Tuesday, February 16, 2021

#நாசா தள்ளாடுகிறார்! #சிதம்பர ரகசியம்! ராமச்சந்திர குகா!

ராகுல் தேறுவாரா? இப்படித் தலைப்பிட்டு நேற்றைக்கு தினமலர் செய்தி ஒன்றைப் பார்த்தேன்.ரசித்தேன், சிரித்தேன்! தலைப்பே தேறமாட்டார் என்பதைச் சொல்லி விட்ட பிறகு வேறென்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்! அவர் போகிற இடங்களில் எல்லாம் கோஷ்டிப்பூசலும் தோல்வியும் சேர்ந்தே துரத்துகிறது! இதில் ராகுல் காண்டியை மட்டுமே குறைசொல்லிப் பிரயோசனமில்லை. தும்பை விட்டு வாலைப்பிடிக்கிற காங்கிரஸ் கலாசாரம் வேறு இருக்கிறதே!   


மத்திய அரசில் ராஜாங்க மந்திரியாக இருந்த நாட்களில் கேள்வி கேட்பாரில்லாத கோட்டைவாயாக உளறித் திரிந்த நாராயணசாமி பாண்டிச்சேரி முதல்வரான பிறகு ஒப்பீட்டளவில் சற்று அடக்க ஒடுக்க, மாகவே இருந்தார் தான்! அவருடைய கர்மா, கிரண் பேடியை  புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக வரவழைத்து  அவருடன் மோதுவதையே முழுநேர அரசியலாகவும், தொழிலாகவும் ஆக்கிவைத்தது. வாய்தான் பெரிதே தவிர காரியத்துக்கு ஆகாதவர் என்று தெரிந்த பிறகு அவருடன் சேர்ந்து அரசியலில் பயணித்து தற்கொலை செய்துகொள்வதற்கு யார் தான் தயாராக இருப்பார்? ஆக இதுவரை காங்கிரஸ் ஊழல் கோட்டையாகவே இருந்துவந்த பாண்டிச்சேரி முதன்முதலாக, அந்த கெட்ட சகவாசத்திலிருந்து விடுபடுகிற நேரமும் வந்துவிட்டது போல! நாளைக்கு ராகுல் காண்டி புதுச்சேரிக்குத் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வரப்போகிறாராம்! வந்து நாராயணசாமி ஒப்பாரி வைப்பதைக் கேட்கப் போகிறாரா? பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்குமா? கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?   


கழுத்தைப்பிடித்துத் தள்ளுகிறவரை நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்குவது காங்கிரஸ்காரன் குணாதிசயம்! நாசாவும் அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்! இதில் ராகுல் காண்டி வந்து என்ன செய்து விடமுடியும்?   


பானாசீனா 2009 தேர்தலில் வெற்றிபெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ.கண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்றைக்கு தேர்தல் வெற்றி செல்லும் எனத்தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிமன்றங்களில் இதுமாதிரியான வழக்குகள் வெற்றி பெறுவது எப்போதாவது நடக்கும் அதிசயம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால் ஆச்சரியம் ஏதுமில்லை. 


அதீதக்கற்பனைகளினாலேயே இந்திய சரித்திரத்தை எழுதிவரும் ராமச்சந்திர குகா இன்றைக்கு  NDTV தளத்தில் Why Modi And Shah Fear Young Activists என்ற தலைப்பில் மோடி அமித் ஷா இளைஞர்களைக் கண்டு பயப்படுவது ஏன் என்கிற மாதிரிப் பொருமித் தீர்த்து எழுதியிருக்கிறார் 

The first reason is that the Modi-Shah regime fears independent thinking in general. Indians must be obedient, conformist, loyal to the state and the ruling regime, and worshipful towards the Great and Visionary Leader. Ideally, the Indian state would like no critical, objective, detailed, scrutiny of its policies and actions to be permitted at all. However, while democratic freedoms have been greatly attenuated since May 2014, they have not been fully extinguished. There still exists (bare) elements of a free press, some (rapidly shrinking spaces) in civil society, and a few major states which are not ruled by the BJP. இது ராமச்சந்திர குகா எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதி.

உண்மையே உன் விலை என்ன? இது சோ. ராமசாமி எழுதி நடித்த ஒரு நாடகத்தின் தலைப்பு.பின்னாட்களில் திரைப்படமாகவும்! உடனடியாக நினைவுக்கு வந்தது.
ராமச்சந்திர குகா போன்றவர்களிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாதுதான்! ஆனால் அவர் போல நிறையப்பேர் எழுப்புகிற ஜனநாயகம்,கருத்து சுதந்திரம் இவைகளைப் பற்றி நம்முடைய புரிதல் என்ன? கட்டுப்பாடுகளில்லாத கருத்து சுதந்திரம், ஜனநாயகம் என்று இவர்கள் கூக்குரல் எழுப்புவது போல எங்காவது முன்னுதாரணம் அல்லது definition இருக்கிறதா?


