வைரமுத்துவுக்கு கேரளத்தின் ONV இலக்கியவிருது என்று அறிவித்த நேரம் மிகவும் பொல்லாத நேரமாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனெவே இடதுமுன்னணி அரசில் ஷைலஜா டீச்சருக்கு அமைச்சராகப் பதவி தரவில்லை என்பதே சர்ச்சையாக எழுந்து சற்றே அடங்கி இருக்கிற நேரத்தில், மலையாளக்கவிஞன் நினைவாகக் கொடுக்கப் படும் விருதை வைரமுத்துவுக்கு அறிவித்ததே ஒருவித அரசியல்தான்! #MeToo புகார்களில் சிக்கிய காமுகனுக்கு விருதா என்று கேரளத் திரைப்பட நடிகைகள் பலரும் கொதித்தெழுந்து கடுமையாக எதிர்த்ததில் ONV கல்சுரல் அகாடெமி ஜகாவங்கியதும், விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அறிவித்ததுகூட தற்காப்பு அரசியல் தான்!
காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டால் இப்படி என்று நொந்து கொள்ளும் வைரமுத்து, உன்னுடைய விருதைத் திருப்பிக்கொடுத்துவிடுகிறேன், மேற்கொண்டு இரண்டுலட்சரூபாய் போட்டுக்கொடுத்து விடுகிறேன், ஆளை விட்டால் போதுமையா சாமியென்று கதறுவது கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கிறது. துதிபாடியோ lobby செய்தோ விருதுகள் வாங்கியே பழக்கப்பட்டவருக்கு இது மிகவும் வேதனையான அனுபவம் தான்! ஆனால் ராமன் பட்டாபி போன்ற முகநூல் நண்பருக்கோ இதைக் காவியமாக எழுதிப் பார்த்தே ஆகவேண்டும் என்ற தவிப்பு!
அவரை விதைத்தால் துவரை முளைக்குமா? ஆரம்பப் பள்ளிக்கூட மாணவனுக்குக் கூடத் தெரிந்த விஷயம் தான்! ஆனால் கழகங்களுக்குப் பட்டாலும் புரியாது, திருந்தாது என்பதும் கூடத் தெரிந்த வரலாறுதான்!
ஆக ...ஆக .....ஆக என்று காமெடிகள் மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. திகட்டுமுன் நிறுத்திக் கொள்வது தமிழக ஆரோக்கியத்துக்கு நல்லது!
ஆம்..ஆக ஆக..திறமையின்மைதான் பளிச்சிடத்துவங்குகிறது..
ReplyDeleteதிறமையின்மை!
Deleteசீட்டாட்டத்தில் பதிமூணு கார்டுமே ஜோக்கராய் இருந்தால் எப்படி ஆடுவது என்ற குழப்பம் வருமல்லவா! அதுபோல ஒட்டுமொத்த அமைச்சரவையுமே இருந்தால் என்ன செய்வது?
தேறுவது மெத்தக்கடினம்!
என்னங்க... முதல்வர் இதுவரை யாரும் செய்யாத ஒரு காரியத்தை கோவையில் செய்திருக்கிறார்... அதைப் பற்றிச் சொல்லவில்லையே நீங்கள்..
ReplyDeleteமுல்லைக்குத் தேர்கொடுத்த மாதிரி எத்தையாவது செய்துவிட்டாரா ஸ்ரீராம்? சஸ்பென்ஸ் தாங்கவில்லையே! :-)))
Deleteஹார்பர் திறந்துட்டாரா? சஸ்பென்ஸ் தாங்கமுடியலை!
Deleteஅதெல்லாமில்லை பந்து! CM இன்று கோவைக்கு விசிட் அடித்து அங்கே ESI மருத்துவ மனையில் PPE உடை அணிந்து கொரோனா நோயாளிகளைத் தொலைவிலிருந்தே பார்த்து வந்தாராம்!
Deleteஸ்ரீராம் வைத்திருக்கிற சஸ்பென்ஸ் அதுதானா என்று எனக்குத்தெரியவில்லை. நானும் அவர் வந்து சஸ்பென்ஸை உடைப்பதற்காகக் காத்திருக்கிறேன்! .
அதேதான்!
Deleteஅதைத்தவிர வேறென்ன செய்தி இருந்ததாம்?
Deleteதினமலர் இதுமாதிரி செய்தி எதுவும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.
