Showing posts with label சட்டத்திருத்தம். Show all posts
Showing posts with label சட்டத்திருத்தம். Show all posts

Sunday, July 4, 2021

Cinematograph (Amendment) Bill 2021 ::: இன்னும் இரு பிரபலங்களின் கருத்து!

காதில் ஏறாது என்பது தெரிந்துமே  இது முகநூலில் ஸ்டேன்லி ராஜன் சூர்யாவுக்கு அறிவுரையாகச் சொன்னது ::: 

இந்திய அரசு ஒளிபரப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம், மிக மிக தாமதமாக அந்த திருத்தம் கொண்டுவரபட்டிருந்தாலும் இப்பொழுது மோடி அரசாவது செய்தார்களே என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது. இந்த சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌.

தமிழகத்தில் இதனை "கலையுலக தீவிரவாதி" சூர்யா என்பவர் முன்னெடுக்கின்றார், இது அவர்மேல் அகில இந்திய மக்களுக்கும் தேசாபிமானிகளுக்கும் பெரும் எதிர்ப்பினை கொடுத்துள்ளது. தமிழகம் ஒன்றே திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் மாநிலம், சினிமாக்காரனை தூக்கிவைத்து கொண்டாடும் மாநிலம் எனும் வகையில் தேசத்துக்கும் தேச அமைதிக்கும் மட்டும் பங்கம் விளைவிக்கும் படங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது அது "கருத்து சுதந்திரம்" என சூர்யா புலம்புவது அவர்மேல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது

அவர் சினிமா மூலம் தேசஎதிர்ப்பையும் இன்னும் பல விஷயங்களையும் செய்ய திட்டமிட்டிருந்தாரா? அதை அரசு தடுக்கும் நிலையில் அலறுகின்றாரா எனும் மிகபெரிய கேள்வி எழுகின்றது. சூர்யாவின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சைகுள்ளானவை, நீட் தேர்வு என கடந்தவாரம் வரை புலம்பும் அவர், திமுக அரசின் நீட் தேர்வு என்பது அரசியல் மோசடியாக போனது பற்றி வாயே திறக்கவில்லை. எல்லோருக்கும் சமத்துவ கல்வி என சொல்லும் சூர்யா, நாடு முழுக்க ஒரே கல்வி என்பதற்கு ஏன் அமைதி என்பதும் தெரியவில்லை.

இப்பொழுது புதிய ஒளிபரப்பு சட்டத்துக்கு எதிராக தன் தீவிரவாத கும்பலை தமிழகத்தில் திரட்டுகின்றார் சூர்யா. சூர்யா என்பவருக்கு தேசாபிமானிகள் சொல்லிகொள்வதெல்லாம் ஒன்றுதான் ::அய்யா சூர்யா, இங்கு உங்களின் சிங்கம் போன்ற படங்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை, நாட்டுக்கும் இந்து மதத்துக்கும் எதிரான கருத்துக்களை சொல்லாத வரை உங்கள் படத்தை யாரும் தடுக்கப்  போவதில்லை. எம்.ஜி.ஆரின் நம்நாடு முதல் மணிரத்தினத்தின் ரோஜா வரை யாராவது ஒரு குற்றம் சொல்லமுடியுமா? அதை யாராவது தடுத்தார்களா?


ஏன் உம்முடைய சிங்கம், வானரம் ஆயிரம் படங்களை ஏதும் சொல்லமுடியுமா? நல்ல கருத்துக்களையும், நாட்டுபற்றையும் வளர்க்கும் படங்களை எந்த அரசு தடுக்க முடியும்? பாரத விலாஸ் முதல் இந்தியன் போன்ற படங்களை எந்த சட்டம் தடுக்க முடியும்? கலை என்பது பொழுதுபோக்குத்தான் ஆனால் அதில் தேச எதிர்ப்பையும் வீண் சமூக குழப்பங்களையும் திட்டமிட்டு பரப்புவோம் என அடம்பிடித்தால் யார் எற்பார்கள்? தேசாபிமானிகள் எப்படி ஏற்றுகொள்ள முடியும்?

தேசம் எப்படி ஏற்கும்? 130 கோடி மக்களுக்கான‌ தமிழக கூத்தாடி ஒருவனின் கருத்தை கேட்டுத்தான் எழுதவேண்டும் என கருதுவது எவ்வகை நியாயம்?  இந்து எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பும் கொண்டு, திராவிட ஜால்ரா சத்தத்தில் எல்லா சட்டமும் என்னை கேட்டுகொண்டுதான் எழுதபட வேண்டுமென நீர் கருதினால் அதையெல்லாம் ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராகவும் இந்து மதத்துக்கு எதிராக பேசுவது மட்டும் கருத்து சுதந்திரம் என்றால் அப்படிப் பட்ட கருத்து சுதந்திரத்தை இந்நாட்டில் அனுமதிக்கவே முடியாது.

இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருக்கும் நேரமிது. சீன படங்கள், கொரிய படங்கள் ஏன் ஈரானிய படங்கள் கூட உலகளாவில் விருதுகளை பெருகின்றன, ஆனால் அங்கெல்லாம் தேசவிரோத அவர்கள் கலாச்சார விரோத கருத்து ஒரு புள்ளி கூட அனுமதிக்கபடுவதில்லை. உலகாளும் ஹாலிவுட்டில் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை இடம்பெற முடியாது.

ஆம் சினிமா என்பது ஒரு ஊடகம் எனும் வகையில் அந்நாடுகள் வலுகவனமாக மக்களிடம் செல்லும் கருத்துக்களை நோக்குகின்றன, அதில் நாட்டுக்கும் சமூக அமைதிக்கும் எதிரான கருத்து என்றால் உடனே தடுக்கின்றன‌.உங்களுக்கு ஒரு விஷயம் அழுத்தி சொல்ல விரும்புகின்றோம்.

இந்த சட்டம் பாஜகவின் மோடி கொண்டுவரும் சட்டம் அல்ல, இது இந்திய அரசின் சட்டம் கட்சிகள் வரும் செல்லும், மோடி செல்வார் இன்னொரு பிரதமர் வருவார். ஆனால் நாடு என்றும் நிலையானது. அந்த நாட்டுக்கு எது நல்லதோ எது சரியோ அதைத்தான் மோடி செய்கின்றார், இதை எந்த வருங்கால பிரதமரும் மாற்றமுடியாது.நாட்டுக்கு விரோதமற்ற, இந்து விரோதமற்ற படங்களை நீங்கள் எவ்வளவும் எடுங்கள், மற்றபடி இந்த சட்டம் பற்றி ஏன் அஞ்சுகின்றீர்கள் என்பதுதான் தெரியவில்லை.

ஒரு பாம்பு வேட்டையாடி அதன் திறமைக்கேற்ப உண்ணலாம், ஆனால் ஊருக்குள் புகுந்து காவல்காரன் கையில் இருக்கும் கம்பு என் "உணவு வேட்டைக்கு" எதிரானது என்றால் அது நகைப்புகுரியது. இது தேசம், அரசு அதன் காவலாளி.அந்த அரசு இந்நாட்டுக்கு எது தேவையோ அதை மிக தெளிவாக உறுதியாக செய்கின்றது, அதை கண்டிப்பது நியாயமில்லை, எல்லா விஷயங்களிலும் இப்படி நீர் அழிச்சாட்டியம் செய்வதும் சரி அல்ல‌

இந்தியாவில் ஆயிரகணக்கான நடிகர் நடிகையர் இருக்கும் நிலையில் நீர் ஒருவர்தான் நடிகர் என்பது போல் குதிப்பதும் சரியல்ல‌.

