Saturday, February 9, 2019

மாயாவதி! இசுடாலின்! YSR ரெட்டி! மம்மூட்டி!

மாயாவதி உ பி முதலமைச்சராக இருந்த சமயத்தில், தன்னுடைய சிலை, தேர்தல் சின்னம் யானை இவற்றை மாநிலம் முழுவதும் இங்கே கழகங்கள் அரசின் வரிப்பணத்தில் செய்த மாதிரியே செய்ததில் ஆன செலவை திருப்பித்தர வேண்டுமென்று நேற்றைக்கு உச்சநீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது. 
மம்தா பானெர்ஜிக்காக ஓடோடிச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்த உதிரிக்கட்சித் தலைவர்கள் யாராவது மாயாவதிக்கும் ஓடிப்போய் ஆதரவு தெரிவித்தார்களாமா? மாயாவதி நமக்கு நாமே  
என்று ட்வீட்டரில் ஆரம்பித்துவிட்டாராம்! ஒருமாதம் முன்புதான் ட்வீட்டர் கணக்கே ஆரம்பித்தாராம்!
10:48 PM - 8 Feb 2019  

திமுக இம்மாம் பெரிய கூட்டணி அமைப்பது எதற்காக? 
கமல் ஹாசன் பொதி சுமக்கத்தான் என்கிறார். இதன் முழு நேர்காணலையும் பார்க்க இங்கே   

ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரம், கட்டம் எதுவுமே சரியில்லை போல இருக்கிறது! சில நாட்களுக்கு முன்புதான் NTR கதாநாயகுடு என்ற திரைப்படம் வந்து, NT ராமராவ் தெலுகு ஆத்ம கௌரவத்துக்காக இந்திராவை எதிர்த்து தெலுகு தேசம் கட்சியை ஆரம்பித்ததை ஜனங்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி விட்டுப் போயிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஹைடெக் சந்திரபாபு நாயுடுவை கிராமங்களுக்கு யாத்திரை நடத்தித் தோற்கடித்த YSR என்கிற ராஜசேகர ரெட்டியின் கதை மம்மூட்டி நடித்து வெளியாகி இருப்பதும் கூடவே வந்து உருத்தூட்டுகிறதாம்! 

மம்மூட்டி நடித்திருப்பதாலேயே, ராஜசேகர ரெட்டியை உத்தம புத்திரனாகப் பார்த்துவிட முடியுமா என்ன? ஒரு விபத்தில் இறந்து போனார்.மகன் ஜெகன் மோகன் ரெட்டியை அரியணை ஏறவிடாமல் காங்கிரஸ் கட்சி செய்த உள்ளடிவேலைகள் என்னென்ன தெரியுமா?

2009 மே மாதம் நடந்த சட்ட சபை, பாராளுமன்றத் தேர்தல்களில் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதாகப் புகழாரங்கள், புராணங்கள் ரேஞ்சுக்குப் பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தன. குறிப்பாக, ஜலயக்ஞம் என்ற பெயரில், நீராதார வசதிகளைப் பெருக்கப் பெரும் திட்டங்களைத் தீட்டி, ஆந்திர விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்ததாக ஒரு கட்டுக் கதையும் தொடர்ந்து பரப்பப் பட்டது. சந்திரபாபு நாயுடு ஹைடெக் வசதிகளை மட்டுமே கவனித்தார், ஏழை விவசாயிகளைக்  கவனிக்கவே இல்லை என்று ஏழைப் பங்காளனாகக் காட்டிக் கொண்ட ரெட்டி ஆந்திர மக்களுக்குத் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளாகவே தெரிந்ததிலோ, சந்திரபாபு நாயுடு திரும்பவும் தோற்றுப்போனதிலோ ஆச்சரியம் ஏதும் இல்லை.


அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை! இப்படி இங்கே ஒருத்தரை மதுரையில் கொண்டாடினார்கள் . இன்றோ இருக்கும் இடம் தெரியவில்லை! ஆனால் ஜெகன் அதை ஆந்திர அரசியலில் இன்றுகூட நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.
  
நாலாவது தூண்! ஜனங்களுடைய அறியாமை! வலுவாகவே தாங்கிப் பிடித்ததை முன்பே பார்த்திருக்கிறோம்.

ராஜசேகர ரெட்டி ஒரு விபத்தில் செத்தும் போனார். துரதிர்ஷ்டம் தான்! ஆனால் உண்மையான துரதிர்ஷ்டம்என்னவென்றால் , சாதரணமாக அல்லது வியாதி முற்றிச் செத்துப் போனவர்களையுமே  கூட, ராஜசேகர ரெட்டி செத்துப்போன அதிர்ச்சி தாங்காமல் செத்துப்போனவர்களாகத் தொடர்ந்து ஏறின எண்ணிக்கையில் தினம் தினம் பத்திரிகைகள் பட்டியலோடு வெளியிட்டுக் கொண்டிருந்தன!

Yatra cannot be called an out-and-out biopic, for it barely shows how YSR, one of the most popular political leaders the state has ever seen, was moulded as a person என்கிறது ஒரு திரைப்பட விமரிசனம்!



No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)