அடக்குவேன் நொறுக்குவேன் என்றமாதிரியே பேசிக் கொண்டிருந்த மம்தா பானெர்ஜிக்கு இப்போது சுருதி குறைந்திருக்கற மாதிரித் தெரிகிறது. கொல்கத்தா உயர்நீதி மன்றம் மருத்துவர்கள் வேலைநிறுத்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்துவிட்டதோடு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி மேற்குவங்க அரசுக்கு ஒரு கொட்டு வைத்திருக்கிறது.
கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. எனவே வேலைக்குத் திரும்புங்கள் என்று வேண்டிக்கொள்கிற மம்தாவின் குரல் கொஞ்சம் இறங்கி ஒலித்தாலும் மருத்துவர்கள் மம்தா பானெர்ஜி முதலில் மன்னிப்புக் கேட்கட்டும் என்பதில் கறார்.வெள்ளிக்கிழமை உத்தேசிக்கப்பட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டு, இப்போது மருத்துவர்கள் மம்தா பானெர்ஜியுடன் அவருடைய இருப்பிடத்திலேயே பேச ஒப்புக்கொண்டாலும், பேச்சுவார்த்தை மீடியாக்கள் முன்னிலையில் தான் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையை மம்தா ஏற்பாரா என்பது இன்னமும் தெளிவாக்கப்படவில்லை.
Retweets இப்போது மம்தாவுக்கு வைத்தியம் பார்க்கக் கூடிய ஒரே மருத்துவர் மோடி சர்க்கார்தான் என்று ட்வீட்டர் கலகலக்கிறது!
இது சுப.வீரபாண்டியன் ஒப்பாரி:
அனிதாவின் மரணம் பற்றி நாடே கொந்தளித்துக் குமுறிய நேரத்தில், ரஞ்சித், இயக்குனர் அமீரின் ஒலிவாங்கியைப் பறித்துப் பறித்துப் பேசினார். உடனே எல்லா ஊடகங்களும், அனிதாவை விட்டுவிட்டு, ரஞ்சித்-அமீர் மோதல் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டன. சென்ற தேர்தல் நேரத்தில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தலித் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஏழு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார். அது சரியா, தவறா என்ற விவாதம் கிளம்பியது. இப்போது புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில், மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடுவதை முற்போக்காளர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்துகொண்டிருக்கும் நேரத்தில், ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெகுண்டெழுந்து பேசுகின்றார். முற்போக்காளர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார். இப்போது மொழிக்கொள்கை பற்றிய விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ராஜராஜன் முன்னுக்கு வந்து விட்டார்.
அசுர பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது பி.ஜே.பி. அதன் தவறுகளை வாதத்திறமை மற்றும் அனுபவ அறிவால் உறுதியாகச் சுட்டிக்காட்டி, குட்டக்கூடியவர் யாராவது எதிர்க்கட்சிகளின் வரிசையில் உள்ளனரா?
கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. எனவே வேலைக்குத் திரும்புங்கள் என்று வேண்டிக்கொள்கிற மம்தாவின் குரல் கொஞ்சம் இறங்கி ஒலித்தாலும் மருத்துவர்கள் மம்தா பானெர்ஜி முதலில் மன்னிப்புக் கேட்கட்டும் என்பதில் கறார்.வெள்ளிக்கிழமை உத்தேசிக்கப்பட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டு, இப்போது மருத்துவர்கள் மம்தா பானெர்ஜியுடன் அவருடைய இருப்பிடத்திலேயே பேச ஒப்புக்கொண்டாலும், பேச்சுவார்த்தை மீடியாக்கள் முன்னிலையில் தான் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையை மம்தா ஏற்பாரா என்பது இன்னமும் தெளிவாக்கப்படவில்லை.
Seems the only doctor who can treat Mamata Banerjee in present situation...
