இசுடாலின் மகன் உதயநிதி தான் இங்கே அடுத்த வாரிசு என்று அறிவிக்கப்பட்ட அதே நாளில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியை இளைஞர் அணித் தலைவராக தாத்தன் தேவே கவுடா அறிவித்தாராம்! அறிவித்த ராசி சரியில்லையோ? குமாரசாமியின் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது இன்றைய பரபரப்பு!.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது? பாடல் இந்த சிச்சுவேஷனுக்குப் பொருத்தமானதுதான்!
ஒரு மாறுதலுக்காக 1977 இல் மொரார்ஜி தேசாய், ஜனதா தளம் என்று ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் குரலாக, இந்திரா தோற்கடிக்கப்பட்டது எப்படி என்று சொல்கிறார், கேளுங்கள்!
இதுவரை 12 MLA க்கள் தங்கள் ராஜினாமாக் கடிதங்களுடன் சபாநாயகருக்காகக் காத்திருக்கிறார்கள். சபாநாயகர் தனது அலுவலகத்துக்கு வருவாரா அல்லது இவர்கள் அவரது இல்லம் தேடிப்போயே ராஜினாமாவைக் கொடுப்பார்களா என்கிற பரபரப்பு இன்னும் அடங்கிய பாடில்லை.
காங்கிரஸ் கட்சி எப்படி அடித்தளம் வரை உளுத்துப்போய்க் கிடக்கிறது என்பதற்கு கர்நாடகா அரசியல்களமே ஒரு நல்ல உதாரணம்.காங்கிரஸ் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீள்வதற்கு அதன் எதிர்க்கட்சிகளே உதவியிருக்கின்றன. இந்திரா காலத்தில், ஜனதா கட்சியின் குழப்பங்களும் ராஜீவ் காலத்தில் ஜனதா தளத்தில் நடந்த குழாயடிச் சண்டைகளும் காங்கிரஸ் மீண்டுவர உதவின. சோனியா, ராகுல் காலத்தில் நிலைமை அப்படி இல்லை. காஷ்மீர் முதல் கர்நாடகம் வரை, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய அளவில் வேரூன்றியிருக்கும் ஒரு தேசியக் கட்சியை முதல்முறையாகக் களத்தில் சந்தித்துத் தோற்றிருக்கிறது காங்கிரஸ். இதுபோன்ற சூழலை காங்கிரஸ் எப்போதும் எதிர்கொண்டதில்லை. என்று விகடன் தளத்தில் சொல்வது உண்மைக்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது. சரண்சிங்கின் வெள்ளந்தித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜனதா தளத்தை உடைத்து, பிரதமரான அவரையும் சிறிது நாட்களிலேயே கவிழ்த்த இந்திராவின் வஞ்சகத்தைச் செயல்படுத்த அன்றிருந்த தளபதிகள் யாரும் இன்றைக்குக் காங்கிரசில் இல்லை. பானாசீனா மாதிரிக் காசு எங்கே கிடைக்கும் என்று மோப்பம் பிடிக்கிறவர்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது?
ராகுல் காண்டி மாதிரியே இந்தத் தேர்தல் தோல்வியில் சுருண்டு போய்க் காற்றில் அலைக்கழிக்கப்படுகிற சருகு போல ஆகிப்போனவர் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு. முன்பு ஜெயிக்கிற தரப்பின் பக்கம் இருந்தே தானும் ஜெயித்தவர், இன்று அரசியல் எதிர்காலம் என்னாகுமோ என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்கின்றன செய்திகள். ஊழல் வழக்குகளில் எப்போது கைது செய்யப்படுவார் என்கிற தேதி மட்டும் தான் தெரியவில்லையாம்! "The MLAs are well aware that TDP boss Naidu will soon be in jail on (alleged) multiple charges relating to corruption. Several close aides and family members of Naidu are also involved in corruption. It is for this reason that MLAs are approaching us. They realise that TDP's image of a clean party has taken a beating," said Deodhar who is also BJP's state in-charge for Tripura. என்கிறது எகனாமிக் டைம்ஸ் மூழ்கும் கப்பலில் இருந்து தப்பித் பிழைக்க விரும்புகிறவர்கள் அணிமாற நினைப்பது இயல்பே.
மீண்டும் சந்திப்போம்.