வழக்கம்போல தில்லாலங்கடி வேலையில் திமுக! ஆனால் கமல் ரசிகர்கள் விட்டு வைக்கலியே! வசமாய்ச் சிக்கிய உதயநிதி என்று மூன்றாம் கலீஞரை நையாண்டி செய்கிறது தினசரி தளச் செய்தி! இணையதள திமுக Internet DMK என்றெல்லாம் தம்பட்டத்தோடு வந்தவர்கள் இன்று 200 ரூபாய் திமுக என்றாகிவிட்ட பிறகு வேறென்ன நடக்கும்?
8:03 PM - 18 Feb 2019
எப்படியோ, திமுகவுக்கு மிரட்டலைத் தரவாவது ஒரு கூட்டணி உருவானது நல்லது என்று சொன்ன முகூர்த்தம்!
இணைய திமுக காரர்கள் இந்த முறையும் புள்ளிவிவரக் கணக்கோடும் வரலாற்றோடும் தீவிர உணர்வோடும் பேசி, மீண்டும் கோட்டை விடுவார்கள் என்றே தோன்றுகிறது. அப்புறம் அடுத்த ரெண்டு வருஷம், அவரை உள்ள விட்டது தப்பு, இவரை விட்டது தப்பு, துரோகிகள் அது இதுன்னு பிலாக்கணம் வைத்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் திரும்ப முதலில் இருந்து துவங்குவார்கள் என நினைக்கிறேன் என்கிறார் ஹரன் பிரசன்னா அவர் மேலும் சொல்வது இது:
ஸ்டாலின் இவர்களை நம்பி இருக்கிறாரா அல்லது இவர்கள் ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறார்களா என்பதெல்லாம் கட்சியின் வெளியில் இருக்கும் யாருக்கும் புரியாத புதிர்.
பாவம் ஸ்டாலின். எல்லாம் சரியாக வரும்போது, பாஜக + பாமக + அதிமுக + தேமுதிக என்று கூட்டணி அமைவது பெரிய சவால்தான். (இப்போதும் என் பார்வையில் திமுகதான் முன்னணியில் இருக்கிறது என்றாலும், திமுகவுக்கு வெற்றி அத்தனை எளிதாக இருக்காது என்ற கட்டத்துக்கு, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரேயே வந்துவிட்டது திமுகவுக்கு பெரிய பின்னடைவுதான்.) அதிலும் மதிமுக திமுகவோடு இருப்பது கூடுதல் சாபம். (விசிகவை சுத்தமாய் மறந்துட்டீங்களே ஹரன் பிரசன்னா?!!)
அதிமுக இல்லாத பாஜக அணி கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் 18.5% வாக்குகள் பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி தொடராமல் போனதும் மக்கள் நலக் கூட்டணி வந்ததும் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த பெரிய விபத்து. [அதிலும் திமுகவே பலி! )] இன்று, தேமுதிகவின் வாக்கு சரிந்திருக்கிறது, மதிமுக இல்லை என்பதைக் கணக்கில் கொண்டு, இது பாராளுமன்றத் தேர்தல் என்பதையும், கருணாநிதியும் இல்லை ஜெயலலிதாவும் இல்லை என்பதையும் கணக்கில் கொண்டால், கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது என்றே நினைக்கிறேன். பாமக பாஜக தேமுதிக அதிமுகவுன் கூட்டணி வைத்ததால், இனி தினகரனின் அமமுகவை (கட்சிப் பெயர் சரிதானா?!) மக்கள் உண்மையான அதிமுகவாகக் கருதமாட்டார்கள் என்ற தோற்றமே வருகிறது. இது எல்லாமே பாஜக கூட்டணிக்கு நல்லதைத் தரலாம்.
பாமக அதிமுகவோடு போனதில் இசுடாலின் ரொம்பவே நொந்து போயிருக்கிறாரோ? தனியாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.
வரலாற்றுப்பிழைகளுக்குப் பெயர்போன இந்திரா வாரிசுகள் நடத்தும் கட்சியின் அழகிரி பாமகவின் முடிவை வரலாற்றுப்பிழை என்கிறார். பேரங்கள், கட்டப்பஞ்சாயத்துக்குப் பெயர்போன விசிக வின் திருமாவளவன் சீட்டுகளைத் தாண்டி வேறு என்னமாதிரி பேரம் முடிந்திருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்!
அவரவர் கவலை அவரவருக்கு! நம்முடைய கவலை என்னவாக இருக்கவேண்டும் என்பதாவது இங்கே ஒரு கோடி காட்டப்படுவது தெரிகிறதா?
யாத்ரா! ஒரு திரைப்பட விமரிசனமாக மட்டுமே எழுதப்படவில்லை என்பதும் புரிகிறதா?
//கடந்த தேர்தலின் பாஜக கூட்டணி பெற்ற வாக்கில் பெரிய பின்னடைவு இருக்காது // - இது சரியான அனுமானமல்ல. அந்த 10 ஆண்டு காலத்தில் திமுக, காங்கிரஸ் செய்த பெரிய பெரிய ஊழல் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்த காலம். யாராவது தேவதூதன் வரமாட்டானா என்று எதிர்பார்த்தபோது, மோடி என்ற ஒற்றை மனிதரின் பின்னால் நம்பிக்கையோடு மக்கள் நோக்கிய காலம் (உ.பி ல-உத்தரப் பிரதேசம்.. உடன் பிறப்பு இல்லை, மொத்த சீட்டும் பாஜகவுக்கு வந்ததையும் கவனிக்கணும்). அதுனால இத்தனை %. இப்போது அதிமுகவைத் தவிர மற்றவர்களோட (அவங்க கூட்டணி) வாக்கு சதவிகிதம், தினகரன் ஏற்படுத்தும் %குறைவை ஈடு செய்யுமா என்றும் நோக்கணும்.
ReplyDeleteவிசிகவின் விமர்சனத்தில் அர்த்தமில்லை. 'மதிமுக' இதைப்பற்றிக் கருத்துச் சொல்லாது (திருடனுக்குத் தேள் கொட்டினமாதிரி). காங்கிரஸ், திமுக கூட்டணி எப்போதும் வியாபார நிமித்தம்தானே.
வாருங்கள் நெல்லைத்தமிழன்!
Delete2014 இல் நரேந்திர மோடி என்கிற தனிமனிதன் மீது வைத்த பெருவாரியான நம்பிக்கையை அப்படியே பாரதீய ஜனதா கட்சி தன்னுடையதாக ஆக்கிக் கொள்ள ஏன் முடியவில்லை என்பதையும் சேர்த்துப் பார்த்தால், ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும். ஜனங்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
முதலாவதாக, வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கு ஒரு ஐந்து ஆண்டுகால ஆட்சி போதாது. அதற்கு ஜனங்களை பக்குவமாகத் தயார் செய்யத் தவறியது யார், ஏன் என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!