Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Saturday, August 10, 2019

கதை கேளு! கதை கேளு! முட்டாள்கள் கதை கேளு!

தெனாலி ராமன், மரியாதை ராமன் கதைகள் மாதிரி, வடக்கே அக்பர்-பீர் பால் கதைகள் மிகவும் பிரசித்தம். இதில் பல கதைகள், கொஞ்சம் முட்டாள்தனமான காமெடியாகத் தோன்றினாலும் கூட, இந்தக் கதைகளிலும் சில வாழ்வியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் செவிவழியாகவே பரவிய இந்தக் கதைகள் இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றன. தவிர, கதைப்பது, கதை கேட்பது என்பது படைப்பில், பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கே மட்டும் சொந்தமானது.

அந்தப் பரிணாம பலவீனத்தை நன்கு புரிந்து கொண்டிருப்பதால் தான், இந்திய அரசியல் வியாதிகள், ஜனங்களுடைய காதுகளில் அம்பாரம் அம்பாரமாகப் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்! நாமும் சந்தோஷமாக, கேப்பையில் நெய் வடிகிறது என்று அவர்கள் சொல்லும் போது, ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டு, தேர்தலுக்குத் தேர்தல் அவர்களிடமே தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறோம்! இல்லையா?!!

நான்கு முட்டாள்கள் !

 
என்னவோ தினசரி மிகப் பெரிய அறிவாளிகளையே சந்தித்துக் கொண்டிருந்தது போலவும், அப்படி சந்தித்து சந்தித்து மிகவும் அலுப்புத் தட்டி விட்டது போலவும், டில்லி பாதுஷா அக்பருக்கு இருப்பதிலேயே படு முட்டாள்களை சந்திக்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஒரு நாள் உண்டாகி விட்டது! டில்லி பாதுஷாக்கள் என்றாலே அன்றைக்கும்  சரி இன்றைக்கும் சரி கொஞ்சம் விபரீதமான, வித்தியாசமான, மறை கழன்ற கேசுகள் தான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே!

முட்டாள்களை சந்திக்க வேண்டுமென்ற ஆசை வந்தது சரி, அவர்களை எப்படிக் கண்டு பிடிப்பது?

அக்பர் டில்லி பாதுஷா அல்லவா, உத்தரவு போட்டால் போயிற்று! அத்தனை முட்டாள்களும் வரிசையில் வந்து நிற்க மாட்டார்களா என்ன?! ஆனாலும் அதில் கடினமான  பகுதி என்னவென்றால், இருப்பதிலேயே வடிகட்டின முட்டாள்களாகப் பார்த்து அதில் நான்கு பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே! அதற்கு புத்திசாலித்தனமும், சாதுர்யமும் உள்ள ஒருவர் வேண்டாமா! 

"கூப்பிடு பீர் பாலை!" பாதுஷா அக்பர் காவலருக்கு உத்தரவிட்டார். பீர் பாலும் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.

"பீர்பால்! இருப்பதிலேயே வடிகட்டின முட்டாளிலும் வடிகட்டின முட்டாளாக ஒரு நான்கு பேரைப் பார்க்கவேண்டும்! கண்டு பிடித்து அரசவைக்கு அழைத்து வாரும்!"

"அப்படியே செய்கிறேன் பாதுஷா!" சொல்லி விட்டு பீர் பால் புறப்பட்டு விட்டார். 

போகிற வழியில் தென்படும் மனிதர்களைக் கவனித்துக் கொண்டே பீர்பால் அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.முட்டாள்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம்,இருப்பதிலேயே அடிமுட்டாள்களாகப் பொறுக்கிஎடுக்க வேண்டாமா!

எதிரே ஒரு மனிதன், ஒரு திருமணத்திற்கு சீர்வரிசை கொண்டு போவது போல, பரிசுப் பொருட்களை ஊர்வலமாகக் கொண்டுபோவதைப் பார்த்தார். அந்த மனிதனுடைய நடவடிக்கைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவே அவனை நிறுத்தி விசாரித்தார்.

"ஐயா! எனக்கும் சோனியா  என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. திடீரென்று அந்தப் பெண் என்னுடன் நிச்சயத்தை முறித்துக் கொண்டு வேறொருவனுடன் திருமணம் செய்து கொண்டு விட்டாள். வம்பு வழக்கு,ஏகப்பட்ட ரகளை, பிரச்சினைக்குப் பிறகுதான் திருமணம் நடந்ததாம்.அவளுக்குத் தான் இந்த சீர் வரிசையெல்லாம் எடுத்துப் போகிறேன்." என்று விவரம் சொன்னான் அந்த மனிதன். அவன் யார், அந்த சானியா யார் என்பதையெல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டு, பீர்பால் இவன் அடி முட்டாளிலும் வடிகட்டின முட்டாள் என்று முடிவு செய்தார்.

