மாற்று அரசியல் என்ன? இடதுசாரிகளை நம்பலாமா? இதைத்தான் முந்தைய பதிவின் தலைப்பாக வைத்திருக்க வேண்டும்! மாற்று அரசியல்! இடதுசாரிகளை நம்பலாமா? என்று கேள்வியின் முதல்பகுதியை விட்டுவிட்டு நேரே இடதுசாரிகளிடம் போய்விட்டோமா?
பரவாயில்லை! மாற்று அரசியலை இடதுசாரிகள் தான் முன்னெடுக்க முடியுமென்று,2014 ஆகஸ்டிலேயே பிரகாஷ் காரத் பேட்டி கொடுத்தது இங்கே இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் 1964 முதலே அதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட நீங்கள் பார்க்க முடியும்! அரசியல் மாற்று! மாற்று அரசியல்! என்று வார்த்தைகளை மாற்றிப்போட்டுப் பார்த்தால் இரண்டும் ஒன்றல்ல என்பதுமே கூட மெல்ல மெல்லப் புரியும். Some basic research and investigation by us in India Against Corruption earlier this year revealed that at least 15 senior ministers of the Union cabinet, including the prime minister, Pranab Mukherjee and P. Chidambaram had serious charges of corruption or worse pending against them. This malaise is representative of the entire political class என்று சஞ்சய்ராவத் 2012 இல் எழுதியதுமே கூட வெறும் வார்த்தைச் சிலம்பம்தான்!

வாய்ச் சிலம்பத்திலேயே சோஷலிசம், செகுலரிஸம் இன்னபிற புரட்சிகளையும் சாதித்து விட்டதாக நம்ப வைப்பதில் இந்திரா காங்கிரசாக இருந்து இன்றைக்கு சோனியா ராகுல் பிரியங்கா என்று மட்டுமே ஆகி முட்டுச் சந்துக்கு வந்து நிற்கும் காங்கிரஸ் ஓரளவுக்கு ஜெயித்து இன்றைக்கு அனைத்தையும் இழந்து நிற்கிற பரிதாப முதலியார் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கலாம்.சுருக்கமாக Pseudo Left என்கிற அசிங்கமான நகலெடுக்கிற வேலையை முதலில் ஆரம்பித்தது காங்கிரஸ்தான்! இன்று மற்றவர்கள் அந்த வேலையில் கைதேர்ந்தவர்களாகி காங்கிரசை ஓரங்கட்டி வைத்து விட்டார்கள்!
இந்த வீடியோ சொல்வது உண்மைதானா? இதற்கு விடை இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடக் கூடியதுதான்! ஆனால் மார்க்சீயம், அம்பேத்கரியம், ஈவெராஈயம் எல்லாம் கலந்துகட்டி, தன்னையும் ஒரு மாற்றாகக் காட்டிக் கொள்கிற பேச்சு சாமர்த்தியம் விசிக வின் திருமாவளவனுக்கு கைவந்த கலையாகி விட்டது.
இருமுனைப்போட்டியா? மும்முனைப் போட்டியா? நான்கு முனைப்போட்டியா என்றே தெளிவாகாமல் இங்கே தேர்தல் களத்தை ஊடகங்கள் வீணாகக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் தந்தி டிவியின் அசைன்மெண்டாக இதுதான் இருக்கும் போல!
தேதிமுக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் இங்கே பிளந்து கட்டுகிறார்!
ஆனாலும் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பையும் வாக்கு வங்கியையும் கணிசமாக இழந்து நிற்பது என்னவோ மறுக்கமுடியாத கள யதார்த்தம்!
இவர்களில் எவராவது நிஜமான மாற்று அரசியலை முன்னெடுத்துப் பேசுகிறார்களா?இப்போதிருக்கும் அரசியலுக்கு சரியான மாற்று எது என்பது தெரிந்து தான் பேசுகிறார்களா?
அந்த வகையில் ஒரு மாற்று அரசியலை முன்வைத்துக் களம் கண்டவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டும் தான்! 1964 இல் கட்சி உடைவதற்கு முன்னாலேயே, ஒருபகுதி மாற்றங்களுக்காக உழைப்பதை விட்டுவிட்டு அரசோடு இணக்கமாகப் போய்விட்டார்கள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக அறியப் படுகிற CPIM, தன்னுடைய கொள்கை அறிக்கையையும் செயல் அறிக்கையையும் தெளிவாக அறிவிக்கவும் செய்தார்கள். அவர்களே கூட இங்கே ஒரு புரட்சிகர அரசே அமைந்தாலும் சோஷலிஸப் புரட்சியை சாதிக்க முடியாது, இடைக்கால ஏற்பாடாக மக்கள் ஜனநாயகப் புரட்சி நடந்தேறி, அதுநிலைத்த பிறகு தான் சோஷலிசப் புரட்சி என்பது சாத்தியம் என்று தெளிவாக வரையறுத்தார்கள். இங்கே பார்க்கவும்
ஆனால் இந்திரா அரசியல் சாசன முகவுரையில் 42வது திருத்தம் கொண்டுவந்து "sovereign democratic republic" என்றிருந்ததை "sovereign, socialist, secular democratic republic" என்று மாற்றியவுடனேயே நாடு ஒரு சோஷலிச, மதச்சார்பற்ற ஜனநாயகமாக மாறிவிட்டது என்று கதைத்தால் நானும் ஒரு Pseudo Socialist என்பதற்கு மேல் வேறென்ன ஆகிவிட முடியுமாம்?
விடை தெரிந்தால் சொல்லுங்கள்! மேலும் கேள்விகள் கேட்போம்!
இடதுசாரி, வலதுசாரி என்ற பாகுபாடெல்லாம் இல்லாத எல்லோரும் ஒன்று கலந்து கூட்டணி அமைத்துக் கொள்ளும் காலகட்டத்தில் இடதுசாரிகளை நம்பலாமா என்றால் என்ன சொல்ல முடியும், சொல்லுங்கள்...
ReplyDeleteஇரண்டாவது வலதுசாரி என்பதெல்லாம் இடதுசாரி என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டோரின் சென்ற காலத்து வார்த்தைப் பிரயோகங்கள்.
வலதுசாரி என்று எந்தக் கட்சியையும் முத்திரை குத்த முடியாத வளர்ச்சிப்போக்கு கொண்ட காலம் இது.
எல்லோருக்கும் எல்லா பகுதி வாக்குகளும் தேவை என்ற நிதர்சன உண்மை உலா வரும் காலம் இது.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete