Show all posts

Thursday, November 7, 2019

இன்றைக்குப் பார்த்தது கேட்டது படித்தது!

First things first! இன்று விஞ்ஞானி Sir C V  ராமனுடைய பிறந்த தினம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்பைத் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் டெமாக்ரட்டுகள் தீவீரமாக இறங்கியிருக்கும் இந்த  நேரத்தில் இர்விங் வாலஸ் எழுதிய The Man புதினத்தில் இந்தத் தகுதி நீக்கம் செய்கிற விதத்தைக் குறித்து விவரமாக எழுதி இருந்ததும்  நினைவு வந்தது. புத்தகத்தை இன்னொரு முறை வாசிக்க எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில் டைம் இதழில் ஜோன் மீச்சம் எழுதியிருக்கும் ஒரு செய்தி அலசல் கண்ணில் பட்டது.

  

The Impeachment Inquiry Is About More Than Donald Trump — It’s About Who We Are as Americans என்று தலைப்பிட்டு ஆரம்பிக்கிற செய்தி அலசல் The start of public impeachment hearings in Congress on Nov. 13 marks the beginning of a test for the country. As the debate over impeachment and removal unfolds, the nation’s immediate and long-term future depends on whether Americans will be guided by reason rather than passion, fact rather than faith, evidence rather than tribe என்று அடுத்தவாரம்  புதன்கிழமையன்று  ஆரம்பமாகும் டொனால்ட் ட்ரம்பைத் தகுதிநீக்கம் செய்கிற நடவடிக்கைகளின் தொடக்கம்  அமெரிக்காவுக்கே வைக்கப்படுகிற ஒரு சோதனையாகவும் இருக்கும் என்கிறார். 


டில்லி வழக்கறிஞர்களுடைய அடாவடித்தனத்துக்கும் சதீஷ் ஆசார்யா வரைந்திருக்கிற இந்த கார்டூனுக்கும் பொருத்தமில்லைதான்! ஆனால் சீனாதானா முழிக்கிற விதம் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்தது உண்மை! 


இசுடாலின் மிசா தியாகியா என்ன? அமைச்சர் ஜெயகுமார் அவர்பங்குக்கு பொதுவெளியில் போட்டு உடைக்கிறார், இந்த விஷயம் 4வது நிமிடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. 

ஒரு இடதுசாரித்தோழர் இந்தப்படத்தைப் பகிர்ந்து இருந்ததில் மனதில் தோன்றியது இது: #கவிதைநேரம்  

அவர்கள் நிரந்தரம் என்ற கனாவோடு இருந்தார்கள் 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மறந்தவர்கள் கட்டியிருந்த கோவணமும் உருவப்பட்டதென்பதை 
அறியாதவர்களாக!

மீண்டும் சந்திப்போம்.  

Tuesday, June 21, 2011

இது கவிதை நேரம்!

'மோகனத்தமிழ்' அரங்கனும், மின்தமிழ் கண்ணனும்!


