Showing posts with label அரசியல் இன்று. Show all posts
Showing posts with label அரசியல் இன்று. Show all posts

Saturday, July 10, 2021

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதரவாளர்களைக் கதறவிட்டிருப்பது இந்த நாளுடைய ஆகச் சிறந்த காமெடி! வீடியோ 13 நிமிடம். 


ஒரு செய்தியாளராகவோ விவாத நெறியாளராகவோ செந்தில் என்றைக்கும் சோபித்ததில்லை. ஆனாலும் கூட இந்த வீடியோவில் ஒரு நகைச்சுவை ஓரங்க நாடகத்தை நடத்தியிருக்கிறார். நிறைய சொதப்பல்களுடன் தனி ஒருவனாக தமிழ் கேள்வி என்றொரு யூட்யூப் சேனலில் திமுகவுக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றும் கூட அண்ணாமலை தமிழக பிஜேபியின் தலைவரானதைக் கிண்டல் செய்து வெளியிட்டிருந்தார்.


செந்தில் எத்தனை வன்மத்தோடு தவறான தகவலைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல்  பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள கீழே ஸ்க்ரீன்ஷாட் ஒன்றே போதும்.


செந்தில் வாங்குகிற காசுக்கு விசுவாசமாக என்னமோ உளறிவிட்டுப் போகட்டும்!

தினமலர் காரன் - மோடி முடிவெடுத்து விட்டார் - கொங்கு நாட்டை பிரிக்க என்று கிளப்பி விட -

அண்ணாதுரை கருணாநிதியும் - அடைந்தால் திராவிட நாடு என்று இந்த நாட்டை துண்டாட பேசிய பொது - தேசியவாதிகள் மனம் துடித்த துடிப்பை தற்போது கொங்கு நாட்டு காரர்கள் திரும்பவும் கழகத்திற்கு குடுத்து கொண்டு இருக்கிறார்கள் .
1921 இறந்த பாரதி "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று- 1947 வரப்போகும் விடுதலை பற்றி பாடியது போல..
இன்று பலர் கொங்கு நாடு மலர்ந்து விட்டது போல - வரி விதிப்பு வருமானம் கொங்கு நாட்டில் அதிகம் என்றும் - காவேரி நீர் பங்கீடு பற்றி - கர்நாடகம் மற்றும் திராவிட தமிழ்நாடு உடன் எப்படி பேச்ச்சு வார்த்தை செய்வது - ஏற்றுமதி துறைமுகம் எப்படி என்பது பற்றியெல்லாம் எழுதுகிறார்கள் ..
ஒரு மந்திரம் மாதிரி சொல்லி சொல்லி - எல்லாரும் அதை நம்ப ஆரம்பித்து விட்டனர் என நினைக்கிறேன் ..
இந்த காவேரி நீர் ஓடும் பகுதியான திருச்சி தஞ்சை நாகப்பட்டினம் வரை - உங்கள் கூட சேர்த்து கொள்ளுங்க - உங்களுக்கு பழைய பூம்புகாரில் ஒரு பெரிய துறைமுகம் கட்டி - திருப்பூர் ஆடைகளை ஏற்றுமதி செய்து கொள்ளலாம் !!
இப்படிக்கு
சோழதிருநாட்டு நம்பி (விஜயராகவன் கிருஷ்ணன்)
புலர்ந்து வரும் திராவிட தீது இல்லா திருநாட்டில் புது பெயர்

என்று விஜயராகவனும் எரிச்சலோடு முகநூலில் எழுதி இருக்கிறாரே. இதற்கென்ன சொல்வது?   

மீண்டும் சந்திப்போம் 

Thursday, June 24, 2021

ஒண்ணுமில்ல ச்சும்மா! அரசியலைப் படம் பிடித்துக் காட்டப் போறேன்!

பர்கா தத்தின் Mojo Story சேனலில் அவருடைய அரசியல் சொற்பொழிவு, விவாதத்தைக்  கேட்கையில் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


53 நிமிடங்கள் என்பது இந்த சப்ஜெக்டுக்கு மெய்யாகவே நெம்ப ஓவரு ரகம் தான்! இந்த ஒரு விஷயத்துக்காகத் தான் சதீஷ் ஆசார்யா, மஞ்சுள் போன்ற கார்டூனிஸ்ட் அறிவுஜீவிகள் தேவலையே என்று தோன்றும். சாம்பிள் ஒன்று பார்த்துவிடலாமா?


சதீஷ் ஆசார்யா, பிரசாந்த் கிஷோரை சௌகரியமாக இதில் தவிர்த்துவிட்டார் என்பதில் நுண்ணரசியல் எதுவும் இருக்கிறதா?


கார்டூனிஸ்ட் மஞ்சுளுக்கு நரேந்திர மோடியைத் தவிர வேறெதுவுமே  பிரச்சினையில்லை!பொருட்டுமில்லை! ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி வகையறாக்கள் செய்துவந்த அட்டூழியங்கள் எதுவுமே பொருட்டில்லை என்கிறபோது எரிச்சல் வரத்தான் செய்கிறது.


இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று அந்தநாட்களில் காமராஜர் சலிப்புடன் சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது.


திமுக அடக்கமுடியாத யானை என்று சட்டசபையில் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். வீடியோ  40  நிமிடம் என்று சொன்னால் ஸ்ரீராமுக்கு ஒவ்வாமை வந்துவிடுமே என்பதால் ஸ்க்ரீன் ஷாட் மட்டும்! பார்க்க விரும்பினால் நீலக்கலரில் சுட்டி.


அடக்கமுடியாத யானை எப்படியிருக்கும் என்பதை கார்டூனிஸ்ட் அமரன் கோடுகளில் வரைந்து காட்டி இருக்கிறார்! திருத்தங்கள் நிறையச் சொல்லலாம்! 

இந்த யானைக்கு ஒவ்வொரு அவயமும் வெவ்வேறு மிருகத்தின் அவயமாக வரைந்திருந்தால் கனப்பொருத்தம்!

மீண்டும் சந்திப்போம்.

Sunday, June 20, 2021

ஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா? ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம்? அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்? 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அதிமுக செய்த மிகப்பெரிய தவறாக தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை ஒதுக்கிவைத்தது தான் என்பது என்னுடைய கருத்து. பாமகவுக்கு மட்டுமே கொடுத்த முக்கியத்துவம், பிஜேபி உடன் ஒருவிதமான அலட்சியம் இவைகளும் அதிமுகவின் தோல்விக்குக் காரணங்களாக இருந்தன. பிஜேபியும் கூட அதே தவறைத்தான் இன்று வரை செய்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்று பிரதான எதிர்க் கட்சியாக, பெயரளவுக்கே அதிமுக இருந்து வருகிறது. அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாமகவின்  டாக்டர் ராமதாசும் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமியும் தான்  செய்துவருகிறார்கள் என்பதை இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.  



இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றால்  தமிழ்நாடு என்பது ஊராட்சிகளின் ஒன்றியமா என்ற அழுத்தமான கேள்வியை தமிழக அமைச்சர்களிலேயே கடைக்குட்டி தியாகராஜனுக்கு முன்வைக்கிற தைரியம் புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமிக்கே இருந்தது. தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான ஆரோக்கியமான விமரிசனத்தையும் கிருஷ்ணசாமி தொடர்ந்து செய்து வருகிறார். கவனிக்கிறோமா?

உதாரணத்துக்கு முகநூலில் இன்று அவர் பதிவுசெய்து இருக்கும் ஒரு அரசியல் விமரிசனம்::

'ஸ்டாலின் டெல்லி பயணம்' சாதனை ஆனதா? வெறும் சம்பிரதாயத்தில் முடிந்ததா.?

மனநிறைவுக்குள் மறைந்து போன ஸ்டாலினின் திருப்தி!! இலைகள் அமைதியை விரும்பலாம்! காற்று சும்மாயிருக்குமா?

மே மாதம் 07 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 40 தினங்கள் கழித்து ஜூன் மாதம் 17ஆம் தேதி டெல்லியில் பாரத பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த அரசு விழா ஒன்றுக்கு வருகை புரிந்த மோடி அவர்களுக்கு எதிராக திமுகவும், அதன் தோழமை இயக்கங்களும் கருப்பு கொடிகளாலும், கருப்பு பலூன்களாலும் சென்னையின் மண்ணையும், விண்ணையும் நிரப்பி போராட்டம் செய்தனர். அதையும் தாண்டி மோடி அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்ற ஐஐடி மாணவர் வளாகத்திலும் அத்துமீறி நுழைந்து கருப்புக் கொடி காட்டிய சம்பவங்களை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. எந்த மோடிக்கு எதிராக ”திரும்பிப் போ” என்று கோஷம் எழுப்பினார்களோ? அந்த மோடியை தேடி அவருடைய இல்லம் சென்று சந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சென்னையில் மோடிக்கு எதிராக நடந்தது போல, டெல்லியில் ஸ்டாலினுக்கு எதிராக எவரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அது டெல்லி அரசியல் நாகரீகம்!

மாநிலங்களில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர்கள் பாரத தேசத்தின் பிரதமரைச் சந்திப்பது வெறும் சம்பிரதாயத்திற்கானது மட்டுமல்ல, தங்களது சாதுரியத்தால் அந்தந்த மாநிலத்திற்கு வரவேண்டிய திட்டங்களை வலியுறுத்தி சாதிப்பதே அதில் உள்ளார்ந்த அம்சம். இதுபோன்ற ஒரு முக்கியமான சந்திப்பிற்கு முன்பாக கள அளவில் “Home Work” என்று சொல்லக்கூடிய முன்னோட்ட பணிகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.

“Go Back Modi” என சமூக வலைதளங்களில் டிரென்டிங் செய்ததும், விமான நிலையத்தைத் தாண்டி பதினைந்து கி.மீட்டருக்கு அப்பால் உள்ள கிண்டி ஐஐடி வளாகத்திற்குள்ளும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்ததும் மோடியின் நெஞ்சில் நீங்காத வடுவாகி இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு சுமூகமான உறவுக்கான பாதையை ஸ்டாலின் அவர்களால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அதுபோன்ற ஒரு ராஜ தந்திர நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.  

ஏனெனில் பிரதமருடனான சந்திப்பு என்பது வெறும் சம்பிரதாயத்தையும் தாண்டி தமிழகத்திற்குக் கேட்டுப் பெற வேண்டிய பல கோரிக்கைகள் அவர் தலைக்குமேல் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறக்க ஒரு இதமான சூழலை உருவாக்கி அதன் பின் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால் டெல்லி சென்று சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சில கோரிக்கைகள் நிறைவேறியிருக்கக் கூடும். கடந்த 17 ஆம் தேதி  பிரதமர் – ஸ்டாலின் நேரடி சந்திப்பின் போது 25க்கும் மேற்பட்ட  கோரிக்கைகள் அடங்கிய ஒரு புத்தக வடிவிலான மனு அவரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலேயே தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய விஷயம் என்ன தலை மேல் இருக்கக்கூடிய பிரச்சனைகளா? அதையெல்லாம் ஏன் தற்போதைய உடனடி கோரிக்கைகளில் சேர்க்க வேண்டும்? கரோனா இரண்டாவது அலையில் தொழில், வர்த்தகம் மற்றும் அனைத்து சேவைகளும் நாற்பது நாட்களுக்கு மேலாக முற்றாக முடங்கிப் போயுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முதல் அனைத்து தரப்பினருமே ஊரடங்கால் சிக்கித் திணறுகின்றனர்.  தமிழக மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசும் மிகப்பெரிய அளவிற்கு நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது. எனவே, இப்பொழுது தமிழக அரசை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போதிய நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கான கோரிக்கை தானே முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்?

ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூபாய் 1000, அதேபோல, ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூபாய்1000-லிருந்து 1500, பெட்ரோல் டீசலுக்கு தலா ரூ 5 குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி போன்ற நிதி ஆதாரத்தோடு சமந்தபட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளைக் கூட தமிழ்நாடு அரசு நிறைவேற்ற எந்த முனைப்பும் காட்டவில்லையே? இந்நிலையில் 12,500 கோடி நிலுவையில் உள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் வீராவேசமாகப் பேசினால் மட்டும் போதுமா? பாரத பிரதமருடனான சந்திப்பில் ஜிஎஸ்டி நிலுவை, 13 மற்றும் 14-வது நிதி ஆணைய பங்கீடுகள் போன்ற மிக முக்கிய நிதி அம்சங்கள் அல்லவா அக்கோரிக்கை மனுவில் முக்கிய இடம் பெற்றிருக்க வெண்டும்?

