Showing posts with label தேர்தல் முடிவுகள். Show all posts
Showing posts with label தேர்தல் முடிவுகள். Show all posts

Thursday, May 6, 2021

2021 தேர்தல் களம் ::: TN வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் -நீச்சல்காரன் ராஜா

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் வெற்றிகரமாக 2021 சட்டச்சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. புதிய அமைச்சரவை உருவாகிறது. வென்றவர்கள் தோற்றவர்கள் என்று அரசியல் ஒருபுறம் இருக்க, மேம்போக்கான வெற்றி எண்ணிக்கையைவிட ஒரு அடுத்தநிலை பார்வையை இக்கட்டுரை இந்தத் தேர்தலின் புள்ளிவிவரம் கொண்டு முன்வைக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் சராசரியாக 72.81% வாக்களித்துள்ளோம். தபால் மற்றும் மின்னணு வாக்கு என மொத்தம் 4.623 கோடி வாக்குகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 107 கட்சிகளும் 2073 சுயேச்சை வேட்பாளர்களும் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்கிறது தேர்தல் ஆணையத் தகவல். ஆனால் சில இடங்களில் கூட்டணியில் இருந்தும் சுயேச்சையாக களமிறங்கியதும், மதிமுக, சமக, தமக போன்ற கட்சிகள் மாற்றுக் கட்சிச் சின்னத்தில் நின்றதும் இத்தகவலில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். கடந்த 2016 தேர்தலில் 92 கட்சிகளும், 1547 சுயேச்சை வேட்பாளர்களுமே போட்டியிட்டிருந்தனர்.


விளக்கப்படம்: 1

அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் வரிசையில் ஐ. பெரியசாமி (1,35,571) -திமுக, எ.வ. வேலு (94,673 ) -திமுக, பூந்தமல்லி வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமி (94,110), நான்காவதாக 93,802 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வருகின்றனர். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களாக தி. நகர் தொகுதி ஜெ. கருணாநிதி(137), மொடக்குறிச்சி தொகுதி மருத்துவர் சரஸ்வதி(281), தென்காசி தொகுதி பழனி நாடார் (370), ஐந்தாவதாக 746 வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் ஆகியோர் வருகின்றனர்.

அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளாக சுமார் 3.9 லட்சம் பெற்ற சோழிங்கநல்லூர் உள்ளது, அதற்கடுத்து 3 லட்சத்திற்கும் மேல் பெற்ற கவுண்டம்பாளையம், மாதவரம், ஆவடி என உள்ளன. குறைவான வாக்கு பெற்ற தொகுதி என்றால் 101650 பெற்ற துறைமுகம் தொகுதி தான். அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் என்றாலும் அதே சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் தான். அங்கேதான் இரு பிரதானக் கட்சி வேட்பாளரும் அதிகமான வாக்குகளை 2016 ஆம் தேர்தலில் பெற்றனர். இம்முறை எடப்பாடி தொகுதியில் தான் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. அதிமுகவின் பலமான தொகுதியாக 2016 இல் ஆர்கே நகர் இருந்தது இம்முறை 66% ஆதரவுடன் எடப்பாடி உள்ளது. பலவீனமான தொகுதியாக திருச்சி மேற்கு 18% ஆதரவுடன் உள்ளது. திமுகவின் பலமான தொகுதியாக கடந்த தேர்தலில் ஒட்டன்சத்திரமும், பலவீனமான தொகுதியாக எடப்பாடியும் இருந்தது. இம்முறை அதே திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் தொகுதி(72%) பலமானதாகவும், எடப்பாடி தொகுதி(28%) பலவீனமாகவும் உள்ளன.

சுயேச்சைகளே இல்லாத தொகுதியாக பவானிசாகரும், அதிக எண்ணிக்கையில் 68 சுயேச்சைகள் போட்டியிட்ட தொகுதியாக கரூரும் உள்ளன. அதிக வாக்கு பெற்ற சுயேச்சையாகப் பனங்காட்டுப் படை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளர் ஹரி நாடார்(37,727), சமூகநீதி கூட்டமைப்பின் புதுக்கோட்டை வேட்பாளர் பாலகிருஷ்ணன்(23,771), வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம், திருமயம் வேட்பாளர் செல்வகுமார்(15144) ஆகியோர் உள்ளனர். வைப்புத் தொகை இழக்காத ஒரே சுயேச்சை ஹரிநாடார் என்பது குறிப்பிடத் தக்கது.

