Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Sunday, January 12, 2020

மம்தா பானெர்ஜியின் அதிரடி! இடது -காங்கிரசுக்கு உதறல் ஏன்?

மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜியிடம் நிறைய மாறுதல்கள் தெரிவதாக ஊடகச் செய்திகள் சொல்வது நிஜம்தானா? பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த தேர்தல் உத்திகளின் வெளிப்பாடா? காங்கிரஸ் கட்சிக்கு யோசிப்பதற்கெல்லாம் துப்பில்லை. என்னோடு சேரவில்லையா? நீயும் என் எதிரியே! நீயும் மோடியின் அடிமைதான் என்று கொஞ்சம் கூடத் தயங்காமல் பேசிய வினோதமும் நேற்று நிகழ்ந்தது. காங்கிரஸ் தான் உளறுவாயர்களுடைய கட்சியென்று சொல்வீர்களே, இப்போது காங்கிரஸ் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாமா என்று கேட்கிறீர்களா?


நேற்று பிரதமர் மோடியுடன் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கையோடு மம்தா பானெர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் நடத்திக் கொண்டிருந்த CAA  NRCக்கு எதிரான தர்ணாவுக்குத் திரும்பிவிட்டார். இடதுசாரி மாணவர்கள் மம்தாவுக்கு எதிராக ஆசாதி. சீ சீ (வெட்கம் வெட்கம் என்று அர்த்தமாம்) கோஷங்கள் எழுப்பி ரகளை செய்தனர். அவர்களை சமாதானப் படுத்த மம்தா சொன்னதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மோடியை இப்போது எதற்காக சந்திக்கப் போகவேண்டும் என்பது அவர்களுடைய கேள்வி. மம்தா கட்சியினர் தர்ணா நடத்திக் கொண்டிருந்த இடத்துக்கு எதிரிலேயே போட்டி தர்ணா நடத்த அமர்ந்துவிட்டனர் என்கிறது செய்தி.

Mamata Banerjee has done the unpredictable once again. What may have appeared like a political flip more than a decade ago has now taken the character of a wise, prudent manoeuvre என்று இதை சிலாகிப்பது வங்கிகளிடம் கடன் வாங்கித் திருப்பித்தராமல் 8000 கோடி ரூபாய்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற Deccan Herald நாளிதழ் தான் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும்!  மேலே என்ன சொல்கிறார்கள்?

கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரசும் சேர்ந்து CAA வைத் திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை மம்தா ஏற்க மறுத்துவிட்டார். போதாக்குறைக்கு ஜனவரி 8 அன்று காங்கிரசும் கூட்டாளிகளும் CAA வுக்கு எதிராக பாரத் பந்த் நடத்தியதில் கலந்துகொள்ளவும் மறுத்து விட்டார். ஜனங்கள் பொருளாதாரம் பாதிக்கப் படுவதை ஏற்க முடியாது என்பது மம்தா சொன்னது அதற்கும் மேலாக சோனியா காண்டி CAAவுக்கு எதிராகக் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் மறுத்துவிட்டார் .CAA வை வைத்து காங்கிரஸ் அசிங்கமான அரசியல் செய்கிறது என்று வேறு சொல்லிவிட்டாரா!? காங்கிரசுக்கும் இடதுகளுக்கும் அப்படி ஒரு எரிச்சல்! காய்கிறார்கள்! ஒப்பாரி வைக்காதகுறையாக மம்தா மீது சந்தேகமாக இருக்கிறது என்கிறார்கள்! Peeved by her stand, both the Congress and the Left chose the disturbed Murshidabad district to incite passion against the central and state governments. At Sujapur, in the same district, people set a police vehicle on fire, pelted stones at the police. மாநிலமெங்கும் வன்முறையைப் கட்டவிழ்த்து விட்டு இடதுசாரிகளும் காங்கிரசும் ஓய்ந்தார்கள். அப்போது மம்தா பானெர்ஜி சொன்னதுதான் உச்சம் It was in these circumstances that Mamata Banerjee accused the Congress-Left combine — ‘two dead forces’,  in her words —  of resorting to vandalism. 