தமிழக நிதி நிலைமையை எடுத்துச் சொல்லி, குறைந்தபட்சம் அந்த நிலுவைத் தொகையை இரண்டு, மூன்று தவணைகளாகப் பெறுவதற்கு உண்டான உத்தரவாதத்தைப் பிரதமரிடத்திலே அப்போதே பெற்று அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து சேருவதற்கு முன்பாக ரூபாய் 4000 அல்லது 5000 கோடி பெறப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற முக்கியமான வாய்ப்பை ஸ்டாலின் நழுவவிட்டு விட்டார். சாதனை நிகழ்த்துவதைக் காட்டிலும் சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதிலும், வெறுப்பு அரசியல் செய்வதையுமே முக்கியமானதாகக் கருதியதன் விளைவுதான் இதுவோ? 

சாதனைகளை நிகழ்த்த அதற்குண்டான வலுவான முன்னேற்பாடுகள் “Spade Work” முறையாகச் செய்யப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் மாறாக ”எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல” -  ”பச்சை புண்ணில் உப்பைத் தடவுவது போல” மே 07-ஆம் தேதி பதவியேற்ற நாள் முதல் டெல்லி சென்று திரும்புவது வரை மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என இழிவு படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். திமுக பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு; தமிழக அரசு மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை மட்டுமே கையில் எடுப்பது தமிழகத்துக்கு நிகழ்காலத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது; எதிர்காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சத்தையே உருவாக்குகிறது.

மத்திய அரசின் அதிகார வரம்பு என்ன? மாநில அரசின் அதிகார வரம்பு என்ன? என்பது கூட தெரியாமல் ஒரு மாநிலக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து விட்டு, இப்போது அத்தனையையும் நிறைவேற்ற வேண்டும் என பட்டியலிட்டுக் கேட்டால், அதை நிறைவேற்றுவது எப்படி மத்திய அரசுக்கு சாத்தியமாகும்? ஒரு அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த அறிக்கை என்பது வேறு; தேர்தல் வாக்குறுதி என்பது வேறு; நடைமுறை பிரச்சினை என்பது வேறு. புதிய கல்வித் திட்டம் (NEP), நீட் தேர்வுகள் (NEET), மூன்று வேளாண் திட்டங்கள், மின் சட்டம் போன்றவை எல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இந்தியா முழுமைக்குமான சட்டங்களை ஒரு மாநிலக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு ரத்து செய்ய முடியுமா?

7 பேர் விடுதலை, செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகம் போன்ற அம்சங்கள் குறித்து என்ன உத்திரவாதம் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொத்தத்தில் நடந்த சந்திப்பு 20 நிமிடங்கள். வெளியே வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பு ’மன நிறைவையும், மகிழ்ச்சியையும்’ தந்தது என்று கூறினார். பொதுவாக இது அரசியல் தளத்தில் பயன்படுத்தப்படும் Diplomatic வார்த்தை அல்ல, பொதுவாக ’திருப்தி’ என்ற வார்த்தைதான் பயன் படுத்தப்படும். அதாவது தனிப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே ’மகிழ்ச்சி’ என பயன்படுத்தப்படும். ஏன் ’திருப்தி’ என்ற வார்த்தையைத் தவிர்த்து, மனநிறைவு என்ற வார்த்தை பயன்படுத்தினார்? என்பது புதிராக உள்ளது.

மோடி அவர்களுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் கூறியதாக ஸ்டாலின் அகமகிழ்ச்சி கொள்கிறார். மோடி அப்படிச் சொல்லியிருந்தால் அது அவரின் பெருந்தன்மையும், திறந்த மனப்பான்மையும் காட்டுகிறது. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து இருந்தாலும் தமிழ் மாநிலத்தைப் பாகுபாடில்லாமல் தங்களுடன் அணைத்துச் செல்ல மோடி விரும்புகிறார் என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ அடுத்த பத்தாவது நிமிடத்தில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மீண்டும் ’ஒன்றிய புராணம்’ பாடி தனது வெறுப்பு அரசியலையே வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் கலக்காமல் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகச் செல்லுமா? அல்லது பிணக்குடனே தொடருமா? என்பதே கேள்வி.

இலைகள் அமைதியை விரும்பினாலும், காற்று சும்மா இருக்குமா?

மிகவும் எதிர்பார்த்த மோடி - ஸ்டாலின் சந்திப்பு வெறும் சம்பிரதாயமாகவே முடிந்து விட்டது; சாதிக்க வாய்ப்பிருந்தும், ஸ்டாலின் சாதிக்க தவறிவிட்டதால் ஏமாந்து போனது தமிழ் மக்களே! ஸ்டாலின் அவர்களின் மன மகிழ்ச்சி - மன நிறைவுக்கு அவரின் வேறு எந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றித் தந்தார்? என்பதற்கு எதிர்வரும் காலமே பதில் சொல்லும்! 

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர். புதிய தமிழகம் கட்சி.

20.06.2021

கவனிக்கவேண்டிய முக்கியமான பகுதிகளை தடித்த எழுத்துக்களில் தந்திருப்பது என்னுடைய வேலை. 

குப்பை அரசியல்வாதிகளுக்குத் தேவையே இல்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதில், டாக்டர் கிருஷ்ணசாமி மாதிரி கவனிக்கப்படவேண்டியவர்களை கவனிக்க மறந்து விடுகிறோமா? எப்போது நம்முடைய பார்வையை விசாலமாக்கிக்கொள்ளப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.   

Friday, June 18, 2021

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர்!

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர் - பிரதமர், முதலமைச்சர் சந்திப்பின் முக்கியத்துவம் இப்படி கலைஞர் செய்திகள் தொலைகாட்சி பெருமிதப்பட்டுக் கொள்கிற விவாத நிகழ்வு வீடியோ 50 நிமிடம். வேறு வேலை எதுவுமில்லை என்றால் தாராளமாகப் பார்க்கலாம். பனிமலர் தான் நிகழ்ச்சியின் நெறியாளர்.


இத்தனை அதிமுக்கியமான நிகழ்ச்சியைப் பற்றிய விவாதத்துக்குப் பார்வையாளர்கள் வெறும் 72 பேர்தான் என்பதை மேலே ஸ்க்ரீன்ஷாட் காட்டும்போது ஏ தாழ்ந்த தமிழகமே என்று கருணாநிதி மாதிரி நாமும் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லையே! 



இணையத்தில் இந்த அதிமுக்கியமான நிகழ்வைக் குறித்து நிறைய சேதி சொல்கிறார்கள்! எப்படி என்று பார்த்து விடலாமா?