12:09 AM · Jun 16, 2019 · Twitter for Android
இது சுப.வீரபாண்டியன் ஒப்பாரி:
அனிதாவின் மரணம் பற்றி நாடே கொந்தளித்துக் குமுறிய நேரத்தில், ரஞ்சித், இயக்குனர் அமீரின் ஒலிவாங்கியைப் பறித்துப் பறித்துப் பேசினார். உடனே எல்லா ஊடகங்களும், அனிதாவை விட்டுவிட்டு, ரஞ்சித்-அமீர் மோதல் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டன. சென்ற தேர்தல் நேரத்தில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தலித் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஏழு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார். அது சரியா, தவறா என்ற விவாதம் கிளம்பியது. இப்போது புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில், மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடுவதை முற்போக்காளர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்துகொண்டிருக்கும் நேரத்தில், ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெகுண்டெழுந்து பேசுகின்றார். முற்போக்காளர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார். இப்போது மொழிக்கொள்கை பற்றிய விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ராஜராஜன் முன்னுக்கு வந்து விட்டார்.
ரஞ்சித்! நீங்கள் யார்? நல்லவரா? கெட்டவரா? ஒண்ணுமே புரியலையே! நீங்க அடிக்கிற கூத்துல திராவிடப்பசப்புகள் எல்லாம் திசைமாறிப் போயிடுதே! அதுதான் சுபவீ செட்டியார் இவ்வளவு புலம்புகிறார் போல!
ஜெயமோகன் தாக்கப்பட்டது குறித்து சிரிக்கும் சமூகம் குறித்து கவலையுடன் நிறைய பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
நானும் நேற்று 'ஜெயமோகன் தாக்கப்பட்டார்!' என்று ஒரு பதிவு பார்த்ததுமே அதிர்ந்தேன். ஆனால் இன்னொரு பதிவில் காரணம் தெரிந்ததும் 'களுக்' என்று தானாகவே சிரிப்புதான் வந்தது. சில அரிய விதிவிலக்குகள் தவிர்த்து, தமிழ் முகநூல் முழுக்க இதற்கு சிரித்து வைத்திருப்பது தமிழர்களின் நகைச்சுவை உணர்வையும், ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் தன்மையையுமே காட்டுவதாக நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை, அது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
இந்த சம்பவத்தை வைத்து எழுத்தாளர்கள் பாதுகாப்பு, டாஸ்மாக்கின் கொடூரம் என்றெல்லாம் பேசுவதுதான் சோகமான விஷயம். எப்பொழுதுமே விறைப்பாக வால்டர் வெற்றிவேல் மாதிரி இருப்பவர்களை நினைத்துதான் நான் உண்மையில் கவலைப்படுகிறேன்.
எனவே, ரொம்ப சீரியசாக இதனை அணுக நினைப்பவர்கள் 'நாசமாய்ப்போன தமிழ் சமூகமே!' என்று உரை எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு நல்ல தெரபிஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொள்வது உபயோகமாக இருக்கும்.
ஏ.கே.கோபாலன், சோம்நாத் சாட்டர்ஜி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், வாஜ்பாய் என்று நாடாளுமன்றத்தைத் தெறிக்கவிட்டவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இப்போது, தேடினாலும் அப்படிப்பட்டவர்கள் கிடைக்க மாட்டார்கள். இந்த 17-வது லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் ஃபரூக் அப்துல்லா, சசிதரூர், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்றவர்கள்தான் உள்ளனர். இவர்களில் பலரும் வாயைத் திறந்தாலே பி.ஜே.பி ‘தெறிக்க’விட்டுவிடும் என்பதுதான் நிதர்சனம்!
ஜூவி கழுகார் பதிலில் அவ்வப்போது இப்படி சுவாரசியம்!
பொறுப்பில்லாத மம்மியா இருக்காங்களே! அங்கேயிங்கே ஒத்தடம் கொடுத்து அடுத்த கோதாவுக்குப் பையனைத் தயார் செய்யறதை விட்டுவிட்டு இப்படிப்போட்டு மொத்திட்டீங்களேன்னா கையை நீட்டறது? 😆 😊
மீண்டும் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment