மாற்றுக்கருத்தையும் தெரிந்து கொள்வதும் அதை இங்கே பகிர்வதும் எனக்கும் இங்கே வரும் நண்பர்களுக்கும் புதிது அல்ல ஒரு முனிசிபாலிடி அளவே இருக்கும் பாண்டிச்சேரி அரசியலுக்கு இத்தனை முக்கியத்துவமா என்றால், ஆமாம் என்பதே பதிலாக இருக்கும்! காரணம் ஊடகங்கள் தேர்தல் பரபரப்புச் செய்திகள் வேறெதுவும் இல்லாமல் இந்த விஷயத்துக்குக் கொடுத்த ஓவர் தம்பட்டம் தான்! சேகர் குப்தா, நான் மதிக்கும் ஒரு அனுபவமுள்ள ஊடகக் காரர், இந்த விஷயத்திலும் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க ஆவலோடு இருந்தேன்.
இந்த 20 நிமிட வீடியோவில் சேகர் குப்தா கடந்த ஏழு வருடங்களில் பிஜேபி ஒரு தெளிவான அரசியல் நோக்கத்துடன் கவிழ்த்திருக்கிற /கைப்பற்றியிருக்கிற 9வது ஆட்சி என்று சொல்லிவிட்டு, அதே மூச்சில் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றும் சொல்கிறார். மாற்றுப் பார்வை என்ற வகையில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.நியமன உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை உண்டு என்று இதே பாண்டிச்சேரி காங்கிரசார் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டதை, சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். வேறுவழியே இல்லாமல் அவையை விட்டு வெளியே(றிய) ஓடிய நாராயணசாமி கேலிப்பொருளானார் என்பதை சேகர் குப்தா சொல்லவில்லை. ஆனால் வேறு சில பயனுள்ள தகவல்களை சொன்னதென்னவோ நிஜம் ஆனால் தமிழக ஊடகங்கள் எப்படி இந்தவிஷயத்தைப் பார்க்கின்றன? ஆயுத எழுத்து::தந்திடிவி வேடிக்கை பார்த்த திமுக இதெல்லாம் ஒரு சாம்பிள்தான்!
தினமலருக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி! மொய்லி வந்தா மட்டும் கருணாநிதி அன்றைக்கு 63 சீட் அள்ளிக் கொடுத்தது போல இன்றைக்கும் கிடைத்துவிடுமா என்ன?
மீண்டும் சந்திப்போம்
ராகுல்காந்திக்கே இப்போ பெப்பேதான். அதனால் யார் வந்தும் சீட் நெகோஷியேஷன் நடக்காது, அசிங்கப்பட மாட்டாங்க. கொடுத்ததை வாங்கிக்கொண்டு போய்க்கிட்டே இருப்பாங்க. தமிழக காங்கிரஸார், காங்கிரசை விற்றுத்தானே கல்லாக்கட்டறாங்க.
ReplyDeleteபாண்டிச்சேரி பாஜகவுக்கு back fire ஆகும்னு தோணுது. ரங்கசாமி, நமசிவாயம் ஒத்துப்போக மாட்டாங்க.
//பாண்டிச்சேரி பாஜகவுக்கு back fire ஆகும்// சேகர் குப்தா உட்பட இப்படித்தான் நிறையப்பேர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால் அப்படி எதிராகத்திரும்புமா?
Deleteபொதுத்தேர்தலை சந்தித்து நமசிவாயம் சாதித்துக்காட்டட்டும் என்ற முடிவைத்தான் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது அடுத்து ஆட்சியமைக்க இதுவரை எவரும் உரிமை கோரவில்லை, துணைநிலை ஆளுநரும் அழைக்கவில்லை குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தற்போதைய ஸ்ட்யதி செய்தி.
பிஜேபியைப் பற்றிய மதிப்பீடு குறைவாகவே இருப்பது, உங்களுக்குச் சரியாகத் தெரியலாம்! ஆனால் காங்கிரஸ்காரர்கள் மாதிரி சரியான அரசியல் மூவ் எடுக்கத்தெரியாத கிறுக்கு மாய்க்கான்கள் அல்ல என்பதைப்போகப்போகப் புரிந்து கொள்வீர்கள்