அதுசரி! ஸ்டேன்லி ராஜன் வேறெப்படிச் சொல்வாராம்?


கார்டூனிஸ்ட் அமரன் கூட ஸ்டேன்லி ராஜன் சொன்னதைத் தான் கோடுகளில் வரைந்திருக்கிறார்.


இது ஸ்ரீராம் சேஷாத்ரியின் ட்வீட்டர் செய்தி :: டில்லியில் வரவேற்கக் காத்திருந்த கூட்டம், 200 ரூ உபிக்களை டில்லிக்கு கூட்டிக்கொண்டுபோக செலவாகுமே! உள்ளூர் ஆட்களை வைத்தே சமாளித்துவிட்டார்கள் போல.



நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாக ஸ்டாலின் ட்வீட் செய்த சோனியா ராகுல் இருவரைச் சந்தித்ததைப்பற்றி எந்த முக்கியத்துவமும் விவாதமும் இல்லையா?

நாம்தான் இவர்களுக்குத் தேவையே இல்லாமல் இத்தனை பில்டப் கொடுத்து வருகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, June 9, 2021

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் #செய்திகளின்அரசியல் !

தினசரி ஏதாவது ஒரு ஆடியோவை வெளியிட்டு, யாரைக் குழப்புகிறார் சசிகலா? புதிய தறுதலை அறிவாளிகளே குழம்புகிறார்கள் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு? 


தேர்தல் தோல்விக்குப்பின்னால் அதிமுக கொஞ்சம் துவண்டுபோய்த்தான் கிடக்கிறது.O பன்னீர் செல்வம் பழைய பன்னீர்செல்வமாக இருக்கிறாரா அல்லது புதிதாக தர்மயுத்தம் 2 என ஆரம்பிப்பாரா? சசிகலா அதிமுகவுக்குள் குட்டையைக் குழப்பிப் பார்க்கிறார் என்பது ஒருபக்கம், OPS என்னசெய்வாரோ  என்று இன்னொரு பக்கமுமாக கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் திமுகவே ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கிறதென்றால் .........!


கமல் காசருடைய #மநீம கட்சி என்ன நிலைமையில் இருக்கிறது? மக்கள் நீதி மையத்தின் ஆலோசனை கூட்டம் இணையம் ஊடாக நடந்தது.கமலஹாசன் தானே பேசி தானே ஆலோசனை செய்திருக்கலாம் அல்லது தசவாதாரம் போல பல வேடங்களில் அவரே வந்து பேசியிருக்கலாம் என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் நேற்று முன்தினம் நையாண்டி செய்திருப்பது போலத் தானா? ஆனால் இரண்டு நாட்களாக பொள்ளாச்சி Dr. மகேந்திரன் திமுகவில் இணையப்போவதாக, பெரிய போஸ்டிங் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துகொண்டே இருந்தன.மு க அழகிரி - இசுடாலின் சந்திப்பு மாதிரியே அதுவும் வரும் ஆனா வராது ரகமாகிப்போய்விட்டது.


கமல் மாதிரியே, நிறைய பன்ச் டயலாகெல்லாம் பேசித் தன்னுடைய அரசியல் ஞானத்தை வெளிப் படுத்தியவர் விஜய் சேதுபதி. தேர்தல் ரிசல்ட்டுக்குப்பிறகு அரசியல் பன்ச் பேசினால் என்னவாகும் என்பது தெரிந்தவராக, சங்கடமான பன்ச்சை விட்டு சமையல் நிகழ்ச்சியில் சங்கீதம் பாடப்போறேன் என்று ஒதுங்கிவிட்டார். யார் சேனலில் என்று கூடத்தெரியாத அப்பாவியாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


என்ன தயா இதெல்லாம் என்று ஆதங்கப்பட வேண்டாம்! சமூக இடைவெளி, கொரோனா கட்டுப்பாடுகள், ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்கலாம் இவை சட்டமே நாங்கள்தானடா திமுக அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே!

சோனியாவின் தவப்புதல்வன் ராகுல் காண்டிக்கு ட்வீட்டரில் மட்டுமே அரசியல் பேசத்தெரியும். அதையும் யார் எழுதிக்கொடுக்கிறார்கள் என்பது காங்கிகளின் பரமரகசியம். பப்பு ஒரு கீச்சைப் போட்டவுடன் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து எப்படிக் கிழிக்கிறார்கள் பாருங்கள்! இந்த லட்சணத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில்
நிற்கக்கூடியவர் என்று ராகுலுக்கு முட்டுக்கு கொடுக்கிறார்களே. அது எப்படி?

இங்கே இசுடாலினுக்கு ஊடகங்கள் முட்டுக்கொடுக்க ஆரம்பித்து சில வருடங்கள் தான் ஆகியிருக்கும்! ஆனால் ராகுலுக்கு 2004 இலிருந்தே முன்களப்பிணியாளர்கள் முட்டுக் கொடுத்துவருகிறார்கள். முட்டுக்கொடுத்துக் கொடுத்தே இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்பதையும் சேர்த்தே பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.

Sunday, June 6, 2021

ஒரு வெப் சீரீஸ்! ஈழ ஆதரவு வியாபாரிகள் பொங்குவது ஏன்?

கருத்துசுதந்திரம் பற்றி வாய்கிழியப்பேசும் தமிழகப் பிரபலங்கள் பலருடைய முகமூடியை ஒரு வெப் சீரீஸ் கிழித்தெறிந்திருக்கிறது. அமேசான் பிரைமில் நேற்று முன்தினம் வெளியான The Family Man 2  சீரீசைத் தடை செய்யவேண்டும் என்ற கூக்குரல் முதலில் நாம் தமிழர் கட்சி சீமானிடமிருந்து, அடுத்து வேலைவெட்டி இல்லாமல் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கும் வைகோ இவர்களிடமிருந்து ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தக் கூக்குரல்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பிரபலங்கள் மற்றும்  அனாமதேயங்களிடமிருந்து கிளம்பின. இதில் பெரிய  வேடிக்கை என்னவென்றால் சீரீசின் ட்ரெயிலரை மட்டுமே பார்த்துவிட்டு இந்த அறிவுக்கொழுந்துகள் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான்.


