Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Friday, June 18, 2021

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர்!

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர் - பிரதமர், முதலமைச்சர் சந்திப்பின் முக்கியத்துவம் இப்படி கலைஞர் செய்திகள் தொலைகாட்சி பெருமிதப்பட்டுக் கொள்கிற விவாத நிகழ்வு வீடியோ 50 நிமிடம். வேறு வேலை எதுவுமில்லை என்றால் தாராளமாகப் பார்க்கலாம். பனிமலர் தான் நிகழ்ச்சியின் நெறியாளர்.


இத்தனை அதிமுக்கியமான நிகழ்ச்சியைப் பற்றிய விவாதத்துக்குப் பார்வையாளர்கள் வெறும் 72 பேர்தான் என்பதை மேலே ஸ்க்ரீன்ஷாட் காட்டும்போது ஏ தாழ்ந்த தமிழகமே என்று கருணாநிதி மாதிரி நாமும் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லையே! 



இணையத்தில் இந்த அதிமுக்கியமான நிகழ்வைக் குறித்து நிறைய சேதி சொல்கிறார்கள்! எப்படி என்று பார்த்து விடலாமா?


அதுசரி! ஸ்டேன்லி ராஜன் வேறெப்படிச் சொல்வாராம்?


கார்டூனிஸ்ட் அமரன் கூட ஸ்டேன்லி ராஜன் சொன்னதைத் தான் கோடுகளில் வரைந்திருக்கிறார்.


இது ஸ்ரீராம் சேஷாத்ரியின் ட்வீட்டர் செய்தி :: டில்லியில் வரவேற்கக் காத்திருந்த கூட்டம், 200 ரூ உபிக்களை டில்லிக்கு கூட்டிக்கொண்டுபோக செலவாகுமே! உள்ளூர் ஆட்களை வைத்தே சமாளித்துவிட்டார்கள் போல.



நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாக ஸ்டாலின் ட்வீட் செய்த சோனியா ராகுல் இருவரைச் சந்தித்ததைப்பற்றி எந்த முக்கியத்துவமும் விவாதமும் இல்லையா?

நாம்தான் இவர்களுக்குத் தேவையே இல்லாமல் இத்தனை பில்டப் கொடுத்து வருகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.

Sunday, June 13, 2021

கதை கேளு கதை கேளு! சுவையான அரசியல் கதை கேளு!

இப்போதெல்லாம் நம்மூர் அரசியல்வாதிகள் நன்றாகக் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்! அரசியலில் கதை சொல்வது வேறு, கதைப்பது வேறு என்ற வித்தியாசத்தை  நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே! பாமக நிறுவனத் தலைவர்  Dr ராமதாஸ்  சிலகாலமாகவே கதைகள் சொல்லி அரசியல் நடப்பை சொல்லாமல் சொல்வதென்ற பாணியைக் கடைப்பிடித்து வருவதும் தெரிந்திருக்கும்.


மதுநீதி என்ற தலைப்பிட்டு மருத்துவர் ராமதாசு இன்று  முகநூல் பகிர்வில் ஒரு கதை சொல்லி இருக்கிறார்:::

நவீன மதுநீதிச் சோழன்!
அந்த சோழமன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அந்த பசு அடித்தது.
அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர்.
அந்த பசு கூறியது,” மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள். அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சற்று முன் தேரில் வந்த இளவரசர் நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று என் மனம் திருப்தியடைந்திருக்கும். ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ் வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார். நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று பசு முறையிட்டது.
மந்திரிமார்களும் மன்னனிடம் சென்று பசு நீதி கேட்ட கதையை கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், மந்திரியாரின் காதுகளில் எதையோ கூறி, ‘’ நான் கூறியது போல அந்த பசுவுக்கு நீதி வழங்குங்கள்” என்று கட்டளையிட்டார்.
அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்தனர். பசுக் கன்றை கொன்ற இளவரசனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றிக் கொல்ல மன்னர் ஆணையிட்டிருக்கிறார் என்று நினைத்தனர்.
மந்திரியாரும், சேனைத்தலைவரும் தேரை எடுத்துக் கொண்டு பசுவின் இருப்பிடத்திற்கு விரைந்தனர். அதைப் பார்த்த மற்றவர்கள், ‘’ பார்த்தாயா எங்கள் மன்னர் அடித்த சிக்சரை! பசுவின் இருப்பிடத்தில் வைத்து இளவரசர் மீது தேரை ஏற்றி நீதி வழங்கப்போகிறார் எங்கள் மன்னர்” என்று கதையளந்தனர்.
ஆனால், நேராக பசுவின் இருப்பிடத்திற்கு சென்ற மந்திரியாரும், சேனைத் தலைவரும் அங்கு நடக்க முடியாமல் நலிவடைந்த நிலையில் படுத்துக் கிடந்த இன்னொரு கன்றுக் குட்டி மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டு வெற்றிக் களிப்புடன் அரண்மனைக்கு திருப்பினர்.
எங்கோ ஒரு மூலையிலிருந்து முழக்கம் எழுந்தது.
’’ எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!”


எனக்கென்ன ஒரே வருத்தமென்றால், நாளைய தமிழ் பேசும் ஊராட்சி ஒன்றிய முதல்வராக அறியப்படுகிற தியாகராஜனைப் போயும் போயும் அந்த யூட்யூப் வாயன் ஜெயரஞ்சனிடம் பட்ஜெட் ஆலோசனை கேட்கச் சொல்லி விட்டாரே இந்த ஸ்டேன்லி ராஜன் என்பது மட்டும்தான்!


திமுகவும் முதல்வரும் தம்பட்டம் அடித்துக்கொள்கிற சிக்ஸர்கள் யோக்கியதை இன்னதென்று ஏற்கெனெவே தெரிந்து வைத்திருப்பதால் எனக்கு இந்த சிக்சரும் கூட என்ன லட்சணத்தில் இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லாமல் போய்விட்டது. மதுரை வக்கீலய்யா பிரபு ராஜதுரை வேறு முகநூலில் இந்தக் காலி இடம் கார் பார்க்கிங் ஆக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதற்கு மேல் ஒரு ஆக்கிரமிப்பும் இல்லை மீட்கப்படவும் இல்லை என்ற குட்டை முகநூலில் சிலநாட்களுக்கு முன்னாலேயே உடைத்துவிட்டார்.


பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பது அமைச்சர் பெருமக்களுக்குப் பொருந்தாது போல இருக்கிறதா? கொரோனா முதல் அலையில் (அதிமுக ஆட்சி) நோய்த்தொற்று எண்ணிக்கையை விட இப்போது 2வது அலையில் ( திமுக ஆட்சி) தொற்று பல மடங்கு அதிகம் உயிரிழப்பும் மிக அதிகம் என்பதை மறந்த மறைக்கும் பேச்சு.
''அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தாதது ஏன்? கடந்த ஆட்சியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தபோது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். தற்பொழுது கரோனா குறைந்த காரணத்தால் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என்று செந்தில் பாலாஜி கேட்டதாக நக்கீரன் வெளியிட்டிருக்கிறது


எல்லாவற்றுக்கும் உங்களையே நம்பியிருக்கிற கரூர் MP ஜோதிமணியை இப்படி வெறும் அஞ்சு பேரோடு வீதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை.க் கண்டித்துப் போராட விட்டுவிட்டீர்களே! அது ஏன் அமைச்சரே என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல இருக்கிறது. நல்ல கதைதான்!

இது இந்தப்பக்கங்களில் 700 வது பதிவு
மீண்டும் சந்திப்போம்.

