Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Tuesday, March 10, 2020

இடுக்கண் வருங்கால் நகுக! சொல்லிவச்சார் வள்ளுவரும் சரிங்க!

சென்ற வாரம் கொஞ்சம் களையிழந்து கிடந்த அரசியல் களம் மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது! மார்ச் மாதம் முதலிரண்டு வாரங்கள் முடிவதற்கு முன்னாலேயே நம்மூர் பங்குச்சந்தை ஒரேயடியாகப் படுக்க ஆரம்பித்துவிட்டது! கரோனா வைரஸ் பீதி உலகப் பங்குச் சந்தைகளை ஆட்டி வைத்ததோடு இந்தியபங்குச் சந்தையையும் ஆட்டிப் படைத்துவிட்டது. போதாக்குறைக்கு ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் போட்டிபோட்டுக் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்ததில் எண்ணெய் விலை 30% வரை குறைந்ததும், இங்கே யெஸ் பேங்க் விவகாரமும் சேர்ந்து இந்தியப் பங்குச் சந்தையை ரொம்பவுமே அசைத்துப் பார்த்ததைக்  கூட  மோடி எதிர்ப்பாளர்கள் கொண்டாட முடியாதபடி மத்தியப்பிரதேச அரசியல்  காங்கிரசை அடியோடு புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

வீடியோ 21 நிமிடம் 


#Yesபேங்க்பரிதாபங்கள். ராணா கபூர் ராஜீவ் படத்தை 2கோடிக்குப் பிரியங்காவிடம் வாங்கியதோடு மட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் படத்தையும் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
புரொபசர் ஆநந்த் ரங்கநாதன்: 'நிச்சயமாக ராகுலின் படத்தை எம்.எப். ஹுசைன் வரைந்திருக்க முடியாது. அவர் குதிரைகளை வரைபவர், கழுதையை வரைந்திருக்க முடியாது.'
ராகுலையும் கழுதையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரியா? ஒரு வேளை ராஜீவின் படத்தை விட ராகுலின் படம் அதிகமாக விலை போயிருந்தால் ராஜீவின் மதிப்பு கழுதையை விடக் குறைவானதா? எப்படி எல்லாம் கேள்விகள் எழும்? 


 இது இன்றைய ஹிந்து ஆங்கிலநாளிதழில் சுரேந்திரா வரைந்திருக்கிற கார்டூன்  


  
மெஜாரிட்டியை இழந்து நிற்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தாலும், கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளுகிற வரை காங்கிரஸ்காரன் எவனும் நாற்காலியை விடவே மாட்டான் என்பது மத்தியப்பிரதேசத்தில்  மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.


மேலே கமல்நாத் மாதிரியே கப்பல் கவிழ்ந்த மாதிரிக் கையை வைத்துக் கொண்டிருப்பவர் யார் தெரிகிறதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி! The polit buro of the CPM - currently dominated by the Kerala faction of the party - shot down the proposal of sending Sitaram Yechury to the Rajya Sabha with the help of the Congress. The West Bengal faction was earlier said to have been keen on nominating Sitaram Yechury to the Rajya Sabha. இரண்டாவது முறையாகவும் கேரள சகாவுக்கள் சீதாராம் யெச்சூரியின் ராஜ்யசபா உறுப்பினராகும் கனவுக்குத் தடை போட்டு விட்டார்களாம்! ஒருவரே இருமுறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது என்பது கொள்கைப்படியானதுதான் என்று சென்ற முறை போலவே சொல்லப்பட்டாலும், காங்கிரசோடு ஒட்டுறவு இல்லை என்ற கேரள காம்ரேடுகளின் கட்டளை மேற்குவங்கத் தோழர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு தத்துவார்த்த, கொள்கை சாயம் பூசிக் சொல்வது காம்ரேடுகளின் வழக்கம்.

காங்கிரசோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானா? மற்ற எல்லா விஷயங்களிலும் காங்கிரசோடு தோளோடு தோள் சேர நிற்கிற மார்க்சிஸ்டுகளின் சாயம் வெளுத்து நீண்ட காலமாகிவிட்டதே! காங்கிரசுக்கு முன்னாலேயே புதைகுழிக்குப் போய்விட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்! ஏன் என்று தனியாக விவரித்துச் சொல்லவேண்டுமா என்ன! இடதுசாரிகள் என்று தேடிப்பாருங்கள்! இரு வலைப்பதிவுகளிலும் நிறையத் தகவல்கள் கிடைக்கும்!

துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க! சொல்லிவச்சார் வள்ளுவரும் சரிங்க என்று ராஜபார்ட் ரங்கதுரை மாதிரிப் பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா?காங்கிரஸ், கழகங்கள், இடதுசாரிகள் என்ற களைகளை எப்போது இந்திய அரசியலில் இருந்து முற்றொட்டாக, களையெடுக்கப்போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.      

            

Friday, February 7, 2020

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது?

காங்கிரஸ் தோற்றுக் கொண்டே இருப்பது ஏன் என்பதற்கும் நரேந்திர மோடி ஜெயித்துக் கொண்டே வருவதற்கும் ஒரே காரணம் இல்லை என்றால் நம்புவீர்களா? சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் அதைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். தெளிவாக உறைக்கிற மாதிரிச் சொன்னாரா என்பதை நீங்களே கேட்டுவிட்டு கொஞ்சம் சொல்லுங்களேன்!   


