பத்தாண்டுகள் பிரதமராகப் பதவியிலிருந்தபோது வாய் திறந்து எதையும் பேசாமல் மௌனசிங்காகவே இருந்த மன்மோகன் சிங் இப்போதெல்லாம் வாயைத்திறந்தால் பொய் மட்டுமே பேசுவது என்றொரு வழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். I K குஜ்ரால் சொன்னதை அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த P V நரசிம்ம ராவ் மட்டும் காதுகொடுத்துக் கேட்டிருந்தால் 1984 துயர சம்பவம் நடந்தே இருந்திருக்காது என்று இறந்தவர் மீது பழியைச் சுமத்தி ராஜீவ் காண்டியை புனிதப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்.
காங்கிரசின் இந்த மன்மோகன்சிங் கபடநாடகத்தை I K குஜ்ரால் மகன் நரேஷ் குஜ்ரால் மறுத்திருக்கிறார். சில காலத்துக்கு முன்புதான் ராகுல் காண்டியின் குரு சாம் பிட்ரோடா 1984 நடந்ததென்னவோ நடந்துவிட்டது என்ற ரீதியில் பேசியதைக் கூட மறைத்துவிடலாம் என்று நினைக்கிறார்களோ?
1984 கொலைபாதகத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் காரர்களை இன்றும்கூட (உதாரணத்துக்கு கமல்நாத், தற்போதைய மத்தியபிரதேச முதலமைச்சர்) பாதுகாக்கிறார்களே, அதற்கெல்லாம் மன்மோகன் சிங் என்ன சொல்வாராம்?
பி வி நரசிம்ம ராவின் பேரன் N V சுபாஷ் இறந்து போனவர் மீது பழிபோட்டு காங்கிரஸ் தன்மீதான பழியை துடைத்துக்கொள்ள முயற்சிப்பதைக் கண்டித்திருக்கிறார். மன்மோகன் சிங் உளறியது இத்தனை சீக்கிரமாகப் பல்லிளித்து விடும் என்பதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். நரசிம்ம ராவ் மீது சோனியாவுக்கு இருந்த வஞ்சம் எப்படிப்பட்டது என்பதை Consent to be nothing தளத்தில் கொஞ்சம் பார்த்து இருக்கிறோம். நரசிம்ம ராவ் என்று தேடிப்பாருங்கள், இன்னும் தகவல்கள் கிடைக்கலாம். ராமச்சந்திர குஹா 2010 வாக்கில் எழுதிய பதிவு ஒன்று இங்கே.
இறந்தவர் மீது பழியைப்போடு! கிழவியைத்தூக்கி மணையில் வை! என்கிற ரீதியில் போபால் விஷவாயு துயரத்துக்கும் நரசிம்ம ராவ் மீதே பழியைப் போட்டு தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்ததும் உண்டு. மன்மோகன் சிங் கூட அந்தப் பழங்கதையைத்தான் இப்போது முயற்சித்திருக்கிறார்.
சோனியா காங்கிரசிடம் கோயபல்ஸ் எல்லாம் பிச்சை வாங்கவேண்டும்! அவ்வளவு அடுக்கடுக்கான பொய்கள்! சோனியா காங்கிரசை ஏன் தலைமுழுகியே ஆகவேண்டும் என்பதற்கான காரணங்கள், நியாயங்கள் புரிகிறதா?
மீண்டும் சந்திப்போம்.

No comments:
Post a Comment