கறுப்புப்பணம் திரைப்படத்தில் இந்தப்பாடலைக் கேட்டு ஆடாதவர்களே கிடையாதென்றால் நம்ப முடிகிறதா? படத்தில் பாடுவது செம்மீன் ஷீலா என்பது இன்னொரு அதிசயம்!
லூர்து மேரி ராஜேஸ்வரி! பரமக்குடி பக்கம் இளையான்குடி தான் பூர்வீகம். அம்மா ரெஜினா மேரி நிர்மலா ஜெமினி ஸ்டுடியோவில் கோரஸ் பாடிக் கொண்டிருந்தவர். தாயுடன் கூடப் போன லூர்து மேரிக்கும் கோரஸ் பாடுகிற வாய்ப்புக் கிடைத்ததில் ஆச்சரியமில்லைதான்! மனோகரா (1954) திரைப்படத்தில் ஜிக்கி பாடிய ஒருபாட்டில் தாயும் மகளுமாக கோரஸ் பாடினார்கள் ஏற்கெனெவே M S ராஜேஸ்வரி என்றொரு பாடகி இருந்ததனால் L R ஈஸ்வரியானார், வெறுமனே கோரஸ் பாடிக் கொண்டிருந்தவருக்கு 1958 இல் கே வி மஹாதேவன்தான் முதன்முதலாகத் தனிப் பாட்டுப் பாடுகிற வாய்ப்பைக் கொடுத்தது! இவரேதான் அவரு! அவரேதான் இவரு! இந்தப்பாடல் இடம் பெற்ற படம் நல்ல இடத்து சம்பந்தம்!
அடுத்த சான்ஸ் 1959 இல் நாலுவேலி படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து இந்தப்பாடலைப் பாடக் கிடைத்தது.
ஆனால் தனியாக அடையாளம் காட்டுகிற பாடலுக்காக அவர் 1961வரை காத்திருக்க வேண்டிவந்தது.
பாசமலர் திரைப்படத்தில் பாடிய வாராயோ தோழி வாராயோ பாடல்தான் இவருக்கு கிடைத்த முதல் ஹிட்! மெல்லிசை மன்னர்கள் இசை அமைப்பில் பாட ஆரம்பித்தவர் அடுத்த இருபது வருடங்களுக்குக் கொடி கட்டிப் பறக்கிற பாடகியாகவும் ஆனார்.
முத்துக் குளிக்க வாறீகளா? ஒரு உச்சமென்றால் எலந்த பயம் இன்னொரு உச்சம்!
அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ!
எண்பதுகளின் ஆரம்பம், திரைப்படங்களில் பாடுகிற வாய்ப்பு குறைந்தபிறகும் கூட மாரியம்மன் பாடல்கள் என்று பாடிக் கொண்டு ஆக்டிவாகத்தான் இருக்கிறார் மேடைகளில் தனது கனத்த சரீரத்துடன் அம்மனோ சாமியோ பாடலை ஆட்டத்துடன் பாடுவதைக் கண்டு பயந்து போனவர்களும் ஏராளம்!
என்ன இன்றைக்கு திடீரென்று L R ஈஸ்வரி புராணம்?
7/12/1939 இல் பிறந்த L R ஈஸ்வரிக்கு இன்று எண்பது வயது ஆகிறது. எத்தனையோ பாடகர்கள் வந்து கொண்டே இருக்கிற இன்றையதினத்திலும் கூட அவரது இடத்துக்குப் பக்கத்தில் எவராலும் முடியவில்லை.
இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவருக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைச் சொல்வோம்!
ஆம். எல் ஆர் ஈஸ்வரி அம்மாவின் பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஎனக்கும்தான் ஸ்ரீராம்! ஆனால் மேடையேறி மாரியம்மா .. அம்மனோ சாமியோ பாடி பயமுறுத்தினால்...? அப்படி ஒரு கோரத்தையும் பார்த்திருக்கிறவர்களுக்கு!!
Delete