தாத்தா கருணாநிதி பிரசார நாடகங்களில் நடித்தார்! மகன் இசுடாலின் குறிஞ்சிமலர் டிவி சீரியலில் நடித்தார். பேரன் உதயநிதி திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவர்களுக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும் வராதென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! ஆனால் அசல் அக்மார்க் அரசியல்வாதிகளாக இவர்களுடைய நடிப்பு மகான் கவுண்டமணி சொல்கிற மாதிரி உலகமகா நடிப்புடா சாமீ என்பதை அறிந்திருக்கிறீர்களா?
முரசொலி தளத்துக்குப் போகாமலேயே என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை இங்கே படிக்கலாம்.
தேமுதிக தொண்டன் பிரேமலதாவுக்குக் கடிதம் ஒன்று எழுதுகிற மாதிரி நேற்றைய முரசொலியில் சிலந்தி என்கிற புனைபெயரில் ஒரு மித்ர பேதம் செய்கிற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஆழுததாம்! அந்தமாதிரி நீலிக்கண்ணீர் வடிப்பது முரசொலியில் அந்த நாட்களில் கருணாநிதியின் ஸ்பெஷாலிட்டி! இப்போது இசுடாலின் துண்டுச்சீட்டைப் பார்த்து உளறுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் யாரோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை முரசொலியில் போட்டு நிரப்பவேண்டியிருக்கிறதென்ற பரிதாபம் ஒருபக்கம் இருந்தாலும், திமுகவின் அரசியல் நாடகத்தனமானது,, நயவஞ்சகங்கள் நிறைந்தது! இதைத் தமிழ்நாட்டு மகாஜனங்கள் என்றுதெரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழகத்தைப் பிடித்த பெருவியாதிக்கு விமோசனம்!
முழுச்செய்தியும் இங்கே ஆதாரமில்லாமல் உதயநிதி ஏன் இப்படிப்பேச வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்தே இப்படி ஒரு அந்தர்பல்டி. திமுகவினர் எந்தக்காலத்தில் உண்மையை, ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்கள்? கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்குக் கூட திராவிடங்கள் செய்வதெல்லாம் பொய்ச்செய்தியைத் தெரிந்தே பரப்புவதுதான் என்பது புரியுமே! நான் அதிமுக ஆதரவாளன் அல்ல, இரண்டு கழகங்களுமே தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடுகள் தான் என்பதை உறுதியாக நம்புகிறவன்.திமுக என்ன லேசுப்பட்டவர்களா? பாஜகவின் காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணம், மடிப் பிச்சை இப்படி சென்டிமென்டாக எதையாவது செய்து ஓட்டுக்கேட்கத் தெரியாதா என்ன? !!
அங்கப்ரதட்சணம் ... அதுபோக,
ReplyDeleteஅலகு, அக்கினிச் சட்டி எல்லாம் இருக்கின்றனவே!...
ஓட்டுப்பிச்சை எடுப்பதென்று வந்துவிட்டால் இப்படி வரிசையாகச் செய்துதானே ஆகவேண்டும் துரை செல்வராஜூ சார் !
Deleteமண்டையை உடைத்துக் கொண்டு அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள். என்ன ஆகும் என்று தெரிய இன்னும் சில மாதங்களே!
ReplyDeleteநம்முடைய மண்டையை உடைக்காமல் இப்படி அவர்களே மண்டையைப் பிய்த்துக் கொள்ளட்டும் ஸ்ரீராம்! ஆனாக்க அந்தக்கழகம் ஆகாட்டி இந்தக்கழகம் என்று 2021 ரிசல்ட்டும் கூட ஏற்கெனெவே தெரிந்ததுதானே!
Delete