இனிமேற்கொண்டு CAA, NRC இவைகளுக்கெதிராக தனியாகத்தான் போராட்டம் என்று மம்தா பானெர்ஜி தெளிவாக அறிவிக்கவும் செய்துவிட்டார். ஆக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்கிற ஆக்சிஜன் வென்டிலேட்டர் சப்போர்ட் போச்சே என்று காங்கிரஸ் கதறுவதன் காரணம் புரிகிறதா? இடதுசாரிகளும் சேர்ந்து ஊளையிடுவது இந்தவாரம் நடந்து கொண்டு இருக்கும் ஆகப்பெரிய அரசியல் காமெடி! 

Mamata Got Orders From Above, We Know From Whom: Cong Accuses WB CM For Skipping Oppn Meet என்று இத்தனை அட்சர சுத்தமான உளறலைக் காங்கிரஸ்காரனால் மட்டுமே செய்யமுடியும் என்பதில் இன்னும் கூட சந்தேகமா?ஜனவரி 13 சோனியா கூட்டத்திற்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று மம்தா பானெர்ஜி அறிவித்தால் காங்கிரஸ்காரன் உளறாமல்  இருந்தால் மட்டுமே ஆச்சரியம்! 

மீண்டும் சந்திப்போம். 

Friday, March 15, 2019

அரசியல் களம் இன்று! ஏன் திமுக காங்கிரஸ் வேண்டாம் ?

அரசியல் பதிவு இல்லாமல் இன்றைக்கு இந்தப் பக்கம் கொஞ்சம் டல்லடிக்கிறதோ? குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம்! மங்களகரமாக மதுரைச் செய்தியுடன், ஆரம்பித்துவிடலாமா?
உறுதியாகத் தோற்பதற்காகவே வெங்கடேசனை இங்கே நிறுத்தியிருக்கிறார்களோ? முதலில் வந்த வதந்திகளின் படி உ வாசுகி நிறுத்தப்படலாம் என்பது மாறி, சு வெங்கடேசன் என்றாகியிருக்கிறது. கோவையில் பி ஆர் நடராஜன் 2014 வரை மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் தொகுதியில் நல்ல அறிமுகமும், கண்ணியமான வாக்குகளையும் பெறக்கூடியவர் என்று ஒப்பிட்டுப்பார்த்தால் வெங்கடேசன் பூஜ்யம் என்றே சொல்லிவிடலாம். திமுக தொண்டர்கள் ஆதரவைப்பெறுவதும், கட்டிமேய்ப்பதும் ரொம்பவுமே கடினம் என்ற நிலையில் இரண்டு பேருமே ஜெயிப்பது குதிரைக்கொம்புதான்!

  
கூட்டணிப்பங்கீட்டில் இசுடாலின் சாதித்துவிட்டார் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி! ஆச்சரியமாகத்தான் இருந்தது! பார்க்கலாம்! போனமுறை பூஜ்யம் என்ற ரிசல்டிலிருந்து இந்தத்தேர்தலில் கொஞ்சம் சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்பதே ஆறுதலான செய்திதான்!
கூட்டணி உறுதி! தொகுதிப்பங்கீடும் ஒருவழியாக முடிந்தது! விசிக எந்தச் சின்னத்தில் நிற்கிறார்களாம்? இன்னமும் தெரியவில்லையே!
ராகுல் காண்டி டீ ஷர்ட், ஜீன்ஸில் வந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளை அசத்தியிருக்கிறார். சார் என்று அழைக்காதீர்கள் ராகுல் என்றே அழைக்கலாம் என்றாராம்! கட்சிக்காரர்கள் எவராவது அழைத்து விட முடியுமா? யாரும் கேட்கவில்லையே என்று விட்டுவிட முடியுமா? மாரிதாஸ் கேட்கிறார்!  நீங்களும்  கேளுங்கள்!




