Sunday, December 29, 2019

மதன் ரவிச்சந்திரன்! கொஞ்சம் நிதானிப்பது நல்லது!

சின்னச்சின்ன செய்திகள்தான்! அடடே! அப்படியா! என்று ஆச்சரியப்பட வைக்கிறமாதிரி! சம்பந்தப்பட்ட சேனல் பரிதாபங்கள் எப்படியிருக்கும் என்று கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிகிறதா?


கௌரவ டாக்டர் பட்டம் கிடைக்காமல்  போனதோடு மானம் மரியாதை எல்லாம் கப்பலேறிப்போயாச்சு என்று சோக கீதம் பாடவேண்டிய நிலைமையில் டய மண்டு! அடடே, அப்படியா என்று கேட்காமல் என்ன செய்வது? ஆனால் விதைத்ததைத்தானே  அறுவடை செய்கிறார் பாடலாசிரியர் என்கிற போது என்னவென்று அனுதாபப் படுவீர்களாம்? கொஞ்சம் சொல்லுங்களேன்!  


சதுரங்கம் நிகழ்ச்சிக்காக மதன் ரவிச்சந்திரன், அர்ஜுன் சம்பத்தை பேட்டி எடுக்கிறார். எப்போதும் இல்லாத அதிசயமாக, மதன் ரவிச்சந்திரன் அர்ஜுன் சம்பத்தைப் பதில் சொல்ல விடாமல் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டே போவதில் எரிச்சலோடு பின்னூட்டங்களை இந்த வீடியோவில் தான் பார்த்தேன். கேள்விகேட்டுவிட்டு பதில்சொல்வதற்கு இடைவெளியே கொடுக்காமல் அடுத்தடுத்துக் கேள்விகளாக எழுப்பிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒருத்தர்  இரண்டு பேர் இல்லை, வரிசையாக இதேமாதிரிப் பின்னூட்டங்களாக இருந்தால்....! மதன் ரவிச்சந்திரன் கொஞ்சம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது!  கேள்வி கேட்பதில் மதன் ரவிச்சந்திரன் தடுமாறுவதையும், அர்ஜுன் சம்பத் நிதானம் இழக்காமல் பொறுமையாகப் பதில் சொல்வதையும் கவனித்துப்பாருங்கள்! வீடியோ 32 நிமிடம்.


2019 ஆம் ஆண்டில் மதன் ரவிச்சந்திரன் எடுத்த பல பேட்டிகளில் ஆகச் சிறந்த நேர்காணலாக இதைத்தான் சொல்வேன்! வீடியோ 41 நிமிடம். காவேரி நியூஸ் சேனல் மதன் ரவிச்சந்திரன் எடுத்த பல நேர்காணல் காணொளிகளை யூட்யூப் தளத்திலிருந்து அழித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் இது எத்தனை நாள் காணக்கிடைக்கும் என்பது தெரியாது. இப்போது இன்னொரு முறை பார்த்துவிடுவதில் என்ன தடை?

மீண்டும் சந்திப்போம்.                 

6 comments:

  1. தொடக்கத்தில் இது போன்ற பேட்டிகளை முழுமையாகப் பார்ப்பேன். ஆனால் இவர்கள் எரிச்சலை உருவாக்குகின்றார்கள். நம் நேரத்தை இவர்கள் வீணடிக்கின்றார்கள் என்றே கருதுகிறேன்.இந்த வருடம் எப்படி இணைய தள செய்தி சேனல்களை பயன்படுத்தினேன் என்பது மட்டும் எழுதாமல் விட்டுப் போனது. மதியம் வந்து மீண்டும் பார்க்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி! இங்கே சேனல்களும் ஊடகங்களும் காசுக்கு கூவுகிறவையாக மாற்றப்பட்டது சோனியாவின் தனிப்பட்ட சாதனையாகச் சொல்லலாம்! பர்கா தத், வீர் சங்வி முதலான ஊடகக்காரர்கள் காங்கிரஸ் கட்சி இடம் கொடுத்ததைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத் தரகு வேலையையும் செய்ய ஆரம்பித்தார்கள். நிரா ராடியா என்ற பெயர் நினைவுக்கு வருகிறதா? வெளிநாடுகளில் இருந்த lobbying வேலையை அதிகாரபூர்வமாகவே டாட்டாக்கள் இந்தியாவுக்குள் கொண்டுவந்ததை அம்பலப்படுத்திய பெயர்! யாருக்கு என்ன மந்திரி பொறுப்பு என்பதை பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்யவிடாமல் இந்தமாதிரி அதிகாரத்தரகு வேலை செய்த நிரா ராடியாக்கள், பர்கா த்த்துக்கள் தான் முடிவு செய்தார்கள். இப்படிப் புனிதமான ஊடகத்தரகு வடக்கே கொடிகட்டிப் பறந்தது. தமிழ்நாட்டில், அல்லது பிறமாநிலங்களில் சோனியா அளவுக்கு பலவீனமான அரசியல் தலைவர்கள் இல்லை என்பதால் மந்திரி யார் என்பதை முடிவு செய்கிற அளவுக்கு சக்திவாய்ந்த ஊடகக்காரர்கள் இங்கே உருவாகவில்லை.

      ஆனாலும் வடக்கே சாத்தியமான அந்த நினைப்புத்தான் இங்கே பற்பல ஊடகங்களில் சிலரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. டய மண்டுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ராஜ்நாத் சிங்கை அழைப்பதற்கு lobby செய்ய நிறையப்பணம் கைமாறியிருப்பதாக செய்திகள் வந்தனவே, பார்க்கவில்லையா?

      நேரவிரையம் என்று தவிர்த்தால், நிறையக்காமெடிகளை நீங்கள் இழக்க வேண்டிவருமே! பாரவாயில்லையா?

      Delete
    2. கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ராஜ்நாத் சிங்கை அழைப்பதற்கு lobby செய்ய நிறையப்பணம் கைமாறியிருப்பதாக........... இது குறித்த தகவல்கள் இணைப்பு இருந்தால் இங்கே எழுதி வைக்கவும்.

      Delete
    3. Quote பித்தளை பித்துவின் சரிந்த பெயரை செங்குத்தாக நிறுத்த பல லட்சம் சம்மந்தப்பட்ட ஊடக lobby நரிக்கு கைமாற்றப்பட்டிருக்கு..மத்திய அமைச்சர் வராததால் நரி now in delegating position...அமைச்சர் கட்சியின் நரியின் நிலைய விற்பனரும் கூட்டு என்று பேச்சு அடிபடுகிறது... எப்டியோ நரி சிக்கிடுச்சி😜 இது மதன் ரவிச்சந்திரனுடைய டிசம்பர் 27 ஆம் தேதி ட்வீட்

      https://twitter.com/MadanRavichand4/status/1210434458144264192

      Delete
  2. கிசு கிசு போல எழுதி உள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. எப்படி எழுதியிருந்தால் என்ன? ஒரு ஊடகக்காரர் இத்தனை அப்பட்டமாக எழுதுவதே இங்கே ஆச்சரியம் இல்லையா?

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)