தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவர் கயவர்களால் மானபங்கப்படுத்தப் பட்டதுடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் கூட சில உறுப்பினர்கள் அதீத உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஆனால் உணர்ச்சிவசப்படும் ஒரு கும்பல் மனோநிலையுடன் எந்தக்காலத்திலும் சரியான முடிவெடுக்க முடியாது. சரியான நீதியை வழங்குவதற்கு உதவியாகவும் இருக்க முடியாது. ஒரு குற்றம் நடந்ததென்றால் கும்பலாகக் கூடி வெட்டு, குத்து, கல்லாலடித்துக் கொல், என்கவுன்டரில் போட்டுத்தள்ளு என்று கூவுவது என்ன மாதிரியான மனோநிலை?
முந்தைய நாட்களில் ஹிந்து நாளிதழில் சுரேந்திரா இந்த போலித்தனத்தை கார்டூனாக வரைந்திருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, இன்னொரு கார்டூனிஸ்ட் மஞ்சுள் கூட ஜனங்களுக்கு அவ்வப்போது ஏற்படும் நியாய உணர்ச்சி பற்றி கார்டூனாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராஜ்யசபை உறுப்பினரான ஜெயா பச்சன் கூட குற்றவாளிகளை அடித்தே கொல்லவேண்டுமென்று ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
ஜனங்களுடைய கோபம் அரசுக்கெதிராகத் திரும்புவது தெரிந்த நிலையில் தெலங்கானா காவல்துறை இன்று பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ளி இருக்கிறது.
ப்ரியங்கா ரெட்டியை சிதைத்து தீ வைத்து கொன்ற 4 பேரையும்..என்கவுண்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறது ..தெலுங்கானா காவல்துறை.
கொதித்துக் கொண்டிருந்த பெண்களை இது சற்றே அமைதிப்படுத்தி இருக்கிறது.
என்கவுண்டர் மூலம் ...தனக்கு எதிராக திரும்பிக் கொண்டிருந்த அரசியலுக்கு.. வேகத்தடை போட்டிருக்கிறார்..தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் . [ அரசியல் சுயலாப காரணமின்றி அரசியல்வாதிகள் எதையும் செய்வதில்லை ]
இச் செயலுக்கு ...பொதுமக்கள் ஆதரவு இருக்கும் / இருக்கிறது.
வழக்கு விசாரணை, நீதிமன்றங்கள் என்று..பொதுமக்களை ... மனித உரிமை பேசவிடாமல் தடுப்பது... குற்றத்தின் கொடூர தன்மை மட்டுமல்ல..
கொடூரத்தை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்கு ...தையல் மெஷினும், நிதி உதவியும் அளித்து கேவலமான அரசியல் செய்யும் அரசியல் வியாதிகள் முக்கிய காரணம்.
வருடக்கணக்காக இழுத்துக் கொண்டு நடக்கும் விசாரணைகளும், நீதியை உணர்த்தாத தீர்ப்புகளும் ஒரு முக்கிய காரணம்.
மனித உரிமை பேசி தொடர்ந்து 'கொடூர கொலை குற்றவாளிகளை மட்டும்' தப்பிக்க செய்யும் போலிகள் முக்கிய காரணம்.
இனியாவது...எந்த ஒரு குற்ற செயலுக்கான விரைந்த தீர்ப்பிலும், அதன் விளைவிலும் தார்மீக நீதி என்பது உணரப் படவேண்டும். உணர்த்தப் படவேண்டும்.
அப்போதுதான்..கொடூர குற்றவாளிகளுக்கு கூட மனித உரிமை குறித்து பேச பொதுமக்கள் முன்வருவார்கள்.
பானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். இங்கே சிதம்பரங்களுக்கு விரைந்து கிடைக்கிற நீதி டில்லியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான நிர்பயாவுக்கு கிடைப்பதில்லை. என்கவுன்டர்கள் கூட அரசியல் ஆதாயத்துக்காகத்தான் செய்யப்படும் என்றால் .......
என்கவுன்டர்கள், நிச்சயமாக, சரியான தீர்வல்ல.
//கொடூர குற்றவாளிகளுக்கு கூட மனித உரிமை குறித்து பேச // - உங்கள் வாதம் தவறு. கொடூரக் குற்றவாளிகளுக்கு மனித உரிமையோ சட்ட உரிமையோ கிடையாது. அவர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தையும் (அவர்கள் ஆதரவு இதற்கு இருந்திருந்தால்) காலி செய்வதில் கொஞ்சம்கூடத் தவறில்லை.
