Showing posts with label கழகங்கள். Show all posts
Showing posts with label கழகங்கள். Show all posts

Monday, December 21, 2020

#2021தேர்தல்களம் கிழக்கே மே.வங்கம்! தெற்கே தமிழ்நாடு! #அரசியல்இன்று

மேற்கு வங்க அரசியல்களம், தேர்தல்களம், உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டுநாள் விஜயமாக அங்கே போய்வந்த பிறகு, சூடு பிடித்திருக்கிறது என்று சொல்வதை விட ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு அதிக கிலி பிடிக்க ஆரம்பித்து விட்டதென்றே தெரிகிறது! அதுவும் போக மம்தா பானெர்ஜிக்கு image makeover மற்றும் தேர்தல் உத்தி வகுக்கப் போயிருக்கும் IPAC பிரசாந்த் கிஷோர் பிழைப்பிலும் மண்விழுந்துவிடும் போல இருக்கிறது!


முகநூலில் பானு கோம்ஸ் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்:

ஆக .....வருகின்ற மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில்... பிஜேபி 99 தொகுதிகளில் உறுதியாக வெற்றி பெற்றுவிடும் என்று தன்னுடைய political strategist பணியின் மீது சத்தியம் செய்து கூறுகிறார் பிரஷாந்த் கிஷோர் ! 🙂
எதிரியின் அளவீடே 99 எனும்போது...இரட்டை இலக்கத்தை தாண்டுகிற முயற்சியை ..அமித்ஷா & co சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதன் grudging acknowledgement இது என்றே புரிந்து கொள்ள வேண்டும் ! 🙂
[ தற்போதைய West Bengal சட்டசபையில்... 16 பிஜேபி எம் எல் ஏக்கள் இருக்கிறார்கள்.]
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’Prashant Kishor @PrashantKishor For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal PS: Please save this tweet and if BJP does any better I must quit this space! 10:22 21 Dec 20 20 Twitter for iPhone Phone’ எனச்சொல்லும் உரை
Arul Selva Perarasan S மற்றும் 923 பேர்
67 கருத்துக்கள்
149 பகிர்வுகள்

பிஜேபியை,   நரேந்திர மோடியைக் கடுமையாக விமரிசிக்கும் கார்ட்டூனிஸ்ட் சதீஷுக்கு பிரசாந்த் கிஷோர் சவால் விடுவதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை போல இருக்கிறது! பயத்தில் உளறுவதெல்லாம் சவாலாகி விடுமா சதீஷ்? 


இங்கே தமிழக அரசியல்களம் என்ன நிலையில் இருக்கிறது? 