Saturday, June 12, 2021

கொஞ்சம் கொறிக்க! கொஞ்சம் சிரிக்க! செய்திகளின் அரசியல்!

சிங்காரச் சென்னை வெர்ஷன் 2.0 வரப்போகிறது என்பது கொஞ்சம் பழசு! இப்போது சென்னையில் கோழிதிருடக் கூடக் காரில் வந்திறங்குகிறார்கள் என்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். கொரட்டூர் காவல்துறை 10 நாட்டுக் கோழிகளைத் திருடிச்சென்றவர்களைத் தேடுகிறார்கள் என்று விவரிக்கிறது. 


இது வேறுவிதமான சோஷலிசக் கொடும் காமெடி! 


இது  ஒன்றியக் காமெடி! ஓவராயிடுச்சுன்ன உடனேயே சுருதியைக் குறைத்துக்கொண்டது பெரும் காமெடி. 


GST கவுன்சிலின் 44வது கூட்டம் இன்றைக்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. போன கூட்டத்தில் 21 பக்கம் எழுதி வைத்து ரவுசுகாட்டிய DWD இந்தக்கூட்டத்தில் பேச்சு மூச்சே காணோம்!  

டிஸ்கி: தமிழக நிதியமைச்சர் தன் எதிர்ப்பைச் சொன்னதாக, அரசு செய்திக்குறிப்பு ஒன்று சொல்கிறது.  கவுன்சில் கூட்டத்தின் ஒன்றரை மணிநேர வீடியோவில் மட்டுமல்ல கூகிள் செய்தித் தேடலிலும்  அதைக் காணோம்.  


என்ன இது பிரிட்டிஷ் ராணி எலிசபெத்துக்கு வந்த சோதனை? உள்ளூர்ப் பல்கலைக்கழகத்திலேயே படம் வைக்கத்தடையா? 

மீண்டும் சந்திப்போம். 

Monday, June 7, 2021

30 நாட்களில் சாதனை! #பத்தாண்டுப்பசி தீர்ந்ததா?

திமுக ஆட்சியின் 30 நாள் சாதனை என்ன? நிதி அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் சர்ச்சைக்குரியவர்கள் திமுகவினை தெருவில் இழுத்து விடுவார்கள் என்பது 30 நாளிலே தெரிகின்றது. திமுக ஆட்சியின் உச்சபட்ச சாதனை என்னவென்றால் யூடியூபில் பேசிகொண்டிருப்பவனெல்லாம் அரசு பணிக்கு வரமுடியும் எனும் அதிசயத்தை செய்தது. மற்றபடி நீட் ரத்து, நகைகடன் ரத்து, குடியுரிமை ரத்து, காஷ்மீர் சட்ட ரத்து,மதுகடை ரத்து இன்னும் எதை எல்லாம் ரத்து செய்வோம்  என சொன்னார்களோ அந்த கோரிக்கை எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டார்கள், அதுதான் ஆகசிறந்த சாதனை

மணல் குவாரி தொடங்கி +2 தேர்வே இல்லா கல்லூரி அனுமதிவரை அனுமதிக்கப் படுகிறது, இது மிகபெரிய சுரண்டலை, வசூலை அவர்களுக்கு கொடுக்கும். இன்னும் என்னென்ன வகையில் அள்ள முடியுமோ அவ்வளவு வகையிலும் வாரி சுருட்டுவார்கள் இனி 5 வருடம் இதுதான் நடக்கும். ஆடாத ஆட்டம் ஆடி அடங்கிய சசிகலா கும்பல் போல் இனி இன்னொரு கும்பல் ஆட ஆரம்பிக்கும். ஆடட்டும், அவர்களுக்கு குறித்த காலம் முடியும் வரை ஆடட்டும். அதுவரை இதையெல்லாம் பார்த்து கொண்டிருப்பதை தவிர யார் என்ன செய்துவிட முடியும்? ஆனால் காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருகிறது, அந்த கணக்கு நிறைவேறும் பொழுது எல்லாம் மாறும், நிச்சயம் மாறும் என்று முகநூலில் தமிழகத்தில் ஆட்சி மாறிய 30 நாள் சாதனையை மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஸ்டேன்லி ராஜன்.


காவல்துறையினரை பெண் வழக்கறிஞர் மிரட்டுகிறார். ஆட்டோ டிரைவர் மிரட்டுகிறார். இன்னும் யார் யார்  மிரட்டுகிறார்கள் என்று பார்த்தால் வீடியோ லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வருகிறது. இதையும் சாதனை லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமா?


சொல்லாமல் செய்து கொண்டிருக்கும் சாதனைகளைக் கொஞ்சம் பார்க்கலாமா?


திமுக தன் சொந்தக்காசில் பிரியாணி போடவில்லை. ஹிந்துக்கோவில் சொத்திலிருந்துதான் என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


யாருமே வாங்கிப்படிக்காத முரசொலிக்கு ஆண்டு சந்தா கட்ட 12524 ஊராட்சிகளுக்கும் உத்தரவு. வருட சந்தா ரூ.1800 தான் என்றால் அவ்வளவாகப் புரியாதுதான்!

1800X 12524X 5 ஆண்டுகள் = ரூ. 11.27,16000 பதினோரு கோடியே இருபத்தேழு லட்சத்து பதினாராயிரம் ரூபாய் முரசொலிக்கு அரசிடமிருந்து அனாமத்து வருமானம். இன்னும் நூலகங்கள், அதுஇது என்று மேல்வரும்படிக்கு வழி செய்துவிடுவார்கள். ஆனால் இதையெல்லாம் சாதனை லிஸ்டில் அவர்களே சேர்க்கமாட்டார்கள்! 


இதெல்லாம் சாதனை லிஸ்டில் சொல்லாமல் விடுபட்ட சில துளிகள் தான்! இன்னும் அவர்கள் சொல்லிச் செய்தது, சொல்லாமல் செய்தது என்று நிறைய இருக்கிறது. கொஞ்சம்கொஞ்சமாக வரும்.

மீண்டும் சந்திப்போம்.

Sunday, June 6, 2021

ஒரு வெப் சீரீஸ்! ஈழ ஆதரவு வியாபாரிகள் பொங்குவது ஏன்?

கருத்துசுதந்திரம் பற்றி வாய்கிழியப்பேசும் தமிழகப் பிரபலங்கள் பலருடைய முகமூடியை ஒரு வெப் சீரீஸ் கிழித்தெறிந்திருக்கிறது. அமேசான் பிரைமில் நேற்று முன்தினம் வெளியான The Family Man 2  சீரீசைத் தடை செய்யவேண்டும் என்ற கூக்குரல் முதலில் நாம் தமிழர் கட்சி சீமானிடமிருந்து, அடுத்து வேலைவெட்டி இல்லாமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் வைகோ இவர்களிடமிருந்து ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தக் கூக்குரல்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பிரபலங்கள் மற்றும்  அனாமதேயங்களிடமிருந்து கிளம்பின. இதில் பெரிய  வேடிக்கை என்னவென்றால் சீரீசின் ட்ரெயிலரை மட்டுமே பார்த்துவிட்டு இந்த அறிவுக்கொழுந்துகள் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான்.


