பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரம் வானூரில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்து அரசியல் தீர்மானத்தை வாசித்துப் பேசியதில் அதிமுகவுடனான கூட்டணி இயற்கையானது என்று சொல்லியிருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது .அதிமுகவுடன் தான் கூட்டு! அந்தக் கூட்டணியில் தான் பாஜகவும் சேர்ந்திருப்பதாக! ஹிந்து நாளிதழில் வாசகர் கருத்து இப்படி!
மருத்துவர் ராமதாசு தனது மகன் அன்புமணிக்காக ஒரு பசையுள்ள கூட்டணியை முடிவு செய்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை! நேற்றோ அதற்கு முன்போ என்ன பேசினோம் என்பதை வைத்து இங்கே அரசியல் செய்யப்படுவதில்லை என்பதைப் புரிந்துகொண்டால் ராமதாசு என்று மட்டுமில்லை, சிலகாலத்துக்கு முன்பு திமுக காங்கிரஸ் இரண்டையும் கழுவிக்கழுவி ஊற்றிய மதிமுக வைகோவும் விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவனும் கூட, இங்கே உத்தமர்களாகப் பேசிக் கொண்டிருப்பதும் புரியும்!
பாமகவின் வழக்கறிஞர் பாலு இந்த நேர்காணலில் ஒரு விசித்திரமான தகவலைச் சொல்கிறார். UPA ஐமு கூட்டணிக்குழப்பம் வெர்ஷன் ஒன்றில் பாமக இருந்த காலத்தில் ஒரு ஊழல் புகாரும் இல்லையாம்! அதே ஐக்கிய ஊழல் கூட்டணி வெர்ஷன் 2 இல் என்ன என்ன கிளம்பின என்று போகிற போக்கில் அடித்து விட்டுப் போகிறார் பாருங்கள், நம்முடைய அரசியல் போகிற போக்கைப் பார்த்து வேதனைப்படாமல் எப்படி இருக்க முடியும்? வருத்தம் தீர்க்க ஒரு ஒன்றரை நிமிட வீடியோ!
விசிக பாமக போன்ற நிறைய உதிரிகளைக் களைய வேண்டிய அவசியத்தை இப்போதல்ல, சிலகாலமாகவே நான் சொல்லி வருவதை எனக்கே மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் போல!
என்ன, வானிலை மாறுதே என்கிறீர்களா? என்னுடைய அரசியல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை!
No comments:
Post a Comment