எஸ்ரா சற்குணம் மாதிரி முழுநேர திமுக பாதிரிகளை வைத்துக் கொண்டு வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஈரோட்டு ராம்சாமி மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், ராம்சாமி சொன்ன உருப்படியான விஷயம் நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என்பது
உண்மையில் அது நல்ல விஷயம், நடிகனுக்கு என்ன தெரியும் நடிக்கும் கூத்தாடி கூட்டத்துக்கு என்ன தெரியும் என்ற அந்த சாடல் ஒருவகையில் நியாயமானது
இங்கு சினிமாவினை அரசியலுக்கு இழுத்து வந்தது கருணாநிதி, ராம்சாமி பெயரை சொன்னால் 4 வோட்டு அல்ல ஒரு வோட்டும் விழாது, தன் பெயரை சொன்னால் அரை வோட்டும் விழாது என்பதை உணர்ந்த அண்ணாவும் கருணாநிதியும் ராம்சந்தரை முன்னிறுத்தி இங்கு நாசமாய் போன கலாச்சாரத்தை தொடங்கி வைத்தனர்
ராம்சந்திரன் காட்டிய மாயாஜாலத்தில் ஆளாளுக்கு சினிமா ஆசை வந்தாலும் ஜெயலலிதா இருந்தவரை கொஞ்சம் அடக்கி வைத்திருந்தார்
இதில் கருணாநிதியின் கூட்டும் இருந்தது
இதில்தான் பாக்யராஜ், டி.ராஜேந்தர்,கார்த்திக், சரத்குமார் , விஜயகாந்த் என எல்லா சினிமாக்காரர்களும் தவிட்டு கடைக்கு தள்ளபட்டனர்
ஒரு சினிமாக்காரனால் கெட்ட தமிழகம் இன்னொரு சினிமாக்காரனை தாங்காது என இருவரும் முடிவோடு இருந்தாலும் அடுத்தது யார் என இருவருக்குமே சொல்ல தெரியவில்லை
இரு பிம்பங்களுமே அப்படியே இருந்து மறைந்தன‌
இப்பொழுது மறுபடி ஆட்டம் அதிகரிகின்றது, கமலஹாசர், ரஜினி என ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் விஜயண்ணாவுக்கு கொம்பு சீவும் காட்சியும் நடக்கின்றது
1960ல் இருந்து 2020 வரை அரசியலுக்கு வருபவர்களில் 99% சதவீதம் பேர் சினிமா கோஷ்டியே
சினிமாவினை அரசியலில் கலக்கவிட்ட பாவம் தன் மகனையே சுழற்றி அடிக்கும் என கருணாநிதி நினைத்திருக்கமாட்டார்
அவரின் திட்டம் எதுவுமே உருப்படியல்ல, சொந்த வீட்டுக்கு கூட நலம் கொடுக்காதது என்பது இப்பொழுதுதான் எல்லோருக்கும் புரிகின்றது, அவர் குடும்பத்தாருக்கும் புரிகின்றது
இதை அன்றே சொன்ன எம்.ஆர் ராதாவின் வார்த்தைகளோடு நினைவு கூறலாம்
"டேய் ராமசந்திரா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல்?
உனக்கு என்ன தெரியும்னு நீயெல்லாம் அரசியல் பேசுற? அங்க காமராஜர் மாதிரி நல்லங்க இருக்காங்க, டெல்லில சாஸ்திரி மாதிரி தியாகிங்க இருக்காங்க‌
இந்த நாட்டுல சில பிணக்குகள் இருக்கலாம், எந்த நாட்டுல பிணக்கு இல்ல எல்லா நாட்டிலேயும் இருக்கு?
அத அரசியல் ஆக்காதே, அதுவும் நீ ஆக்காதே, அது பின்னாளையில பெரிய பிரச்சினையா மாறி மாநிலமே நாசமாகும்
ஒழுங்கா நடிச்சியா, நல்ல கருத்துக்கள சொன்னியான்னு இரு. அதுதான் இந்த நாட்டுக்கு பெரிய சேவை, அதைவிட நீ ஒண்ணும் அரசியல்ல போய் கிழிக்க போறதில்ல‌
சொன்னா கேளு, அரசியல் பேசாத, ஒழுங்கா நடிக்கிற வேலைய யாரு அதுதான் உனக்கும் நல்லது நாட்டுக்கும் ரொம்ப நல்லது"
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் திருமணம்
217
8 கருத்துக்கள்
37 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

இஸ்லாமியர்களுக்கு திமுகவை விட்டால் வேறு போக்கிடமே இல்லை என்ற நிலை மாற்ற அசாதுதீன் ஒவைசி தன்னுடைய AIMIM கட்சியுடன் (நயம் முஸ்லீம் கட்சி முத்திரையுடன்)  வருகிற சட்டசபைத் தேர்தலில் களம் இறங்குகிறாராம்! எஸ்ரா சற்குணம் திமுகவுக்கு கிறிஸ்தவ ஓட்டுக்களைச் சிந்தாமல் சிதறாமல் வாங்கித் தர முடியுமா என்பது சந்தேகம்தான்! ஆனால் ஒவைசி..? இங்கே யாருடன் கூட்டுச் சேரப்போகிறார்?

விடைகாண முடியாமல் தமிழக அரசியல் களம் வெகுவாக இப்போதே குழம்ப ஆரம்பித்து விட்டது.

மீண்டும் சந்திப்போம்       

Monday, September 28, 2020

கூட்டணி தர்மம்! அரசியலில் சாபங்கள் விலகும் நேரம் இது!

கூகிள் ப்ளஸ் இருந்த நாட்களில் வலைப்பதிவுகள் எழுதத் தோன்றியதே இல்லை. முக்கியமான காரணமாக, கூகிள் பிளஸ்சில் நடப்புச் செய்திகளின் மீது சுருக்கமான விமரிசனங்களை எழுத முடிந்ததுதான்! ஒரேநாளில் இருபது, முப்பது  விமரிசனக் குறிப்புக்களைக் கூட நடப்பு செய்திகளின் மீது சுடச் சுட எழுத முடிந்ததும் இன்னொரு காரணம். எதற்காக இந்த பழைய கூகிள் ப்ளஸ் புராணம் என்கிறீர்களா?  காரணம் இருக்கிறது. 