கவிதைக்கு வழிசொல்லி
ஆற்றுப் படுத்துகின்ற
கவியாற்றுப் படையீதாம். ஆற்றுப்படையென்னும்
இலக்கணத்திற் கொத்ததுதான்..
என்றாலும்...
அள்ளித்தரும் கைநிறைவோ
உள்ளிப் பெரும் பொருள்நிறைவோ
கள்ளம் அவிழக் காலம் கனிவதற்கே
மெள்ளக் குமுறும் மனக்குறையோ
விள்ளற் கரிதாம் விடம்பனமோ
தள்ளற்கரிதாம் என உரைப்பேன்
தளர்விலராய்க் கேட்டல் கடன்.
*
*----* ஐயா! கவிராயா! சந்தையொன்று நடக்கிறதாம்
எங்கென்று அறிவீரா?
எனக்கும்வழி சொல்வீரா?
*----*ஆஹா அதற்கென்ன! ஊருக்கு நடுவே
ஒதுக்கு மைதானத்தில்
உள்ளே சென்றக்கால் ஒரு சந்தை நடக்கிறது.
அதுவா நீர் கேட்கின்றீர்?
*----*அதுதான் நினைக்கின்றேன்.
கவிகூடும் சந்தையென்றார்
*---- *ஆமாமாம் அங்குதான் நடக்கிறது.
விற்பதற்கோ வாங்குதற்கோ
எற்றுக்கு நீர் செல்வீர்?
கற்றவித்தை காட்டிக்
கரகாட்டம் ஆடுதற்கே
கூட்டத்தின் நடுவே
கோணமேடை தானுமுண்டு.
*---- *சரக்கெடுக்கச் செல்கின்றேன்
அட்டிகையாய்ப் பணப்பட்டை
அணாக்கயிறு சுற்றிவந்தேன்
படிந்ததென்றால் பேரம்தான்
என்ன சொல்வீர்?
*---- *பணமெதற்கு?
பா தொடுத்த பொருள் எல்லாம்
பண்ட மாற்று முறைதானே
புழக்கத்தில் ஆதிமுதல்
கவிதையுள்ளம் கையிருப்பு
கவிதை உங்கள் சரக்கெடுப்பு
கையிருப்பு இல்லையெனில்
சரக்கெதுவும் பேராது.
கடன் சொல்லி வாங்கிவர
கண்டு கொள்வார் யாருமில்லை.
கவியுள்ளம் இருந்ததென்றால்
சந்தைக்குப் போயிடுவீர்
இல்லையெனில் வந்தவழி
இங்கிருந்தே திரும்பிடுவீர்
பண்டம் கவியுள்ளம்
மாற்றிக்கொள் வியாபாரம்
அக்கா அத்திம்பேர்
அப்பன் மகன் சம்சாரம்
ஆத்தாள் அத்தை தங்கை
அருமைமகள் அடுத்தாத்துப்
பழக்கம்தான் என்றகதை
பம்மாத்து செல்லாது
சந்தைக் கெடுபிடியில்
சரக்கிருந்தால் சரக்கு
சரக்கோ கவியுள்ளம்
சரக்கின்றிச் சென்றீரேல்
கவிதையிலே சிந்துகிற
சக்கை சருகு குப்பை
சுற்றிவந்த காகிதம்
பொக்கைப் புழுதிப்
பொதிந்து வைத்த மரத்தூளாய்
சமுதாயச் சீர்திருத்தம்
சன்மார்க்க உபதேசம்
சமாதிநிலை சாகஸங்கள்
சித்தாந்த சிலம்பங்கள்
காமாதி உலாமடல்
கண்டதுண்டமாக வெட்டி
கூறுகெட்ட வேகத்தில்
கொள்ளைவண்டி ஓட்டுநர்க்காய்
நெடுஞ்சாலை ஓரத்தில்
நாயொதுங்கும் வாசத்தில்
கொத்துபரோட்டா
குமட்டெண்ணை துணுக்குவரி
ஏப்பம்போல் அப்போதைக்கு
இரைச்சலிடும் சொல்ஜிகினா
தாழ்ப்பாள் விவகாரம்
தப்படிக்கு அச்சாரம்
குத்தாலக் குழியெண்ணை
பிடித்துவிடும் பேச்சாரம்
ஹேர்கட்டிங் சலூன்சரக்காய்
அள்ளாது குவிந்திட்ட
அற்புத முடிச்சரக்கு
செல்லும் வழியெல்லாம்
சிந்திக்கிடக்குமங்கே
செலவின்றி அவற்றினிலே
ஏதேனும் அள்ளிவரலாம்
அள்ளிவந்தே
ஊரெங்கும் சுற்றி
உள்ளத்தில் ஒதுக்குப் புறமாகக்
கழிமனக் குளமேட்டில்
கழிப்பறை அகம் எதிராய்க்
குந்தி விரித்திட்டுக் கடைபரப்பிக்
கோணியிலே கட்டிவந்த
குப்பையெலாம் விற்றிடலாம்
கோணல் பெருமக்கள்
உளக் கூனல் புன்மதியார்
ஓட்டை மனத்தோடும்
உளுத்தச் சொல்லோடும்
கேட்டுவந்த பேரத்தில்
கிடைத்தவரை கொள்ளைதான்
ஆகமொத்தம் கவிராயா!
சரக்கிருந்தால் சந்தைக்குச் சென்றிடுக
சரக்கோ கவியுள்ளம்
பண்டமாற்று வியாபாரம்.

இப்படிப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்ததால், பலருக்கும் வயிறு எரியத்தானே செய்யும்!


இப்படிப் பலரது வயிற்று எரிச்சலைக் கட்டிக் கொண்ட இந்தக் கவிதை 2001 வாக்கில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்கிறார், ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்! இந்தக் கவிதைக்கு அவரே சொந்தக்காரர்! தமிழினி வெளியீடாக, அவருடைய கவிதைத் தொகுப்பு உணர்வின் உயிர்ப்பு என்ற தலைப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அப்புறம் தேர்ந்தெடுத்த 100 அயல்மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பாக காற்றுகளின் குரல் என்ற தலைப்பில் தமிழினி வெளியீடாக, 2008 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இன்னும் கொஞ்சம் ருசி பார்க்க வேண்டுமென்றால், தமிழ்வாசல் கூகிள் குழுமத்தில் இங்கே பார்க்கலாம்!