விளக்கப்படம்: 2

திமுக கூட்டணி:

45.3% சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் முதலிடமும், 73 தொகுதிகளில் இரண்டாமிடமும், கோவை தெற்கு மற்றும் கோவில்பட்டியில் மூன்றாம் இடமும் இக்கூட்டணி பெற்றது. அதிமுக கூட்டணியைவிட இருமடங்கு அதாவது 1,65,727 தபால் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளனர். இரட்டை இலையுடன் நேரடியாக 159 இடங்களில் உதயசூரியன் போட்டியிட்டு 109 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலமான தொகுதி கிள்ளியூர், சிபிஐ கட்சிக்கு தளி, சிபிஎம் கட்சிக்கு கீழ்வேளூர், விசிகவிற்கு காட்டுமன்னார்கோயில், மதிமுகவிற்கு சாத்தூர் (தனிச்சின்னமில்லை என்பதால் உதயசூரியனாகக் கணக்கில் வருகிறது)

அதிமுக கூட்டணி:

39.7% சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளில் 75 தொகுதிகளில் முதலிடமும், 159 தொகுதிகளில் இரண்டாமிடமும், திண்டுக்கல் ஆத்தூரில் வைப்புத் தொகை இழப்பும் இக்கூட்டணி பெற்றது. வாக்கு சதவிகித வித்தியாசத்தில் 50% மேல் 2 தொகுதியிலும், 40% மேல் 4 தொகுதிகளிலும், 30% மேல் 8 தொகுதிகளிலும், 20% மேல் 20 தொகுதிகளிலும், 10% மேல் 49 தொகுதிகளிலும், 1% மேல் 64 தொகுதிகளிலும், அதற்கும் கீழ் 12 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

நா.த.க:

234 தொகுதிகளிலும் போட்டியிட்டு மொத்தம் 6% வாக்குகள் பெற்று, சீமான் 24% வாக்கு பெற்று அவர் மட்டுமே வைப்புத் தொகை மீட்டார். மொத்தமாக 177 தொகுதிகளில் மூன்றாமிடமும், மீதி 57 தொகுதிகளில் நான்காமிடமும் பெற்றனர். தெளிவான மூன்றாம் அணியாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில் 63 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளனர்.

மநீம கூட்டணி:

தேர்தல் ஆணையத் தகவல்படி அதிகாரப்பூர்வமாக 218 தொகுதியில் போட்டியிட்டு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூரில் மட்டும் வைப்புத் தொகை இழக்கவில்லை. மொத்தம் 2.7% வாக்குகளும், 25 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 77 தொகுதிகளில் நான்காம் இடமும், 56 தொகுதிகளில் ஐந்து மற்றும் 24 தொகுதிகளில் ஆறு என்ற இடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடம் பெற்ற கமல்ஹாசன் உட்ப 12 வேட்பாளர்கள் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளனர். குறிப்பாக மருத்துவர் மகேந்திரன், பழ. கருப்பையா, ஸ்ரீபிரியா, சந்தோஷ் பாபு மற்றும் பத்மாபிரியா போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

அமமுக கூட்டணி:

2.8% சதவிகித வாக்குகளுடன் 234 தொகுதிகளில் 1 இரண்டாமிடம், 27 தொகுதிகளில் மூன்றாம் இடமும், 75 தொகுதிகளில் நான்காம் இடமும், 71 தொகுதிகளில் ஐந்து மற்றும் 44 தொகுதிகளில் ஆறு என்ற இடங்களைப் பெற்றது. டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் உட்பட 15வேட்பாளர்கள் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமாகப் பெற்று, வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளனர். 227 தொகுதிகளில் வைப்புத் தொகை இழந்தனர்.

நோட்டா:

மொத்தம் 3,45,538 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளன, அதில் 2,812 தபால் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. 12 தொகுதிகளில் நோட்டா நான்காமிடமும், 77 தொகுதிகளில் ஐந்தாம் இடமும், 108 இடங்களில் ஆறாமிடமும் பெற்றுள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில்தான் அதிக சதவிகிதமாக நோட்டா பதிவாகியுள்ளது. விராலிமலையில் குறைந்த அளவிற்கே நோட்டா பதிவானது.

வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட மூன்றாவது இடத்தைப் பிடித்த கட்சி அதிக வாக்குப் பெற்றால் அது கட்டாயம் வெற்றியைத் தீர்மானிக்கும். அவ்வகையில் 92 தொகுதிகளில் மூன்றாம் இடம் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. கடந்த தேர்தலில் இந்த வகைத் தொகுதிகள் 129 இருந்தன. அதே போல 36 தொகுதிகளில் நான்காம் இடமும் சேர்த்தால் வெற்றியைத் தீர்மானிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2016 தேர்தலில் இந்த எண்ணிக்கை 42 இருந்தது. ஆக இரு பிரதானக் கூட்டணிக்கு மாற்றாகக் கடந்த தேர்தலைப் போல இம்முறை ஓட்டுப் பிரிப்பு நிகழவில்லை எனத் தெரிகிறது. ஜனநாயகத்தின் வலுவே மக்கள் பங்களிப்பான தேர்தலில் தான் உள்ளது. வெறும் வெற்றித் தோல்வியைவிட அதன் புள்ளிவிவர அலசல் புதிய கோணங்களை அறியச் செய்கின்றது, அரசியல் விழிப்புணர்வு ஜனநாயகத்தினை உறுதிசெய்கின்றது.

மேற்கோள்கள்:
தேர்தல் ஆணையத் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட தரவுகள்:

2021: https://docs.google.com/spreadsheets/d/e/2PACX-1vTYnHSLw8qZSQXoc3eTxvm7prBmgtQAmnzykIZUgQUoHc6RPzBJFcqUR28OMetcq5DvAoG5X7NRpZKq/pubhtml 


2016: https://docs.google.com/spreadsheets/d/17uyrpva6xa7xNhgvx58GS_ocbAOU4JOwmIoVrDLYnA0/pubhtml 

பதிவர் நீச்சல்காரன் தொகுத்த புள்ளிவிவரங்கள் மற்றும் விளக்கக்குறிப்புகள் இன்றைய News 18 தளத்தில் வெளியிடப்பட்டதை இங்கே நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறேன். வெறும் புள்ளிவிவரங்களாகப் பார்ப்பதும் அதை analyse செய்து அவை சொல்லும் செய்தியைப் புரிந்து கொள்வதும் வேறுவேறானவை என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டியிருக்கிறது  

மீண்டும் சந்திப்போம். 


Sunday, June 2, 2019

அடுத்த வீடு! ஆந்திரா! சந்திரபாபு நாயுடு அவ்வளவுதானா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைடெக் பிரியர் என்பது தெரிந்த விஷயம்! மனிதர் ஹைதராபாத்தில் சைபர் சிடி, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் அங்கே கடைவிரிக்கவேண்டுமென்று பாடுபட்டதும் (அவைகளில் ஆதாயம் பார்த்ததும்) சாதாரண ஏழை எளிய மக்களின் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததைப் பயன்படுத்தித்தான் YS ராஜசேகர ரெட்டி 2003 இல் பாதயாத்திரை நடத்தி, தெலுகுதேசகட்சியின் ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்த பழையகதையை ஒரு திரைப்பட விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம்! இப்படி எழுதியது மார்ச் 8 ஆம் தேதி. இந்த மூன்று மாத இடைவெளியில்  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகுதேசம் நாடாளுமன்றத்துக்கு 3/25 சட்ட சபைக்கு, 23/175 என்று மிகக் கேவலமாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. 

இது 2011 ஆகஸ்டில்  

More than anything, Naidu needs an honest appraisal of what went so hopelessly kaput with his party. He can be excused for taking comfort from the fact that even if he lost, he can't be accused of not trying. In fact, he was one of India's most hardworking chief ministers, though he gets his economics only half-right and politics fully wrong என்கிறார் ஸ்ரீனிவாச பிரசாத் FirstPost தளத்தில். சந்திரபாபு நாயுடு 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்ட மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் ஹைதராபாத் நகரை IT HUB ஆக மாற்ற முனைந்த மாதிரியே ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதில் காட்டிய அதீத அக்கறை, மகன்     நார லோகேஷை பட்டத்து இளவரசராக்க முயன்றது, (IT அமைச்சராக இருந்த லோகேஷ் இந்தத்தேர்தலில் YSRCP வேட்பாளரிடம் தோற்றும் போனார்), சொந்த  ஜாதியினருக்கே முதலிடம் கொடுத்தது என்று பலவிதத்திலும் நாயுடு ஜனங்களிடமிருந்து விலகிப்போனார், தோற்றார் என்பதோடு சந்திரபாபு நாயுடுவும் தெலுகு தேசக் கட்சியும் சாப்டர் க்ளோஸ் என்றாகிவிட்டார்களா? 

