கமல் காசன் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகப் பேசும் சில தருணங்களில், எப்போதையும் விட அதிகமாகக் குழப்புவார்! தெரிந்த விஷயம்தானே! என்று ஒதுக்கி விட்டுப் போய்விட முடியாத உளறலுடன் வந்தால் என்ன செய்வீர்கள்?
நான் சொல்ல வந்த விஷயம், 32வது நிமிடத்தில் இருந்து.
காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? - கமல்ஹாசன் கேள்வி என்று அதையே தலைப்பாக்குகிறது ஹிந்து நாளிதழ். காஷ்மீர் விவகாரத்தை இந்த அளவுக்குப் பிரச்சினையாக வளர்த்து விட்டதே நேருதானே!
இது எப்போது என்று கேட்கிறீர்களா?
கமல் காசர்கள் தங்களுடைய அறிவுமட்டத்துக்கு நெருங்கி வரும் திராவிடங்களோடு அரசியல் பேசுவது சரி!அதற்காக காஷ்மீர் பிரச்சினை, பொதுவாக்கெடுப்பு என்றெல்லாம் தெரியாத விஷயங்களையும் பேசுவது சரிதானா?
K Panbarasu காட்சிகள் மூலம் கதை சொல்பவர் என்று முகநூலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொல்வது இது
தனிநபர்களை விட, அரசியல் கட்சிகளை விட தேசம் பெரிது! கமல் காசன் உளறல் தேசிய அளவில் பெரும் கோபத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.
கமல் சொன்னது நியாயமான விஷயம்தான். இப்போ பாருங்க, அவர் தேர்தல்ல நிற்பார். (அதுவும் பொது வாக்கெடுப்புதானே). 50%க்கு மேல் வாக்கு வாங்கலைனா, கட்சியைக் கலைத்துவிடுவார். ஏன்னா அவர் நியாயமானவர். அதுனால, கமல் காஷ்மீரைப் பற்றிச் சொன்னதை முதலில் தனக்குச் செய்துகாண்பித்து தான் நியாயம்தான் பேசுகிறோம் என்பதை நமக்கு உணர்த்துவார். கொஞ்சம் காத்திருங்கள்.
ReplyDeleteவாருங்கள் நெல்லைத்தமிழன்! பகடியை மிகவும் ரசித்தேன்!
Deleteகமல் எவ்வளவு நியாயவான் என்பது இங்கே நிறையப்பேருக்குத் தெரிந்திருக்கிறது! அது அவருடைய அரசியலுக்குப் பாதகமா சாதகமா?
பொதுத்தேர்தலும், கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பும் ஒன்றல்ல.
Deleteஉங்களுக்கு தெரிந்த விஷயங்களில் கருத்திடுங்கள்.
உங்களுக்குப் புரியவைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றாலும், கீழே இருக்கும் காணொளியிலேயே விவரம் இருக்கிறது. உங்கள் அறிவுமட்டத்துக்கு ஒத்துவரும் இடங்களில் மட்டும் கருத்துரை இடவும்!
Deleteஹிந்து ஏன் அவர் சொன்னதைத் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்ததாம்?..
ReplyDeleteஇனி கமல், ரஜினி என்று ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு செய்தியாவது எழுதி விடுங்கள். காரணமாகத்தான்.
This comment has been removed by the author.
ReplyDeleteகமல் உளறலுக்கு கைதட்டல் வேறு... அதனால் மேலே மேலே கருத்து சொல்லத்தொடங்கி விட்டார் போல! இவர் பிரதமர் பதவிக்கும் மேலே எதற்காவது போட்டி போடுகிறாரோ...
Deleteஜப்பானின் துணை முதல்வராக "இவர்" இருந்தது அந்நாட்டு பிரதம மந்திரிக்குத் தெரியுமோ?!!!
இது எப்போது என்று - இந்த அரசியல்வாதிகளுக்கும் படு பயங்கர ஷார்ட் மெமொரி, அல்லது மக்களுக்கு ஞாபகசக்தியே சுத்தமாகக் கிடையாதுன்னு நினைச்சுக்கறாங்க. சமீபத்துலதான அறிவாலத்துல, கீழ்த்தளத்துல எவ்வளவு சீட் காங்கிரசுக்கு என்ற பேச்சு நடந்துகொண்டிருக்கும்போது, மேல் தளத்தில் சிபிஐ விசாரணை (தொலைக்காட்சி, 2ஜி சம்பந்தமா) நடந்தது. அந்தத் தேர்தல்லதானே 65 சீட்டை கழுத்தில் கத்தி வைத்து காங்கிரஸ் கட்சி திமுகவிடம் பெற்றது, அதுவும் பெரிய ஆளுமை இருக்கும்போது.
ReplyDelete