 

சிவசேனா, அகாலி தளம் இரண்டுமே பிஜேபியை பிடித்த சாபங்கள் என்று நீண்டநாட்களாகவே (2014 நாடாளு மன்றத் தேர்தல்களுக்கு முன்பிருந்தே) என்னுடைய கருத்தாகப் பதிவு செய்து வந்திருக்கிறேன்.இதை எழுத நான் பிஜேபி/RSS உறுப்பினர் அல்லது அனுதாபியாக இருந்துதான் ஆகவேண்டுமென்பதில்லை. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து கவனித்து வந்தாலே போதும் இல்லையா?  

சேகர் குப்தா மேலே இருக்கும் 28 நிமிட வீடியோவில் பிஜேபி அகாலி தளத்தைக் கைகழுவியது ஏன் என்பது குறித்து அவரது அரசியல் அகடவிகடத்தைச் சொல்லி இருக்கிறார். வாஜ்பாயி காலத்து அரசியல் நிதானம்  நரேந்திர மோடி-அமித்ஷா காலத்தில் இல்லாமல் போனதே என்று அனாவசியமாக விசனப்படுகிறார் 

சோனியா அமைத்த ஐமுகூ எப்படி பெரும் ஊழலுக்கான கூட்டணியாக மட்டுமே இருந்தது என்பதைச் சொல்லத்  தைரியம் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒப்பாரி வைக்க முடியும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியால் அந்தக்கூட்டணிக்கு என்ன வலுசேர்க்க முடிந்தது என்ற ஒரு கேள்வியிலேயே சேகர் குப்தாவின் ஒருதலைப்பட்சமான விமரிசனத்துக்கான பதிலும் கூட இருக்கிறதே!

சிவசேனாவின் அதிகாரப் பேராசை அது மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றியதிலும், ஊழலில் திளைத்ததிலும் முன்னரே வெளிப்பட்டது. அதிகாரப் பசிக்காக தாக்கரேக்கள் சோனியாவுடன் கூட  கூட்டுச் சேர்ந்ததுமே தெரிந்த கதைதான்! தாக்கரேக்கள் புலிகள் அல்ல வெறும் எலிகள்தான் என்பதும் நிரூபணமானது. கங்கனா ரணாவத் கேலியாகச் சொன்னது போல இன்று அது சோனியா சேனா மட்டும் தான்! 

ஆக நேற்று சிவசேனா, இன்றைக்கு அகாலி தளம் இவை பிஜேபி கூட்டணியை விட்டு வெளியேறியது நல்லது தான்! விட்டது சனியன், விலகியது சாபம் என்று பிஜேபி கட்சியினர் சந்தோஷப்பட்டால், அதில் நியாயம் உண்டு!

அதேபோல தமிழகத்திலும் கூட ஏதோ ஒரு கழகத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பது என்பதையும் விட்டார்களானால் இன்னொரு சாபமும் கூட விலகிவிடும்!

தமிழக பிஜேபிக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.         

           .

Monday, January 27, 2020

தமிழருவி மணியன் ஒருவரே போதும்! #damager

பழ.கருப்பையா, தமிழருவி மணியன் போன்றவர்கள் காமராஜரின் தொண்டர்களாக இருந்தது, காந்தியம் பேசிக் கொண்டே எந்தெந்தக்குட்டிச்சுவர்களில் போய் நின்றார்கள் என்பதையெல்லாம் திரும்பிப் பார்த்தால் குமட்டிக் கொண்டு வருகிறது. காந்திய மக்கள் இயக்கம் என்று தனிக்கடை போட்டவர் இன்றைக்கு ரஜனிக்கு அரசியல் ஆலோசகர் என்கிறார்கள். இவர் போன இடம் எதிலும் நிலைத்து நின்றவர் இல்லை, போன இடம் எதுவும் உருப்பட்டதில்லை! #வைகோ மாதிரி ஒரு ராசி! இப்போது நிறையப்பேச ஆரம்பித்து இருக்கிறார்! காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

  
இந்த வீடியோவை சாணக்யா தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேச்சு வியாபாரிகளை நம்பித் தமிழகம் இத்தனை நாள் கெட்டது போதாது என்று ஒரு புது ப்ராண்டைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு மணியன் புதிதாகக் கிளம்பியிருக்கிறார் என்பதில் சந்தோஷப்பட எதுவும் இல்லை.  திமுக, காங்கிரசைச் சாடுகிறார்,  பொன்னாரைப் புகழ்கிறார், பிஜேபிக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதில் எல்லாம் எனக்கு, எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என  இவருடைய கடந்த காலம் மட்டுமே கண்முன் வந்து நிற்கிறது. 