ஜெகன் மோகன் ரெட்டி தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத வரை, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலில் அவ்வளவு சீக்கிரமாகக் கட்சிகளுடைய கதை முடிந்து விடுவதில்லை என்பது இங்கே கழகங்களுடைய கதை,       

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஜெகன் மோகன் ரெட்டியும், கே சந்திரசேகர ராவும் சந்திரபாபு நாயுடுவுக்கெதிராக ஒன்று சேர்ந்தார்கள்.  ஹைதராபாதில் இன்று இருமாநில முதல்வர்களும் ஆளுநர் நரசிம்மனைச் சந்தித்து, மாநிலப் பிரிவினைக்குப் பிறகு இன்னமும் தீர்க்கப் படாத பிரச்சனைகளை விரைந்து தீர்ப்பதற்காகப் பேசினார்கள் என்கிறது செய்தி. YSRCP தெலங்கானாவில் தனிக்கடை போடவில்லை என்பதால் ஜெகன் KCR இருவரும் நண்பர்களானது, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும்  தொடருமா என்பது தெரியவில்லை.

While NOTA with a 1.5% vote share outnumbered the BJP, which got 0.95%, and the Congress, which got 1.29% for the Lok Sabha seats, both national parties performed equally badly in the Assembly as well, with the BJP getting a mere 0.84% vote share and Congress 1.17% while NOTA managing to get 1.28%.Political analysts feel that the YSRCP’s triumph has become an obvious threat to the existence of the TDP, while believing the same also provides certain political opportunities to the two national parties. இப்படி ஒரு செய்தியை உங்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியுமானால், அரசியலில் நீங்களும் பிஸ்தா.

NOTAவை விடக்  குறைவாக ஓட்டு வாங்கிய பிஜேபி என்று மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தால் நீங்களும் ஒரு இணையதள திமுக என்று சொல்ல மாட்டேன். #ஊடகப்பொய்கள் எவ்வளவு வலிமையானவை என்று ஆச்சரியப்படுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

மீண்டும் சந்திப்போம்.   

      

Tuesday, May 28, 2019

மீண்டும் இடதுசாரிகள்! புரிதலுக்காக ஒரு விவாதம்!

காங்கிரசில் ராகுல் காண்டியின் ராஜினாமா ஸ்டன்ட் இன்னமும் முடிவுக்கு வராத குழப்பத்தைப் பற்றி என் அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா என்ன  சொல்கிறாராம்? 



உடைந்துபோன கையை ஒட்டுப்போட இன்னும் அதிக ராஜினாமாக்கள் வேண்டுமாம்! உருக்கமாகப் பேசிய பானாசீனா, காரியகமிட்டி கூட்டத்துக்கே வராத கமல்நாத், ராகுலை சமாதானப்படுத்த முயன்று தோற்ற அசோக் கெலாட்  இந்த மூவரும் ராஜினாமா செய்வதில்   பங்கெடுக்காமல் இன்னமும் கள்ளமௌனம் சாதிப்பது காங்கிரசில் மட்டுமே நடக்கக் கூடிய விசித்திரம்!   




ஹிந்து நாளிதழுக்கு நன்றியே இல்லையா? ராகுல் காண்டி ராஜினாமா செய்தெ ஆகவேண்டுமென்று குதிக்கிறதே!  