ஒன்பது பகுதிகளாக ஸ்ட்ரீமிங் வீடியோவாக OTT தளத்தில் அறிவிக்கப்பட்டபடியே ஜூன் 4 அன்று The Family Man 2  வெளியாகிவிட்டது. வெள்ளிக்கிழமை முதல் 4 பகுதிகளையும் நேற்றைக்கு மிச்சம் 5 பகுதிகளையும் பார்த்து முடித்ததில் ஈழத்தமிழரை இழிவுபடுத்தும் இந்த சீரீசை அனுமதிக்கமாட்டோம், மத்திய அரசே உடனே தடை செய் என்றெல்லாம் இங்கே உள்ள கோமாளிகள் சிலர் எதற்காகக் கூவினார்கள் என எனக்கு மட்டுமல்ல எவருக்குமே சுத்தமாகப் புரியவில்லை! இந்த லட்சணத்தில் தமிழ்நாடே The Family Man 2 வை எதிர்த்துக் கொந்தளித்ததாகவும், மத்திய அரசுக்கு வைகோ உள்ளிட்ட சிலர் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் செய்திகள்! செய்திகள் ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உங்கள்பக்கத்தில் உணர்ந்தீர்களா என்ன!!

சைமனும் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களும் இன்னும் சிலரும் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியஸ் விடுதலை புலிகளை கொச்சைபடுத்துவதாக கிளம்பிவிட்டனர். புலிகள் இயக்கம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா கனடா ஏன் ஐரொப்பிய யூனியனில் கூட தடைசெய்யபட்ட இயக்கம் என்பது உண்மை

என்ன சொல்லி தடை செய்தார்கள்?

மிக மோசமான தற்கொலை போராளிகள் என்பது முதல் சொந்த இனமான லட்சுமண் கதிர்காமர் எனும் தமிழரை கொன்ற இயக்கம் என ஏகபட்ட குற்றசாட்டுகள். அதுவும் 2005ல் நார்வே தூதுகுழு புலிகளை சாடிவிட்டு வெளியேறியதும், ஆனானபட்ட அமெரிக்க தூதர் "புலிகள் மோசமான தோல்வி நோக்கி நகர்கின்றார்கள்" என்பதும் பெரும் குற்றசாட்டு.

பிரபாகரன் தனக்கு தானே வைத்து கொண்ட சூனியம் 2002 கிளிநொச்சி மாநாடு, அதில் உலகம் ஒப்புகொண்ட விஷயம் இந்த கோஷ்டி மொத்தமாக ஒழிக்கபட வேண்டியது மற்றபடி ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள் என்பதே! புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிக்கும் தொடர்பு உண்டா என்றால் நிச்சயம் உண்டு என்பதற்கு ஆதாரம் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மேலான துப்பாக்கி சூடு

அப்பொழுது இலங்கை அரசு புலிகள் மேல் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது, அப்பொழுது பாகிஸ்தானிலில் இலங்கை வீரர்களின் பேருந்து தாக்கபட்டபொழுது புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு உலகுக்கே தெரிந்தது.

இது ஆச்சரியமல்ல, ஒரு தீவிரவாத இயக்கம் இன்னொரு இயக்கமில்லாமல் வளரமுடியாது இயங்க முடியாது

அவ்வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு அல்ல, பின்லேடனின் சில தீவிரவாதிகள் உலகமெல்லாம் சுற்ற புலிகள் உதவினர் எனும் வகையில்தான் அமெரிக்கா அவர்களை கட்டம் கட்டியது. சக போராளி குழுக்களை கொன்றது, ராஜிவ் பிரேமதாசாவினை கொன்றது கடைசியிலும் திருந்தாமல் லட்சுமண் கதிர்காமரை கொன்றது உலகெல்லாம் தீவிரவாதிகளுடன் வலம் வந்தது என புலிகள் செய்த அட்டகாசம் ஏராளம்.

அதைத்தான் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியல் சொல்கின்றது, அதில் உண்மையினை தவிர ஏதுமில்லை

இதனால் தமிழருக்கு அவமானம் என கிளம்ப அவசியமில்லை அது முட்டாள்தனம். ஈழதமிழருக்கு கிளம்பிய போராட்ட குழுக்கள் சுமார் 40, அதில் 4 கடைசியாக தேறியது அதில் 3ஐ ஒழித்து ஒரே பிரதிநிதி என தன்னை சொல்லிகொண்டனர் புலிகள். ஆனால் உலகம் அதை ஏற்கவில்லை, எனினும் பேசிபார்க்கலாம் என வந்த மேல்நாட்டு குழுவும் இது திருந்தாத கட்ட பஞ்சாயத்து கோஷ்டி என ஓடிவிட்டது.

ஆக இது இந்திய‌ தமிழருக்கான அவமானம் அல்ல, இந்திய தமிழரின் ஒரே அவமானம் திமுக அதை தவிர ஏதுமில்லை. மாறாக இந்த சீரியல் வந்தால் இலங்கையில் இப்படி ஒரு அடாவடி இருந்தது எனும் உண்மையில் ஒவ்வொரு ஈழ தமிழனும் தலைகுனிய வேண்டும்.ஈழதமிழனின் மானம் காற்றில் பறக்க கூடாது என அங்கிள் சைமன் குதிக்கின்றார், ஆனால் அது என்றோ கிழிந்து உலகம் எல்லாவற்றையும் கண்டு விட்டது என்பது அங்கிளுக்கும் அவரின் அடிபொடிகளுக்கும் புரியவில்லை, பரிதாபம்!  இப்படி முகநூலில் ஸ்டேன்லி ராஜன் சுருக்கமாகச் சொல்லி  பஞ்சாயத்தைக் கலைத்துவிட்டாரே! அதுவும் 15 நாட்களுக்கு முன்பே!  

ராஜீவ் காண்டியைக் கொலைசெய்ததில் விடுதலைப் புலிகள் மீது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மீதுமே இருந்த ஆதரவு, அனுதாபத்தைப் பெரும்பாலான தமிழக மக்கள் துடைத்தெறிந்து விட்டார்கள். வெறுமனே  கூவிக்கொண்டு இருப்பவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரம் செய்கிற ஆசாமிகள் மட்டும்தான் என்பதையும் தமிழக மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.

அது போகட்டும்! The Family Man 2  எப்படியிருக்கிறது?

ஒரு உளவாளியின் கதை என்பதில் குடும்பம் கொஞ்சம், தொழில் ரீதியாக எதிரிகள் கொஞ்சம் என இரண்டையும் கதாநாயகன் எப்படி சமாளிக்கிறார்? இதுதான் கதை முடிச்சு! முதல் சீசனும் சரி, இரண்டாவது சீசனும் சரி கதாநாயகன் ஸ்ரீகாந்த் திவாரி என்கிற NIA வின் ரகசியக் குழு உளவாளி எப்படி தன்னுடைய குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுடன், தொழில்ரீதியாக தேசத்துக்கு ஏற்படும் தீவிரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்கிறார் என்பது மட்டும் தான் மெயின். முதல் சீசனில் வில்லன்  ரசாயன ஆலையில் விஷவாயுவைக் கசிய விட முயல்வதைத் தடுப்பது, இரண்டாவது சீசனில் இந்திய இலங்கை பிரதமர்கள் செய்துகொள்ள இருக்கிற ஒப்பந்தத்தைத் தடுக்க முயற்சிக்கும் தற்கொலைப் போராளி ஒருத்தியை, கதாநாயகன் எப்படி முறியடித்து தேசத்தைக்  காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. அங்கங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சீரீஸ் விறுவிறுப்பாக நகர்வதில் அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. 

6/10

இந்திய இலங்கைப் பிரச்சினை என்றால் ஈழப் போராளி இல்லாமலா? ஈழப்போராளியாக சமந்தா நடித்ததில் அவரையும் தமிழின விரோதியாகச் சித்தரித்து, நம்மூர் கோமாளிகள் காமெடி செய்திருக்கிறார்கள்.  