இவரை, இவர் பேச்சை இன்னமும் நம்புகிறவர்களை, இவருடைய ஆலோசனைகளைக் கேட்பவர்களைப்  பார்க்க மிகவும்  பரிதாபமாக இருக்கிறது.

விதியே விதியே! தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்?

மீண்டும் சந்திப்போம்.                

Friday, June 14, 2019

எது பொருளோ அதைப்பேசுவோம்! #4

தமிழ்நாட்டில்  ரெண்டு மூணு சினிமாவில் பெயர் எடுத்த புள்ளிகளுக்கும் கூட  அரசியல் மீது ஒரு வெறித்தனமான ஆசை வந்து விட்டது. அதற்கேற்பக்  காய்நகர்த்தலும் ஆரம்பம் ஆகியிருக்கிற கொடுமையை கவனித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஏற்கெனெவே சினிமாவால் சீரழிந்த தமிழகம், மயக்கத்தில் இருந்து விடுபடுமா என்ற கேள்வியை எப்போதாவது யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா?



ரவீந்திரன் துரைசாமி ஸ்டாலினுடையதலைமை, திறமை மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிற விதமே 37 எம்பிக்கள் 13 MLAக்கள் என்று ஒரே தேர்தலில் ஜெயித்தும் ஒரு பயனுமில்லாமல் போன  பரிதாபத்தை சொல்லாமல் சொல்கிறது. இந்த விவாதத்தின் மையமே அதிமுகவில்  எழும்பிய ஒற்றைத்தலைமை விவகாரம் அப்படியே அடங்கிப்போனது பற்றித்தான் என்றாலும் போகிறபோக்கில் பா ரஞ்சித் பற்றியும் பேசுகிறார். அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய விவாதமில்லைதான்! ஆனால் கவனிக்கலாமே!


எல்லோரும் வாய்சலிக்கப் பேசிய ஒற்றைத்தலைமை சர்ச்சை மீது ரங்கராஜ் பாண்டேவும் தன்னுடைய பார்வையைச் சொல்கிறார். ரவீந்திரன் துரைசாமியை பெரிய அரசியல் விமரிசகர் என்று நினைக்கிறீர்களா? அவரைவிட, தேர்ந்த ஊடகக்காரராகவும் அரசியல் விமரிசகருமாக ரங்கராஜ் பாண்டே இருப்பதை மேலே உள்ள வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  

அதென்ன அலுப்பூட்டுகிற அதிமுக சமாசாரமாகச் சொல்லிக் கொண்டே போவது என்கிறீர்களா? திமுக தரப்பில் அத்தனை சுரத்து இல்லையே, என்ன செய்வது?


தயாநிதி மாறன்  தான் அதிக மார்ஜினில் ஜெயித்த சாதனையைச்  சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் தான் திமுக இருப்பதாகத் தோன்றுகிறது, தயாநிதி இடத்தில் ஜெயித்த வேறு எந்த  எம்பி அல்லது சமஉ பெயரை வைத்துப்பார்த்தாலும் கூட அதுதான் நிலைமை! 


மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத்துப்பில்லை! பேசித் தீர்த்திருக்கவேண்டிய விஷயத்தை பூதாகாரமாக ஊதிப் பெருக்கியதே தான்தான் என்பதுகூட மம்தா  பானெர்ஜிக்குக் கொஞ்சமும் உறைக்கவில்லை. ஆனால் முஸ்லிம் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாதென்று பிஜேபி சதி செய்வதாகக் குற்றம் சொல்ல மட்டும் தெரியும். வெறிபிடித்தலைகிற மம்தா பானெர்ஜி மாதிரியானவர்கள் இந்திய அரசியலுக்கும், பொது சமூகத்துக்கும் மிகமிக ஆபத்தானவர்கள் என்பதற்கு மேல் என்ன சொல்ல?


எது பொருளோ அதை பேசுவோம்! என்றதலைப்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான செய்திகளை, அந்தப் பக்கத்தில் பேச ஆரம்பித்திருக்கிறோம். இங்கேயும்  தொடரலாமா? 

