தமிழ்நாட்டில் ரெண்டு மூணு சினிமாவில் பெயர் எடுத்த புள்ளிகளுக்கும் கூட அரசியல் மீது ஒரு வெறித்தனமான ஆசை வந்து விட்டது. அதற்கேற்பக் காய்நகர்த்தலும் ஆரம்பம் ஆகியிருக்கிற கொடுமையை கவனித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஏற்கெனெவே சினிமாவால் சீரழிந்த தமிழகம், மயக்கத்தில் இருந்து விடுபடுமா என்ற கேள்வியை எப்போதாவது யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
ரவீந்திரன் துரைசாமி ஸ்டாலினுடையதலைமை, திறமை மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிற விதமே 37 எம்பிக்கள் 13 MLAக்கள் என்று ஒரே தேர்தலில் ஜெயித்தும் ஒரு பயனுமில்லாமல் போன பரிதாபத்தை சொல்லாமல் சொல்கிறது. இந்த விவாதத்தின் மையமே அதிமுகவில் எழும்பிய ஒற்றைத்தலைமை விவகாரம் அப்படியே அடங்கிப்போனது பற்றித்தான் என்றாலும் போகிறபோக்கில் பா ரஞ்சித் பற்றியும் பேசுகிறார். அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய விவாதமில்லைதான்! ஆனால் கவனிக்கலாமே!
எல்லோரும் வாய்சலிக்கப் பேசிய ஒற்றைத்தலைமை சர்ச்சை மீது ரங்கராஜ் பாண்டேவும் தன்னுடைய பார்வையைச் சொல்கிறார். ரவீந்திரன் துரைசாமியை பெரிய அரசியல் விமரிசகர் என்று நினைக்கிறீர்களா? அவரைவிட, தேர்ந்த ஊடகக்காரராகவும் அரசியல் விமரிசகருமாக ரங்கராஜ் பாண்டே இருப்பதை மேலே உள்ள வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அதென்ன அலுப்பூட்டுகிற அதிமுக சமாசாரமாகச் சொல்லிக் கொண்டே போவது என்கிறீர்களா? திமுக தரப்பில் அத்தனை சுரத்து இல்லையே, என்ன செய்வது?
தயாநிதி மாறன் தான் அதிக மார்ஜினில் ஜெயித்த சாதனையைச் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் தான் திமுக இருப்பதாகத் தோன்றுகிறது, தயாநிதி இடத்தில் ஜெயித்த வேறு எந்த எம்பி அல்லது சமஉ பெயரை வைத்துப்பார்த்தாலும் கூட அதுதான் நிலைமை!
மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத்துப்பில்லை! பேசித் தீர்த்திருக்கவேண்டிய விஷயத்தை பூதாகாரமாக ஊதிப் பெருக்கியதே தான்தான் என்பதுகூட மம்தா பானெர்ஜிக்குக் கொஞ்சமும் உறைக்கவில்லை. ஆனால் முஸ்லிம் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாதென்று பிஜேபி சதி செய்வதாகக் குற்றம் சொல்ல மட்டும் தெரியும். வெறிபிடித்தலைகிற மம்தா பானெர்ஜி மாதிரியானவர்கள் இந்திய அரசியலுக்கும், பொது சமூகத்துக்கும் மிகமிக ஆபத்தானவர்கள் என்பதற்கு மேல் என்ன சொல்ல?
எது பொருளோ அதை பேசுவோம்! என்றதலைப்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான செய்திகளை, அந்தப் பக்கத்தில் பேச ஆரம்பித்திருக்கிறோம். இங்கேயும் தொடரலாமா?
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி போயிருக்கிறார், இந்தக்கூட்டத்தில் பாகிஸ்தானிய பயங்கர வாதம் பற்றி எதையும் பேசவேண்டாமே என்று சீன அதிபர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாக பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் ஒரு செய்தி கூட வந்தது. ஆனால் பாகிஸ்தான் தூண்டுதலில் வளர்த்துவிடப்படும் பயங்கரவாதம் குறித்து இந்தியா தன்னுடைய நிலைபாட்டை சீனர்களுக்குத் தெளிவான செய்தியில் சொல்லியிருக்கிறது. வழக்கம்போல பாகிஸ்தானுடன் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அரதப்பழசான விஷயத்தை சமாதானப்பிரியர்கள் மணிசங்கர் அய்யர், NC, PDP முதலான காஷ்மீரி அரசியல் கட்சிகள் என்று ஒரு கூட்டமே வந்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறது. அரைமணிநேர விவாதம்தான்! பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.
இப்படி அலசுவதும் நன்றாகத் தான் இருக்கிறது. குட்டி குட்டி விஷயமாகத் தேர்ந்தெடுத்து குட்டுவதும் அலாதி தான்.
ReplyDeleteகுட்டியாகவோ அல்லது பெரிதாகவோ எப்படிப் பேசினாலும் தமிழக அரசியல்களமும் ஊடகங்களும் குண்டுசட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள் என்றுநம்புகிறேன் ஜீவி சார்!
Delete