ReplyDeletehttps://www.dinamalar.com/news_detail.asp?id=2776018
ஸ்ரீராம்! தினமலர் செய்தியை ஒருமுறை நன்றாகப் படித்துப்பாருங்களேன்! இங்கே தினமலர் போட்டிருப்பதாக வெளியிட்டிருக்கும் மீம் தங்களுடையது அல்ல என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறார்கள். தடுப்பூசியை மோடியிடம் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுகவின் செய்தித்தொடர்பாளர் ஒரு டிவி விவாதத்தில் சொன்னது பொய்யல்ல. அதேமாதிரி #GoBackStalin ஹேஷ்டாக் ட்வீட்டரில் trend ஆக ஆரம்பித்ததும் பொய்யல்ல.
Deleteகாலையிலேயே
ReplyDeleteகடுமையான வயிற்று வலி...
நகைச்சுவையினால்!..
திமுகவினர் செய்யும் காமெடிக்கொடுமைகளைத் தமிழகம் இன்னும் எத்தனைநாட்களுக்கு அனுபவிக்க வேண்டியிருக்குமோ என்கிற ஜுரம் இப்போதே ஆரம்பித்துவிட்டது துரை செல்வராஜு சார்!
Deleteநானும் இந்திய அரசு எனக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு தரேன்னு சொன்னால் ;சொன்னாப் போதும். தரவேண்டாம், வாபஸ் வாங்கினாலும் தந்தாங்க என்றே சொல்லிக்கொள்வேன்), கூட 25 காசுகள் சேர்த்து பிரதம மந்திரி சேவைக் கணக்கிற்கு நன்கொடையா அனுப்பலாம்னு இருக்கேன்.
ReplyDeleteகாமாந்தகனுக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொல்லிவிட்டு செல்போன் மெசேஜுக்காக புழலில் ஆசிரியரை அடைத்தோமே என்று ஸ்டாலின் வெட்கப்பட்டிருப்பாரோ?
வைரமுத்தான் மேலே கொஞ்சம் போட்டுக்கொடுத்துவிட்டு (atleast வார்த்தையிலாவது அப்படிச்சொல்லிவிட்டு) ஆளைவிட்டால் போதும் என்று ஓடிய மாதிரி, நீங்கள் எதற்காக ஓட வேண்டும் நெல்லைத்தமிழன் சார்? :--)))
Deleteகழகங்களில் இருப்பதற்கு முதன்மையான தகுதி இந்தமாதிரி வெட்கம், சூடு, சொரணை அப்புறம் மானம் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிடுவதுதான், தெரியாதா?
பழளிராஜனுக்கு விரைவில் ஆப்பு. ஏற்கனவே அவரது அடிப்பொடிகள், ஸ்டாலினைவிட இவர் திறமையானவர், ஸ்டாலினுக்குப் பின்னால் பளணிராசன் முதலமைச்சர் உதயநிதி கச்சித் தலைவர் என்ற நிலை வரணும்னு வாட்சப்ல பரப்பறாங்க
ReplyDeleteஇந்த ஆண்டைக்கு ஒரிஜினல் பெயர் தியாகராஜன்! அப்பா பழனிவேல்! பாட்டன் (பொன்னம்பலம் தியாக) ராஜன். ஆட்டம் கொஞ்சம் பலமாகத்தான் ஆரம்பமாகி இருக்கிறது என்பதில் மாப்பிள்ளை சபரீசனுக்கு உறவு என்ற காரணம் ஆதரவாக இருக்கிறது. அதனால் உடனே ஆப்பு என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம்.
Deleteஅந்தநாட்களில் அப்பன் பழனிவேல் திமிரை அந்தநாட்களில் மு க அழகிரி தேர்தலில் தோற்கடித்து, இவ்வளவுதான் உனக்கு என்று அடக்கிவைத்திருந்த கதை நினைவுக்கு வருகிறது.
// இந்த மாதிரி வெட்கம், சூடு, சொரணை அப்புறம் மானம் எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுவதுதான்.. //
ReplyDeleteநயம் - நன்னயம் செய்து விடல் என்பது மாதிரி..
(தி) யாகம் - செய்து விடல்!..
ஆமாம் துரை செல்வராஜு சார்!
Deleteபொதுவாக இந்திய அரசியல்வாதிகளுக்கு விவஸ்தை இல்லாதிருப்பது பெரிய தகுதி என்றால் இங்கே கழகங்களில் வட்டம் சதுரம் முக்கோணம் மந்திரியாவதற்கு முக்கியமான தகுதியே இந்த மாதிரி வெட்கம், சூடு, சொரணை அப்புறம் மானம் எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுவதுதான் என்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!