Saturday, December 14, 2019

ஊடக அறமும் அரசியல் போகிற போக்கும்!

ஊடக அறம், ஊடக தர்மம் என்பதெல்லாம் வெறும் கதையாகிப்போன தமிழக சூழலில் ஒருவர் ரங்கராஜ் பாண்டேவிடம் ஊடக தர்மம் என்றால் என்ன? கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன் என்று கேட்கிறார். ரங்கராஜ் பாண்டேவும் ஏதோ சொல்லிச் சமாளிக்கிறார்.

     
வீடியோ 11 நிமிடம்.உங்களுக்காவது பாண்டேவின் பதில் திருப்தி அளிக்கிறதா என்று சொல்லுங்களேன்! 


ஊடக அறமென்பது வாங்கின காசுக்குக் கூவுவது!காசு பெயரவில்லை என்றால் கொஞ்சம் இப்படிக்காகவும் கூவுவது! இதை ரங்கராஜ் பாண்டே வெளிப்படையாகச் சொல்வார் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறு! அது போகட்டும்! ஜூவியில் சொல்வதைப் பார்த்தால் இசுடாலின் துண்டுச் சீட்டைப் பார்த்துப் படித்தும் கூடத் தப்பும் தவறுமாக உளறுவது, சங்கிலிப் பறிப்பை சங்கிலிப் பருப்பாக மாற்றியது முதலான நிகழ்கால தமாஷாக்களை இனிமேல் பார்க்க முடியாதோ? 


உனாநிதி சைதாப்பேட்டையில் குடியுரிமைச்சட்டத் திருத்த மசோதா நகளைக் கிழித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தைப் பற்றி முகநூலில் எப்படிப் பதிவு செய்திருக்கிறார்களாம்? நடந்த கூத்துக்குச் சற்றே நெருக்கமாக இருந்த ஒரு வரலாற்றுச்சுவடு.   

"அன்று இந்தியா மாபெரும் சட்ட மோசடி செய்தது, குடி உரிமை மசோதா எனும் பெயரில் இந்நாட்டு இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் விரட்டி அடிக்க படுபயங்கர திட்டமிட்டது
பிராமணரின் குருநாதரான அமித்ஷா என்பவர் அச்சட்டத்தை கொண்டுவந்தார்
யாருமே அதுபற்றி பேச அஞ்சிய நேரமது, அமித்ஷா என்பவர் ஹிட்லரை விட கொடியவர், டிரம்பே அவருக்கு அஞ்சி அமெரிக்கா ஓடிவிட்டார், புட்டீனே மாஸ்கோவில் ஒளிந்து கிடந்தார், அவ்வளவு கொடியவர் அமித்ஷா
அந்த கடும் இறுக்கமான நேரம், உலகமே அஞ்சி ஒடுங்கிய நேரம், இந்திய இஸ்லாமியரெல்லாம் இனி நாம் எங்கு செல்வோம் என ஒலமிட்ட நேரம், அவர் எழும்பினார்
ஆம், உதயநிதி என்பவர் தைரியமாக எழும்பினார், குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்திலே கிழித்தெறிந்தார், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று மீதி சட்டத்தை எடுத்து வந்து சென்னையிலே கிழித்தெறிந்தார்
இந்திய ராணுவமே வந்தாலும் அவரை நெருங்க முடியவில்லை, அவ்வளவு மக்கள் திரண்டனர்.
பழ கருப்பையா எனும் திமுக தியாகி அந்த கூட்டத்தில் தொலைந்தே போனார், இன்றுவரை அவரை பற்றிய தகவல் இல்லை, அது அமித்ஷாவின் சதியாக இருக்கலாம்
எனினும் நாடே அவர்பின் திரண்டது
அஞ்சிய அமித்ஷா சட்டத்தை வாபஸ் பெற்று அடுத்த நாட்டில் இருந்து இங்கு இஸ்லாமியர் வரகூடாது, இங்கிருக்கும் இஸ்லாமியர் வெளிநாடு செல்ல கூடாது என சட்டத்தை திருத்தினார்
இஸ்லாமிய மக்கள் அவரை நன்றியோடு நோக்கினர், இது காயிதே மில்லத் பிடித்து அழுத கருணாநிதியின் கரம் தொட்டு வளர்ந்த குழந்தை, உங்களுக்கு எக்காலமும் நானே காவல் என உதயநிதி சொன்ன பொழுது வானில் காப்ரியேல் தூதன் தோன்றி "திமுகவில் ஆசீர்வதிக்கபட்டவர் நீரே, உம் தகப்பனான முக ஸ்டாலினும் ஆசீர்வதிக்கபட்டவரே" என சொல்லி மறைந்தது
உதயநிதி என்றொரு போராளி இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இஸ்லாமியனோ ஒரு பள்ளிவாசலோ இருக்காது, நெல் வயலுக்கும் வாழை இலைக்கும் ஊட்டி காடுகளுக்கும் கூட காவிவண்ணம் அடித்திருப்பார்கள் படுபாவிகள்"
இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திமுக எழுதும் வரலாறு இப்படித்தான் இருக்கும், ஏனென்றால் பெரியார் பற்றி இப்படித்தான் அன்றே எழுதிவைத்தார்கள்.


தினத்தந்தி நாளைய வரலாற்றை நேற்றே எழுதி முடித்து விடுகிற வித்தியாசமான ஊடகம். ஆயுத எழுத்து என்கிற இந்த நிகழ்ச்சி கூட காஷ்மீர் இளைஞர்கள் 500 ரூபாய் காசுக்கு ராணுவத்தின் மீது கல்லெறிகிற சூரத்தனம் போல, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதே பாவம் என்று ஒரு  பேத்தல். இதை ஆரம்பித்து வைப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் என்பது கூடுதல் விசேஷம். வீடியோ 46 நிமிடம். பொழுதுபோக்க நல்லதொரு ஊடக விவாதம்.

காசுக்கு கூவுகிற ஊடகங்களில் போய்  யாராவது உண்மை, அறம் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்களா என்ன?  

மீண்டும் சந்திப்போம்.      
  

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)