அடுத்து ஒரு மனிதன்,தலைக்கு மேல் புல்கட்டுச் சுமையைச் சுமந்து கொண்டு சினையாயிருந்த எருமை மீது உட்கார்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்தான். அவனை நிறுத்தி பீர்பால், புல்கட்டை எருமை மீது வைத்துக் கொள்ளாமல் எதற்காகத் தன தலை மீது சுமந்து கொண்டு போகிறான் என்று விசாரித்தார்.

"ஐயா! என்னுடைய எருமை  சினையாயிருக்கிறது! அதன் மேல் புல்கட்டை வைத்துக் கொண்டு போனால், அதற்கு சுமையாக இருக்குமே என்று தான், நான் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, என்தலைமேல் புல்கட்டைச் சுமந்துகொண்டு போய்க் கொண்டிருக்கிறேன். எருமைக்கு பாரம் குறையும் அல்லவா?" என்று பதில் சொன்னானாம். அக்பருக்குக் காட்ட இவனை விட அடிமுட்டாள் வேறு எவனும் கிடைக்க மாட்டான் என்று பீர்பால் முடிவு செய்தார்.

சோனியாவுக்கு சீர்வரிசை கொண்டுபோனவன், எருமைக்கு சுமையைக் குறைக்கிறேன் என்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, புல்கட்டை சுமந்து போனவன் ஆக இந்த இரண்டு பேர்வழிகளையும் அழைத்துக் கொண்டு பீர்பால் அக்பரிடம் போனார்.

இரண்டு பேர் கதையையும் கேட்ட அக்பர், பீர்பால் தேர்ந்தெடுத்தது சரிதான் என்று ஒப்புக் கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துத் தான், தான் சொன்னது நான்கு பேர், பார்த்தது இரண்டைத்தான் என்று அக்பருக்கு உறைத்தது. பாதுஷாக்களாக இருப்பதில் மிகப் பெரிய சிரமம், தாங்கள் என்ன உத்தரவு போட்டோம் என்பதை நினைவு வைத்துக் கொள்வது தான்.

"பீர்பால்! உம்மை நான்கு முட்டாள்களை அல்லவா கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொன்னேன். மீதி இரண்டு பேர் எங்கே?" என்று கேட்டார் அக்பர்.

"நான்கு முட்டாள்களும்  இங்கேயே இருக்கிறார்கள் பாதுஷா!" என்றார் பீர் பால். அக்பருக்குக் கோபம் வந்து விட்டது. பாதுஷாவாக இருப்பதனால் ஒன்று இரண்டுக்கு மேல் எண்ணத் தெரியாது என்று பீர்பால் நினைத்துவிட்ட்டானா என்ன?

"எங்கே அந்த மீதம் இரண்டு பேர்?"

"இதோ என்னைப் பாருங்கள் பாதுஷா! மூன்றாவதாக நான் இருக்கிறேன்! முட்டாள்களைத் தேடிக் கொண்டு போன என்னை விடப் பெரிய முட்டாள் வேறு எவராவது இருக்க முடியுமா? "

பீர்பால் இப்படித் தன்னையே முட்டாள் என்று சொல்லிக் கொண்டதில் அக்பருக்கு மிகவும் சந்தோஷம்! இத்தனை நாள் இவன் பெரிய புத்தி சாலி, பெரிய சாமர்த்தியக் காரன் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானே கூட இவனைப் பாராட்டி நிறைய சன்மானம் அளித்துப் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவனே தன்னை பெரிய முட்டாள் என்று சொல்லிக் கொள்வது கேட்பதற்கே எவ்வளவு சுகமாக இருக்கிறது! புத்தி சாலிகளுக்கு பாதுஷா ஒரு பொருட்டே அல்ல! முட்டாள்கள் இருந்தால் தான் பாதுஷாக்கள் பாதுஷாக்களாக இருக்க முடியும்!

பாதுஷாவின் சந்தோஷம் கொஞ்ச நேரம் நீடித்தது! அப்புறம் வழக்கமாக வருகிற சந்தேகம்வந்து விட்டது! பீர்பால்,கண்ணில் இரண்டைக் காட்டினான், தன்னையே மூன்றாவது முட்டாள் என்று சொல்லிக் கொண்டான். நாலாவது எங்கே?