தமிழ்நாடு என்றாலே கோமாளிகள் அரசியல் முதல் எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்புகிற பிரதேசம் என்றாக்கிவிட்டார்கள். இந்த வெப் சீரீசை மட்டும் விட்டுவைப்பார்களா?  

மீண்டும் சந்திப்போம்.      

Thursday, June 3, 2021

ஜூன் 3 நாள்சிறப்பு #கட்டுமரம் சாதித்ததும் சோதித்ததும்!

திமுகவின் கருணாநிதி தானே தனக்கு வைத்துக் கொண்ட பெயர் கட்டுமரம் என்பது நிறையப்பேருக்கு மறந்துபோய் இருக்கலாம். நினைவுபடுத்துவது நமது கடமை.


வீடியோ வெறும் 47 செகண்ட்தான்! 


காகித ஓடம்  பாடலும் கட்டுமரம் என்ற அடைமொழியும் காலத்தையும் மீறி நிலைத்தது.


மதுரைக்கு வந்த இந்திரா காண்டி மீது கல்வீச்சுநடத்திய  திமுகவின் சாதனையை மிஞ்சிய வாய்ஜாலம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமோ?


பணம் பணம் பணம் என்பதே அவரது உயிர்மூச்சு!  


பாசமிகு குடும்பத்தலைவனாக இருந்ததே வாழ்நாள் சாதனை!


இரண்டாம் , மூன்றாம் தலைமுறை தாண்டி நான்காம் தலைமுறை கூட நெடுநெடுவென வளர்ந்து ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்!


வெற்று வார்த்தைமைலேயே அரசியல் நடத்திய ஜாலம் வேறெந்த அரசியல்வாதியிடமும் காணமுடியாதது. சார்ள்ஸ் டிக்கென்ஸின் ஆலிவர் டிவிஸ்ட் நாவலில் ஒரு ஏமாற்றுக்காரச்சிறுவனை artful dodger என்று வர்ணித்து இருப்பது #ஏய்ப்பதில்கலீஞன் ஆக கருணாநிதிக்கும் பொருந்திப்போனதே!  

சாதனையில் வியந்துபோன சர்க்காரியா கமிஷன் அறிக்கை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

Wednesday, June 2, 2021

கொஞ்சம் கொறிக்க! கொஞ்சம் சிரிக்க! #அரசியல்செய்திகள்

தமிழக நிதியமைச்சர் (பி.டி.ஆர். பழனிவேல்) தியாகராஜன் தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் என்னுடைய தாத்தா முதல்வர், தந்தை அமைச்சர் என்று சொல்லி வரும் நிலையில், தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன் வெறும் 143 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தவர் என்று தகவலைத் துருவி எடுத்துப் போடிருக்கிறது அதிமுகவின் ஐடி விங்க். ‘1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பொப்பிலி அரசர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் கப்பல் பயணம் என்பதால், அவர் மீண்டும் முதல்வர் பணிக்குத் திரும்ப 4 மாதங்கள் ஆகும் என்பதால் இடைக்கால முதல்வராக பி.டி.ராஜனை அமரவைத்துவிட்டுப் போனார். அதாவது இரா.நெடுஞ்செழியன் போல இடைக்கால முதல்வராக மட்டுமே இருந்திருக்கிறார் அவர்’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது மதுரை அதிமுக ஐடி விங். திமுகவின் ஐடி விங் செயலாளருக்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள் அதிமுக ஐடி விங் என்று ஹாட்லீக்ஸ் செய்தியாகப்போட்டுச் சிரித்திருக்கிறது  இந்து தமிழ்திசை! 

டபுள் வாட்ச் டக்ளஸ் பீற்றிக்கொள்வது எல்லாமே இப்படி உடனுக்குடன் பங்ச்சர் செய்யப் படுவதால், இப்போது எல்லாம் ஒருகையில் மட்டுமே வாட்ச் அணிகிறாரோ?  


நண்பர் நெல்லைத்தமிழன் மாதிரியே மாமல்லனும் நிறைய எதிர்பார்க்கிற மாதிரி இருக்கிறது!  தியாக ராஜன், சேகர்பாபு, மா சுப்ரமணியன் போன்ற பக்கவாத்தியங்கள் செய்கிற அலப்பறைகளில், இசுடாலின் எங்கே ஜனங்கள் தன்னுடைய சாயத்தை துவைத்தெடுத்து விடுவார்களோ என்ற பயம் குறைந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்படி சிலர் காப்பான் ஆக இருக்கும்போது அவர்கள் மீது கைவைப்பதற்கு இசுடாலினுக்கு எப்படி மனம் வரும் என்று நினைப்பது?

டபுள் வாட்ச் டக்ளஸ் இன்னமும் ஒன்றியம் ஒன்றிய அரசு என்று அர்த்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிற வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. செங்கோட்டை ஸ்ரீராம் கடந்த  மாத மத்தியிலேயே இந்த அக்கப்போருக்கு ட்வீட்டியிருந்த செய்தி மேலே! மக்களுடன் ஒன்றிய அரசு எது, ஒன்றாமல் வெட்டி அக்கப்போர்களில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிற அரசு எது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!  


மாதத்துக்கு 30 கோடி தடுப்பூசிகளை மோடி அரசு உறுதிப்படுத்தி இருக்கவேண்டுமாம்! அசாதுதீன் ஒவைசிக்கு எல்லாமே அவசரம் தான்! தடுப்பூசி தயாரிப்பதென்பது தலாக் தலாக் தலாக் என்று 3 முறை சொன்னவுடனேயே விவாகரத்தாகி விடுவதைப் போல் அவ்வளவு சுளுவானதா என்ன?  தீபக் திவாரி சரியாகத் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

இயேசு மீட்கிறார் என்ற பெயரில் மதமாற்ற வியாபாரம், ஜெப ஊழியம், மோடி எதிர்ப்பு, அப்புறம் சத்தியம் டிவி எனப்பல தொழில்களையும் நடத்திவரும் மோகன் சி லாசரஸ் இன்று தமிழக முதல்வரைச் சந்தித்து கொரோனா நிதியாக ஒன்றரைக்கோடிக்கான காசோலையை அளித்தாராம்! தூத்துக்குடி எம்பி கனிமொழியும்  உடனிருந்தார் என்பது செய்தி விசேஷம்.  


இந்த வார துக்ளக் அட்டைப்பட நையாண்டியை விட உள்ளே வெளியாகியிருக்கும் கருத்துப்படம் சிறப்பு! 

ஆயிரம் அரசியல் காமெடி இருந்தாலும் சீனாதானா செட்டியார் காமெடி மாதிரி வருமா? இந்தமனிதரை பொருளாதார மேதை அப்படி இப்படியென்று தலையில் தூக்கிவைத்து ஆடும் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களை என்ன செய்யலாம்? யோசித்து வையுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.         

   
  
   

Thursday, May 20, 2021

#அடுத்தவீடு #கேரளா #ஆந்திரா அரசியல்! அப்புறம் கமல் காசர்!