ReplyDeleteநம் நாட்டில் சட்டம், நீதி என்பதெல்லாம் யாருக்கும் கிடைப்பதில்லை. பாருங்க..பொள்ளாச்சி சம்பவத்தில் என்ன நீதி கிடைத்தது? மாணவன் நாவுக்கரசு கொலை செய்யப்பட்டதில் என்ன நீதி கிடைத்தது? தாமதப்படுத்தப்பட்ட நீதி, நாட்டிற்கே அநீதி.
ப.சி. ஜாமீன் வழக்கு நாட்டிற்கு அவசரத் தேவையா? அவசர வழக்காக இது மாதிரி கொலைக்குற்றங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனவா?
அரபு நாட்டில், ஒருவன் இந்த மாதிரி தவறு செய்தால், (ஒருவனை தன் காரினால் இடித்து தவறுதலாகக் கொன்றுவிட்டால், ஆக்சிடண்ட்) முதலில் அவன் ஜெயிலில் போடப்படுவான். நீதி கிடைக்கும்வரை அவன் உள்ளேதான் இருக்கணும். கொலைக் குற்றம் என்றால், கொலை செய்யப்பட்டவரின் இரத்த சம்பந்தம் மட்டும்தான் அவனை விடுதலை செய்ய முடியும். நாட்டின் சட்டம் அவனை விடுதலை செய்ய இயலாது.
முதலில், நீங்கள் எடுத்துப்போட்டிருக்கிற பகுதி கருத்து பானு கோம்சுடையது. கொடூரக் குற்றங்கள் புரிந்தவர்களுக்கும் கூட மனிதஉரிமை, சட்ட உரிமைகள் இருப்பதாகத்தான் நம்மூர் நீதிபரிபாலன முறைகள் சொல்கின்றன.
Deleteசிதம்பரங்களை விடுங்கள்! 1984 சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸ்காரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்களா? அவர்களில் ஒருவர் இன்றைக்கு மத்த்யப்பிரதேச முதலமைச்சர். போபால் விஷ வாயு பாதிப்பில் இறந்தவர்களுக்கான நியாயம் கிடைத்துவிட்டதா?
இங்கே பதிவில் எழுப்பியிருக்கிற முக்கியமான கேள்வியே, வெறும் கண்துடைப்புக்காக, வெகுஜன கொந்தளிப்பை சமாளிப்பதற்காகச் செய்யப்படும் என்கவுன்டர்கள் சரியான தீர்வாகுமா என்பதுதான். சரியான தீர்வல்ல என்பதுதான் என்னுடைய கருத்து.
கடைசியில் பாலைவனக்காட்டுமிராண்டிகளுடைய சட்டங்களோடு ஒப்பிடுகிற அளவுக்கு அவ்வளவு கேவலமாகப் போய்விட்டதே நம்முடைய நீதிபரிபாலனம்! :-(((
//கொடூரக் குற்றங்கள் புரிந்தவர்களுக்கும் கூட மனிதஉரிமை, சட்ட உரிமைகள் இருப்பதாகத்தான் நம்மூர் நீதிபரிபாலன முறைகள் சொல்கின்றன.// - அதனால்தான் யாருக்கும் பயம் கிடையாது. யாரையும் கொலை செய்யலாம், என்ன கொடுமையும் செய்யலாம். அதற்கு சட்டம், அரசியல்வாதிகள், சாதி மத ஆட்கள் சப்போர்ட் செய்வார்கள் என்பது தற்போதைய நிலைமை.
Deleteகண் முன்னால் தெரியும் குற்றச் செயலுக்கு எதற்கு நீதி மன்றம், எல்லோருடைய நேரமும் பணமும் வீணாக்கப்படணும்?
கசாப் போன்ற வெளிநாட்டவருக்கு, வேற வழியில்லாமல் நம் சட்ட நடைமுறைகளைக் கடைபிடிக்கணும்.
இந்த விவாதமே நமக்குள்ளிருக்கிற நியாய உணர்ச்சியை எப்படிக் கொலைவெறியாக மாற்றிவிட முடியும் என்பதைக் காட்டுவதாகத்தான் எனக்குப் படுகிறது.
