செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதரவாளர்களைக் கதறவிட்டிருப்பது இந்த நாளுடைய ஆகச் சிறந்த காமெடி! வீடியோ 13 நிமிடம்.
ஒரு செய்தியாளராகவோ விவாத நெறியாளராகவோ செந்தில் என்றைக்கும் சோபித்ததில்லை. ஆனாலும் கூட இந்த வீடியோவில் ஒரு நகைச்சுவை ஓரங்க நாடகத்தை நடத்தியிருக்கிறார். நிறைய சொதப்பல்களுடன் தனி ஒருவனாக தமிழ் கேள்வி என்றொரு யூட்யூப் சேனலில் திமுகவுக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றும் கூட அண்ணாமலை தமிழக பிஜேபியின் தலைவரானதைக் கிண்டல் செய்து வெளியிட்டிருந்தார்.
செந்தில் எத்தனை வன்மத்தோடு தவறான தகவலைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள கீழே ஸ்க்ரீன்ஷாட் ஒன்றே போதும்.
செந்தில் வாங்குகிற காசுக்கு விசுவாசமாக என்னமோ உளறிவிட்டுப் போகட்டும்!
தினமலர் காரன் - மோடி முடிவெடுத்து விட்டார் - கொங்கு நாட்டை பிரிக்க என்று கிளப்பி விட -
அண்ணாதுரை கருணாநிதியும் - அடைந்தால் திராவிட நாடு என்று இந்த நாட்டை துண்டாட பேசிய பொது - தேசியவாதிகள் மனம் துடித்த துடிப்பை தற்போது கொங்கு நாட்டு காரர்கள் திரும்பவும் கழகத்திற்கு குடுத்து கொண்டு இருக்கிறார்கள் .
1921 இறந்த பாரதி "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று- 1947 வரப்போகும் விடுதலை பற்றி பாடியது போல..
இன்று பலர் கொங்கு நாடு மலர்ந்து விட்டது போல - வரி விதிப்பு வருமானம் கொங்கு நாட்டில் அதிகம் என்றும் - காவேரி நீர் பங்கீடு பற்றி - கர்நாடகம் மற்றும் திராவிட தமிழ்நாடு உடன் எப்படி பேச்ச்சு வார்த்தை செய்வது - ஏற்றுமதி துறைமுகம் எப்படி என்பது பற்றியெல்லாம் எழுதுகிறார்கள் ..
ஒரு மந்திரம் மாதிரி சொல்லி சொல்லி - எல்லாரும் அதை நம்ப ஆரம்பித்து விட்டனர் என நினைக்கிறேன் ..
இந்த காவேரி நீர் ஓடும் பகுதியான திருச்சி தஞ்சை நாகப்பட்டினம் வரை - உங்கள் கூட சேர்த்து கொள்ளுங்க - உங்களுக்கு பழைய பூம்புகாரில் ஒரு பெரிய துறைமுகம் கட்டி - திருப்பூர் ஆடைகளை ஏற்றுமதி செய்து கொள்ளலாம் !!
இப்படிக்கு
சோழதிருநாட்டு நம்பி (விஜயராகவன் கிருஷ்ணன்)
புலர்ந்து வரும் திராவிட தீது இல்லா திருநாட்டில் புது பெயர்
என்று விஜயராகவனும் எரிச்சலோடு முகநூலில் எழுதி இருக்கிறாரே. இதற்கென்ன சொல்வது?
மீண்டும் சந்திப்போம்
நான் செந்தில் போன்ற அல்லக்கைகளின் கதறல்களைப் பார்த்து நேரத்தை வீணாக்குவதில்லை. கொங்கு நாடு எனப் பிரிப்பது மிகவும் சரியே
ReplyDeleteநான்கூட செந்திலை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வதில்லைதான்! திமுக ஆதரவு ஊடகங்கள், பிரபலங்கள் எவராவது கொங்குநாடு பற்றிப்பேசியிருக்கிறார்களா என்று தேடியதில் சிக்கியது இந்தக்கதறல்! கனிமொழி தமிழகத்தைப்பிரிக்க யாராலும் முடியாது என்று பேசியதை இன்றைக்குத்தான் டிவி செய்திகளில் சொன்னார்கள்.
Deleteநிர்வாக வசதிக்காக பிரிப்பது சரியே என்று தோன்றுகிறது.
ReplyDeleteவாருங்கள் பந்து! பிரிப்பதா வேண்டாமா என்பதை வெவ்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. தெலங்கானா மக்கள் நிஜாம் கொடுமையிலிருந்து விடுபட நடத்திய போராட்டம் ஒருவிதம். மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவானபோதும் கூட தெலங்கானா கோரிக்கை இருக்கவே செய்தது. அன்றைக்கு தெலுங்கு பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நிரைய பசப்புவார்த்தைகள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதில் 1956 இல் தெலங்கானா உதயமாகவில்லை.
DeleteKCR மாதிரியானவர்களிடம் சிக்கிக் கொண்டு தனிமாநிலமாக ஆனபின்னரும் கூட தெலங்கானா மக்களுக்கு இன்னமும் விடிவுகாலம் பிறக்கவில்லை.