ஒருவழியாக கேரளத்தில் இரண்டாவது முறையாக இடது முன்னணி அரசின் அமைச்சர்கள் இன்றைக்குப் பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் கேரளம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மந்திரிசபை பதவியேற்பு நடந்து விட்டது. 140 இல் 99 இடங்களைப் பிடித்தவர்கள், மந்திரிசபையை முடிவு செய்வதற்கு இத்தனை நாட்கள் ஆனது ஏன் என்ற கேள்வி இருந்தது. மந்திரிசபையில் யார்யார் என்பதை முடிவு செய்வதற்காகவே இத்தனை நாள் ஆகியிருக்கிறது என்பதை விட பழைய முகங்கள் எவரும் வேண்டாம் என்று தீர்மானிப்பதற்கே இத்தனை காலமாகி இருக்கிறது. முந்தைய மந்திரிசபையில் மிகவும் திறமையாகப் பணியாற்றி எல்லோராலும் அபிமானிக்கப் பட்ட K K ஷைலஜாவுக்கு மந்திரிசபையில் இடமில்லை என்பதே பினரயி விஜயன் மீது கேரளத்தில் கடும் அதிருப்தி ஏற்படக் காரணமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

 


எது எப்படியானால் தான் என்ன? தமிழக அரசியலின் கபட வேடதாரிகளுடைய வாழ்த்தும் வரவேற்பும் பினரயி விஜயனுக்கு இருக்கிறதே! அது போதாதா என்ன?  

******* 

ஆந்திர அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தே நீண்டகாலமாகி விட்டதல்லவா? சந்திரபாபு நாயுடு கொஞ்சம் மாநிலத்தைத் தாண்டி அரசியல் செய்ய முயன்று YSR காங்கிரசிடம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிற பரிதாபத்தைக் கடைசியாகப் பேசிய நினைவு. ஆனால் முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்கிற விதம் மிகவும் விபரீதமானதாக இருக்கும் போலத் தெரிகிறதே!அவரை எதிர்த்தோ விமரிசித்தோ எவரும் வாயைத் திறக்கக் கூடாதென்ற ரீதியில் அப்படியான செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப் படுகிறவர்கள் எவராயினும் அவர்கள் மீது Sedition தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்படுவதாகச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.அவருடைய கட்சி MP ஒருவர்மீதே அப்படிக் குற்றம் சாட்டப்பட்டு, போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகார்மீது விசாரணை நடத்திய ஆந்திர உயர்நீதி மன்றம், அவருக்கு ஹைதராபாத் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. கருத்து சுதந்திரம் என்று கம்பு சுற்றிக் கொண்டிருந்த போராளிகள் எவர் கண்ணிலும் இது ஏன் படவே இல்லை என்கிற அனாவசியமான கேள்வியை நான் கேட்கப்போவதே இல்லை! 


இப்படிப்போற்றிப்பாடப்பட்டதெல்லாம் மிகவும்  பழைய கதை!  Telugu media outlet TV5 News has moved the Supreme Court seeking quashing of an First Information Report (FIR) in a sedition case in Andhra Pradesh. Shreya Broadcasting Pvt Ltd, which owns TV5, has contended in its plea that the state government "intends to silence" critics and the media by filing a "vague FIR" and abusing the process of law. "It is humbly submitted that the continuance of the FIR is likely to cause a chilling effect on the media in such crucial times of the pandemic, when truthful and fearless reporting is the need of the hour," said the plea என்கிறது செய்தி. ஆட்சி அதிகாரம் கண்ணை மறைக்கிற தருணங்களில் வீழ்ச்சியும் சேர்ந்தே வரும் ரன்பது வரலாறு சொல்கிற அனுபவம்!

*******


எம்ஜியார் படப்பாடல் வரிகளோடு காட்சி தருகிற கமல் காசர் அது தனக்கே பாடமாகிப் போகும் 
என்பதை ஏனோ மறந்துவிட்டார்!   

கமல் காசர் கட்சியிலிருந்து இன்னொரு முக்கியப்புள்ளி CK குமரவேல் இன்றைக்கு விலகியிருக்கிறார் என்பது சிலகாலம் முன்புவரை இங்கே சென்னை விமானநிலைய மேற்கூரை மீண்டும் மீண்டும் பெயர்ந்து விழுந்த கதை மாதிரியான சுவாரசியமற்ற செய்தியாகிக் கொண்டு வருகிறது என்பது இந்த நாளுடைய விசேஷம். நேற்றைக்கு முருகானந்தம் என்ற புள்ளி விலகினாராம்! விலகியதற்கு குமரவேல் சொன்ன காரணம் விசித்திரமானது. Kumaravel told TNM that Kamal Haasan disappointed them as he made it clear that MNM is a leader based party and not a cadre based party என்கிறது இந்தச்செய்தி அவர் சொல்கிற மாதிரி cadre based party இங்கே எத்தனை இருக்கிறது என்பது தெரியுமா? cadre based party என்பதன் பொருள் புரிந்துகொள்ள முடிகிறதா? சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.    

Friday, May 7, 2021

அரசியல் இன்று! #துரைமுருகன் #கேசரிவாலு #கமல்காசர்

உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான் வெளுத்து வாங்குறேன் இந்தத்திரைப் படப்பாட்டு சிவாஜி கணேசனுக்குப் பொருத்தமாக இருந்ததோ இல்லையோ இன்றைக்கு நீர்வளத்துறை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் துரை முருகனுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்!  


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் ஜெயிப்பதற்குள் நுரை தள்ளத்தள்ள ஓட விட்டுவிட்டார்கள்.
சரி உட்கட்சி துரோகங்கள், தானே ஏற்படுத்திக் கொண்ட ஆப்புகளில் இருந்து தப்பிப் பிழைத்து ஒருவழியாக வென்றாகி விட்டதால் புண்ணை மறைத்து மினிஸ்டர் ஆகலாம் என்றால் அதற்குள் நச்சென்று வெந்தும் வேகாத புண்ணிலே வேலைப் பாய்ச்சிவிட்டார்கள்!
எதிர்க்கட்சியில் இருந்தபோதும் கூட கெத்தாகச் சுற்றி வரக்கூடிய துரைமுருகன் தளர்ந்து காணப்படுகிறார்.
அவருக்கு பொதுப் பணித்துறை அல்லது நிதித்துறை பொறுப்பு கொடுக்கப்படும் என்றிருக்கையில் புதிதாக ஒன்றை உருவாக்கி accomodate செய்யப் பட்டிருக்கிறார்.
மூன்று பேர் அமரும் சீட்டில் நான்காவது ஆளுக்கு அரைசீட்டு கொடுப்பது போல்!
நீண்ட கால அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினை - ஒரே தொகுதியில் பல தசாப்தங்களாக சுற்றி வந்தால் கட்சிக்கரர்களே காலி செய்வார்கள். "அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்போ காலியாகும்" என்பது தானே அரசியலில் அடுத்த கட்ட நிர்வாகிகளுக்கு நம்பிக்கை தரும் நினைப்பு. அதுவும் திமுகவில் சும்மாவா?
மகனை உட்கட்சி ஆட்கள் மாட்டிவிட்ட போதே உஷாராகியிருக்க வேண்டாமா?
கருணாநிதி, ஸ்டாலின் இருவரும் எப்போதும் தொகுதிகளை மாற்றிக் கொண்டே இருந்தார்கள். அங்கிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
வட்டாச்சியராவது கொட்டாச்சியராவது... ?
எவ்வளவு எகத்தாளம், ஏடாசி, கேலி, கிண்டல், எடக்கு, மடக்கு, லந்து, நையாண்டி....???
தெக்க அடிக்கிற காத்து திரும்பி அடிக்காமலா போயிரும்?