ஒன்பது பகுதிகளாக ஸ்ட்ரீமிங் வீடியோவாக OTT தளத்தில் அறிவிக்கப்பட்டபடியே ஜூன் 4 அன்று The Family Man 2  வெளியாகிவிட்டது. வெள்ளிக்கிழமை முதல் 4 பகுதிகளையும் நேற்றைக்கு மிச்சம் 5 பகுதிகளையும் பார்த்து முடித்ததில் ஈழத்தமிழரை இழிவுபடுத்தும் இந்த சீரீசை அனுமதிக்கமாட்டோம், மத்திய அரசே உடனே தடை செய் என்றெல்லாம் இங்கே உள்ள கோமாளிகள் சிலர் எதற்காகக் கூவினார்கள் என எனக்கு மட்டுமல்ல எவருக்குமே சுத்தமாகப் புரியவில்லை! இந்த லட்சணத்தில் தமிழ்நாடே The Family Man 2 வை எதிர்த்துக் கொந்தளித்ததாகவும், மத்திய அரசுக்கு வைகோ உள்ளிட்ட சிலர் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் செய்திகள்! செய்திகள் ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உங்கள்பக்கத்தில் உணர்ந்தீர்களா என்ன!!

சைமனும் இன்னும் பல தமிழ் உணர்வாளர்களும் இன்னும் சிலரும் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியஸ் விடுதலை புலிகளை கொச்சைபடுத்துவதாக கிளம்பிவிட்டனர். புலிகள் இயக்கம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா கனடா ஏன் ஐரொப்பிய யூனியனில் கூட தடைசெய்யபட்ட இயக்கம் என்பது உண்மை

என்ன சொல்லி தடை செய்தார்கள்?

மிக மோசமான தற்கொலை போராளிகள் என்பது முதல் சொந்த இனமான லட்சுமண் கதிர்காமர் எனும் தமிழரை கொன்ற இயக்கம் என ஏகபட்ட குற்றசாட்டுகள். அதுவும் 2005ல் நார்வே தூதுகுழு புலிகளை சாடிவிட்டு வெளியேறியதும், ஆனானபட்ட அமெரிக்க தூதர் "புலிகள் மோசமான தோல்வி நோக்கி நகர்கின்றார்கள்" என்பதும் பெரும் குற்றசாட்டு.

பிரபாகரன் தனக்கு தானே வைத்து கொண்ட சூனியம் 2002 கிளிநொச்சி மாநாடு, அதில் உலகம் ஒப்புகொண்ட விஷயம் இந்த கோஷ்டி மொத்தமாக ஒழிக்கபட வேண்டியது மற்றபடி ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள் என்பதே! புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிக்கும் தொடர்பு உண்டா என்றால் நிச்சயம் உண்டு என்பதற்கு ஆதாரம் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மேலான துப்பாக்கி சூடு

அப்பொழுது இலங்கை அரசு புலிகள் மேல் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது, அப்பொழுது பாகிஸ்தானிலில் இலங்கை வீரர்களின் பேருந்து தாக்கபட்டபொழுது புலிகளுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு உலகுக்கே தெரிந்தது.

இது ஆச்சரியமல்ல, ஒரு தீவிரவாத இயக்கம் இன்னொரு இயக்கமில்லாமல் வளரமுடியாது இயங்க முடியாது

அவ்வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு அல்ல, பின்லேடனின் சில தீவிரவாதிகள் உலகமெல்லாம் சுற்ற புலிகள் உதவினர் எனும் வகையில்தான் அமெரிக்கா அவர்களை கட்டம் கட்டியது. சக போராளி குழுக்களை கொன்றது, ராஜிவ் பிரேமதாசாவினை கொன்றது கடைசியிலும் திருந்தாமல் லட்சுமண் கதிர்காமரை கொன்றது உலகெல்லாம் தீவிரவாதிகளுடன் வலம் வந்தது என புலிகள் செய்த அட்டகாசம் ஏராளம்.

அதைத்தான் "தி பேமிலி மேன் 2" எனும் சீரியல் சொல்கின்றது, அதில் உண்மையினை தவிர ஏதுமில்லை

இதனால் தமிழருக்கு அவமானம் என கிளம்ப அவசியமில்லை அது முட்டாள்தனம். ஈழதமிழருக்கு கிளம்பிய போராட்ட குழுக்கள் சுமார் 40, அதில் 4 கடைசியாக தேறியது அதில் 3ஐ ஒழித்து ஒரே பிரதிநிதி என தன்னை சொல்லிகொண்டனர் புலிகள். ஆனால் உலகம் அதை ஏற்கவில்லை, எனினும் பேசிபார்க்கலாம் என வந்த மேல்நாட்டு குழுவும் இது திருந்தாத கட்ட பஞ்சாயத்து கோஷ்டி என ஓடிவிட்டது.

ஆக இது இந்திய‌ தமிழருக்கான அவமானம் அல்ல, இந்திய தமிழரின் ஒரே அவமானம் திமுக அதை தவிர ஏதுமில்லை. மாறாக இந்த சீரியல் வந்தால் இலங்கையில் இப்படி ஒரு அடாவடி இருந்தது எனும் உண்மையில் ஒவ்வொரு ஈழ தமிழனும் தலைகுனிய வேண்டும்.ஈழதமிழனின் மானம் காற்றில் பறக்க கூடாது என அங்கிள் சைமன் குதிக்கின்றார், ஆனால் அது என்றோ கிழிந்து உலகம் எல்லாவற்றையும் கண்டு விட்டது என்பது அங்கிளுக்கும் அவரின் அடிபொடிகளுக்கும் புரியவில்லை, பரிதாபம்!  இப்படி முகநூலில் ஸ்டேன்லி ராஜன் சுருக்கமாகச் சொல்லி  பஞ்சாயத்தைக் கலைத்துவிட்டாரே! அதுவும் 15 நாட்களுக்கு முன்பே!  

ராஜீவ் காண்டியைக் கொலைசெய்ததில் விடுதலைப் புலிகள் மீது மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மீதுமே இருந்த ஆதரவு, அனுதாபத்தைப் பெரும்பாலான தமிழக மக்கள் துடைத்தெறிந்து விட்டார்கள். வெறுமனே  கூவிக்கொண்டு இருப்பவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு வியாபாரம் செய்கிற ஆசாமிகள் மட்டும்தான் என்பதையும் தமிழக மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.

அது போகட்டும்! The Family Man 2  எப்படியிருக்கிறது?