"பீர்பால்! ஒன்று, இரண்டு, மூன்று! எங்கே அந்த நாலாவது முட்டாள்? இங்கேயே இருப்பதாக வேறு சொல்கிறாய்! என்னை ஏமாற்றுகிறாயா?" அக்பரின் கேள்வியில் கோபம் கொஞ்சம், குழப்பம் கொஞ்சம் கலப்படமாக வந்தது.

பீர்பால் மிகவும் பணிவோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை பாதுஷாவிடம் நீட்டி, "நான்காவது மிகப் பெரிய முட்டாளை இதிலேயே பார்க்கலாம், பாதுஷா!" என்றார்!

கண்ணாடியில் தன்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்ட பாதுஷாவுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை! மறுபடியும், பீர்பால் தன்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டிவிட்டதும், தான் தோற்றுவிட்டதும் புரிந்தது.

"உருப்படியான வேலைகளை விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி அலைந்த நான் பெரிய முட்டாள் என்றால், அப்படி என்னைத் தேட அனுப்பித்தவர்  என்னைவிடப் பெரிய முட்டாளாகத் தான் இருக்க வேண்டும்! இல்லையா பாதுஷா?! ஆக, நான்கு முட்டாள்கள் இங்கேயே இருப்பதாகச் சொன்னது தவறில்லையே!"

அசடு வழிய, பீர்பால் சொல்வதற்குத் தலையாட்டி சிரித்து மழுப்புவதைத் தவிர டில்லி பாதுஷாவுக்கு வேறு வழி தெரியவில்லை! 
அக்பர் மனதுக்குள் கருவிக் கொண்டார். பீர்பால் நீ புத்திசாலிதான்! ஆனால், என்றைக்காவது ஒரு நாள், நீ என் முன்னால் மண்டியிட்டுக் கெஞ்சத் தான் போகிறாய்!  அப்படி ஒரு நாள் வராமலா போய்விடும்?

பீர்பால் அக்பரைப் பார்த்துச் சிரித்தது, தன்னுடைய  மனவோட்டத்தைப் புரிந்து கொண்டதால் தான் என்று அக்பருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது. சந்தேகமெல்லாம், இப்போதே அதைக் கேட்கலாமா, வேண்டாமா என்பது தான்!
இப்போது, பாதுஷாவுக்கு அடுத்த குழப்பம் ஆரம்பித்து விட்டது.

consent to be...nothing தளத்துக்காக முன்பு எழுதியதில் இருந்து. 

Sunday, August 4, 2019

கதை கேளு கதைகேளு! இது கொஞ்சம் கதைக்கிற நேரம்!

ந்த நாட்களில் அக்பர் பீர்பால் இந்த இரண்டு கேரக்டர்களை வைத்து இங்கேயும் டில்லியிலும் தங்களை பாதுஷாக்களாகக் கற்பனை செய்துகொண்டு ஆட்டம்போட்டுக் கொண்டிருந்த சமீபத்தைய அரசியல்வியாதிகளைக் கலாய்த்து Consent to be......nothing! தளத்தில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதேபோல இப்போதைய ஆட்சியாளர்களையும்  கலாய்த்து, கதை எழுதலாமென்றால் எவரோடு பொருத்திக் கதை சொல்வது என்பதில் இன்னமும் தெளிவுபிறக்கவில்லை. நண்பர்கள் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டுகிறேன்! சிக்காமலா போய்விடும்?

க்பருக்குத் தன்னோட ஆட்சியில மக்களெல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு நாள் ஆசை வந்துச்சாம்.தினசரி தனக்கு சவரம் செய்கிற ஒத்தன்கிட்ட கேட்டாரு.ராஜாவுக்கு சவரம் செய்கிறவனுக்குத் தங்கக் காசுல்ல கிடைக்கும்உடனே அவன் சொன்னானாம்: "ராஜாராஜாஉங்க ஆட்சியில சமத்துவம் மலருதுவேற என்னென்னவோ எப்படி எப்படியோ வளருது!மக்களெல்லாம் நீங்க ஊட்டி விட்ட இலவசங்களில் அப்படியே மெய் மறந்துவாயப் பொளந்து,மூடக் கூட முடியாம அவ்வளவு சந்தோஷமா இருக்காங்கஒரு கொறையுமில்லேஎன் தருமநிதியே !தயாநிதியேதுரைநிதியே!"