முடிவுகள் சொல்வதென்ன?-4
இந்தியா
இடதுசாரிகள்
மரத்தினில் நாகம், நிலத்தினில் வேங்கை என்ற நிலையில் தவித்துக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள். பாஜகவும் எதிரி. காங்கிரசும் எதிரி என்பது மட்டுமல்ல பிரசினை. தேர்தல் அரசியலா? சித்தாந்த அரசியலா என்று தீர்மானிக்க முடியாமல் பலப் பல ஆண்டுகளாகத் திணறிக் கொண்டிருக்கிறார்கள் இடதுசாரி அறிவுஜீவித் தோழர்கள்
மரத்தினில் நாகம் கதையில் வருவது போல இடறி விழுந்தவன் வாயில் தேன் கூட்டடிலிருந்து சிந்திய துளிகள் போல அவர்கள் ஐந்து இடங்களில் வென்றிருக்கிறார்கள். அதில் நான்கு திமுகவால், தமிழகத்தில் கிடைத்தது.
அவர்களின் வலுவான கோட்டைகளான வங்கம், திரிபுராவில் ஓரிடம் கூட அவர்களால் வெல்ல முடியவில்லை.கேரளத்தில் 10474 வாக்கு வித்தியாசத்தில் ஒருவர் வென்றிருக்கிறார். மற்ற மாநிலங்க்களில் ஒரு இடம் கூட இல்லை. ஊடகங்களால் கொண்டாடப்பட்ட இளம் தோழர் கன்னையா குமார் பிகாரில் களம் இறங்கி தோற்றுப் போனார்.
இடதுசாரிகளின் தோல்விகள் அவர்களுக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைக்குமா என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.
இடதுசாரிகளின் தோல்வி அவர்கள் சமூக யதார்த்தங்களிலிருந்து விலகி நிற்கிறார்கள் அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் அல்லது புரிந்து கொண்டாலும் ஏற்க மறுக்கிறார்கள் என்ற மூன்று வகையான கருத்துக்களை நண்பர்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட விவாதங்களில் சொன்னார்கள்.
மூன்றுமே காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் இனி சோஷலிச உலகத்திற்குத் திரும்ப இயலாது என்பதையும், உலகமயமாக்கல் மனிதர்களை வேரற்றவர்களாக ஆக்கும் போது அவர்கள் பாதுகாப்புணர்வின் காரணமாக ஏதேனும் ஓர் அடையாளத்தைப் பற்றிக் கொள்வார்கள் அது இந்தியா போன்ற தொன்மையான கலாசாரத்தில் முதன்மையான அடையாளமான மதமாக இருக்கும் சாத்தியம் அதிகம் என்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள்.
நான் கடந்த ஆண்டு சீனம் சென்றிருந்த போது பெய்ஜிங்க்கில் உள்ள ஒரு ஆலயத்திற்குச் சென்றிருந்தேன்.தாவோ மதப்பிரிவினரின் ஆலயம். அவர்களுக்கும் செல்வம் கொடுக்க, நோய் தீர்க்க, கல்வியில் சிறக்க என்று வெவ்வேறு வித புத்தர்கள் / கடவுளர்கள் உண்டு. இந்துக்களுக்கு தனம் தரும் லட்சுமி போல அவர்களுக்கு தாரா. அவர்களும் இந்துக்களைப்போல நேர்ந்து கொள்ளல், விரதம் இருத்தல், வேண்டிக் கொள்ளல், பெளர்ணமி அன்று சிறப்பு வழிபாடு இவற்றை மேற்கொள்ளுகிறார்கள். மாவோவின் மண்ணிலிருந்து மத நம்பிக்கைகளை கம்யூனிசத்தால் மாற்ற இயலவில்லை. வலதுசாரிப் பாதைக்குத் திரும்பியிருக்கிற இந்தியாவில் மக்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள், அடையாளங்களை, ஆதரவை எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.
இடதுசாரிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது அவர்களுடைய பலவீனமான அமைப்பு.கூட்ட்ணி இல்லாமல் அவர்களால் எந்தத் தேர்தலிலும் வெல்ல முடியாது. ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இல்லாதவர்களுக்கு கட்சி சாராத வாக்காளர்கள் வாக்களிக்கத் தயங்குவார்கள். இடதுசாரிகளுக்கு அரசு அமைக்கும் வாய்ப்பு (கேரளம் தவிர்த்து) எங்கும் இல்லை.
அவர்கள் பக்க வாத்தியமாகவே தொடர வேண்டிய நிலையில் இருக்கும் அவர்கள் தீட்டிய மரத்திலேயே பதம் பார்த்த வரலாறுகள் உண்டு. அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் அதிமுகவை எதிர்த்தது உண்டு. இன்று திமுக கூட்டணியில் இருப்பவர்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் அதை எதிர்த்தவர்கள். இது பொதுமக்களுக்கு அவர்கள் மீதானநம்பிக்கையைத் தகர்க்கிறதுநான்  
மீசையை எடுப்பதா, கூழைத் துறப்பதா என்ற முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்.
இடதுசாரிகள் பற்றி சரியான புரிதல் இல்லாமலேயே இடதுசாரிகளைப் பற்றி பொத்தாம் பொதுவாக மாலன் எழுதியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