காங்கிரஸ்காரனுக்கும் திமு கழகத்துக்கும் உண்மையைப் பேசுவது என்றால் ரொம்பவுமே அலெர்ஜி! கேட்டால் தங்கபாலுவுக்கு ராகுல் காண்டி அழுத்தந்திருத்தமாக ரிப்பீட்டடாக உண்மை ஜெல்லும் என்று சொல்லச் சொன்னகதையை பார்த்திருக்கிறோம் இல்லையா?


ராகுல் காண்டி  பேசியதில் உண்மை இருக்கிறதா?
ரங்கராஜ் பாண்டே என்ன சொல்கிறார் என்றுதான் கேளுங்களேன்!

இங்கே இசுடாலின் அங்கே ராகுல் காண்டி இவர்களோடு கூட்டாளிகளாக இருக்கிற உதிரிகள் எல்லோரையும் முற்றொட்டாக நிராகரிப்பதே நாம் நமக்கே செய்துகொள்ளக் கூடிய நல்ல விஷயம்! 

ஏற்கெனெவே கொடுத்த்த வாய்ப்புக்களை abuse துஷ்ப்ரயோகம் செய்தவர்களை நிராகரிப்பது ஒன்றே சரியான அரசியல் செயல்பாடும் கூட! 
                       

Thursday, March 14, 2019

நல்லா இருந்த பதிவுலகமும் ஆபாசப்பின்னூட்ட உபிக்களும்!

இந்தப்பக்கங்களில் அரசியல் நிகழ்வுகளை வைத்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை யாரேனும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் கொஞ்சம் திகைப்பு இருந்தது.  நேற்றைய பதிவுக்கு வந்த சில உபித்தனமான வசவுப் பின்னூட்டங்கள், பதிவை யார்யார் கவனிக்கிறார்கள் என்பதையும், நேர்மையான பதில் சொல்லமுடியாமல் ஆபாச வசவுகளில் இறங்கிவிடுகிற கோழைத்தனத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஒரு முன்னாள் இடதுசாரியாக, தொழிற்சங்க ஈடுபாட்டோடு இருந்த நாட்களில் இருந்தே வன்முறை மிரட்டல்கள், தாக்க முயற்சிகள், ஆபாசமான வசவுகளை எதிர்கொண்ட அனுபவத்தில்  இது மாதிரி முகம்தெரியாத அனானி மிரட்டல்கள் வசவுகளைப் பார்த்து பரிதாபப்படத் தான் தோன்றுகிறது! கொஞ்சம் எழுத்துப்பிழை இல்லாமல் திட்டக் கூடத் தெரியாதவர்களைப் பார்த்து வேறென்ன செய்வது சொல்லுங்கள்?!

மாயவரத்தான் ரமேஷ் குமார் சொல்கிற மாதிரி இருந்து விடலாமா? யோசனைகள் வரவேற்கப் படுகின்றன!
 
இங்கே ராவுல் பாபாவுடைய பழைய கதைகளை, அவ்வப்போது நினைவுபடுத்துவது, அவர் இன்னமும் எப்படி அரசியல்முதிர்ச்சியோ, படிப்பினைகளையோ பெறாமல் இருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டத்தான்! தகப்பனை மாதிரியே மகனும் ஆரம்பத்தில் இளைய தலைமுறையின் வேகத்தோடு இருந்தமாதிரித்தான் தோன்றியது! ஆனால் ராஜீவும் ராகுலும் ஒரேமாதிரியான, தோற்றுப்போன, தூக்கி எறியப்பட வேண்டிய வெர்ஷன்கள் தான் என்பதை இன்றுவரை தொடர்ந்து  நிரூபித்து வரும் போது, வேறென்ன சொல்ல முடியும்

Habitual liar Rahul Gandhi. No opposition leader will keep repeating lies unless he is a pervert taking nation as if .......
“Congress President Rahul Gandhi on Sunday attacked National Security Adviser Ajit Doval alleging that he was among those responsible for the release of Jaish-e-Mohammad (JeM) chief Masood Azhar in 1999 when Indian Airlines flight IC-814 was hijacked by terrorists. Doval was tasked with leading the four-member negotiating team to Kandahar in Afghanistan to negotiate the release of passengers of the hijacked IC 814 plane.