ன்னுடைய ஆட்சியில் கூட  மக்கள் இவ்வளவு சவுக்கியமா இருக்காங்களான்னுட்டுராஜாவுக்கோ பெருமை தாங்கவில்லை!சவரம் செய்ததற்கு கூலி போகஇப்படி விவரம் சொன்னதுக்காகவும் கூடுதலாத் தங்கக் காசை அள்ளி அள்ளி வீசினாராம்தங்கக் காசு கூடக் கெடச்சாஎன்ன வரும்அப்படி வர்றதுக்குஇன்னிக்குப் பேர் இலவசம்நாகரீகமாச் சொன்னாப் புள்ளிவிவரம்! உண்மையை உடைச்சுச் சொன்னாக் கலவரம்!

ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியாமபீர்பால் கிட்ட சொன்னாராம்: "பீர்பால் நீயும் இருக்கியேஎப்பப் பாத்தாலும் அது இருந்தா இது இல்லஇது இருந்தா அது இல்லைன்னுட்டு!பாருஎனக்கு சவரம் செய்கிற நாவிதனுக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியலையே?அய்யகோ என் தாழ்ந்த தங்கத் திருநாடே!" 

ம்ம பீர் பால் இருக்காரே அந்த ஆள் மகா குசும்புலொள்ளு,கூடவே புத்தியும் இருக்கறவர்ராஜா கிட்ட உடனே சொன்னா ஏறாதுன்னு, "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கநான் தீர விசாரிச்சுட்டுச் சொல்றேன்அப்படீன்னு சொன்னாராம். 

க்பருக்கு இந்த மட்டிலாவது பீர்பால் எதுத்து விவரம் சொல்லாமஎதிர்க்கேள்வி கேக்காம ஒப்புத்துக்கிட்டாரேன்னு சந்தோஷம்சரின்னுட்டுடைம் கொடுத்தார். 

டனேபீர்பாலும் அந்த நாவிதனை ஆளை விட்டு என்ன செய்கிறான்ன்னு கண்காணிக்க ஏற்பாடு செஞ்சார்ராஜாவுக்கு மனம் குளிர்ற மாதிரியேஎடுப்புத் தொடுப்பாகச் சொல்லியே நெறையத் தங்கக் காசு சேர்ந்துபோச்சுகாசை வச்சு என்ன பண்றதுன்னு கூடத் தெரியலைதினசரிராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம்தங்கக் காசுகளை எடுத்து எண்ணுறதும்,அடுக்கி வச்சு விளையாடுறதுமாகவே பொழுது போக்கினதையும் தெரிஞ்சுகிட்டார்ஆறாம் நாள்நாவிதன் சேத்துவச்சுபாத்துபாத்துப் பூரிச்சுகிட்டிருந்த தங்கக் காசை ஆளைவைத்து லபக்கிட்டு வரச் செய்தாராம். 

ஏழாம் நாள்அக்பர் சவரம் செய்து கொள்வதற்கு முன்னாலேயே பீர்பால் போயி, "ராசா ராசாஇன்னிக்கு உங்க நாவிதரு என்ன சொல்றாருன்னு கேளுங்க"ன்னு சொன்னாராம். 

தேபடிக்குஅக்பரும் நாவிதன்கிட்ட "நம்ம ஊர் நிலவரம் எப்படிமாதம் மும்மாரி பெய்கிறதாகாத்தடிச்சு காத்தடிச்சு ஏத்தி வச்ச தீபங்களில் இருட்டு இல்லாம [இன்னிக்கு பவர்கட்னு ஏதோ சொல்லிக்கிறோமே அந்த மாதிரிஇருக்கா?" அப்படீன்னு வரிசையாநம்ம வால்பையன் மாதிரித் தொடர் கேள்விகளாகக் கேட்டாரு. 

மிழ் வலைப் பதிவர்கள் மாதிரிவேறென்ன போனாலும் கவலையில்லேஆஹாவடை போச்சேன்னு மட்டும் இருக்க அந்த அப்பாவி நாவிதனுக்குத் தெரியலசேத்து வச்ச தங்கக் காசெல்லாம் போச்சேன்னு வருத்தம்கோபம்சோகம்,ஏமாற்றம் இப்படி எல்லாம் சேர்ந்து புலம்பினான்: "என்ன ஆட்சி நடக்குதுஏழை எளியவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பாதுகாப்பே இல்லை. 