நீர் சொன்னபடி இச்சட்டத்தை எதிர்த்து திரையுலகை விட்டு செல்வதாக செய்தால் உம்மேல் ஏற்பட்டிருக்கும் சந்தேகம் சரியாகும், நீர் தேசவிரோத கைகூலி என்பதும் சினிமாவில் குழப்பம் செய்யமுடியா நிலையில் ஓடி விட்டீர் என்பதும் உண்மையாகும். இச்சட்டத்தை எதிர்த்து நீர் சினிமாவில் இருந்து விலகினால் அது மிக்க நல்லது, நாட்டுக்கு அது நீர் செய்யும் மிகபெரிய சேவையாக அமையும்.அந்த நல்ல விஷயத்தை உடனே செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நாடு என்பது உம்மை போன்ற நடிகனை நம்பி இல்லை, உமது வியாபாரத்திற்காய் நீர் எதையும் பேசித் திரியலாம் ஏதோ 4 படத்தில் நடித்து தமிழகத்தின் அல்லக்கைகள் சில கைதட்டிவிட்டால் அதற்காக நீர் நாட்டை காக்க வந்த அவதாரமாகி விடமாட்டீர். ஆனானப் பட்ட  எம்.ஜி.ராமசந்திரனே இந்தியனாக நல்ல குடிமகனாக தன் படங்களிலும் அரசியலிலும் இருந்தார் என்பதை மறக்க வேண்டா.

நீர் ஒரு நடிகன், சினிமா மாயையில் நிற்கும் அற்ப உருவம் அதை தவிர உமக்கு என்ன உண்டு? எல்லையில் பனிமலையிலும்  ராஜஸ்தான் வெயிலிலும் அசாம் காடுகளிலும் நிற்கும் இந்திய வீரனின் காலணிக்கு கூட பெறாத உமக்கு இந்நாட்டை பற்றி அதன் சட்டங்களை பற்றி பேச‌ தகுதி இல்லை என்பதனை முதலில் உணருங்கள், அதுதான் உமக்கு தெளிவினை கொடுக்கும்.

ஆனாலும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசை கண்டித்து சினிமாவில் இருந்து வெளிநடப்பு செய்யாமல் அந்த படுதோல்வி அரசியலை கண்டிக்காமல் இப்படியெல்லாம் கிளம்புவது உம்மேல் மிகபெரிய பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது.

உடனே சினிமாவில் இருந்து விலகி தமிழ்நாட்டில் இருந்தே விலகி நீவீர் வேறு எங்காவது செல்ல வாழ்த்துக்கள், மறக்காமல் உங்கள் அருமை மனைவியினையும் அழைத்து சென்றுவிடவும்! ஆம் இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் இருந்து உம் "கலை தீவிரவாதத்தை" செய்து பாருங்கள், அப்பொழுதுதான் நீவீர் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் அயோக்கியத் தனம் உமக்கு புரியவரும், அந்த அனுபவத்தில் நல்ல இந்தியனாக திருந்தி வருவீர்கள்.என்கிறாரே, இன்னுமா இந்த ஒலகம் கமல், சூர்யாவை எல்லாம் நம்புது?!!      

அதெல்லாம் அந்தக்காலம்! ஜோதிகாவை சில்லுன்னு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்தோடு மதம் மாறுவதற்கு முன்னாடியாம்! விக்ரமன் பேட்டியில் 20.30 நிமிடத்தில் திருப்பதி உண்டியலில் காசுபோட்ட பழைய கதை   



கருத்து சுதந்திரம் கருமாந்திரம் ஒரு புண்ணாக்கும் இல்லை இவனுங்க கூப்பாடு போடறதுக்குக் காரணம்! இவனுங்க கருத்து சுதந்திரத்தை அவனுங்க தொழிலில் எந்த லட்சணத்துல கடைப் பிடிச்சானுங்கன்னு சொன்னா சந்தி சிரிக்கும்! 

இப்போ சமீபத்துல, ‘The Family Man - Season 2' வெப் சீரீஸ் வந்தபோது என்ன ஆட்டம்டா ஆடுனீங்க? அதை ஒளிபரப்பக்கூடாது; ஒளிபரப்பினா அமேஸான் பிரைமைப் புறக்கணிப்போம்னெல்லாம் வைகோ, சீமான்னு எத்தனை பேரு கூவினாங்க? விடுதலைப் புலிகளைப் போராளின்னு சொல்ல உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்குன்னா, அவங்களைத் தீவிரவாதின்னு சொல்லற கருத்து சுதந்திரம் இன்னொருத்தனுக்குக் கிடையாதா? அதுவும் அந்தத் தொடரை எதிர்க்கிறேன் பேர்வழின்னு அதுல நடிச்ச சமந்தா, பிரியாமணியை எல்லாம் ஆளாளுக்குக் கண்டபடி வசைபாடினீங்களே, அதுவா கருத்து சுதந்திரம்?

