தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறும் எனத் தேர்தல் ஆணைய அறிவிப்பும் வந்தாயிற்று. தமிழகத்தில் கூட்டணிகள் அப்படியே தொடருமா, அவர்கள் கேட்கிற சீட்டுகள் கிடைக்குமா என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிற நிலையில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டை அறிவித்து, அதிமுக கூட்டணியில் பாமகவின் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது சீட்டு எண்ணிக்கை ஏறத்தாழ இருந்தாலும் பெட்டிகள் ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருக்காது அந்தவகையில் அதிமுக பல படி முன்னால்!
திமுக கூட்டணியில் சற்றே பெரிய உதிரியான சோனியா காங்கிரசுக்கு எத்தனை சீட்டு என்பதில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லையாம்! ஜெயித்து விடுவோம் என்கிற மிதப்பில் 180+ என்ற கனவோடு திமுக இருப்பது, இதர உதிரிக்கட்சிகளுக்கு இன்னும் சிக்கலாக இருக்கலாம்! காங்கிரசுக்காவது இரட்டை இலக்க சீட்டுகள்! மற்றவைகளுக்கு ஒற்றை இலக்கம் என்பதிலும் மையமாக 4 அல்லது 5 தாண்டாது என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டு நிலவரம்தான் இப்படியென்றால் நேற்று வரை காங்கிரஸ் தலைமையில் ஜூனியர் பார்ட்னராக திமுக என்றிருந்த புதுச்சேரியில் நீ பாதி நான் பாதி என்கிற நிலையை திமுக எடுக்கலாம் என்கிற வதந்தி மிக வலுவாக வலம் வருகிறது. அங்கே புதுச்சேரி அரசு கவிழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் கேரளா டூரில் இருந்த ராகுல் காண்டி மீனவர்களுடன் மீன் பிடித்தார், கடலில் குதித்தார் என்ற நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன.என்னதான் பக்கவாகப் பிளான் செய்து நாடகத்தை நடத்தியிருந்தாலும் வயநாடு எம்பிக்கு இது சிக்கலான சோதனை தான்! UDF காங்கிரஸ் கூட்டணிக்கு எத்தனை சீட் கெலித்துத் தரப்போகிறார் என்பதைவைத்துத் தான் மல்லுதேசமும் காங்கிரஸ்காரர்களும் ராகுல் காண்டியை எடைபோடுவார்கள்! இங்கும் தோற்றால் ராகுல் போகிற இடமெல்லாம் காங்கிரஸ் தோற்கிறது என்கிற கிண்டல் இன்னுமொருதரம் உறுதியாகும்,
அவ்வளவுதானே! அவரும் ஜாலியாக வெளிநாடுகளுக்கு ட்ரிப் போய்விடுவார்!
புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இப்போதே கதற ஆரம்பித்து விட்டார்கள்!
மீண்டும் சந்திப்போம்.
//சற்றே பெரிய உதிரியான சோனியா காங்கிரசுக்கு//
ReplyDelete:>))
பின்னே? அதற்கெல்லாம் ஒரு ஸ்தாபனக் கட்டமைப்பு, இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் என்று இருக்கிறதா ஸ்ரீராம்?
Deleteசோனியா காங்கிரஸ் அடிவேரோ சல்லிவேரோ இல்லாத செத்த கட்சிதான்! ஆனாலும் இதையும் நம்பி வாக்களிக்கிற கூட்டம் இருக்கிறதென்பதால் சற்றே பெரிய உதிரி!