மத்துவம் பேசி இருக்கறதையும் பிடுங்கிக் கொள்கிற ஆட்சியெல்லாம் ஆட்சியாபாதுஷான்னு இங்க ஒருத்தர் இருக்காராபாத்துகிட்டு சும்மா இருக்காரா?மானாடும்,மயிலாடும்னாங்கநரியும் எலியும் தான் ஆடுதா இந்த ஆட்சியிலநா சொல்லலேசனங்க பேசிக்கறாங்கஊரெல்லாம் ஒரே ஏச்சுஒரே அழுகை!" ன்னு கண்ணீரோட கதறினானாம்

க்பருக்கு ஒண்ணும் வெளங்கலைநேத்து வரைக்கும் இந்த ஆட்சியில மானாடமயிலாடன்னு சிங்கமும் நரியும் கூடி எலிகளும் பூனைகளும் கூட சமத்துவமா இருக்கறதாச் சொன்னவன்இன்னைக்கு இப்படிக் கேக்கறானேன்னு அதிர்ச்சி.என்ன ஆச்சுன்னும் தெரியலஎப்படிப் பதில் சொல்றதும்னும் புரியலவழக்கம் போல சவரம் பண்ணி முடிச்சதும் ரெண்டு தங்கக் காசை வீசிவிட்டுநீ போநான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டுபீர்பாலைக் கூப்பிட்டு அனுப்பிச்சாராம். பீர்பால் வந்தாருங்கஅக்பருக்கு அடக்க முடியவில்லைபுலம்ப ஆரம்பிச்சிட்டார்: 


"நேத்து வரை உங்க ஆட்சி மாதிரி வருமான்னான்சாதனைத் திலகம்சமத்துவ நாயகன்னு சொன்னான்உங்க ஆட்சியில் மட்டும் தான் ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிஞ்சதுன்னு வேற சொன்னான்இப்ப எல்லாத்தையுமே மாத்திச் சொல்றான்." 

"பீர்பால்பைத்தியம் பிடிச்சது அவனுக்காஎனக்கான்னே தெரியலையேஉனக்காச்சும் தெரியுதா சொல்லு." 

பீர்பால் இடையில் நடந்த கதையைச் சொல்லி விட்டு,ஒவ்வொருவனும் தன்னை வைத்தே உலகத்தை எடை போடுகிறான்இந்த நாவிதனும் தான் சௌகரியமாக இருந்ததாக நினைத்தபோது எல்லோருமே அப்படி இருந்ததாகவும்தன்னுடையது களவு போனதும்ஊரே திருடர்களால் நிறைந்து போனமாதிரியும் சொன்னான் என்பதைச் சொன்னார். அக்பருக்கு அப்பவும் நம்பிக்கை வரலேபாத்தார் பீர்பால்.

"கேப்பையிலே சுவை மணம் காரம் நெறைஞ்ச நெய் வடியுதுன்னு சொன்னாக்ககேக்கறவனுக்கு எங்க போச்சு புத்தி?கேக்கறவன் கேணையனா இருந்தாக்ககேப்பையில் மட்டுமில்லபாக்கறது எல்லாத்துலயுமே நெய் வடியும்!"அப்படீன்னு பீர்பால் சுருக்குன்னு சொன்னதும் தான்,இதுக்கு மேலயும் கேள்வி கேட்டா தனக்கு மண்டையில ஒண்ணும் இல்லேங்கிற அரசாங்க ரகசியம் வெளியாயிடும்னு ராசா கப்சிப்னு ஆயிட்டாராம்!

கதை முடிஞ்சதுகத்தரிக்காய் காச்சுதுமுத்திச் சந்தைக்கும் வந்தாச்சு!    

ஒரு கதை சொல்லட்டான்னு ...........

என்னை மாதிரி அரசியல் பிராணிகளிடம் கதை எழுதக் கேட்டால் இப்படித்தான் இருக்கும் என்பதாவது புரிகிறதா?  

மீண்டும் சந்திப்போம். 

Friday, July 19, 2019

இடுக்கண் வருங்கால் நகுக! கடுப்பேத்துறார் பீர்பால்!

ஐமு கூட்டணிக் குழப்பம் ஆட்சிசெய்த (?) அந்தப் பத்து ஆண்டுகளில், அரசியல் செய்திகளைப் பார்த்து மிகவும் நொந்துபோகிற தருணங்களில் எல்லாம் ஒரு பீர்பால் கதையைக் கொஞ்சம் அப்படி இப்படி டிங்கரிங் செய்து இந்த டில்லி பாதுஷாக்களே இப்படித்தான் என்று மனதைத் தேற்றிக் கொள்வதுண்டு! தேர்தல்முறை வந்து பாதுஷாக்களை ஒத்திக்கோ என்று தேர்தலில் தோற்கடித்தாலும், முந்தைய பாதுஷாக்கள் பழைய நினைப்பிலேயே இருக்கிற இன்றைய நிகழ்வுகளை எங்கு போய் டிங்கரிங் செய்வது?


