புதன்கிழமை என்றால் எங்கள்Blog இல் கேள்விபதில் பதிவு கௌதமன் சாருடைய தனிக்காட்டு ராஜாங்கம் என்பதோடு கொஞ்சம் சுவாரசியமான விஷயங்களும் இருக்கும். இந்த புதன் கிழமைப் பதிவுக்கான முகநூல் அறிவிப்பு தமன்னா ரசிகரான நெல்லைத்தமிழனைச் சீண்டுகிற மாதிரி இருக்கிறதோ? ஸ்ரீராம் அல்லது நெல்லைத்தமிழன் யாராவது வந்து பதில் சொன்னால் தான் உண்டு!😍😍
இங்கே எல்லோருமே கிரேசி மோகனுக்கு அஞ்சலிப் பதிவாக எழுதிக் கொண்டிருப்பதை போலவே நாமும் எழுதினால் அது கூட்டத்தோடு கூவுகிற மாதிரி ஆகிவிடும்! அத்துடன் வாழ்நாள் முழுக்க எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவரைப் பற்றி அழுகாச்சிப் பதிவு, வெற்று வார்த்தைகளில் அஞ்சலிப்பதிவு என்று வேண்டாமே!
முன்னர் கல்கி வார இதழில் கிரேசியைக் கேளுங்கள் என்று கேள்விபதில் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருந்ததைத் தொகுத்து, ஒரு வீடியோ பகிர்வாக! இங்கேயும் கூட கேள்வி பதிலில் தமன்னா வருவது தற்செயலானது மட்டுமே!
துக்ளக் அட்டைப்பட நையாண்டியை விட அதிமுக உட்கட்சி விவகாரங்கள் சீரியஸ் காமெடியாக இன்றைய சேனல் செய்தி, விவாதங்களாகத் தீனிபோட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல ஆந்திராவில் 22 எம்பிக்களை வைத்திருக்கும் YSRCP க்கு துணைசபாநாயகர் பதவி என்று ஊடகங்களாகவே ஊகம் செய்து எழுதிக் கொண்டிருக்கின்றன.
சதீஷ் ஆசார்யா ஆந்திராவில் 5 துணைமுதல்வர்கள் என்று அர்த்தமே இல்லாத சமூகநீதி சாங்கியத்தைப் பற்றி வரைந்த கார்டூன் இது! துணைசபாநாயகர் பதவி என்பதுகூட ஒருவிதத்தில் அர்த்தமே இல்லாத அரசியல் சாங்கியம் தான்!
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை தொடர்வது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல், ராகுல் மவுனமாக இருப்பதால், கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த விவாதம் துவங்கியுள்ளது என்பது கூட ஒரு அர்த்தமில்லாத சாங்கியம் தான் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?
பிரசாந்த் கிஷோர்! தேர்தல் உத்தி வகுத்துக் கொடுப்பதை ஒரு வியாபாரமாகவே செய்துவரும் இவருடைய லேட்டஸ்ட் கஸ்டமர் மம்தா பானெர்ஜி! சதீஷ் ஆசார்யா என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்காவது புரிகிறதா?
புரிந்தவர்கள் இங்கே வந்து சொல்லலாமே!
மீண்டும் சந்திப்போம்.
டல்லடிக்குது..
ReplyDeleteபல segment களாகப் பதிவில் சொல்லிப்போனது அத்தனையுமா ஜீவி சார்? கிரேசி மோகனுடைய வீடியோ பார்த்தீர்களோ, அதுவுமா டல்லடிக்கிறது?
Deleteகிரேஸி இயற்கை எய்தியதை வைத்து எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள் சார்..
Deleteஒருவர் பதிவில் மனித வாழ்வின் நிலையாமை பற்றி, இன்னொருவர் பதிவில் மரணம் எப்படி வர வேண்டும் என்பது பற்றி, மற்றொருவர் பதிவில் கிரேஸிக்குமா இப்படி ஒரு நிலை என்று.. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கிரேஸி மரணத்தைப் பற்றி நினைத்த வாக்கில் சொன்ன ஏதோ ஒன்றைப் பற்றி இப்பொழுது எடுத்துப் போட்டு, ஒருவரின் மரனத்தைப் பற்றியே கிரேஸியின் கருத்து இது தான் என்று அடிக்கோடிட்டு சொல்கிற மாதிரி..
