Sunday, July 4, 2021

தமிழனின் தனிக்குணம் வெறும் அக்கப்போர் மட்டும்தானா?

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எந்த அர்த்தத்தில் பாடினாரோ, தெரியாது. ஆனால் எந்தவொரு சின்னவிஷயத்தையும் பேனைப் பெருமாளாக்குகிற கதையாக வெறும் அக்கப்போராக ஆக்குவதே தமிழனின் தனிக்குணமாக ஆகிவருகிறது என்பதை சமீபத்தில் மேதகு என்ற ஈழத்தமிழர் ஆதரவுப் படம், அதையொட்டி தமிழ் தேசியவாதிகளுக்கும், திமுக ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து நடக்கும் வன்மம் கலந்த விவாதம் ஒரு உதாரணம். அடுத்து கமல் காசர் முன்னெடுத்து நடத்தும் இன்னொரு அக்கப்போர் அடுத்த உதாரணம். இவை வெறும் குப்பை, வெட்டி அக்கப்போர் என்பதனாலேயே இதுகுறித்து எழுதாமலிருந்தேன்.  


விவாத வீடியோ 55 நிமிடம்.  On 18 June, the Centre had sought public comments on the draft Cinematograph (Amendment) Bill 2021, which proposes to penalise film piracy with a jail term and fine, introduce age-based certification, and empower the Central government to order recertification of an already certified film following receipt of complaints என்பது தான் விஷயம். இதன்மீது பொதுமக்கள் கருத்து சொல்வதற்கு ஜூலை 2 வரை அவகாசமும் அளிக்கப்பட்டது. முதலில் கமல் காசர் கடைசி நேரத்தில் களமிறங்கினார். விஸ்வரூபம் படத்தைக் குறைந்த விலைக்குக் கேட்டதில் upset ஆகி நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று வீரவசனம் பேசி அழுதவர், இந்தமுறை அப்படிச் சொல்லவில்லை என்பதே விஷயம் அத்தனை சீரியசானதில்லை என்று சொல்லாமல் சொல்கிறதோ? 


கமல் காசருக்கு அடுத்து கருத்து கந்தசாமியாக வாழ்ந்து வரும் நடிகர் சூரியாவும் களமிறங்கினார்.


இந்த நல்லவிஷயத்துக்காகவே சரவணா இந்த சட்டத் திருத்தத்தை நாடே ஒன்று கூடி ஆதரிக்குமே! 


திமுகவின் வாரிசு முதல்வரும் கூட கருத்து சொல்லி விட்டார்! 


எஸ்வி சேகர் என்றொரு மானஸ்தன் இருந்தாரே1 அவரும் கருத்து சொல்லிவிட்டார்!


  சாமானியர் கருத்தையும் கேட்க வேண்டாமோ ?

விஷயம் படைப்பு சுதந்திரம் பறிக்கப்படுகிறதே என்பது அல்ல. திருட்டுக்கதை அல்லது எங்கிருந்தோ சுட்ட கதை இனிமேல் தண்டனைக்குரிய குற்றம் என்றாவதில் எழும் அச்சம், கூவிப்பார்ப்போமே என்கிற நப்பாசை மட்டுமே இந்தக்கூக்குரல்களில் வெட்டி அக்கப்போராக!

மீண்டும் சந்திப்போம்.

4 comments:

  1. ஐயையோ.. சூர்யா, நடிப்பதிலிருந்து விலகி, NGO பண வரவை மட்டுமே நம்பி பில்லியனராகிவிடலாம் என்று சொல்கிறாரா? நினைக்கவே அச்சமாக இருக்கிறதே... இந்த கொரோனா காலத்தில் சக திரைப்படத் தொழிலாளர்களுக்கு மாதம் 10 கோடி ரூபாய் செலவழித்திருந்தாலும் 20 சதவிகிதம் கூட செலவழித்திருக்காமல் அவ்வளவு சொத்து இருக்கும்போதே பத்து பைசா செலவழிக்காதவர், நடிப்பதை விட்டு விலகிவிட்டால் நாடு என்ன நிலைமைக்கு போய்விடும்?

    ReplyDelete
    Replies
    1. அகரம் Foundation இதை ஆரம்பநாட்களில் இருந்தே ஒரு அறக்கட்டளையாக நான் பார்த்ததில்லை நெல்லைத்தமிழன் சார்! இப்போது இந்தக்குடும்பத்திற்கு ஹவாலா மாதிரி வேறு ஒரு ரூட்டில் பணம் கொழிப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் சினிமா இல்லாமலேயே குபேரனுடன் போட்டியும் போடலாம்!

      Delete
  2. இந்த சினிமாக்கள் சாதித்தது என்ன என்றால் ஒரு தலைமுறையையே உருப்படி இல்லாமல் ஆக்கியது தான்! மூளைக்கு எந்த வேலையும் கொடுக்காமல் மழுங்கடிக்கும் வேலையே மட்டும் செய்துகொண்டிருக்கும் குப்பைகள் இந்த சினிமாக்கள்.

    சூர்யா சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்ற ஒற்றை வரிக்காகவே இந்த சட்டத்தை ஆதரிக்கலாம் போல இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. //சூர்யா சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்ற ஒற்றை வரிக்காகவே இந்த சட்டத்தை ஆதரிக்கலாம் போல இருக்கிறது!//

      இதே கருத்துத்தான் ட்வீட்டரிலும் முகநூலிலும் ஓடிக்கொண்டிருக்கிறது பந்து! திடீர்ப் போராளிகளுக்கு எப்போதுமே இதுதான் கதி!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)