2013 இல் டில்லியைப் பீடித்த பெருந்தொற்று அரவிந்த் கேசரிவாலு, விளம்பரப்பிரியர், யாரிடமாவது செருப்படி வாங்கினால் கூட அதையும் ஒரு சாதனை பப்ளிசிடியாக எடுத்துக் கொள்கிற கோமாளி என்று தான் தோன்றும். ஆனால் வெளியே கோமாளி ஆனால் உண்மையில் வில்லத்தனம் நிறைந்த அரசியல்வாதி. இந்த கொரோனா காலத்திலும் கூடக் கொடுமையான காமெடி செய்துகொண்டிருப்பவர்.




கேஜ்ரி உருட்டல்கள்…
“கோவிட் நிலவரம் சரிவர கையாளப்படுகிறதா?” என்றறிய, பல மாநில உயர் நீதிமன்றங்கள், தானே முன்வந்து விசாரிக்க தொடங்கின. டில்லியில் கோவிட் நிலவரம் மிக மோசமாக இருந்ததால் அது பற்றி டில்லி கேஜ்ரி அரசிடம் டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்ப, “எங்களுக்கு உதவ மறுக்கிறது மத்திய அரசு” என்றது மத்திய அரசு மீது பழி போட்டது கேஜ்ரி அரசு.
மத்திய அரசு ஆஜராகி, “ஏற்கனவே இராணுவம் டில்லியில் கோவிட் மருத்துவமனைகள் அமைத்து மக்களுக்கு சேவை செய்கிறது. DRDOவும் களத்தில் இறங்கியுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உதவிவருகிறது” என்று பதிலளித்தது.
“அதெல்லாம் சரிதான், எங்களுக்கு ஆக்சிஜன் தர மறுக்கிறது மத்திய அரசு” என அடுத்த புகார். “மத்திய அரசு சென்ற வருடமே அறிவுறுத்தியும், டில்லி அரசு ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய தேவையான ஆலைகளை ஏன் அமைக்கவில்லை” என்பதை கண்டிக்காமல், “மற்ற மாநிலங்கள் தங்கள் தேவைகளை தாமே பூர்த்தி செய்யும் போது நீங்கள் ஏன் உங்களுக்கு தேவையான ஆக்சிஜனை பிற வழிகளில் பெற முயற்சிக்கவில்லை” என்று டில்லி அரசை கடிந்து கொள்ளாமல்… “டில்லிக்கு தேவையான ஆக்ஸிஜனை மத்திய அரசு தர வேண்டும்” என்று உத்தரவிட்டது டில்லி உயர்நீதிமன்றம்.
மத்திய அரசும், “மக்கள் உயிர் காக்க டில்லி அரசின் வேலையையும் நாங்களே செய்வோம்” என்று உற்சாகத்துடன் செய்தது. என்றாலும் டில்லி உயர்நீதிமன்றத்தில் கேஜ்ரி அரசு மீண்டும், “மத்திய அரசு உதவவில்லை” என்றது. நீதிமன்றம் மத்திய அரசை கடிந்து கொண்டது. மத்திய அரசோ, “சொன்னபடி ஆக்சிஜனை கொடுத்து விட்டோம்” என்றது.
“என்ன இது?” என்று கேட்ட நீதிமன்றத்திடம் கேஜ்ரி அரசு, “ஆக்சிஜன் தந்து என்ன பயன்? சிலிண்டர் தரவில்லை மத்திய அரசு” என்றது. “சிலிண்டர் கொடுங்கள்” என்ற நீதிமன்றத்திடம், “யுவர் ஆனர், பிற மாநிலங்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோமோ அதையே டில்லிக்கும் செய்கிறோம். மற்ற மாநிலங்கள் சிலிண்டர்களை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஏன் எதுவும் செய்யாமல் பிறரை குறை கூறுகிறார்கள்?” என்றது மத்திய அரசு.
“என்ன இது?” என்று கேட்ட நீதிமன்றத்திடம் கேஜ்ரி அரசு, “சிலிண்டர் கிடைக்கவில்லை. மத்திய அரசு அதை ஏற்பாடு செய்து தர உத்தரவிடவும்” என்றது. “மத்திய அரசே சிலிண்டரையும் கொடு” என்ற நீதிமன்றத்திடம் மத்திய அரசு, “தயவு செய்து இப்படி உத்தரவிடாதீர்கள். சுகாதாரம் மாநில அரசின் கடமை. அதில் அரசியலமைப்பை மீறி நாங்கள் தலையிட்டால் ஒவ்வொரு மாநிலமும் இம்மாதிரி கேஜ்ரி அரசு போல ஆரம்பித்து விடுவார்கள் - ‘மத்திய அரசே செய்யட்டும். நாம் ஒன்றும் செய்யாமல் இருப்போம்’ என்று. தங்கள் பொறுப்பை மாநிலங்கள் தட்டிக்கழித்தால் மக்கள் அவதிப்படுவார்கள். மத்திய அரசு ஏற்று நடத்த தயாராக இருந்தாலும், தேவையான ஆள்பலம் மாநில அரசுகளிடமே உள்ளது - சுகாதார துறை, அரசு மருத்துவர்கள் - ஊழியர்கள்… சிலிண்டர்களை கேஜ்ரி அரசு ஏற்பாடு செய்வது முறை” என முறையிட,“ஏற்க முடியாது” என்றது நீதிமன்றம்.
வேறு வழியில்லாமல் சிலிண்டர்களையும் ஏற்பாடு செய்தது. இது அரசியலமைப்பின் படி விதி மீறல். அடுத்த நாள் நீதிமன்றத்தில் கேஜ்ரி அரசு, “யுவர் ஆனர்… இந்த அநியாயத்தை பாருங்கள். ஆக்ஸிஜன் தரவில்லை” என்று புகாரளிக்க, “கேட்டதை கொடுத்து விட்டோம். ஆனால் மற்ற மாநிலங்களை விட ஏன் டில்லி அரசு அதிக ஆக்சிஜன் கேட்கிறது என்று புரியவில்லை (மற்ற மாநிலங்களில் எடுத்துக்காட்டாக 100 நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், டில்லியில் அதே 100 பேருக்கு நான்கு மடங்கு ஆக்சிஜன் தேவைப்படுவதேன்?” என்று மத்திய அரசு சொல்ல, “ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மீது கண்டெம்ப்ட் நடவடிக்கை. நேரில் ஆஜராக வேண்டும்” எனறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
தன் ஊழியர்களை கண்டெம்ப்டிலிருந்து காக்க உச்சநீதிமன்றம் சென்றது மத்திய அரசு. “கண்டெம்ப்ட் தேவையில்லை” என்று அவர்களை விடுவித்தது உ.நீ. என்றாலும், அங்கேயும் ஆக்சிஜன் டிராமா ஆடியது கேஜ்ரி அரசு. அதோடு, “போதுமான படுக்கைகள் இல்லை” என சொல்ல, “ஆயிரம் மொஹிலா கிளினிக்குகள் கட்டியிருப்பதாக கேஜ்ரி அரசு சொல்கிறது. அவற்றை உபயோகிக்கலாமே” என மத்திய அரசு கூற, “அவை அதற்கு பிரயோசனப் படாது. லேப் வேண்டுமானால் வைக்கலாம்” என்று கேஜ்ரி அரசு சொன்னதும் கடுப்பன உ.நீ, “பிறகு எதற்கு அதற்கு அவ்வளவு செலவழித்தீர்கள்?” என்று கேட்டதும் வாய் மூடி மௌனம்.
மத்திய அரசு அதோடு, “டில்லி அரசுக்கு உதவும் வகையில் ஒரு ஆடிட் கமிட்டி அமைக்க பெயர்களை மத்திய அரசு அமைக்க பரிந்துரைக்கிறது.” என்று கூற, உ.நீ, “அந்த கமிட்டி என்ன செய்யும்?” என்று கேட்டது. “டில்லி அரசில் ஆக்ஸிஜன் செலவையும் மற்ற மாநிலங்கள் ஆக்ஸிஜன் செலவையும் ஒப்பிட்டு தகுந்த பரிந்துரைகள் செய்யும்.. எங்கேயோ லீக் ஆகிறது ஆக்ஸிஜன். அதை அது கண்டுபிடிக்கும்” என்று மத்திய அரசு கூறியது.
அதுவரை , “700 டன் போதாது. 900 டன் வேண்டும். மத்திய அரசால் தான் டில்லியில் மக்கள் சாகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்த கேஜ்ரி அரசு, மத்திய அரசு ‘லீக்கேஜை’ கண்டு பிடிக்க கமிட்டி கொண்டுவர போகிறது என்றதும், “கமிட்டி தேவையில்லை யுவர் ஆனர். மத்திய அரசு தரும் ஆக்ஸிஜன் போதுமானது” என்று பல்டி அடித்தது!
சில நிமிடங்களில் கேஜ்ரிவால் டிவியில் தோன்றி, “இது நாள் வரை டில்லியில் மரணங்களுக்கு காரணமான மத்திய அரசு இப்போது தேவையான ஆக்ஸிஜனை தருகிறது” என்று மத்திய அரசு மீது பழி போட்டு, ஆக்ஸிஜன் போதும் என்று அறிக்கை விட்டார்! இதற்கு முன் ஒரு முறை விசாரணையின் போது, “எங்களுக்கு தேவையான ரெம்டெசிவிரை மத்திய அரசு தரவில்லை. அதனால் மக்கள் சாகிறார்கள்” என நீதிமன்றத்தில் கேஜ்ரி அரசு சொன்ன போது நீதிமன்றம், “மத்திய அரசு பதிவேட்டில் உங்களுக்கு 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிர் தந்துள்ளதாக உள்ளது. நீங்களோ வெறும் 2,500 தான் தந்தது என்கிறீர்கள். தவறு எங்கே?” என்றதும் நழுவியது கேஜ்ரி அரசு!
ஒரு ரெம்டெசிவிர் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கருப்பு சந்தையில் விலைபோகிறது. 90 ஆயிரத்தை 30 ஆயிரம் ரூபாயால் பெருக்கி, எவ்வளவு அடித்திருப்பார்கள் கேஜ்ரி அரசு என்று கணக்கிட்டுக் கொள்ளவும். (மகாராஷ்டிர , ராஜஸ்தான் அரசுகளும் இதே கதை தான்).
“டில்லியில் வேண்டுமென்றே பலரும் சாகடிக்கப் பட்டார்கள். சிதைகள் எரியூட்டப்படுவதை வேண்டுமென்றே படமெடுத்து வெளிநாடுகளில் பரப்பினர். பர்க்கா, ரானா அயூப் போன்ற இந்து விரோதிகளை கொண்டு வெளிநாட்டு பத்திரிகைகளில் மோடி அரசை அவதூறு செய்து கட்டுரைகள். ‘உலகுக்கே மருந்து கொடுக்கும் இந்தியா. உலக நலனில் அக்கறை கொண்ட இந்தியா’ என மோடி அரசு சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது. ‘ப்ரௌன் தோல் இந்தியனை நம்பாதே. வெள்ளைத்தோல் அமெரிக்க ஐரோப்பியனை நம்பு’ என இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரப்புரை செய்து இந்தியாவுக்கும் மோடி ஜிக்கும் அவப்பெயர் தேடித்தருவது. மோடி அரசை பலவீனப்படுத்துவது எல்லாம் புதிய டூல்கிட் திட்டம்” என்கிறது கான்ஸ்பிரசி தியரி.