Deleteஅரசியல்வாதிகள், 'சட்டம்' என்றெல்லாம் பேசக் காரணம், அது அவர்களது குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறது என்பதுதான். தெரு நாய்களுக்குப் பரிந்து பேசிவிட்டு, மேனகா காந்தி, ஏசி அறையில் சுகமாகத் தூங்குவார். ஏன் அவருடைய பணத்திலிருந்து, சொத்திலிருந்து பெரும் பகுதியை தெரு நாய்களுக்குச் செலவழிக்கக்கூடாது?
ReplyDeleteவசனம் பேசுவது அரசியல்வாதிகளின் வேலை. இந்த மாதிரி என்கவுண்டர்களை நாம் ஆதரிக்கணும்.
On the rule of the road என்று A G Gardiner எழுதிய கட்டுரை ஒன்று இணையத்தில் கிடைக்கும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்! ஆளுக்காள் நாட்டாமை செய்கிற பஹுநாயகம் அராஜகத்தில் தான் போய்முடியும்!
Delete//ஆளுக்காள் நாட்டாமை செய்கிற பஹுநாயகம் .... !// இந்த விஷயத்தில் பொதுஜனம் யாரும் ஒன்றும் தண்டனை வழங்கவில்லையே? காவல்துறைதானே தன் கடமையை செய்துள்ளது?
Deleteகாவல்துறைக்கு இரண்டே இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே என்கவுன்டர் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இங்கே நடந்தது தற்காப்புக்காக என்று சொல்லப்பட்டாலும் உண்மை அதுதானா?
Deleteபானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteபானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று நான் சொன்னது இதுபோன்ற வழக்குகளில் விரைந்து விசாரணையை நடத்துவதுடன் சரியான தீர்ப்பையும் வழங்கவேண்டும் என்று சொன்னதற்காக மட்டுமே! ஆளுக்காள் கூச்சலிட்டு தண்டனையை சொல்கிற அராஜகமான முறையில் அல்ல.
Deleteஎன்கவுண்டர்கள் சரியான தீர்வல்ல. We have to allow some exceptions depending upon the degree of crime. பஞ்சமா பாதகங்களில் மற்ற குற்றங்கள் இழைத்தவர்கள் திருந்தி வாழ விருப்பப்படலாம், அப்படி வாழ்ந்தாலும் தவறு இல்லை. ஆனால், திட்டமிட்ட கொலை, கற்பழிப்பு போன்ற செயல் புரிபவர்கள் திருந்திவிட்டேன் என்று சொன்னாலும் அவரால் சமுதாயத்திற்கு / பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பு திரும்பக்கிடைக்காது.
ReplyDeleteகௌதமன் சார்! விதிவிலக்குகளையே பொதுவிதியாக்கிவிட வேண்டுமென்று ஜனங்களும் ஊடகங்களும் குதிப்பதுதான் இங்கு பிரச்சினையே!
Deleteமற்ற விஷயங்களில் சரியோ தவறோ... இதுபோன்ற கண்முன்னே தெரிந்த நியாயமான குற்றங்களில் சட்டத்தின் மற்றும் பணத்தின் துணையுடன் தப்பித்துக் கொள்ளும் குற்றவாளிகளுக்கு இது சரியான தண்டனைதான். இதுபோன்ற குற்றங்களை செய்ய முற்படுவோருக்கு இதனால் ஏற்படும் பயம் முக்கியம்.
ReplyDeleteஸ்ரீராம்! தண்டனைமுறைகள் குற்றத்தைத் தடுப்பதுமில்லை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குற்றவாளிகள் திருந்துவதுமில்லை. அதேநேரம் கண்ணுக்குக் கண் பல்லுக்குப்பல் ரீதியிலான தண்டனை முறைகள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் . ஒரு நீதிமுறைக்குட்பட்டுச் செய்யப்படும் போது மட்டுமே தண்டனைகளை நியாயப்படுத்த முடியும். இது சரியா இல்லையா என்பதைக் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!
Deleteஇந்தக்குறிப்பிட்ட என்கவுன்டர், குற்றவாளிகளுக்கு அரசியல் பணபலம் எதுவுமில்லை என்பதால் ஈசியாக முடிந்துவிட்டது. மாறாக அரசியல் பின்னணி, பணபலம் இருந்திருந்தால்? நாவுக்கரசு கொலை வழக்கு ஞாபகமிருக்கிறதா? குற்றவாளிக்கு அப்பீலில் விடுதலை கிடைத்தது. என்ன செய்ய முடிந்தது? .