சண்டேன்னா மூணு! படித்ததும் பிடித்ததும்!ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்!

அங்கேயும் கொஞ்சம் பார்க்கலாமே!

அரங்கனுடைய ஹிந்துமதம் ஒரு அறிமுகத் தெளிவு தொடர் பற்றிய அறிவிப்பு, சில நாட்களாகவே இந்தப்பக்கங்களில் இருக்கிறதே, படித்தீர்களா? படித்த பிறகு, அதைக் குறித்த உங்களுடைய கருத்து என்ன என்பதைக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா?



 

Thursday, May 26, 2011

கவிதை நேரம்! ஸ்ரீரங்கம் மோகனரங்கன்!


நேற்றிரவு, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனிடமிருந்து, சேட்டில் ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை வந்தது. ஒரு குழுமத்தில் நடந்த அக்கப்போர் பிடிக்காமல், நேற்று முற்பகலில் தான் அந்தக் குழுமத்தை விட்டு வெளியேறி ஒதுங்கி இருந்தேன். இந்தக் கவிதையை முதலில் படித்த போது, எனக்குள்ளே நானே இரு பகுதியாகப் பிரிந்து, அந்த சிறு பறவையாகவும், அதை விரட்டுகிறவனாகவும், அப்புறம் அதை நினைத்துப் பார்ப்பவனாகவும், கடைசியில், "உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும் என்னுடைய ஆசைப்படி அல்ல" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய பிரார்த்தனையை செய்கிறவனாகவும் கொஞ்சம் அனுபவித்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தது.

ஆனால், இதை எழுதிய ஆங்கிலக்கவிஞன் அப்படி நினைத்து எழுதவில்லை என்பது நிச்சயம்!

இந்தக் கவிதை மொழிபெயர்ப்புக்காக ஸ்ரீரங்கம் மோகனரங்கனுக்கும், இதை வெளியிட்டிருக்கும் தமிழ்வாசல் கூகிள்வலைக் குழுமத்திற்கும்  நன்றி!

Whittier என்ற கவிஞர் எழுதிய The Common Question என்ற கவிதையின் தமிழாக்கம்:

மாலையில் எங்கள் உணவறையில்

மங்கிய நிறத்தில் ஒரு பறவை
கூடியுண்டபின் கிளம்பியது
வட்டமிட்டொரு வாகினிலே
வளைந்த கூரலகைத்
தேய்த்துக்கொண்டே.  


சிறகுகளசைத்துச் செவ்வாலாட்டி
சிரத்தை ஒருபுறம் ஒருக்களித்தே
சில்லெனும் குரலில் பொறுமையற்றே
கேட்டது,

"சின்னப்பயலுக் கென்னவேண்டும்?

பதில்சொன்னேன், உதை! சிறு புள்ளே!
புதை உன் தலையை சிறகுக்கிடையே
துயில்வதி! போஎன சொன்னாலும் *
மறுபடி மறுபடி கேட்டது
முதலில் கேட்ட அதையேதான்.
புன்சிரிப்பில் நான் எனக்குரைத்தேன்:
மனிதரும் பறவையும் ஒன்றுதானோ!
அது சொன்னதைத்தானே
நாம் சொல்கின்றோம்.
செயலிலோ அல்லது சொற்களிலோ

சாட்டைப் பம்பரம் பறையுடன் சிறுவரும்
தாண்டுகயிறு பாவையுடன் சிறுமியரும்
நிலங்களும் வீடும் கொண்டே மனிதரும்
கேட்கும் ஏழமைக் கேள்வியும் அதுதானே!

போட்டுப் பிதுங்கி வெளியில்வந்தாலும்
பைக்குள் எதையோ திணிக்கின்றோம்;
வீசும்வலையும் நிரம்பிவிட்டாலும்
வராத மீனுக்கும் ஏங்குகிறோம்  



வானம் திறந்து கொட்டித் தந்தாலும்
வரையற்ற ஆசை விட்டுவிடாது
தான் என்ற ஆசைப் பூத யந்திரத்தில்
தளராமல் பிரார்த்தனை மாவரைக்கும்.



அருள்மிகும் கடவுள்
அனைத்தையும் கேட்டே
ஐயோ பாவம் என்றுரைப்பார்
நம் தேவைகள் அனைத்தும் அவர் அறிவார்;
கண்ணை மூடி நாம் கேட்பதையே 
தருவதும் மறுப்பதும் அவர் அருளே. 



எனவே நானும் சமயத்தில் நினைப்பதுண்டு;
நம் பிரார்த்தனை அனைத்தையும் ஒன்றாக்கி
கூட்டில் வீட்டில் குலவுமிடத்தில் கோயிலினில்
கேட்பது ஒன்றே,  


உன் சித்தம் போலே நடக்கட்டும்.”  