இதே மாதிரி ‘மெட்ராஸ் கஃபே’ன்னு ஒரு படம் வந்தபோது, அதைத் தடைசெய்யச் சொன்னது சாட்சாத் கருணாநிதி! அந்தப் படம் தமிழ்நாட்டுல ரிலீஸே ஆகலை. உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை யாராவது சொன்னா அது கருத்து சுதந்திரம் கிடையாது; ஆனா, உங்க கருத்துச் சுதந்திரத்தை மட்டும் எல்லாரும் தலைக்குமேலே வைச்சுக் கொண்டாடணுமாடா!


காவிரிப் பிரச்சினையிலே கூட்டம்போட்டு கண்டபடி பேசிப்புட்டு, அப்புறம் பாகுபலி படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம்னு சொன்னதும், சத்யராஜ் மன்னிப்புக் கேட்டாரா இல்லையா? சர்தான் போடா, எனக்குக் கருத்து சொல்ல உரிமையிருக்கு, நீ படத்தைப் பார்த்தா பாரு, பார்க்காட்டி போன்னு சொல்லுற தில்லு உண்டா இவனுங்களுக்கு?

தமிழில் முதன்முதலா லிப்-டு-லிப் கிஸ்ஸிங் வைச்சது கமலஹாசன் நடிச்ச ‘சட்டம் என் கையில்’ படத்தில்தான். அந்தப் படத்துக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவு குடைச்சல் கொடுத்தார்னு தேடிப்பார்த்துப் படியுங்க. டைரக்டர் டி.என்.பாலுவைப் பிடிச்சு உள்ளே போட்டார்யா எம்.ஜி.ஆர். எல்லாத்தையும் விடுங்கடா, மிக மிக சமீபத்தில் ஒரு தமிழ்ப்படம் சென்சார் போர்டால் தடைசெய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? ப்ளூ சட்டை மதிமாறன்னு ஒருத்தர், சினிமா விமர்சனம் பண்ணிட்டிருந்தவரு, ‘anti-indian' ன்னு ஒரு படம் எடுத்தாரு. அதுக்கு சர்டிபிகேட் கொடுக்க முடியாது போடான்னு துரத்தி விட்டுட்டாங்க சென்சார் போர்டுல. இந்த விஷால், சூர்யா, கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், பா.ரஞ்சித் மரம் மட்டை எவனாவது அந்தாளுக்காகக் குரல் கொடுத்தீங்களா? 

‘எப்படி ஒரு தமிழ் படத்தைத் தடை பண்ணலாம்?’னு எவனாச்சும் கேட்டானா? எப்படிக் கேட்பான்? அந்த ப்ளூ சட்டை விமர்சனங்கிற பேருல ஒவ்வொரு படத்தையும் கழுவிக் கழுவி ஊத்திட்டிருந்தாரு! அவருக்கு இல்லையா கருத்துச் சுதந்திரம்? அதுக்குப் பழிக்குப் பழி வாங்க, அவரோட படம் தடைசெய்யப்பட்டதும் அத்தனை பயலுவளும் வூட்டுக்குள்ள முக்காடு போட்டுக்கிட்டு ஒளிஞ்சுகிடந்தானுங்க. நல்லா காப்பாத்தினீங்கடா கருத்து சுதந்திரத்தை!