உங்களுடைய கருத்து என்ன? விவாதக்களம் திறந்தே இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.
    

Monday, May 27, 2019

ராகுலின் கோபம்! பானாசீனா ஜம்பம் செல்லுமா?

ராகுல் காண்டியின் ராஜினாமா நாடகம் இன்னமும் தொடர்கிறது என்கிறார்கள். காரியகமிட்டி கூட்டத்தில் பானாசீனா,கமல்நாத், அசோக் கெலாட் மூவர்மீதும் பப்பு மட்டுமே குற்றம் சொல்லவில்லை. பப்பியும் சேர்ந்து கொண்டு இங்கே இருப்பவர்கள் எல்லாம் என்ன செய்தீர்கள்? என் அண்ணனைத் தனியாக விட்டு விட்டீர்கள் என்று சாடியதாகவும் செய்திகள் கசிகின்றன. அதற்குப் பின்னாலும் ராகுல் காண்டி தன் ராஜினாமா முடிவில் இன்னமும் ட்ராமாவை நீட்டித்துக் கொண்டேபோவதாக இன்றைய Comedy Monday செய்திகள்! சமரசமுயற்சி கைகூடவில்லை என்கிறது இந்து தமிழ்திசை


பாதுஷாக் கனவுகள் இருப்பவர்கள் எல்லோருமே பாதுஷா ஆகிவிடுவதில்லை என்ற கசப்பான பாடத்தை காங்கிரஸ் கட்சியின் இன்றைய ஜாகீர்தாரர்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

காரியகமிட்டி  கூட்டத்தில் நடந்தது என்ன என்று ஒவ்வொரு தகவலாக வெளி வருகின்றன. கூட்டத்தில் பேசிய பிரியங்கா, ‛‛கடுமையாக தேர்தல் பிரசாரம் செய்த ராகுலின் உழைப்பை கட்சி தலைவர்கள் யாரும் பாராட்டவில்லை. நான் மட்டுமே பாராட்டினேன். அவருக்கு வேறு யாரும் ஒத்துழைப்பு தரவில்லை. ராகுலின் தலைமை பற்றி இப்போது கேள்வி எழுப்பும் தலைவர்கள், அப்போது எங்கு போனீர்கள்' என்று கேட்டார் என்கிறது இன்னொரு செய்தி.

கர்நாடக அரசியல் நிலவரத்தை அருமையாக விளக்கும் சதீஷ் ஆசார்யாவின் இரண்டு கார்டூன்கள்!



தேவே கவுடாக்களையும் அதிர வைத்த பிஜேபியின் வெற்றி! அடுத்தது என்னவாம்? ம்யூஸிகல் சேர் தானா?


இதெல்லாம் போகட்டும்! தமிழகம் இந்தத் தேர்தல் முடிவுகளைத் தாண்டி அடுத்தகட்டத்துக்கு நகர ஆரம்பித்து விட்டதா?


நம்மூர் ஊடகங்கள், சேனல்களுடைய யோக்கியதை என்னவென்று தெரிந்தும் இப்படிக்கு கேட்கலாமா? பழங்கதை பேசித்திரிப்பது  தமிழேண்டா குணமல்லவா! 

மீண்டும் சந்திப்போம்.
     

Sunday, May 26, 2019

கார்ட்டூன்களோடு கொஞ்சம் அரசியலும் பேசுவோமா?

பக்தாள் நிலைமையென்ன? ஒரு பின்னூட்டக் கவலை! இப்படி முந்தைய பதிவுக்கு என்னுடைய குறுக்கீடு அவசியமில்லாமல் நண்பர்களே விவாதத்தை நன்கு  நடத்திக்கொண்டு போகிறார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எழுத்துக்கு எழுத்து வார்த்தைக்கு வார்த்தை என்று பதில்கள் இல்லாமல் அவரவர் முதலில் சொல்லப்பட்ட ஆறுவிஷயங்களுக்கு மனதில் பட்டதை சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு.என்னுடைய மனமார்ந்த நன்றிகளைப் பங்கு கொண்ட நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதோடு இனிமேலும் பங்குகொள்ள விரும்புகிறவர்களுக்கு அந்த விவாதக்களம் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையும்!
அடடே! மதி இங்கே சொல்லியிருக்கிறபடி திமுகவுக்கு வெற்றிக் கோப்பையை ஜனங்கள் தந்திருக்கிறார்கள் என்றால் எதை நம்பி? ஒப்புக்கு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகளை நம்பியா? அல்லது கிட்டத்தட்ட மூன்றாண்டு காலமாக, தமிழகத்தை ஒரு கொந்தளிப்பான பிரதேசமாகவே வைத்திருந்தார்களே அதற்காகவா?   அல்லது ........



ஜெயித்தும் பிரயோசனமில்லை என்கிறமாதிரியாகக் கோப்பையைத் தலைமேல் கவிழ்த்திருக்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தமாம்? தயாநிதி மாறன் உளறிக் கொட்டியிருக்கிற மாதிரி எடப்பாடி பழனிச்சாமி உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்கிற மாதிரித் தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்களா என்ன? இந்த வாதத்தின் படி 2014 இல் திமுக வாஷ் அவுட் ஆனபோது திமுக சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்களா என்ன?  
     

இப்படி ஒரு நண்பர் முகநூலில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். ஆசை என்னவோ நியாயமானதுதான்! இதில் சேரவேண்டிய உதிரிக்கட்சிகள் எண்ணிக்கை அதிகம், திமுகவோடு ஒட்டிக்கொண்டு விசிக மதிமுக இடதுசாரிகளோடு இன்னும் மூன்று உதிரிகள் நாடாளுமன்றத்த்துக்குள் நுழைகிறார்கள்! ஆனால் அங்கே போய் என்ன சாதிக்கப்போகிறார்கள்?  

 
வருகிற செய்திகளைப்பார்த்தால், வைகோவுக்கு திமுக உறுப்பினராகத்தான் ராஜ்யசபா சீட் என்று இசுடாலின் நிபந்தனை விதிப்பதாக! இந்தத் தேர்தலோடு மதிமுக என்கிற உதிரியும் காணாமல் போகப்போகிறது போல!

இத்தனை கார்டூன்களைப் போட்டுவிட்டு அபிமான கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவை விடமுடியுமா?
    
ராஜினாமா! நாடகம்! 
நடந்ததென்னவோ நடந்ததுதான்! 

உபதேசங்களுக்கா பஞ்சம்? !! 

மீண்டும் சந்திப்போம்.
 

Saturday, May 25, 2019

பக்தாள் நிலைமையென்ன? ஒரு பின்னூட்டக் கவலை!

இங்கே முந்தைய பதிவுக்கு நண்பர் ரஹிம் கொஞ்சம் விரிவாகவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். பின்னூட்டங்களில் பதிலாக எழுதுவதும் கூடப் பல சமயங்களில் கேள்விகளாக இருந்துவிடுவதுண்டு. இங்கேயும் அதேபோலத்தான் என்பதால்  அவர் சொன்னதை  அப்படியே இங்கே தருகிறேன். அதற்கு என்னுடைய பதில் என்றில்லாமல், இங்கே வரும் நண்பர்கள் பதில் சொல்ல முனைந்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். எப்போதுமே ஒரு கை  ஓசை என்றே இருந்துவிடக்கூடாது அல்லவா?



பிஜேபி வென்றாலும் பக்தாக்களை பதட்டப்பட வைக்கும் கவலைகள்!



1. இது ஒன்றும் புது அரசு இல்லை. 2014 ன் தொடர்ச்சிதான். இவர்கள் என்ன செய்வார்கள் என பிஜேபி எதிரணிக்கு பழக்கம்தான். உண்மையில் இவர்களை எதிர்கொள்ள எதிரணிக்கு ஆற்றலும் அனுபவமும் அதிகம்.