கிளிப்பேச்சு கேட்கவா? காணொளிச் சுட்டி!    நாகர்கோவிலில் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே! என்பதற்கு மேல் நேற்றைக்கு நாகர்கோவிலில் ராகுலும் இசுடாலினும் பேசியதில் என்ன புதுவிஷயம் இருந்தது?

உலகை நீ இருக்கும் இடத்தில இருந்து பார்க்காதே... ஆனால் நீ இருக்கும் இடத்தில இருந்து பார்.
அந்த ஸ்டெல்லா மேரீஸ் புள்ள இதை யோசிச்சு யோசிச்சு அர்த்தம் புரியாமல் மன நல மருத்துவரை அனுகினாரா இல்லையா? காங்கிரஸ் ஐடி விங்,    உளவுத்துறை  எல்லாம் விசாரணை செய்யுதோ இல்லையோ, பாவம்!  

மீண்டும் புதிய செய்திகள், விமரிசனங்களோடு சந்திப்போம்! சிந்திப்போம்!   
           

Wednesday, March 13, 2019

"டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்" பப்பு மொழி!

காலம் செய்த கோமாளித்தனத்தில் காங்கிரஸ் கட்சி  எத்தனை அரிதாரங்களைபோட்டுக் கலைத்திருக்கிறது என்று பார்க்கவே மிகவும் அலுப்பாக இருக்கிறது.

இந்தக் கலந்துரையாடலில் ராவுல்பாபா இப்போதைய பிரதமரை இந்தமாதிரி  கூட்டத்தில் கேள்விகேட்டு பதில் சொல்வதைப் பார்த்திருக்கிறீர்களா என்று ஒரு சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார்! 3000 பெண்களுக்கு முன்னால் நின்று பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா என்று யாரோ எழுதிக்கொடுத்த வசனத்தைப் பேசுகிற தருணம் 27mts 57s!  துண்டுச் சீட்டைப் பார்த்துக் கொண்டே தப்பும் தவறுமாக உளறுகிற இசுடாலின் போல அல்லாமல், துண்டுச்சீட்டு இல்லாமலேயே அதே பழைய அரைத்தமாவைத் திரும்பத்திரும்ப அரைக்கிறார். ஆகையால் ராவுல் பாபாவின் பழைய கதையொன்று மீளவும்! 