இந்த நாயிங்களுக்கெல்லாம் கருத்து சுதந்திரம்னுற பேருல ஹிந்து மதத்தைக் கலாய்க்கணும். புதிய சரஸ்வதி சபதம், இந்திரலோகத்தில் நா அழகப்பன், தர்மராஜான்னு படம் எடுத்து ஹிந்துக் கடவுள்களைக் கிண்டல் பண்ணனும். இம்புட்டுத்தான் இவனுங்க டக்கு! ‘நீர்ப்பறவை’ன்னு ஒரு படத்தில ‘ஸ்தோத்திரம்’னு ஒரு வார்த்தைபோட்டு பாட்டு எழுதினதுக்கு, கிறிஸ்துவர்கள் எல்லாரும் கஞ்சாக்கவிஞன் வூட்டு வாசல்லகூடி ஆர்ப்பாட்டம் பண்ணி, பாட்டு வரியையே மாத்தி எழுதிட்டாங்க. ஆண்டாள் விஷயத்துல கருத்து சுதந்திரம்னு வக்காலத்து வாங்கின எவனாவது இந்த விஷயத்துல பக்கத்துல அண்டினாங்களா?

எ வெட்னஸ்டே படத்திலே நாலு தீவிரவாதிகளில் ஒருத்தன்கூட ஹிந்து கிடையாது. ஆனா, இந்த நாசமாப் போன மலஹாசன், ஒரு தீவிரவாதியை ஹிந்துவா காட்டியிருந்தான். நாமளும் வாயிலே வாழைப்பழத்தை வைச்சுக்கிட்டுப் பார்த்தோம். இவ்வளவு ஏன்? ‘திருஷ்யம்’ மலையாளப்படத்துல ஹீரோ கிறிஸ்துவர்; பாபநாசம் படத்துல ஹிந்து. ‘அவ்வை சண்முகி படத்தில் காயத்ரீ மந்திரத்தை வைச்சு காமெடி; அதே படத்தில் வரலட்சுமி நோன்பை வைச்சு காமெடி பாட்டு. எவனாவது கேட்டோமா? ‘தசாவதாரம்’ படத்துல ‘அழகியசிங்கர் தெரியுமா?’ன்னு கேட்டா, ‘யாரு மடோனாவா?’ன்னு பதில் வரும். இந்த கிரேஸி மோகனுக்கெல்லாம் இவ்வளவு நல்ல சாவு வந்திருக்கவே கூடாது. இதே மாதிரிதான் எழுத்தாளர் சுஜாதா ‘பேரு பார்த்தசாரதின்னு எப்படித் தெரியும்னு கேட்டா? அதான் மண்டையிலே பெருசா கோடுபோட்டிருக்கேன்னு கிண்டல்.

இப்படி ஆளாளுக்குக் கூட இருந்தே குழிபறிக்கிறதைப் பார்த்து வயிறுகுலுங்க சிரிச்ச்சிட்டிருக்கிறதுனால தான், ஒரு படத்துல ஹீரோ கருப்புச்சட்டை போட்ட நல்லவனாகவும், வில்லன் ராமாயணம் படிக்கிற கெட்டவனாகவும் காட்டுற அளவுக்கு துளிர் விட்டிருக்கு இந்தப் பயலுவளுக்கு.

.ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவங்களும் பட்ஜெட்டுக்கு முன்னாலே நிதியமைச்சரைச் சந்திச்சு, தங்கள் துறைக்கு வேண்டியதைக் கேட்பாங்க. இத்தனை வருஷத்துல சினிமாத்துறையைச் சேர்ந்த யாராவது போய், இந்த பட்ஜெட்டுல எங்களுக்கு ஏதாவது செய்யுங்கன்னு கேட்டதுண்டா? அவனவன், தானுண்டு, தன் படமுண்டுன்னு பணத்தைச் சம்பாதிச்சிட்டு, வெளிநாட்டுல தீவு வாங்கிட்டு, அரைடஜன் வெளி நாட்டுக் காருல சுத்திட்டிருக்கானுங்க. ஆனால், நடிகர் சங்கத் தேர்தல்ல கூட நிக்காத மயிராண்டிங்கல்லாம், தேர்தல் வந்தா நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு அரசியல் கட்சின்னு கிச்சுகிச்சு காட்டுறானுங்க.