2. ஒடுக்கபட்டோருக்கு குரல் கொடுக்கும் திருமா, சுப்பராயன், வெங்கடேசன், தமிழச்சி, ரவிக்குமார் போன்றோர் கடந்த அதிமுக பொம்மைகளை விட வீரியமான உறுப்பினர்கள். இது ஒரு பார்லியை பதற வைக்கும் ட்ரீம் டீம்.

3. இந்திய இந்து மயமாகிறது என்பது அளவுக்கு மீறிய கற்பிதம். இந்துத்துவம் ஓரளவு ஓட்டுக்களை பெற்று தந்தது என்பதை தவிர மிதமிஞ்சிய பயம் தேவை இல்லை. வடஇந்தியாவில் பதிவான வாக்குகளே 50 முதல் 55 சதமே. பாதி நபர்கள் வாக்களிக்க வில்லை. அதில் (50 இல்) 30 முதல் 40 சதம் மட்டும் BJP நிரந்தர வாக்கு வங்கி. BJP வாங்கியது 50 சதம். அதாவது மேலதிகமாக 10 சதவீத நடுநிலை வாக்குகள் சென்றுள்ளன. மீதம் 50 சதம் எதிர்வாக்குகளே. 10 சதம் நடுநிலை வாக்குகள் திரும்ப வெல்லவும் 50 சத எதிர் வாக்குகள் ஒருமுகப்படுத்தவும் ஒரு உத்தி மட்டும் தேவை. இந்தியா இன்னும் ஒரு பன்முக நாடுதான்।

4. இந்துத்துவமும் தேசிய வெறியும் ஓட்டுக்களை வாங்கி தந்தாலும், தேசிய பிரச்சனைகளான வேலை வாய்ப்பும், விவசாய அழிவும் இந்த அரசை தாக்கும். இந்துத்துவம் நீண்ட நாளைக்கு மக்களுக்கு சோறு போடாது. இந்திய பொருளாதாரம் இதை தெளிவாக உணர்ந்துள்ளது. கூர்ந்து கவனித்தால் பங்கு சந்தை இதை எதிரொலிப்பதை காணலாம். BJP மிருக பெரும்பான்மை பெற்ற 23-May அன்று, முன்காலத்தில் நடக்காத அளவு பங்குச்சந்தை 'தேமே' என உயராமல் இருந்தது. ஆனால் நிபுணர்கள் 10 டு 15 சதம் உயருமென கணித்திருந்தார்கள்.

5. இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கோட்ஸேயின் கொடூர வரலாறு, சுதந்திரப்போரில் BJP ன் பங்கு, கேடி அண்ட் அல்லக்கைகள் அறிவுக்கூர்மை (கேன்சருக்கு மூத்திரம், மேகமூட்டத்தில் ரேடாரில் தப்புவது, இத்யாதி) ஒரு பொது விவாதத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூலம் பலரும் விழிப்படைய ஒரு வாய்ப்பு.

6. BJP ஆதரவாளர்களுடன் என்னுடன் உரையாடலில், BJP மேலுள்ள அபிமானத்தை விட காங்கிரஸ் மேலான கடுமையான வெறுப்பே இவர்களை BJP ன் பால் இழுக்கிறது. காங்கிரஸ் மாற்று தலையெடுக்கும்போது, BJP யை 'வேறு வழியில்லாமல்' ஆதரிக்கும் இவர்களில் பலர் BJP யை கழற்றி விடுவார்கள். காங்கிரஸுக்கு முட்டு கொடுப்பதை காங்கிரஸ் அபிமானிகள் நிறுத்த தொடங்கினால் இது இன்னும் விரைவில் சாத்தியமாகும்.

ஆறே பாயிண்டுகள்தான்! உங்களுடைய கருத்து என்ன? இன்றொரு நாள் காத்திருந்து, நண்பர்கள் பதிலெதுவும் தராவிடில், நாளை மறுநாள் இந்தப் பதிவிலேயே என்னுடைய பதில்களைத் தருகிறேன். 
  

கூட்டணிகள்,  தொகுதிப்பங்கீடுகள் எந்த அளவுக்கு செல்லுபடியாகக் கூடியவை என்பதைக் கொஞ்சம் யோசித்து வையுங்களேன்! தொடர்ந்து அரசியல் பேச உதவியாக இருக்குமே! அப்படியே இந்த வீடியோவையும்!

    
மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)