மீண்டும் சந்திப்போம்      

9 comments:

 1. பழைய பதிவுகளையும் சென்று படித்து வந்தேன்.  தெரிந்து கொண்டேன்.  அந்த மூன்று புத்தகங்கள் பி டி எப் பில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அரசியலோ வேறெதுவோ பிரபஞ்சத்தில் எதுவுமே இலவசம், பிறப்புரிமை இல்லை ஸ்ரீராம்!
   AG கார்டினர் கட்டுரை On the Rule of the road அறுபதுகளில் ஆங்கிலப்பாடத்தில் படித்தது இன்றைக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது என்பதற்காகத்தான் பழைய பதிவின் லிங்க்
   we cannot simply think “I have liberty, and therefore I may do whatever I want.” We have to realize that there are times when our actions can take away liberty from other people. என்று நச்சென்று சொல்லிவிடுகிறார்

   கருத்து சுதந்திரம், சுதந்திரம் என்பவை சில பொறுப்புகளோடு வருபவை அதை நிறைவேற்றினால் மட்டுமே கிடைக்கக் கூடியது. அப்பன் பாட்டன் சேர்த்து வைத்த சொத்தை அழிப்பது மாதிரி செலவு செய்ய முடியாது.

   Delete
 2. நம் நீதிமன்றங்கள் மிக நேர்மையானவை. நல்ல தீர்ப்பையும் விரைந்து அளிப்பார்கள். நேர்மை என்பதை நிச்சயமாக கடைபிடிப்பார்கள். பசி தேர்தல் வழக்கு தீர்ப்பு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்னூட்டத்தில் இருக்கிற குத்தல், எள்ளல் இரண்டையும் ரசித்தேன் நெல்லைத்தமிழன் சார்! நன்றி

   Delete
 3. காங்கிரசின் ஆதரவுத்தளம் கிறித்துவ இஸ்லாமிய சமூகங்களுடன் சுருங்கிவிட்டது பரிதாபம்தான்

  ReplyDelete
  Replies
  1. அப்படி உறுதியாகச் சொல்லிவிட முடியாது. கேரளாவில் கிறித்தவ வாக்குகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டுமானால் இஸ்லாமிய வாக்குகளை இழக்கும் நிலையில் காங்கிரஸ் இப்போது இருக்கிறது உம்மன் சாந்தி மறுபடியும் முன்னுக்குக் கொண்டு வரப்படுவது ஏனென்று கொஞ்சம் கவனியுங்களேன்! இதர மாநிலங்களில் கூட கிட்டத்தட்ட இதே நிலைமைதான்.

   Delete
  2. உம்மன் சாண்டி எனது திருத்தி வாசித்துக் கொள்ளவும்.

   Delete
  3. எப்போதுமே 'சிறுபான்மையினர்' என்று வாக்குகளைக் குறிவைத்து காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகள் நடந்துகொள்ளும்போது, இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் அது அவர்களைத் தாக்கும் என்று நினைத்தது உண்மையாகிக்கொண்டுவருகிறது. அதனால்தான் சோனியா பிரியங்கா போன்றவர்கள் பெரியதாக குங்குமம் தீட்டிக்கொள்வதும், ராகுல் காண்டி தான் பிராமணன் என்று வெளிப்படையாக விளம்பரம் தேடுவதும், மற்றவர்கள் அலகு குத்திக்கொள்வதைத் தவிர மற்றவற்றைச் செய்ய முனைவதும் நடக்கிறது

   Delete
  4. காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி அதுவும் தேய்ந்து சித்தெறும்பாக ......வேறென்ன நடக்கும் என்று நினைத்தீர்கள் நெல்லைத்தமிழன் சார்?

   தேசிய உணர்வு ஒன்றே அந்தநாளைய காங்கிரசை உயிர்ப்புடன் வைத்திருந்தது. நேருவின் கற்பனாவாத சோஷலிசத்தில் அது குன்ற ஆரம்பித்தது இந்திரா தனது சுயநலத்துக்காக கட்சியை இரண்டாக உடைத்தார் pseudo seculars என்றானதில் CPI வலது கம்யூனிஸ்ட் கட்சி வந்து ஒட்டிக்கொண்டது சோனியா கைக்கு காங்கிரஸ் வந்தபிறகு இன்னும் சீரழிந்ததில் CPI, CPI M CPI ML என்று கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக பிஹாரில், மேற்கு வங்கத்தில் வந்து ஒட்டிக் கொண்டாயிற்று யார் யாரை முதலில் ஒழித்துக்கட்டப்போகிறார்கள் என்பதைப் பொறுமையாகப் பார்க்க வேண்டியதுதான் பாக்கி.

   தன்னுடைய ஒரிஜினல் அடையாளம் சித்த்தாந்தங்களை ஒவ்வொன்றாக உதிர்த்து விட்டு சோனியா காங்கிரஸ் எப்படி?யாவது ஆட்சியைப் பிடித்து விடமாட்டோமா என்று கண்ட கண்ட கட்சிகளுடன் சேர்ந்து போராடிப்பார்க்கிறது..அவ்வளவுதான்! இதில் ஜானேதாரி ராகுல் கண்டியை மட்டும் குறைசொல்வானேன்?

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கர்ணன் படத்துக்கு #CSகர்ணன் என வைத்திருந்தால் இன்னும் கனப் பொருத்தம்!

கர்ணன் திரைப்படத்தைக் குறித்து உதயநி!தி தெரிவித்த கருத்தை ஏற்று திரைப்படக்குழுவினர் திருத்தம் செய்து இருக்கிறார்களாம்! ஏனடா திருத்தச் சொன்னோ...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (318) அனுபவம் (250) நையாண்டி (104) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (81) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (45) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) எங்கே போகிறோம் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) Tianxia (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) மோடி மீது பயம் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) அஞ்சலி (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)