தலைவா படத்துக்குச் சிக்கல் வந்தபோது விஜய்க்கு சப்போர்ட்டா யாராவது குரல் கொடுத்தாங்களா? கருத்துச் சுதந்திரம் போச்சுன்னு கதறினாங்களா? இல்லை, ஏன்னா அப்போ ஜெயலலிதா முதலமைச்சர். கரப்பான்பூச்சியடிக்கிற மாதிரி அடிச்சு அள்ளிக் கொல்லையிலே போட்டிருப்பாங்க.

கருத்துச் சுதந்திரமாம் கருத்துச் சுதந்திரம்...த்தூ! 

என்ன இம்புட்டுக் காட்டமா இருக்குன்னு கேட்கறீங்களா? எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு சாமி! இப்படித் தன் கருத்தைக் காறித்துப்பிச் சொல்லியிருப்பவர் நம் சேட்டைக்காரன் பதிவர் வேணுகோபாலன்! நாமும் சேர்ந்து காறித்துப்பலாம் போல இருக்கிறதா? !!

மீண்டும் சந்திப்போம்

தமிழனின் தனிக்குணம் வெறும் அக்கப்போர் மட்டும்தானா?

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எந்த அர்த்தத்தில் பாடினாரோ, தெரியாது. ஆனால் எந்தவொரு சின்னவிஷயத்தையும் பேனைப் பெருமாளாக்குகிற கதையாக வெறும் அக்கப்போராக ஆக்குவதே தமிழனின் தனிக்குணமாக ஆகிவருகிறது என்பதை சமீபத்தில் மேதகு என்ற ஈழத்தமிழர் ஆதரவுப் படம், அதையொட்டி தமிழ் தேசியவாதிகளுக்கும், திமுக ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து நடக்கும் வன்மம் கலந்த விவாதம் ஒரு உதாரணம். அடுத்து கமல் காசர் முன்னெடுத்து நடத்தும் இன்னொரு அக்கப்போர் அடுத்த உதாரணம். இவை வெறும் குப்பை, வெட்டி அக்கப்போர் என்பதனாலேயே இதுகுறித்து எழுதாமலிருந்தேன்.  


விவாத வீடியோ 55 நிமிடம்.  On 18 June, the Centre had sought public comments on the draft Cinematograph (Amendment) Bill 2021, which proposes to penalise film piracy with a jail term and fine, introduce age-based certification, and empower the Central government to order recertification of an already certified film following receipt of complaints என்பது தான் விஷயம். இதன்மீது பொதுமக்கள் கருத்து சொல்வதற்கு ஜூலை 2 வரை அவகாசமும் அளிக்கப்பட்டது. முதலில் கமல் காசர் கடைசி நேரத்தில் களமிறங்கினார். விஸ்வரூபம் படத்தைக் குறைந்த விலைக்குக் கேட்டதில் upset ஆகி நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று வீரவசனம் பேசி அழுதவர், இந்தமுறை அப்படிச் சொல்லவில்லை என்பதே விஷயம் அத்தனை சீரியசானதில்லை என்று சொல்லாமல் சொல்கிறதோ? 


கமல் காசருக்கு அடுத்து கருத்து கந்தசாமியாக வாழ்ந்து வரும் நடிகர் சூரியாவும் களமிறங்கினார்.


இந்த நல்லவிஷயத்துக்காகவே சரவணா இந்த சட்டத் திருத்தத்தை நாடே ஒன்று கூடி ஆதரிக்குமே! 


திமுகவின் வாரிசு முதல்வரும் கூட கருத்து சொல்லி விட்டார்! 


எஸ்வி சேகர் என்றொரு மானஸ்தன் இருந்தாரே1 அவரும் கருத்து சொல்லிவிட்டார்!


  சாமானியர் கருத்தையும் கேட்க வேண்டாமோ ?

விஷயம் படைப்பு சுதந்திரம் பறிக்கப்படுகிறதே என்பது அல்ல. திருட்டுக்கதை அல்லது எங்கிருந்தோ சுட்ட கதை இனிமேல் தண்டனைக்குரிய குற்றம் என்றாவதில் எழும் அச்சம், கூவிப்பார்ப்போமே என்கிற நப்பாசை மட்டுமே இந்தக்கூக்குரல்களில் வெட்டி அக்கப்போராக!

மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)