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி போயிருக்கிறார், இந்தக்கூட்டத்தில் பாகிஸ்தானிய பயங்கர வாதம் பற்றி எதையும் பேசவேண்டாமே என்று சீன அதிபர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாக பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் ஒரு செய்தி கூட வந்தது. ஆனால் பாகிஸ்தான் தூண்டுதலில் வளர்த்துவிடப்படும் பயங்கரவாதம் குறித்து இந்தியா தன்னுடைய நிலைபாட்டை  சீனர்களுக்குத் தெளிவான செய்தியில் சொல்லியிருக்கிறது.  வழக்கம்போல பாகிஸ்தானுடன் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அரதப்பழசான விஷயத்தை சமாதானப்பிரியர்கள் மணிசங்கர் அய்யர், NC, PDP முதலான   காஷ்மீரி அரசியல் கட்சிகள் என்று ஒரு கூட்டமே வந்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறது. அரைமணிநேர விவாதம்தான்! பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.

        

Thursday, March 14, 2019

நல்லா இருந்த பதிவுலகமும் ஆபாசப்பின்னூட்ட உபிக்களும்!

இந்தப்பக்கங்களில் அரசியல் நிகழ்வுகளை வைத்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை யாரேனும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் கொஞ்சம் திகைப்பு இருந்தது.  நேற்றைய பதிவுக்கு வந்த சில உபித்தனமான வசவுப் பின்னூட்டங்கள், பதிவை யார்யார் கவனிக்கிறார்கள் என்பதையும், நேர்மையான பதில் சொல்லமுடியாமல் ஆபாச வசவுகளில் இறங்கிவிடுகிற கோழைத்தனத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஒரு முன்னாள் இடதுசாரியாக, தொழிற்சங்க ஈடுபாட்டோடு இருந்த நாட்களில் இருந்தே வன்முறை மிரட்டல்கள், தாக்க முயற்சிகள், ஆபாசமான வசவுகளை எதிர்கொண்ட அனுபவத்தில்  இது மாதிரி முகம்தெரியாத அனானி மிரட்டல்கள் வசவுகளைப் பார்த்து பரிதாபப்படத் தான் தோன்றுகிறது! கொஞ்சம் எழுத்துப்பிழை இல்லாமல் திட்டக் கூடத் தெரியாதவர்களைப் பார்த்து வேறென்ன செய்வது சொல்லுங்கள்?!

மாயவரத்தான் ரமேஷ் குமார் சொல்கிற மாதிரி இருந்து விடலாமா? யோசனைகள் வரவேற்கப் படுகின்றன!
 
இங்கே ராவுல் பாபாவுடைய பழைய கதைகளை, அவ்வப்போது நினைவுபடுத்துவது, அவர் இன்னமும் எப்படி அரசியல்முதிர்ச்சியோ, படிப்பினைகளையோ பெறாமல் இருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டத்தான்! தகப்பனை மாதிரியே மகனும் ஆரம்பத்தில் இளைய தலைமுறையின் வேகத்தோடு இருந்தமாதிரித்தான் தோன்றியது! ஆனால் ராஜீவும் ராகுலும் ஒரேமாதிரியான, தோற்றுப்போன, தூக்கி எறியப்பட வேண்டிய வெர்ஷன்கள் தான் என்பதை இன்றுவரை தொடர்ந்து  நிரூபித்து வரும் போது, வேறென்ன சொல்ல முடியும்

Habitual liar Rahul Gandhi. No opposition leader will keep repeating lies unless he is a pervert taking nation as if .......
“Congress President Rahul Gandhi on Sunday attacked National Security Adviser Ajit Doval alleging that he was among those responsible for the release of Jaish-e-Mohammad (JeM) chief Masood Azhar in 1999 when Indian Airlines flight IC-814 was hijacked by terrorists. Doval was tasked with leading the four-member negotiating team to Kandahar in Afghanistan to negotiate the release of passengers of the hijacked IC 814 plane.


கிளிப்பேச்சு கேட்கவா? காணொளிச் சுட்டி!    நாகர்கோவிலில் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே! என்பதற்கு மேல் நேற்றைக்கு நாகர்கோவிலில் ராகுலும் இசுடாலினும் பேசியதில் என்ன புதுவிஷயம் இருந்தது?

உலகை நீ இருக்கும் இடத்தில இருந்து பார்க்காதே... ஆனால் நீ இருக்கும் இடத்தில இருந்து பார்.
அந்த ஸ்டெல்லா மேரீஸ் புள்ள இதை யோசிச்சு யோசிச்சு அர்த்தம் புரியாமல் மன நல மருத்துவரை அனுகினாரா இல்லையா? காங்கிரஸ் ஐடி விங்,    உளவுத்துறை  எல்லாம் விசாரணை செய்யுதோ இல்லையோ, பாவம்!  

மீண்டும் புதிய செய்திகள், விமரிசனங்களோடு சந்திப்போம்! சிந்திப்போம்!   
           

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)