இது கேசரிவாலுவின் நண்பர் கமல் காசர் டராஜி காமெடி.

மீண்டும் சந்திப்போம்.

Monday, February 8, 2021

#2021தேர்தல்களம் ராஜ்யசபாவில் பிரதமர் பதிலடி! #திராவிடஇயக்கப்பேச்சாளர்

இன்று ராஜ்யசபாவில் பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களுக்கெதிராக கூக்குரலிடும் எதிர்க்கட்சி வரிசைக்கு 70 நிமிடங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. பிரதமரின் உரை ஹிந்தியில் இருப்பதால் முழுப்பேச்சையும் புரிந்து கொள்வதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. ராஜ்ய சபா டிவியோ அல்லது அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையோ ஆங்கிலத்தில் சப்டைட்டில் மாதிரி கீழே கொடுக்க முன்வந்தால் ஹிந்தி தெரியாத குறை நீங்கும் 


இந்த 10 நிமிட வீடியோவில் பிரதமர் முந்தைய நாட்களில் சரத் பவார், மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பேசியதை எடுத்துச் சொல்கிறார். அன்று மன்மோகன் சிங்  சொன்னதைத்தானே  செய்திருக்கிறோம் என்று கேட்டதில் காங்கிரஸ் NCP, TMC போன்ற உதவாக்கரை கட்சிகளுக்குஎ சரியான பதில், அவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, நாட்டு மக்களுக்கு நன்றாகப் புரிகிறமாதிரி இருக்கிறது. (ஆங்கில சப்டைட்டில்கள் உபயத்தில்!)


பஞ்சாப் மண்டி வாலாக்களுக்கு மட்டுமே கசப்பாக இருக்கிற வேளாண் சட்டங்களை என்னமோ மொத்த  விவசாயிகளுக்கும் எதிரானதாகச் சொல்லி, வேறு யார் யார் அஜெண்டாக்களுக்காகவோ போராடுகிற டிகாயத்துக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்?  



சன்டிவியில் கேள்விக்களம் நிகழ்ச்சியை குணசேகரன் நடத்திக் கொண்டிருக்கிறார். சசிகலா வருகையை வைத்து  திமுகவின் அஜெண்டா இது என்பது ஒருபக்கம். மதிமுகவிலிருந்து அதிமுகவுக்குத் தாவி அங்கிருந்தும் விலகி அமமுக பேச்சாளர் போலவே செயல் படுகிறவருக்கு சன்டிவி திராவிட இயக்கப் பேச்சாளர் என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்களே! அந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதாம்? #குழப்பம் 

மீண்டும் சந்திப்போம்.       

Saturday, February 6, 2021

#நாசா நாராயணசாமி :::என் சோகக்கதையைக்கேளு #சோனியா தாய்க்குலமே!

மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களின் ராஜாங்க அமைச்சராக இருந்த, நாசா என்றே அந்தநாட்களில் அழைக்கப்பட்ட வி நாராயணசாமி அமர்த்தலாகப் பேசி வலம்வந்த பழைய நாட்களை நினைத்துப் பார்க்கும் போது, அதேநபர் புதுச்சேரி CM ஆகப் பேசும் தொனி மிகவும் பரிதாபமாக இருக்கிறதே, அந்தத் தமாஷாவை நண்பர்கள் யாராவது கவனிக்கிறீர்களா? 


