Monday, December 16, 2019

மாணவர் எழுச்சியா? சமூகவிரோதிகளின் கைவண்ணமா?

வர வர போராட்டங்கள், கலவரங்கள், கலகங்கள், விஷமத்தனமான ஊடகத் திரித்தல்கள் என்பன வரை முறை மீறிப்போய்க் கொண்டிருக்கின்றன. சமூக விரோதிகள் ஆட்டுவிக்கிறபடி மாணவர்களும்  போராட்டங்களில் வன்முறையில் இறங்குவதை மிகுந்த கவலை, வலியுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுநாள் வரை வெளியில் அதிகம் தெரியாமலிருந்த ஜாமியா மில்லியா இஸ்லாமியாவும் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. டில்லியில் மாணவர்  போராட்டம் என்றால் அது JNUவில்தான் இருக்கும் என்பது இப்போது மாறி ஜாமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்று வரிசையாக எங்கெல்லாம் பரவிக் கொண்டு வருகிறது என்பதை NDTV பரவசத்துடன் மிகைப் படுத்திப் படம்போட்டுக் காட்டுகிறது.
மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து கூவுவது ஒரு இளம்பருவக் கோளாறு என்பதைத் தாண்டி,  வேறு உள்நோக்கம் கொண்ட சமூக விரோதிகள், இடதுசாரிகள், அப்புறம் காங்கிரஸ், கழகங்கள் உள்ளிட்ட கட்சிகள் அரசியல் அஜெண்டாவோடு ஊடுருவுகிற போராட்டக் களமாகவும் மாறி வருவதை, எந்தவொரு தாய் தகப்பனும் கவலையோடு பார்க்காமல் இருக்க முடியாது. 


இது ஒரு சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சினை, இதில்  நீதிமன்றங்கள் எதையும் பெரிதாக செய்துவிட முடியாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியிருக்கிறது.  A bench headed by Chief Justice S A Bobde on Monday also took serious note of the rioting and destruction of public property during protests against the Act and said the court will hear the plea if the rioting stops. The court said it cannot be held at ransom and the court will hear the petition in a ‘cool frame of mind.’  ஒருபக்கம் கலவரம், வன்முறை இன்னொரு பக்கம் உச்சநீதிமன்றத்தின் தலையீடு வேண்டும் என்ற கோரிக்கை என்ற விசித்திரமான நிலைபாட்டை உச்ச நீதி மன்றம் கொஞ்சமல்ல நிறையவே  கவலையோடு கவனித்து எச்சரித்திருக்கிறது.


இது இன்று வீடியோ 2 நிமிடம் 

ஆனால் கலவரம், வன்முறை, பொதுச்சொத்துக்களை நாசப்படுத்துவது என்பதை ஒரு கலாசாரமாகவே வளர்த்து வருகிற மேற்குவங்கத்து ஆசாமிகளுக்கு இதெல்லாம் பொருந்தாது போல. மம்தா பானெர்ஜி முதல்வராகவும் இருந்து கொண்டு, வன்முறை, ரயில் எரிப்பு இவைகளை மறைமுகமாக ஊக்குவிப்பவராகவும் இருக்கிறார். சட்டம் ஒழுங்கெல்லாம் கிடையாது! முடிந்தால்   ஆட்சியைக் கலைத்துப் பார் என்கிற சவடால் வேறு!  

  


சென்சஸ் NPR மக்கள் தொகைக்கணக்கெடுப்பு என்பது  பத்தாண்டுகளுக்கொரு முறை நடப்பதுதான். வருகிற ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரை வீடு தேடி கணக்கெடுப்பு எடுக்க வருகிறவர்களுக்கு சரியான தகவல் சொல்வதற்குத்  தேவையான ஆவணங்கள் என்ன என்ன என்பதைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா! இந்த  12 ஆவணங்களில் மூன்று இருந்தாலே போதுமானது.  

வேடிக்கை என்னவென்றால் NPR கணக்கெடுப்பிலும் மேற்கு வங்க முதல்வர் முதல் பாண்டிச்சேரி நாசா வரை நாங்கள் அமல்படுத்தமாட்டோம் என்று சொல்கிற NRC தேசிய குடிமக்கள் ரிஜிஸ்தர் இரண்டிலும் ஒரே மாதிரியான விவரங்கள் தான் தொகுக்கப் படுகின்றன. மம்தா பானெர்ஜி NPR கணக்கெடுப்புக்குத் தயாராகும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது நம்மூர் அரசியல் பித்தலாட்டங்களில் ஒன்று.

டிஸ்கி: சென்சஸ்/NPR/மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதையும் மம்தா பானெர்ஜி தடை செய்து உத்தரவிட்டிருக்கிறார் என்பது இப்போதைய செய்தி நிலவரம்.    

மீண்டும் சந்திப்போம்.             

2 comments:

  1. தாய்த் திருநாட்டுக்கு என்ன சாபமோ தெரியவில்லை...

    ஆனாலும் இது மட்டும் உறுதி...

    பாரத நாடு பழம் பெரும் நாடு..
    நீரதன் புதல்வர்.. இந்நினைவு அகற்றாதீர்...

    ஜெய்ஹிந்த்...

    ReplyDelete
    Replies
    1. அந்த நினைவு நம்மைச் சுற்றியுள்ள நண்பர்களுக்கும் வர நாம் என்ன செய்யப்போகிறோம்? வாழிய பாரதம்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)