பாதுஷா, பீர்பாலுக்குத் தான் எப்போதும் ஆதரவு தருகிறார்! பாதுஷாவுடைய ஆதரவு இல்லாவிட்டால், இந்த பீர் பாலை விட நாங்கள் பெரிய புத்திக் கொழுந்துகள் என்பதைக் காட்ட முடியுமாக்கும் என்று பாதுஷா காதில் விழுகிற மாதிரியே, அரசவையில் இருந்த நிறையப் பேர் பொருமிக் கொண்டிருந்தார்கள். 

க்பருக்கும் அப்படித்தான் தோன்றியது! இந்த பீர்பால் ரொம்பவும் தான் துள்ளுகிறான்! பாதுஷா என்று கூடப் பார்க்காமல், எப்போதும் தன்னை முட்டாளடித்துப் பார்க்கிறவனை, நாமும் பதிலுக்குப் போட்டுப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் பாதுஷாவுக்கு வந்தது. இந்த பாதுஷாக்களே நிலையில்லாத புத்திக்காரர்கள்! எப்போது கனிவாக இருப்பார்கள், எப்போது கடித்துக் குதறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பீர் பாலை சிக்க வைப்பது, மற்றவர்கள் முன்னால் முட்டாளாக்கிக் காட்டுவது  என்று பாதுஷா முடிவு செய்துவிட்டு, ஒரு சோதனை வைத்தார்.

ல்லாம் ஒரு செட் அப் தான்! இப்படி ஆளைக் கவிழ்க்கிற கலையில் பாதுஷாக்களுக்கு இருக்கிற தேர்ச்சி, வேறு உருப்படியான விஷயங்களில் இருந்ததில்லை என்பது சரித்திரம். சரித்திரம் என்ற உடனேயே கற்பனை, 
புனைவு ,கனவு இவைகளும் வந்து விட வேண்டும் இல்லையா?

ரசவையில் பாதுஷா பம்பீரமாக சபையை இப்படியும் அப்படியுமாகப் பார்க்கிறார்.அல்லது கம்பீரமாகப் பார்ப்பது போல நினைத்துக் கொண்டார். 

"னக்குப் பிரியமானவர்களே! இன்று அதிகாலை நான் ஒரு கனவு கண்டேன்! எனக்கு உண்மையானவர்கள், பிரியமானவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதை அந்தக் கனவில் தெரிந்து கொண்டேன்!" என்று சொல்லி விட்டு சபையை அப்படியும் இப்படியும், இப்படியும் அப்படியுமாக மறுபடி பார்த்தார். 


சபையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை! புரிந்து என்ன ஆகப் போகிறது! சபைக்குப் போவதே சம்பாதிப்பதற்குத்தானே!

"ன்று மாலை நீங்கள் வரிசையாக ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போக வேண்டும். அங்கே நீங்கள் என் மீது பிரியத்துடனும், உண்மையாகவும் இருந்தால்  உங்களுக்கு ஒரு கோழி முட்டை கிடைக்கும். அதை இங்கே கொண்டு வந்து காண்பிக்க வேண்டும். என் மீது விசுவாசமாக இருப்பவர்கள் யார் என்பது அப்போது தெரிந்து விடும்." என்று சொன்னார் அக்பர்.

கோழி முட்டைக்கும் விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்! பாதுஷாக்கள் கேள்வி கேட்பவர்களை எப்போதுமே விரும்புவதில்லை. 

பையில் இருந்த பிரமுகர்கள் ஒவ்வொருவராக அரண்மனைக் குளத்திற்குப் போனார்கள். குதித்தார்கள். ஆளுக்கு ஒரு கோழி முட்டையைக் கையில் உயர்த்திப் பிடித்தபடி வெளியே வந்தார்கள். கோழி முட்டை கிடைத்ததோடு, கொஞ்சம் காசும் கிடைக்கும் என்ற சந்தோஷத்தோடு அரண்மனைக்குப் போனார்கள்.