--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்



 

Saturday, October 30, 2010

கவிதை! இது கவிதை!


ஒரு புத்துணர்ச்சிக்காக, கொஞ்சம் மாறுதலுக்காகவும் சில கவிதைகள்!

முதலில் சூஃபி கவிஞரான முகமது ஜலாலுதீன் ரூமியின் கவிதைகள் இரண்டு!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், இந்த கவிதை வரிகளுக்குள் இருக்கும் ஆன்மீக அனுபவத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமாக இல்லை என்பதோடு, இதே விஷயத்தை நம்மூர் ஞானிகளுமே தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லி
ருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும்! இறைவன், இறையனுபவம் என்பது ஒன்றே! மதங்கள், மதவாதிகள்  பிரித்துச் சொல்வது போல, அவர்கள் குறிப்பிடும் பாதையில் போனால் தான் தரிசனம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் புருடா என்பதையும் சேர்த்தே பார்க்க முடியும்! ரூமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போமா?

நீ!

உயிராய்ப்  பூமியில் தோன்றிய தருணமே
ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!
ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன்  பயம் கொள்ள வேண்டும்?
மரணம்  உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை  ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே! தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறு துளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறு துளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறு துளியாய் ஆனதைப்பார்!

 
முகமது ஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில், காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்ம நேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதை வரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்!காதல் கவிதை மாதிரித் தோன்றினாலும் உயர்ந்த ஆன்மீகத் தேடலோடு கூடிய உயிரின் வேட்கையாக இந்தக் கவிதை வரிகளைப் பாருங்கள்!

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"
ஆங்கில மூலம், மற்றும் விரிவாகப் படிப்பதற்கு இங்கே
மற்றும் இங்கே  

**********
இயற்கையிடமிருந்து வெகுதூரம்  விலகி வாழுகிற இயந்திரத் தனமான வாழ்க்கை, இயல்பான, இயற்கையான சில விஷயங்களைக் கூட ரசிக்கத் தெரியாமல், வாழுகிற போலித் தனமான அவலம் இவைகளை முன்னேற்றம் என்கிற பெயரில் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்! 

சின்னச் சின்ன சந்தோஷங்கள் கூட, இயல்பாக, இயற்கையோடு ஒட்டியிராமல், மிகவும் செயற்கைத் தனமாக ஆகிவிட்ட காலம் இது!
நாற்பது வருடங்களுக்கு முன்னால், ஆங்கிலப் பாடமாகப் படித்த கவிதை வரிகள், இன்றைக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும் வினோதத்தை நினைவு படுத்திக் கொண்டே, இங்கேயும் ஒரு மீள் பார்வையாக!  உள்ளிருந்து வெளிப்படும் ஏக்கமாக....!

வில்லியம் ஹென்றி டேவிஸ் என்ற இந்தக் கவிஞனுடைய இந்த வாரத்தைகளைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்!


What is this life if, full of care,

We have no time to stand and stare.

No time to stand beneath the boughs

And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,

Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,

Streams full of stars, like skies at night.

No time to turn at Beauty's glance,

And watch her feet, how they can dance.

No time to wait till her mouth can

Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,

We have no time to stand and stare.

கிட்டத் தட்ட இதே உணர்வுகளைச் சொல்கிற மாதிரி வில்லியம் ஒர்ட்ஸ்ஒர்த் கவிதை வரிகளைக் கொஞ்சம் அனுபவித்துத் தான் பாருங்களேன்! தயாசுரபி என்ற பெயரில் யாகூ! 360 தளத்தில் எனக்கு அறிமுகமான மாதிரி இலக்கிய ரசனையும் விமரிசனத் திறமும் கொண்ட வாசகர்கள் எவரேனும் இங்கே இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ரகசியமாய் ஒரு ஆசை இருக்கிறது!


The world is too much with us; late and soon,
    Getting and spending; we lay waste our powers:
    Little we see in Nature that is ours;

    
We have given our hearts away, a sordid boon!
    This Sea that bares her bosom to the moon;
    The winds that will be howling at all hours,
    And are up-gathered now like sleeping flowers;
    For this, for everything, we are out of tune;
    It moves us not. — Great God! I’d rather be
    A Pagan suckled in a creed outworn;
    So might I, standing on this pleasant lea,
    Have glimpses that would make me less forlorn;
    Have sight of Proteus rising from the sea;
    Or hear old Triton blow his wreathèd horn.

   The Sonnet by William Wordsworth, 
Miscellenous sonnets 33

கவிதைகளைப் படித்துவிட்டு, அவை தந்த அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! கேட்போம்!


 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)