Saturday, February 20, 2021

#சாட்டர்டேபோஸ்ட் எல்லாமே அரசியல் தானா?

மூன்று நிமிடத்துக்கும் குறைவான இந்த தினமலர் வீடியோ பார்த்ததில் எனக்குள் எழுந்த முதல் கேள்வி::: IPAC  பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்காகத்தான் உத்தி வகுக்கிறாரா அல்லது தன்னுடைய சொந்த அஜெண்டாவை  முன்வைத்து மத்திய அரசு, பிஜேபி, நரேந்திர மோடி மீதான வெறுப்பை முன்வைக்கிறாரா?  


நடக்கப்போவது மாநில சட்டசபைத் தேர்தல் பிரதான எதிரியாகக் களத்தில் முன் நிற்பது அதிமுக என்கையில் மோடி அட்டாக் மோடுக்கு மாறி இசுடாலின் என்ன சாதிக்கப் போகிறார்? உங்களுக்கு ஏதாவது புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்!


கரூர் லைட்ஹவுஸ் (சினிமா தியேட்டர்) கார்னரில் இருந்த காந்தி சிலையை, எனக்குத்தெரிந்து இத்தனை வருடங்களில் எந்தக் காங்கிரஸ்காரனும் கண்டு கொண்டதாக நினைவுக்கு வரவே இல்லை இப்போது கரூர் தொகுதியின் எம்பியாக இருக்கும் ஜோதிமணி கூட, தேர்தலுக்கு முன்போ பின்போ அந்த காந்தி சிலையைக் கண்டுகொண்ட செய்தி எதையும் பார்த்ததாக நினைவும் இல்லை! இப்போது திடீரென்று அம்மணிக்கு அங்கே புதிதாக ஒரு வெண்கலச்சிலை வைக்கப்பட்டதில் ஒரிஜினல் காந்தி மீது அக்கறை வந்துவிட்டதாம்! சிலையின் பீடம் தரமற்றதாக இருப்பதாக ஒரு அக்கப்போரை நடத்திக் கைதாகி இருக்கிறார் என்கிற செய்தியை புதிய தலைமுறை சேனல் செய்தியில் பார்த்தேன் முன்னாட்களில் இசுடாலின் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு போஸ் கொடுத்ததை அப்படியே நினைவு படுத்துகிற மாதிரி இந்தப்படம் இணையத்தில் கிடைத்தது. அதிக வசதி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த இந்தப்பெண்மணி ராகுல் காண்டியின் கவனத்தை ஈர்த்ததால் காங்கிரஸ் வேட்பாளராகி, திமுகவின் செந்தில் பாலாஜி தனது   அகதவிகடத்தையெல்லாம் காட்டியதில் ஜெயித்தும் விட்டார்! ஆனால் காங்கிரஸ் எம்பி மாதிரி செயல்படாமல் திமுக எம்பிக்கள் மாதிரியே நாடக அரசியல் செய்வது, இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஒரு நல்ல மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிற என்னைப்போன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றமே!  

என்னாது? காந்தியை சுட்டுட்டாங்களா? மொமண்ட்!   

          


மாசேதுங்கால் அவமதிக்கப்பட்டு  வெளியேற்றவும் பட்ட, மாவோ காலத்துக்குக் கொஞ்சம் பின்னாடி சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியால் திரும்ப அழைக்கப்பட்டு தலைமைப்பொறுப்பேற்றவருமான  டெங் சியாவோ பிங்கின் 24வது நினைவுதினமான நேற்று பாண்டிச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்வீட்டரில் இப்படி நினைவு கூர்ந்திருப்பது சரிதான்! வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த சீனாவை, அந்நிய முதலீடுகள், தொழிற் சாலைகளுக்குக் கதவைத் திறந்து முப்பதே ஆண்டுகளில் ஒரு பொருளாதார வல்லரசாக மாற்றியவர் டெங் சியாவோ பிங்! கம்யூனிஸ்ட் கட்சியின் வரட்டுத் தத்துவங்களை ஒதுக்கிவைத்துவிட்டே சீர்திருத்தங்களை துணிந்து மேற்கொண்டார் என்பதை சௌகரியமாக  இந்திய மார்க்சிஸ்டுகள் மறந்துவிட்டு டெங் சியாவோ பிங்கை இப்போது முன்னிலைப் படுத்திப் பேசும்போது, நரசிம்மராவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கொடுத்தார்களா என்பதையும் பேசட்டுமே! 1964 இல் கையூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது சீன ஆதரவு நிலை எடுத்தவர்கள் மார்க்சிஸ்டுகளாகவும் அதுவும் 1968 இல் உடைந்து ஒரு பகுதி நக்ஸலைட்டுகளாகவும் ஆனதை இதுவரை வெளிப்படையாகப் பேசாதவர்கள் இப்போது சீன ஆதரவு நிலையை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!      

சீன கம்மினிஸ்டுகள் சீனாவிற்கு விசுவாசமானவர்கள். இந்திய கம்மின்ஸ்டுகளும் சீனாவிற்கு விசுவாசமானவர்கள் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதிரிகள். என்று இங்கே நண்பர் ராஜசங்கர் பொங்கி இருப்பது நியாயமானதுதான்!

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. கம்யூனிஸ்டுகள், அதிலும் மார்க்ஸிஸ்ட் வகையறா இந்திய தேசத்தின் நலனுக்கு எதிரிகள்தாம். இவர்களையும் ஆதரிக்கும் கூட்டம் (சந்தோஷச் செய்தி..அது வெகு விரைவாக கரைந்து வருகிறது) இருக்கிறதே என்பது ஆச்சர்யம்தான்.

    தமிழகத்தில் கிறிஸ்துவ, இஸ்லாமிய வாக்குகளை முழுமையாக வாங்க, மோடி எதிர்ப்புதான் உபயோகப்படும். இதுவே, பாஜகவுடன் சேராமல் தனித்து அதிமுக நின்றால் இன்னும் அதிக வாக்குகளை வாங்கி, 50-60 சீட்டுகளாவது வெற்றிபெறும்.

    ஆனால் மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை அஜெண்டாவை வைத்தால், இன்று இல்லாவிட்டாலும் பின்பு, இந்துத்துவா வாக்குகள் என்று தமிழகத்தில் வரும்.

    ReplyDelete
    Replies
    1. மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய நிலைமை பரிதாபத்துக்குரியதுதான் நெல்லைத்தமிழன் சார்! ஒரு நேர்மையான அரசியல் கொள்கையை முன்னெடுத்திருந்தால், இன்றைக்கு வலதுசாரி அரசியலை சமன்செய்யும் நல்லதொரு இடதுசாரி எதிர்க்கட்சியாக உருவடுத்திருக்கும்! வர்க்க எதிரி என்று காங்கிரசை அடையாளம் காட்டியவர்கள்,
      இன்றைக்கு வர்க்கப் போராட்டம் என்கிற அடிப்படை மார்க்சீயத்தை விட்டு விலகி, பிஜேபி எதிர்ப்பு, இந்துத்வ எதிர்ப்பு என திசைமாறி சீரழிந்து நிற்கிறார்கள்!

      வெறுமனே மோடி எதிர்ப்பு, இந்துத்வ எதிர்ப்பு எதிர்ப்பு என்பதையே தொடர்ச்சியாகச் செய்தார்களானால் இதுவரை மதரீதியாக வாக்களித்திராத ஹிந்துக்கள், இனி அப்படி மதரீதியாகவும் வாக்களிப்பதில் தான் போய் நிற்கும்! வினய் சீதாபதி தன்னுடைய புத்தகத்தில் கூட இதைச் சொல்லியிருக்கிறார்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)