பீர்பாலும், தலைவிதியே என்று குளத்தில் குதித்தார். குளத்தில் குதித்தால், உண்மையாக இருப்பவருக்குக் கோழிமுட்டை கிடைக்கும் என்று அக்பர் சொன்ன போதே இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அவருக்கு கோழி முட்டை கிடைக்கவில்லை. அதனால் என்ன, எப்போதும் கைகொடுக்கிற புத்தி சாமர்த்தியம் இருக்கிறதே, அது போதாதா! இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி, சேவல் கொக்கரிக்கிற மாதிரி சத்தம் எழுப்பிக் கொண்டேஅரசவைக்குப் போனார்!
க்பருக்குக் கொஞ்சம் ஆச்சரியம்! முட்டை கிடைக்கவில்லை என்றதும், பீர்பால் சோர்ந்த முகத்துடன், அப்போதாவது கொஞ்சம் பணிவோடு சபைக்கு வருவான் என்று நினைத்தால், சேவல் கொக்கரிக்கிற மாதிரிக் கொக்கரித்துக் கொண்டல்லவா வருகிறான்! என்ன ஆயிற்று இவனுக்கு?

"பீர்பால்! சேவல் மாதிரிக் குரல் எழுப்புவதை நிறுத்து!"

"ப்படியே ஆகட்டும் ஹூசூர்!" என்று பணிவுடன் சொன்னார் பீர்பால்!
"ங்கே உன் கைகளில் முட்டையை காணோம்?" பாதுஷா கொஞ்சம் எகத்தாளமாக பீர்பாலிடம் கேள்வி கேட்டார். ஏற்கெனெவே பேசி வைத்து மற்றவர்கள் எல்லோருக்கும் முட்டை கிடைக்கிற மாதிரிச் செய்து விட்டு, பீர்பாலை வெறும் கையுடன் வரவைக்கிற திட்டத்தைப் போட்டதே அவர்தானே! இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் காலில் விழுந்து கெஞ்சப் போகிறான் என்ற நினைப்பே பாதுஷாவுக்கு பாரசீகத்து மதுவைக் குடித்த போதை மாதிரி சுகமாக இருந்தது.

"நான் சேவல் ஹூசூர்! என்னிடம் எப்படி முட்டை இருக்கும்?"

"முட்டையைப் பற்றிக் கேட்டால் நீ சேவலை பற்றி எதற்குச் சொல்கிறாய்?" பாதுஷாவிற்குக் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. பீர்பாலை ஜெயிக்கவே முடியாதோ?

"ஹூசூர்! இங்கே இருப்பவர்கள் அனைவருமே பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் தான்! ஆனால் குளத்தில் குதித்தவுடனேயே முட்டை வந்து விடுமா? அதற்கு சேவல் துணை வேண்டாமா? நான் சேவலாக இருந்து இவர்களுக்கு முட்டை கிடைக்கச் செய்தேன். சேவலிடம் எப்படி முட்டை இருக்கும்?" என்றார் பீர்பால்.

ங்களை பாதுஷாவுக்கு உண்மையானவர்கள் என்று பீர்பால் சொன்னதிலேயே குளிர்ந்து போன சபையோர்கள், தாங்கள் பெட்டைகளாக்கப் பட்டதைக் கூட மறந்து வாரே வா என்று கரகோஷம் எழுப்பினார்கள்.

பாதுஷாவுக்கு வேறு வழி இருக்கவில்லை! 

கெஞ்சினால் மிஞ்சுவன், மிஞ்சினால் கெஞ்சுவன் என்று பிற்காலத்தில் குடிலன் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு இரண்டும் கெட்ட தன்மையை மனோன்மணீயம் என்ற நாடகக் காப்பியத்தில் பெ. சுந்தரம் பிள்ளை என்பவர் எழுதி வைக்கப் போகிறார், அது தனக்கும் ரசிச்சு அசலாகப் பொருந்துகிறது    என்பது அன்றைக்கு அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்!

ன்னுடைய தோல்வியை மறைத்துக் கொண்டு பீர்பாலைப் புகழ்ந்து பரிசுகள் கொடுத்து அப்போதைக்கு சமாதானம் செய்து கொண்டார் டில்லிப் பாதுஷா! கடுப்பேத்துறார் இந்த பீர்பால் என்று மனதுக்குள் பொருமுவதைத்தவிர......... 
வேறென்ன செய்ய முடியும்!  

இது கர்நாடகக் காங்கிரஸ்  கூத்து! 



  இது உத்தர பிரதேசக் காங்கிரஸ் கூத்து! 
   
கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சம் யோசித்து வையுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.

   

Thursday, July 18, 2019

ஒரு சிறுகதையை சிறுகதைதான் என்று புரிந்துகொள்வது எப்படி?