ஒரு உளவாளியின் கதை என்பதில் குடும்பம் கொஞ்சம், தொழில் ரீதியாக எதிரிகள் கொஞ்சம் என இரண்டையும் கதாநாயகன் எப்படி சமாளிக்கிறார்? இதுதான் கதை முடிச்சு! முதல் சீசனும் சரி, இரண்டாவது சீசனும் சரி கதாநாயகன் ஸ்ரீகாந்த் திவாரி என்கிற NIA வின் ரகசியக் குழு உளவாளி எப்படி தன்னுடைய குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுடன், தொழில்ரீதியாக தேசத்துக்கு ஏற்படும் தீவிரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்கிறார் என்பது மட்டும் தான் மெயின். முதல் சீசனில் வில்லன்  ரசாயன ஆலையில் விஷவாயுவைக் கசிய விட முயல்வதைத் தடுப்பது, இரண்டாவது சீசனில் இந்திய இலங்கை பிரதமர்கள் செய்துகொள்ள இருக்கிற ஒப்பந்தத்தைத் தடுக்க முயற்சிக்கும் தற்கொலைப் போராளி ஒருத்தியை, கதாநாயகன் எப்படி முறியடித்து தேசத்தைக்  காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. அங்கங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சீரீஸ் விறுவிறுப்பாக நகர்வதில் அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. 

6/10

இந்திய இலங்கைப் பிரச்சினை என்றால் ஈழப் போராளி இல்லாமலா? ஈழப்போராளியாக சமந்தா நடித்ததில் அவரையும் தமிழின விரோதியாகச் சித்தரித்து, நம்மூர் கோமாளிகள் காமெடி செய்திருக்கிறார்கள்.  

தமிழ்நாடு என்றாலே கோமாளிகள் அரசியல் முதல் எல்லாவற்றிலும் புகுந்து குட்டையைக் குழப்புகிற பிரதேசம் என்றாக்கிவிட்டார்கள். இந்த வெப் சீரீசை மட்டும் விட்டுவைப்பார்களா?  

மீண்டும் சந்திப்போம்.      

Thursday, June 3, 2021

ஜூன் 3 நாள்சிறப்பு #கட்டுமரம் சாதித்ததும் சோதித்ததும்!

திமுகவின் கருணாநிதி தானே தனக்கு வைத்துக் கொண்ட பெயர் கட்டுமரம் என்பது நிறையப்பேருக்கு மறந்துபோய் இருக்கலாம். நினைவுபடுத்துவது நமது கடமை.


வீடியோ வெறும் 47 செகண்ட்தான்! 


காகித ஓடம்  பாடலும் கட்டுமரம் என்ற அடைமொழியும் காலத்தையும் மீறி நிலைத்தது.


மதுரைக்கு வந்த இந்திரா காண்டி மீது கல்வீச்சுநடத்திய  திமுகவின் சாதனையை மிஞ்சிய வாய்ஜாலம் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமோ?


பணம் பணம் பணம் என்பதே அவரது உயிர்மூச்சு!  


பாசமிகு குடும்பத்தலைவனாக இருந்ததே வாழ்நாள் சாதனை!


இரண்டாம் , மூன்றாம் தலைமுறை தாண்டி நான்காம் தலைமுறை கூட நெடுநெடுவென வளர்ந்து ரெடியாகிக் கொண்டிருக்கிறதாம்!


வெற்று வார்த்தைமைலேயே அரசியல் நடத்திய ஜாலம் வேறெந்த அரசியல்வாதியிடமும் காணமுடியாதது. சார்ள்ஸ் டிக்கென்ஸின் ஆலிவர் டிவிஸ்ட் நாவலில் ஒரு ஏமாற்றுக்காரச்சிறுவனை artful dodger என்று வர்ணித்து இருப்பது #ஏய்ப்பதில்கலீஞன் ஆக கருணாநிதிக்கும் பொருந்திப்போனதே!  

சாதனையில் வியந்துபோன சர்க்காரியா கமிஷன் அறிக்கை இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

Wednesday, June 2, 2021

கொஞ்சம் கொறிக்க! கொஞ்சம் சிரிக்க! #அரசியல்செய்திகள்

தமிழக நிதியமைச்சர் (பி.டி.ஆர். பழனிவேல்) தியாகராஜன் தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் என்னுடைய தாத்தா முதல்வர், தந்தை அமைச்சர் என்று சொல்லி வரும் நிலையில், தியாகராஜனின் தாத்தா பி.டி.ராஜன் வெறும் 143 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தவர் என்று தகவலைத் துருவி எடுத்துப் போடிருக்கிறது அதிமுகவின் ஐடி விங்க். ‘1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பொப்பிலி அரசர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அந்தக் காலத்தில் பெரும்பாலும் கப்பல் பயணம் என்பதால், அவர் மீண்டும் முதல்வர் பணிக்குத் திரும்ப 4 மாதங்கள் ஆகும் என்பதால் இடைக்கால முதல்வராக பி.டி.ராஜனை அமரவைத்துவிட்டுப் போனார். அதாவது இரா.நெடுஞ்செழியன் போல இடைக்கால முதல்வராக மட்டுமே இருந்திருக்கிறார் அவர்’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது மதுரை அதிமுக ஐடி விங். திமுகவின் ஐடி விங் செயலாளருக்கே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள் அதிமுக ஐடி விங் என்று ஹாட்லீக்ஸ் செய்தியாகப்போட்டுச் சிரித்திருக்கிறது  இந்து தமிழ்திசை! 

டபுள் வாட்ச் டக்ளஸ் பீற்றிக்கொள்வது எல்லாமே இப்படி உடனுக்குடன் பங்ச்சர் செய்யப் படுவதால், இப்போது எல்லாம் ஒருகையில் மட்டுமே வாட்ச் அணிகிறாரோ?  


நண்பர் நெல்லைத்தமிழன் மாதிரியே மாமல்லனும் நிறைய எதிர்பார்க்கிற மாதிரி இருக்கிறது!  தியாக ராஜன், சேகர்பாபு, மா சுப்ரமணியன் போன்ற பக்கவாத்தியங்கள் செய்கிற அலப்பறைகளில், இசுடாலின் எங்கே ஜனங்கள் தன்னுடைய சாயத்தை துவைத்தெடுத்து விடுவார்களோ என்ற பயம் குறைந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இப்படி சிலர் காப்பான் ஆக இருக்கும்போது அவர்கள் மீது கைவைப்பதற்கு இசுடாலினுக்கு எப்படி மனம் வரும் என்று நினைப்பது?

டபுள் வாட்ச் டக்ளஸ் இன்னமும் ஒன்றியம் ஒன்றிய அரசு என்று அர்த்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருக்கிற வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. செங்கோட்டை ஸ்ரீராம் கடந்த  மாத மத்தியிலேயே இந்த அக்கப்போருக்கு ட்வீட்டியிருந்த செய்தி மேலே! மக்களுடன் ஒன்றிய அரசு எது, ஒன்றாமல் வெட்டி அக்கப்போர்களில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிற அரசு எது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!  


மாதத்துக்கு 30 கோடி தடுப்பூசிகளை மோடி அரசு உறுதிப்படுத்தி இருக்கவேண்டுமாம்! அசாதுதீன் ஒவைசிக்கு எல்லாமே அவசரம் தான்! தடுப்பூசி தயாரிப்பதென்பது தலாக் தலாக் தலாக் என்று 3 முறை சொன்னவுடனேயே விவாகரத்தாகி விடுவதைப் போல் அவ்வளவு சுளுவானதா என்ன?  தீபக் திவாரி சரியாகத் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

இயேசு மீட்கிறார் என்ற பெயரில் மதமாற்ற வியாபாரம், ஜெப ஊழியம், மோடி எதிர்ப்பு, அப்புறம் சத்தியம் டிவி எனப்பல தொழில்களையும் நடத்திவரும் மோகன் சி லாசரஸ் இன்று தமிழக முதல்வரைச் சந்தித்து கொரோனா நிதியாக ஒன்றரைக்கோடிக்கான காசோலையை அளித்தாராம்! தூத்துக்குடி எம்பி கனிமொழியும்  உடனிருந்தார் என்பது செய்தி விசேஷம்.  


இந்த வார துக்ளக் அட்டைப்பட நையாண்டியை விட உள்ளே வெளியாகியிருக்கும் கருத்துப்படம் சிறப்பு! 

ஆயிரம் அரசியல் காமெடி இருந்தாலும் சீனாதானா செட்டியார் காமெடி மாதிரி வருமா? இந்தமனிதரை பொருளாதார மேதை அப்படி இப்படியென்று தலையில் தூக்கிவைத்து ஆடும் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களை என்ன செய்யலாம்? யோசித்து வையுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.         

   
  
   

Monday, May 31, 2021

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தொடுத்த கணை! #கனிமொழி #ஜெகத்காஸ்பர்

யாரும் எதிர்பாராவண்ணம்  மிகபெரிய அதிரடி அஸ்திரத்தை பறக்கவிட்டுவிட்டார் சுவாமி  ஆம்! 

ஜெகத்கஸ்பர் எனும் பாதிரி சர்ச்சில் திருப்பலி வைப்பதை தவிர எல்லா இந்திய பிரிவினைகளுக்கும் கொடிபிடிப்பவர் என்பது உலகறிந்தது புலிகளின் மிக நெருங்கிய நண்பரான இவர் முன்பு பிலிப்பைன்ஸில் சர்ச்சைகுரிய வானொலியில் பணியாற்றியதும் பின் இலங்கைக்கு சென்று புலிகளோடு பழகியதும் பின்னாளில் லண்டனிலும் தமிழகத்திலும் புலிகளின் அறிவிக்கபடாத பினாமியாக சுற்றிவந்ததும் எல்லோரும் அறிந்தது. அன்னார் கனிமொழி முகாமில் மகா முக்கிய புள்ளி என்பது உலகறிந்தது

அன்னாரின் புலி ரகசியங்களையும், 2006ல் புலிகளை அமெரிக்கா தடை செய்தபொழுது பொழுது வெளியிடப் பட்ட ஆவணங்களையும் இப்பொழுது வெளியிடுகின்றார் சுவாமி. இதுகாலமும் மத்திய அரசு இதுபற்றி ஏன் வாய்திறக்கவில்லை என்றால் இதெல்லாம் சர்வதேச விவகாரங்கள், சில நாடுகளின் அனுமதியில்லாமல் பல விஷயம் சாத்தியமில்லை. இப்பொழுது எங்கோ அனுமதி கிடைத்துவிட்டது,  ஜெகத் கஸ்பரை டெல்லி மேலிடம் குறிவைத்தாயிற்று, சாமி சரியாக அம்பை வீசிவிட்டார்.

புலிப் பாதிரி, புலித் தந்தை கெஸ்பருக்கு இனி போதாத காலம், விஷயம் எங்கெல்லாமோ சுற்றத்  தொடங்கி விட்டது. சரி, இவ்வளவு காலமும் இல்லா சிக்கல் இப்பொழுது கஸ்பர்மேல் ஏன் விழுகின்றது என்றால் சுவாமியினை களத்துக்கு இழுத்து வந்த அந்த சேஷாத்திரி பள்ளிக்கும் பாதிரிக்கும் ஏதோ வில்லங்கம் என்பது மட்டும் புரிகின்றது.

ஆக‌, "பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, அந்த புலிபாதிரியினை மன்னிக்காதேயும், இந்தியத்  திருநாட்டை குழப்ப வந்து தமிழக மக்களிடம் பிரிவினையினை வளர்க்கும் அந்த புலித் தந்தையின்  தோலை சுப்பிரமணியன் சாமி எனும் இறைவாக்கினர் வழியாக நீர் உரித்ததற்கு கோடான கோடி நன்றி தகப்பனே! கோட்டான கோடி நன்றி..." என்று முகநூலில் நன்றி பாராட்டுகிறார் ஸ்டேன்லி ராஜன்.

 


He (Dr.Swamy) also states “One correction.Father Gasper Raj of Christian Church (no surprise since LTTE was patronised by Vatican and hence TDK complicity),is that he formed Chennai Sangamam with Kanimozhi and BC to hold “cultural festivals”. The two cheated Kanimozhi of funds collected so she has quit him”

These are the reasons one can’t fully abandon Subramanian Swamy and we need him for some hot cases. There is not a good bad terrorist or bad bad terrorist. Whoever oppose and condemn terrorism must be backed as long as they genuinely fight for.
But having said that hope this is not an another hit and run or miss case என்கிறார் Raaman CK



டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை ஏதோ காரணங்களுக்காக இங்கே ஒருவர் மிகவும் விரும்பலாம் அல்லது வெறுக்கவும் செய்யலாம். கட்டுப்பாடில்லாத loose gun என்று பழிக்கவும் செய்யலாம். ஆனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட முடியாதவராக, இந்த மாதிரி விஷயங்களை அம்பலப்படுத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவர டாக்டர் சுவாமி அவசியமானவராகிறார் என்ற என்னுடைய கருத்திற்கு இந்த இரு நண்பர்கள் பகிர்வுகளும் வலுசேர்க்கின்றன.

மீண்டும் சந்திப்போம்

Thursday, May 27, 2021

தமிழக சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள்!

மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா    வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும் இப்படி ஒருபாட்டு ஒன்பது ரூபாய் நோட்டு திரைப் படத்தில் வரும். மோடிக்கு எதிராக அரசியல் செய்யத் தெரியாதவர்கள் கூட அப்படி மனம் தளர்ந்து மோடி மீது வெறுப்பைக் கக்குவதே அரசியல் என்ற நிலைமைக்குப் பழகிப்போய் விட்டார்கள். விவசாயிகள் போராட்டம் என ஆரம்பித்து திக்குதிசை தெரியாமல் அந்தரத்தில் திரிகிற ஒருகூட்டத்தை, இங்கே உள்ள சில அரசியல்வாதிகள் ஆதரிக்கிற போர்வையில் மோடி மீது வெறுப்பையும் வன்மத்தையும் கக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நாள்  மே 26. அந்த நாளுக்கு என்னவாம்?


சரக்கு, மிடுக்கு என வீரவசனம் பேசிய திருமா கூட இந்த மாதிரி சரக்கு தீர்ந்துபோன காமெடிப்பீசாகி விட்டார். 2014 இல் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான மே 26 ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 

வேளாண் சட்டங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப்பார்த்து விட்டுத்தான் எதிர்க்கிறார்களா? வெறுப்பரசியல் செய்ய அதெல்லாம் தேவையே இல்லை என்பது இந்திய அரசியலின் தலைவிதி!  


3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும்! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோமென இசுடாலின் அறிவித்திருப்பதாக இந்த வீடியோ செய்தி.  அதுமட்டும் தானா?


 

இந்தமாதிரி வக்கிரமான பாடல் எழுதுகிறவருக்கு விருது! முதல்வர் பாராட்டு என்பதெல்லாம் தமிழகத்தின் சோகம்.
  


சிரிப்புத்தான் வரு.குதையா! 
இடுக்கண் வரும்போது சிரித்துத்தான் சமாளித்தாக வேண்டும்! வேறென்ன செய்ய? மேலே உள்ள ஸ்க்ரீன் ஷாட் நாச்சியாள் சுகந்தி என்பவருடைய முகநூல் பகிர்விலிருந்து எடுக்கப்பட்டது 


நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் கமல் காசர் கட்சி கரைந்து போனதும் சகாயம் என்கிற உத்தமருடைய சாயம் வெளுத்துப்போனதும் தான்! சகாயத்துடைய சாயம் தேர்தலுக்கு முன்பாகவே கடந்த ஜனவரியில் வெளுத்தது. கமல் காசர் யாருடைய B டீம்/ கைக்கூலி என்பது தேர்தலுக்குப் பின்னால் வெளுத்தது. அவரைக்  கருவேப்பிலையாகப்பயன்படுத்திக் கொள்ள அவரே யார் யாரிடம் விலைபோனார் என்பது கொஞ்சமல்ல  நிறையவே வினோதமான விஷயம்!  

மீண்டும் சந்திப்போம்.       

Saturday, May 15, 2021

வெளியேறும் நிர்வாகிகள்! கரைகிறதா கமல் காசர் கட்சி?

BIGG BOSS அலட்டல் புகழ் கமல் காசரை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அரசியல் பேச வேண்டி வரும் என்பதைக் கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததே இல்லை! கமல் காசர் யாருடைய B டீம்? யாருடைய வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பார்? யாருடைய வாக்குகளைப் பிரிப்பார்? இத்தனை கேள்விகளுக்கும் கமல் காசர் கட்சிக்குள் இன்று நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளே விடை சொல்லிக் கொண்டிருக்கின்றன.  

ரங்கராஜ் பாண்டே இந்த 22 நிமிட வீடியோவில் கமல் காசர் கட்சிக்குள் நடப்பதென்ன, கரைசேருவாரா என்று கொஞ்சம் சொல்கிறார். வெறும் மூன்றே மூன்று நபர்கள் தானே விலகியிருக்கிறார்கள்? அதற்குள்ளாகவே  கட்சி கலகலத்துவிட்டதாக, கரைந்து விட்டதாக எல்லோருமே இத்தனை பரபரப்பாகப் பேசுவானேன்? சமீபத்தில் விலகிய நிர்வாகி சந்தோஷ்குமார் தொகுதிப்பக்கம் அதிகமாகத் தலைகாட்டாமல் 22000+ வாக்குகள் வாங்கினாரே! விலகிய அந்த மதுரவாயல் வேட்பாளர் 33000+ வாக்குகள் வாங்கினாரே! அதெல்லாம் சொல்வது என்ன? கமல் கட்சிக்கு மவுசு இருக்கிறது என்பதையா?  

சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் Felix  இவர்களைக்கூட நான் சட்டை செய்வதில்லைதான்! அதற்காக இந்த 26 நிமிட காமெடியை  ரசிக்காமல் இருக்க முடியுமா? சவுக்கு சங்கர் அவிழ்த்து  விடுவதெல்லாம் உண்மையல்ல என்பதை இங்கே அழுத்தமாகப்பதிவு செய்கிறேன்.   

 ரங்கராஜ் பாண்டேவும் சவுக்கு சங்கரும் தலா இருபது  நிமிடத்துக்கும் மேலாகப்பேசியும்  முடிவுக்கு வரமுடியாத விஷயத்தை வெறும் ஒருநிமிட வாசிப்பிலேயே இங்கே சொல்லி விடுகிறார் என்றால் ........

கமலஹாசனின் கட்சி கரைவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌
அக்காலத்தில் பெரும்படை நடத்தும் அரசர்கள் துணைபடை ஒன்றை உருவாக்கி இன்னொரு முனையில் இருந்து தாக்குவார்கள், யுத்தம் முடிந்ததும் அதை கலைப்பார்கள்
அரசியலில் இதெல்லாம் ஒருவகை தந்திரம், இனி திமுகவுக்கு நெருக்கடி வரும்பொழுது மட்டும் கமல் அரசியலுக்கு வருவார்
இப்பொழுது அவர்களுக்கு சிக்கல் இல்லை என்பதால் கமல் கட்சி நடத்தவேண்டிய அவசியமில்லை
869
38 கருத்துகள்
195 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஆக, பஞ்சாயத்து கலைகிறது அல்லது கரைகிறது என்று தனியாகவும் சொல்ல வேண்டுமா?😍😎  

மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)