ஜெகத்ரட்சகனை வைத்து திமுக நடத்திய நாடகத்தில் கதாநாயகனாக களத்தில் இறங்கிய ஒரே சீனோடு அவர் காமெடிப்பீசாகிப் போனது ஓருபக்கம்! அந்த ஒரே சீனில் நொந்து நூடுல்சாகிப்போனவர் நாசா என்பது அந்தக் காமெடியின் இன்னொருபக்கம். அசோகவர்த்தினியுடன் நாசா உரையாடும் இந்த 22 நிமிட கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி புதுச்சேரி தமாஷாவை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. வெறும் விளையாட்டுப்பிள்ளையாகவே இருக்கும் ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு இரண்டுமுறை அரசியல் விஜயம் செய்து ஷோ காட்டியது கூட நாசா சோனியாவிடம் அழுதுபுலம்பியதால் தான் என்கிற மாதிரி செய்திகளும் வந்தனவே! திமுகவுக்குத் தாங்கள் யார் என்பதை ஒரு காட்டுகாட்ட வேண்டும் என்பதற்காகவே முதலில் ஜல்லிக்கட்டு, அதன்பின் மூன்று நாள் விஜயம் செய்தார் ராகுல் காண்டி என்பது ஊரறிந்த விஷயம். பதிலுக்கு திமுக என்ன காட்டப் போகிறது என்பது இனிவரும் நாட்களில் தெரியலாம்.

இந்த லட்சணத்தில் `கமல்ஹாசன் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்!' - என சிலிர்த்திருக்கிறார்  பீட்டர் அல்போன்ஸ்! உண்மையாகக்கூட இருக்கலாம்! அந்த அளவுக்கு சோனியா காங்கிரசைப்போலவே கமல் காசரும் படு கலப்படம், பெரும் குழப்பம்! சிலகாலமாக பீட்டர் அல்போன்சின் பெயர் செய்திகளில் காணாமல் போயிருந்தது.இப்போது பீட்டர் அல்போன்ஸ் மீது, கட்சி தலைமைக்கு புகார் கொடுத்துள்ளார் கோபண்ணா. இதையடுத்து, பீட்டரும், கோபண்ணா மீது புகார் அளித்துள்ளார். ராகுல், சோனியா என, இருவருக்குமே இந்த புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.'தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், இப்படி புகார்கள் வருகிறதே' என, ராகுல் வெறுப்படைந்து உள்ளார். சோனியாவுக்கும் இது பிடிக்கவில்லை. 'சண்டையை நிறுத்திவிட்டு தேர்தல் வேலைகளைப் பாருங்கள்' என்று ராகுல்.சொன்னதாக தினமலர் செய்தி. 

  


 இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமியுடன் பாமக ராமதாஸ் சந்திப்பதாக இருந்தது. இந்தச் சந்திப்பின்போது தொகுதி பங்கீடு, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த விஷயங்கள் பேசப்படும் எனத் தகவல் வெளியானது. ஆனால் திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.இதுகுறித்து பாமக தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விவசாயக்கடன்கள் ரத்து என்ற அறிவிப்பொன்றே போதுமே! பாமகவைக் கழற்றிவிட அதிமுகவுக்கு இதை விட வேறு நல்லதருணம் இருக்கமுடியாது! ஒரு உதிரிக் கட்சியாவது பலவீனப்பட்டு ஒழியட்டுமே!  


இன்னொரு குழப்பமும் ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது போல. இப்படியாக தமிழக அரசியல் நிலவரம் இன்று. 

மீண்டும் சந்திப்போம்.   

Tuesday, February 2, 2021

#2021தேர்தல்களம் பாஜகவின் காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணமா?

தாத்தா கருணாநிதி பிரசார நாடகங்களில் நடித்தார்! மகன் இசுடாலின் குறிஞ்சிமலர் டிவி சீரியலில் நடித்தார். பேரன் உதயநிதி திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவர்களுக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும் வராதென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! ஆனால் அசல் அக்மார்க் அரசியல்வாதிகளாக இவர்களுடைய நடிப்பு மகான் கவுண்டமணி சொல்கிற மாதிரி உலகமகா நடிப்புடா சாமீ என்பதை அறிந்திருக்கிறீர்களா?


முரசொலி தளத்துக்குப் போகாமலேயே என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை இங்கே படிக்கலாம். 

தேமுதிக தொண்டன் பிரேமலதாவுக்குக் கடிதம் ஒன்று எழுதுகிற மாதிரி நேற்றைய முரசொலியில் சிலந்தி என்கிற புனைபெயரில் ஒரு மித்ர பேதம் செய்கிற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஆழுததாம்! அந்தமாதிரி நீலிக்கண்ணீர் வடிப்பது முரசொலியில் அந்த நாட்களில் கருணாநிதியின் ஸ்பெஷாலிட்டி! இப்போது இசுடாலின் துண்டுச்சீட்டைப் பார்த்து உளறுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் யாரோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை முரசொலியில் போட்டு நிரப்பவேண்டியிருக்கிறதென்ற பரிதாபம் ஒருபக்கம் இருந்தாலும், திமுகவின் அரசியல் நாடகத்தனமானது,, நயவஞ்சகங்கள் நிறைந்தது! இதைத் தமிழ்நாட்டு மகாஜனங்கள் என்றுதெரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழகத்தைப் பிடித்த பெருவியாதிக்கு விமோசனம்! 

முழுச்செய்தியும் இங்கே   ஆதாரமில்லாமல் உதயநிதி ஏன் இப்படிப்பேச வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்தே இப்படி ஒரு அந்தர்பல்டி. திமுகவினர் எந்தக்காலத்தில் உண்மையை, ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்கள்? கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்குக் கூட திராவிடங்கள் செய்வதெல்லாம் பொய்ச்செய்தியைத் தெரிந்தே பரப்புவதுதான் என்பது புரியுமே! நான் அதிமுக ஆதரவாளன் அல்ல, இரண்டு கழகங்களுமே தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடுகள் தான் என்பதை உறுதியாக நம்புகிறவன். 

அதிமுக கூட்டணியில் சரத்குமார், லொடுக்குப்பாண்டி கருணாஸ் இருவரும்  2+ சீட்டுகளைக் கேட்கிறார்கள், AC சண்முகம் 8 சீட் கேட்கிறார், பாஜக, பாமக இரண்டும் சமமான சீட்டுக்களை கேட்கின்றன தேமுதிக பிரேமலதா 41 சீட் கேட்கிறார் இப்படி அதிமுக கூட்டணியில் விரிசல் என்ற செய்தியைப் பரப்பி, திமுக ஆதரவு ஊடகங்கள் திமுக கூட்டணியின் நிலை என்ன என்பதை சாமர்த்தியமாக மறைத்தாலும், இந்தவார முடிவுக்குள் இரண்டு கூட்டணிகளிலுமே என்ன நிலைமை என்பது ஏறத்தாழத் தெரிந்துவிடும். நாளை பாமக அதிமுக இடையிலான பேச்சுவார்த்தை என்னவாகும் என்பதிலிருந்தே அணிமாற்றம் இருக்குமா இருக்காதா என்பதும் ஒருவாறாகத் தெளிந்துவிடும்!  அங்கே திமுக, காங்கிரசைத் திருப்திப் படுத்தத் தவறினால் பெயரளவிலான மூன்றாவது அணி ஒன்று உருவாகலாம் என்ற பூச்சாண்டி நிஜமாகக்  கூட ஆகிவிடலாம்! 


திமுக என்ன லேசுப்பட்டவர்களா? பாஜகவின்  காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணம், மடிப் பிச்சை இப்படி சென்டிமென்டாக  எதையாவது செய்து ஓட்டுக்கேட்கத் தெரியாதா என்ன? !!

ஹிந்து ஓட்டுவங்கி என்று இன்னமும் உருவாகவே இல்லை என்கிற போதே இப்படியென்றால் ......?  

மீண்டும் சந்திப்போம்.              

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)