இந்தப்பக்கங்களில் சிறுகதை எப்படி எழுதுவது? அது சிறுகதைதான் என்று எப்படிப் புரிந்துகொள்வது? என்று இரு கேள்விகளை முன்வைத்து எழுதிய பதிவு , அந்தக் கேள்விகளுக்கான விடையைச் சொல்லாமல் அந்தரத்தில் தொங்குவதை , யாருமே கேள்வி கேட்கவில்லை என்பது நிறைய ஆச்சரியம்! கவனிக்க விடுபட்டுப் போய்விட்டதா? அதுதவிர இந்தப் பக்கங்களிலேயே சிறுகதை என்று தேடி இருந்தால்  ஒரு 18 சிறுகதைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, (கொஞ்சம் நீளம் , அதிக நீளம் என பாகுபடுத்தாமல்) எடுத்துக் காட்டி இருப்பதைக் கூட கவனித்திருக்க முடியும்!  



எட்கர் ஆலன் போ என்கிற அமெரிக்க எழுத்தாளர் (1801-1849) ஒரு சிறுகதை என்றால் ஒரேமூச்சில் படித்துவிட முடிகிறதாக இருக்க வேண்டும் என்று The Philosophy of Composition என்ற கட்டுரையில் சொல்வதை நவீன விமரிசகர்கள் 1000 முதல் 20000 வார்த்தைகளுக்குள் இருக்கலாம் என்பதாக எடுத்துக் கொள்கிறார்கள். இணையத்தில் எழுதுவது எப்படி என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்த 2002 வாக்கில், ஒரு ஆராய்ச்சி இணையத்தில் எவரும் 600 வார்த்தைகளுக்கு மேல் படிப்பது இல்லை என்று வந்தது. அதுவும் பெங்களூரு டெக்கீஸ் தனிப்பட்ட விஷயங்களை  blogஇல்   எழுதுவது அனேகமாக 40 முதல் 100 வார்த்தைகளுக்கு மேல் இருந்து பார்த்ததில்லை. தமிழ் இணையச் சூழல் இன்னும் மோசம்! இங்கே மேம்போக்காக மேய்ந்துவிட்டுப் போவதுதான் அதிகம் என்ற பின்னணியை வைத்துப் பார்த்தால், வலைப்பதிவோ, சிறுகதையோ எதுவானாலும் 600 வார்த்தைகளுக்குள் இருப்பது நல்லது, 1000 வார்த்தைகள் என்பது அதிகபட்சம்!

ஆக ஒரு சிறுகதை போஸ்ட் கார்ட் அளவுக்குள் அடங்கி விடுகிற மாதிரிக் கால் பக்கக் கதையாக இருக்க வேண்டுமா அல்லது எழுத்தாளர் விருப்பப்படி 50,100 பக்கங்கள் வரை போகலாமா என்பது ஒருபக்கம்! வாசகர் அதே அளவுக்குப்  பொறுமையாக வாசிப்பாரா என்பது இன்னொரு பக்கம்!  எது முக்கியமானது என்றால், ஒரு சிறுகதையை போஸ்ட்கார்ட் அளவுக்கோ அல்லது இதே பக்கங்களில் பேசப்பட்டிருக்கிற சாண்டில்யனுடைய கதை கோழைச்சோழன் மாதிரியோ கூட இருக்கலாம்! சாண்டில்யனா? சிறுகதையா? என்று ஆச்சரியம் கொள்கிறவர்களுக்காக ஒரு தகவல், இது 1960 ஆம் ஆண்டில் அமுதசுரபி மாத  இதழில் வெளிவந்த சிறுகதைதான்! 

ஆக, யோசித்துப் பார்த்தால்           எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளுக்கும் இடம் கொடுக்கக் கூடிய ஒன்றாக சிறுகதை இருக்கிறது, ஒரு நாவல் என்பது அப்படியல்ல! ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதைக்களம்  வேண்டும், பாத்திரங்கள், சம்பவங்களைக் கோர்வையாக இணைக்க வேண்டும், லாஜிக் இடிக்காமல் கதை சொல்ல வேண்டும் என்று ஏகப்பட்ட இக்குகள் நாவலுக்கு இருப்பது போல சிறுகதை வடிவத்துக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை!  

கொஞ்சம்  யோசித்துவிட்டு  வாருங்கள்! இன்னும் கொஞ்சம் சுவாரசியமான அலசல்களுடன் மேற்கொண்டு பேசலாம்!

மீண்டும் சந்திப்போம்.
           

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)