எந்த நேரத்தில் எப்படி மெளனம் காக்க வேண்டும் என்று தெரியாத ஒலிபெருக்கி அலறல் போலவானது தான் மிச்சம்.
மனத்தில் பட்டதை பட்டென்று சொல்வதில் கிரேஸி தனித்தன்மை வாய்ந்தவர்-- இது ஒன்ரே போதும் அவரைப் பற்றி நினைக்கையில் நம் மனத்தில் படிவது..
டல்லடிக்குது என்றதற்கு நான் உணர்ந்த காரணத்தை சமீபத்திய உங்கள் பதிவில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். சரியாகச் சொல்லாமலும் சொதப்பியிருக்கிறேன். அதில் உங்களுக்கு ஏதோ ஒன்று புரியும். அப்படி ஏதாவது புரிந்தால் அதே தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
Deleteநன்றி.
பொதுவாக நான் சம்பிரதாயத்துக்காகப் பதிவுகள் எழுதுவதில்லை ஜீவி சார்! கூட்டத்தோடு சேர்ந்து கூவுகிற வேலைவேண்டாமே என்பதற்காகத்தான் அவரை நினைப்பதற்கு பழைய கேள்விபதில் வீடியோ ஒன்றை எடுத்துப்போட்டது.சிரிக்கவைத்த ஒரு மனிதரை சிரிப்புடன்தான் நினைத்துப் பார்க்கவேண்டும் என்கிற சிறு ஆசை. ஆனால் இயற்கை எய்துவதற்கு முன்னாலேயே காலமாகிவிட்டார் என்று செய்திபோட்ட ஊடகம், சேனல் நடத்தை முகம் சுளிக்க வைத்தது.
Deleteடல்லடிக்கிறது என்று நீங்கள் சொன்னதைப் புரிந்துகொள்கிறேன். என்ன காரணம் என்பதும் குன்சாவாகப் புரிகிறது. படிப்படியாகச் சரி செய்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
ReplyDeletein the cartoon , Mamtha with bad hair style is screaming for a change "Poribortan" means change.. whih means change modi ... which was her election slogan and now she has lost the elections and have surrendered to prashant kishore... who will try a change over to her ...
வாருங்கள் சரவணன்! இங்கே பதிவுகளைப் படிக்க வருகிறவர்களையும் engage செய்வதற்காகப் போடப்பட்ட கொக்கி அது! அதுதானே உங்களையும் இத்தனை விரிவாக அர்த்தம் சொல்ல வைத்திருக்கிறது என்று வெளிப்படையாகச் சொன்னால் அடுத்த முறை இந்தப்பக்கங்களுக்கு வருவீர்களா? பதில் சொல்வீர்களா?
Delete:-))))
தளம் புதுமுகம் அணிந்திருக்கிறதே....
ReplyDeleteதமன்னா படத்தைச் சொல்லவில்லையே ஸ்ரீராம்?! :-))) இந்த மாற்றங்கள் செய்தது சமீபத்தில் தான்! எழுத்துரு பிரச்சினை இப்போது இல்லை என்று நினைக்கிறேன். உள்ளடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருவதைக் கவனிக்கவில்லையா?
Deleteநீங்களுமா இப்படி குமுதம் மாதிரி?..
Deleteகுமுதத்தின் அச்சுப்பிச்சுத்தனம் அலாதியானது ஜீவி சார்! நன் அவர்கள் பாணியை ஒருபோதும் ரசித்தது இல்லை. இங்கே தமன்னா படத்தைப் பற்றிய பிரஸ்தாபம் எதற்காக என்பது மேலே எபி முகநூல் ஸ்க்ரீன்ஷாட்டில் தமன்னா படம் போட்டு கீழே பேய்ப்படம் பாருங்க என்ற கேப்ஷனுக்காக! கௌதமனுடைய குறும்பு மற்றும் நெல்லைத்தமிழன் கையைப் பிடித்து இழுப்பதற்காக மட்டுமே!
Delete