2001ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகர் ஏர்போர்ட்டில் FBI யால், 1,60,000 டாலர்களுடனும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளுடனும் கூட  அழைத்து வந்த கொலம்பிய நாட்டு போதை மாபியா கும்பல் தலைவனின் மகளுடன் கைது செய்யப்பட்டார் ராகுல் காந்தி.
சோனியாவின் கெஞ்சுதலால் இந்தியாவின் மானம் கப்பலேறி விடுமே என்று அஞ்சி வாஜ்பாய் அவர்களின் முயற்சியால் அப்போதைய இந்திய வெளியுறவு துறை செயலாளர் பிரஜேஷ் மிஷ்ரா, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் பேசி பின் வாஜ்பாயின் கடும்முயற்சியால் ஜார்ஷ்புஷ்ஷால் விடுவிக்கப்பட்டார்.
ஒருவேளை வாஜ்பாய் முயற்சி எடுத்திருக்காவிடில் ராகுல் 128 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருப்பார். நமக்கும் பெரிய தலைவலி குறைந்திருக்கும். இப்போது யோக்கியன் போல நடமாடி கொண்டிருக்கமாட்டார். இவை எல்லாவற்றிற்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொன்ன வாரிசுகளின் கதைகளில் ஒன்று உடனே நினைவுக்கு வருகிறது.
*******
1990களில் ஒரு நாள் நானும் எனது சகோதரரும் "உள்ளத்தை அள்ளித்தா" படம் பார்க்கச் சென்றிருந்தோம். படம் "காமெடி வகை" என்று தெரியாமல் உள்ளே போய் வயிறு குலுங்க சிரித்துவிட்டு வந்தோம். கிட்டத்தட்ட அதே நிலை இன்று அலுவலகம் முடிந்து வீடு வந்தவுடன் "சம்பிரதாயமாக" டிவி பார்த்தபோது பப்புவின் நாகர்கோவில் பேச்சு நேரலையாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தது. 
.
மொழி பெயர்ப்பாளர் (தங்கபாலு) ராகுலுக்கு மேல் காமெடி. பாவம் அவர். உடைந்துபோன keyboard போல அடிக்கடி ஓரிரு எழுத்துக்கள் விட்டுப்போய் தமிழ் மொழியை "பெயர்த்து" எடுத்துக் கொண்டிருந்தார். (பாரதம் என்பதை பாரம் என்கிறார்)
.
ராகுல் - தங்கபாலு கூட்டு அந்தக்காலத்து "தங்கவேலு முத்துலட்சமி" காம்பினேஷன் போல இருந்தது.
.
ஒரு கட்டத்தில் ராகுல் "The great tamil poet" என்று ஆரம்பித்தவுடன் நம் மனதுக்குள் ஒரு ஜெர்க் "அய்யயோ யாரை இழுத்து தெருவில விடப் போறானோன்னு"
.
வழக்கம் போல "பெயரைக் கெடுக்கும்" பப்பு திருவள்ளுவரை "திருவா.. லவ... வலுவா" என்று துழாவ ஆரம்பித்ததும் வந்த சிரிப்பை மீறி அடுத்த ஜெர்க் நம் மனதில் "எந்த குறளோட குரல்வளைய நெரிக்கப்போறானோன்னு தெரியலையே" என்று.
.
அங்கதேன் ட்விஸ்ட் வச்சார் ராகுல். "He said உண்மையே வெல்லும்" என்று சட்டென்று முடித்து விட்டார். குறள் 7 பதம் கொண்டது, இவர் இரண்டிலேயே முடித்துவிட்டாரே!
.
"உண்மையே வெல்லும்" - அவ்வளவுதான் திருக்குறள். ஆனால் தங்கபாலுவோ இன்னும் வரும், மொழி பெயர்க்கலாம் என்று காத்திருக்க, சிறிது நேரம் கழித்து ஒன்னும் வராமல் "அவ்வளவுதான் போலிருக்கு இன்னைக்கி" என்று அதையும் மொழி பெயர்த்து அடுத்த அதிர்ச்சிக்காக காத்திருந்தார்.
.
"உண்மை வெல்லும்" "இது எந்தக் குறள் அய்யா" என்று "தேவர் மகன் ஸ்ருதி" போல நாமும் குழம்பி, சரி இது முப்பாலுக்கும் "அப்பால்" ஏதோ போல என்று மனதை தேற்றிக்கொண்டு அடுத்த வரிக்காக ஒரு திகிலுடன் காத்திருந்தோம்.
.
நாம் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கடைசியில் ராகுல் "டெல் மோடிஜி, உண்மை ஜெல்லும்" என்றார்.
.
"ஜெல்லுமா" என்று தங்கபாலு, துரைமுருகனைவிட அதிகமாக ஒரு expression கொடுக்க, பப்புவோ "i know what i mean, please go ahead" என்று புன்னகையுடன் உத்திரவாதம் கொடுக்க, தங்கபாலுவோ மையமாக "உண்மை செல்லும்" என்ற வாக்கில் ஏதோ மையமாக சொல்லி வைத்து முடித்தார்.
.
இந்த எழுச்சி உரை முடிந்தவுடன் அனைவரும் ராகுலை உச்சி முகர்ந்து "அனல் பறக்கும் பேச்சு" என்று கொஞ்சாத குறை.
.
கடைசியில் வைகோ "கண்ணுல ஜலம் வச்சுண்டு" வந்து இரண்டு முறை கைகொடுத்து "வாழ்த்து" சொன்னது மனதுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.
.
உண்மை ஜெல்லட்டும் என்று முகநூலில்  நையாண்டி செய்கிறார் ச. சண்முக நாதன் 


பொள்ளாச்சியை சம்பவமாக்கியதற்கு இதை முன்னமே செய்திருக்க வேண்டும்! இப்போதாவது செய்தார்களே பார்த்தால் என்று  குறை சொல்ல ஏதுமில்லை!    
’சத்தியமேவ ஜெயதே’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது ராகுல் காந்தி சொல்லித் தான் தெரியும்.

என்னே என் அறிவின்மை! எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை.

380 அறத்துப்பால் குறள்களில் ஒன்றிலாவது நிச்சயம் இதை சொல்லாமலா விட்டிருப்பார்? சிந்தனை தெளிவடைந்தேன்.


உத்தமசிகாமணிகளை என்ன செய்ய வேண்டுமென்பதில் ஒரு தெளிவு இருக்கிறது தானே?!!   
  

Tuesday, February 12, 2019

லெப்ட் ரைட் லெப்ட் ரைட் கடைசியில் எதுதான் ரைட் ?

கடந்த ஜனவரி 19 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானெர்ஜி, கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் மோடிக்கு எதிராய் நிற்கும்  எதிர்க் கட்சித்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, தன்னுடைய பவர் என்னவென்று காண்பித்தார். அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 3 ஆம் தேதி அதே இடத்தில் இடதுசாரிகளின் பேரணியை இன்னும் கொஞ்சம் அதிகக் கூட்டத்துடன் நடத்திக் காண்பித்தது.
அங்கே சுற்றி இங்கே சுற்றி காம்ரேடுகள் என்ன முடிவு செய்திருக்கிறார்களாம்? கண்மூடித்தனமான மோடி எதிர்ப்பு எந்த முட்டுச் சந்துக்குள் டோலர்களைக் கொண்டு வந்து நிறுத்தும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானதில்லை. இந்தமாதம் 9ஆம் தேதி நடந்து முடிந்த பொலிட்பீரோ முடிவுகளை சீதாராம் யெச்சூரி பூசிமெழுகிச் சொல்வதை பார்க்க இங்கே. மார்ச் மத்தியக்குழு அங்கீகரித்தபிறகுதான் என்று சொல்லப்பட்டதை   இங்கே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தாயிற்று.      

நீண்ட நாட்களுக்கு முன்னால் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கொஞ்சம் வருத்தப்பட்டே சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரு வலதுசாரிக்கட்சியாக பிஜேபி இங்கே வலுவாக்க காலூன்றிக் கொண்டதற்கு, சமன் செய்கிற மாதிரி ஒரு  இடதுசாரி கட்சியும் வலுவாக இருக்கவேண்டும் என்பது அவர் சொன்னதன் சாராம்சம். இங்கே இடதுசாரிகள் என்ன செய்கிறார்கள்?  எதனோடோ சேர்ந்த கன்றுக்குட்டி எதையோ தின்னப்போன கதையாக  இங்கே கழகங்களோடும் அங்கே காங்கிரசோடும் உறவாடிச் சீரழிந்து கொண்டு வருவது மட்டும் கண்முன்னால் நிகழும் கள     யதார்த்தம். 

தொடர்புடைய இன்னொரு பதிவு   இங்கே ராமச்சந்திர குஹா என்ன சொன்னார் என்பதைச் சுருக்கமாகச் சொல்கிற பதிவு. 

ஒரு நல்ல மாற்றத்துக்கு இப்போதுள்ள கட்சிகளோ கூட்டணிகளோ வழிவகுக்கப்போவதில்லை. பழையதை உடைத்துப் புதியது பிறந்தாக வேண்டும். 

எங்கேயோ மழை பெய்கிறது என்றிருக்கும் ஜனங்கள் மாறுவதற்குத் தாயாராக வேண்டும். வழிநடத்த ஒரு நல்ல தலைமை, எங்கிருந்தோ அல்ல, நம்மிடமிருந்தே உருவாகவேண்டும்.

எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? கொஞ்சம் சொல்லுங்களேன்!

                   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)