ரங்கராஜ் பாண்டே தந்திடிவியை விட்டு வெளியேறி இந்த டிசம்பரில் ஓராண்டு முடிந்துவிட்டது. பழைய உறவுகளை திமுகவுடன் புதுப்பித்துக்கொள்ள தந்தி நிர்வாகம் மேற்.கொண்ட சமரசங்களில் பாண்டே வெளியேற்றப் பட்டார் என்பது ஆதித்தன் ரகசியம். ஆனால் பாண்டே காலத்தில் உச்சத்தைத் தொட்ட தந்திடிவி தொடர்ந்து சரிவுமுகத்திலேயே ஓராண்டாக இருந்துவருவதை நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.
என்னதான் நடுநிலைமையோடு செய்திகளைத் தருகிற மாதிரி வேடம் போட முயன்றாலும் கொண்டையை மறைக்கத் தெரியாத வடிவேலு மாதிரிப் பரிதாபமாக இருப்பது தந்தி டிவியின் பல நேர்காணல்கள், நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மாதிரி ஒரு சீனியர் அரசியல்வாதியிடம் கேள்விக்கென்ன பதில் என்று பேட்டி எடுக்கப்போனால் அதற்கான ஹோம் ஒர்க் இருக்க வேண்டாமா? நாடெங்கிலும் கலவரத்தீ மூண்டிருக்கிறதே என்று கேள்வியை ஆரம்பித்து வெங்காய விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன் என்று வரிசையாக தெளிவே இல்லாத கேள்விகளைக் கேட்டு என்ன பதிலைப் பெற்றுவிட முடியும்? வீடியோ 39 நிமிடம் என்று சுருக்கமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லை! 39 நிமிடம் பேட்டியை நடத்த முடிந்ததே என்பது தான் ஆச்சரியம்!
மதன் ரவிச்சந்திரன்! WIN News சேனலில் மிகத் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற இளைஞர். நாஞ்சில் சம்பத் மாதிரி பேச்சு வியாபாரியோடு 26 நிமிட நேர்காணல் நடத்துவது எப்படியிருக்கிறது என்று பாருங்கள்! கேள்விகளில் ஒரு தெளிவு, ஒரு தொடர்ச்சி இருப்பதைக் கவனிக்க முடிகிறதா? வெறும் வார்த்தை அலங்காரங்களில் உளறுவதெல்லாம் சரியான பதில் ஆகி விடுமா?
இரண்டு நேர்காணல்களுக்கும் உண்டான வித்தியாசம் புரிகிறதா? ஊடகங்களின் தலைவிதியை திறமையான ஊழியர்கள்தான் முடிவு செய்கிறார்கள். முதலாளிகள் தீர்மானித்துவிட முடியாத விஷயம் அது.
மீண்டும் சந்திப்போம்.
பெரிய நிறுவனங்கள் எவரையும் பெரிய சம்பளம் கொடுத்து வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தரம் குறித்தும் கவலைப்படுவதில்லை. சுசாமி அந்த நிருபரை உனக்கு அதெல்லாம் தெரியாது புரியாது என்று இரண்டு முறை குறிப்பிடுவார். கடந்த 25 ஆண்டு கால இந்திய வரலாறு தெரியாமல் பத்திரிக்கைத்துறையில் ஒன்றுமே செய்ய முடியாது. புரோக்கர் வேலை மட்டும் தான் பார்க்க முடியும்.
ReplyDeleteமேலோட்டமாக நீங்கள் சொல்கிற மாதிரி சம்பளம் என்பது சட்டப்படியான குறைந்தபட்சம் தான் ஜோதிஜி! ஆனால் அதுமட்டுமே பிரதானகாரணம் இல்லை. அதற்காகத்தான் மதன் ரவிச்சந்திரனுடைய நேர்காணல் ஒன்றையும் கொடுத்து வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்று கேட்டிருந்தேன். மதனுக்கு மட்டும் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்துவிடுகிறார்களா என்ன?
Deleteஇங்கே நான் குறிப்பிட்டு எழுப்பிய கேள்வியே, சரியான ஹோம் ஒர்க் செய்யாமல் பேட்டியெடுக்க ஆரம்பித்து விடுவது பற்றித் தான்! அதுவும் சுப்ரமணியன் சுவாமி மாதிரி ஒரு சீனியர் அரசியல்வாதியுடன் பேசும்போது சரியான முன்தயாரிப்பு எதுவுமில்லாமல், இந்த ஒருவிஷயம் தான் என்று இல்லாமல் எதிலும் நிலைகொள்ளாமல் கேள்விகளை இயந்திரத்தனமாகக்கேட்டுக் கொண்டேபோவதில், தந்திடிவியின் லட்சணம் நாறிப்போனது.