தேசியம் தேசியவாதம், வலதுசாரிகள் உலக அளவில் வளர்ந்து கொண்டிருப்பது எதனால் என்ற கேள்வியை முன்வைத்து எழுதிய முந்தைய மூன்று பதிவுகளின் தொடர்ச்சி இது என்றே வைத்துக் கொள்ளலாம். காங்கிரஸ் பலவீனப்பட்டு, தோற்றுக் கொண்டே வருவதற்கு பிஜேபி, நரேந்திரமோடி தவிர முக்கியமான காரணம் வேறு என்னவாக இருக்க முடியும் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?


CAA வுக்கு எதிராக முதலில்  கொந்தளித்த மாநிலம் அஸ்ஸாம். அதற்கான காரணங்களே வேறு. கலவரம் எதிர்ப்பென்று ஒரு பக்கம் இருந்தாலும், அமைதியாக இருந்து போடோ ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செயல் படுத்தி, அஸ்ஸாமில் அமைதியை மத்திய அரசு நிலை நாட்டியிருக்கிறது. அஸ்ஸாமில் போடோ மக்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். காஷ்மீரில் எதிர்க்கட்சிகள், பாகிஸ்தான் எதிர்பார்த்த படி  கடந்த ஆறு மாதங்களில் கலவரம் எதுவும் வெடிக்கவில்லை. டில்லியில் இருமாதங்களாக ஏதோ ஒருவகையில் ஊதிப்பெரிதாக்கப்படும் CAA NPR இவைகளுக்கெதிரான போராட்டங்களும் பிசுபிசுத்து வருவதைப்  பார்க்க முடிகிறது.

மீண்டும் சந்திப்போம்.       

Saturday, December 14, 2019

ஊடக அறமும் அரசியல் போகிற போக்கும்!

ஊடக அறம், ஊடக தர்மம் என்பதெல்லாம் வெறும் கதையாகிப்போன தமிழக சூழலில் ஒருவர் ரங்கராஜ் பாண்டேவிடம் ஊடக தர்மம் என்றால் என்ன? கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன் என்று கேட்கிறார். ரங்கராஜ் பாண்டேவும் ஏதோ சொல்லிச் சமாளிக்கிறார்.

     
வீடியோ 11 நிமிடம்.உங்களுக்காவது பாண்டேவின் பதில் திருப்தி அளிக்கிறதா என்று சொல்லுங்களேன்! 


ஊடக அறமென்பது வாங்கின காசுக்குக் கூவுவது!காசு பெயரவில்லை என்றால் கொஞ்சம் இப்படிக்காகவும் கூவுவது! இதை ரங்கராஜ் பாண்டே வெளிப்படையாகச் சொல்வார் என்று எதிர்பார்ப்பதே முதலில் தவறு! அது போகட்டும்! ஜூவியில் சொல்வதைப் பார்த்தால் இசுடாலின் துண்டுச் சீட்டைப் பார்த்துப் படித்தும் கூடத் தப்பும் தவறுமாக உளறுவது, சங்கிலிப் பறிப்பை சங்கிலிப் பருப்பாக மாற்றியது முதலான நிகழ்கால தமாஷாக்களை இனிமேல் பார்க்க முடியாதோ? 


உனாநிதி சைதாப்பேட்டையில் குடியுரிமைச்சட்டத் திருத்த மசோதா நகளைக் கிழித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தைப் பற்றி முகநூலில் எப்படிப் பதிவு செய்திருக்கிறார்களாம்? நடந்த கூத்துக்குச் சற்றே நெருக்கமாக இருந்த ஒரு வரலாற்றுச்சுவடு.   

"அன்று இந்தியா மாபெரும் சட்ட மோசடி செய்தது, குடி உரிமை மசோதா எனும் பெயரில் இந்நாட்டு இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் விரட்டி அடிக்க படுபயங்கர திட்டமிட்டது
பிராமணரின் குருநாதரான அமித்ஷா என்பவர் அச்சட்டத்தை கொண்டுவந்தார்
யாருமே அதுபற்றி பேச அஞ்சிய நேரமது, அமித்ஷா என்பவர் ஹிட்லரை விட கொடியவர், டிரம்பே அவருக்கு அஞ்சி அமெரிக்கா ஓடிவிட்டார், புட்டீனே மாஸ்கோவில் ஒளிந்து கிடந்தார், அவ்வளவு கொடியவர் அமித்ஷா
அந்த கடும் இறுக்கமான நேரம், உலகமே அஞ்சி ஒடுங்கிய நேரம், இந்திய இஸ்லாமியரெல்லாம் இனி நாம் எங்கு செல்வோம் என ஒலமிட்ட நேரம், அவர் எழும்பினார்
ஆம், உதயநிதி என்பவர் தைரியமாக எழும்பினார், குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்திலே கிழித்தெறிந்தார், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று மீதி சட்டத்தை எடுத்து வந்து சென்னையிலே கிழித்தெறிந்தார்
இந்திய ராணுவமே வந்தாலும் அவரை நெருங்க முடியவில்லை, அவ்வளவு மக்கள் திரண்டனர்.
பழ கருப்பையா எனும் திமுக தியாகி அந்த கூட்டத்தில் தொலைந்தே போனார், இன்றுவரை அவரை பற்றிய தகவல் இல்லை, அது அமித்ஷாவின் சதியாக இருக்கலாம்
எனினும் நாடே அவர்பின் திரண்டது
அஞ்சிய அமித்ஷா சட்டத்தை வாபஸ் பெற்று அடுத்த நாட்டில் இருந்து இங்கு இஸ்லாமியர் வரகூடாது, இங்கிருக்கும் இஸ்லாமியர் வெளிநாடு செல்ல கூடாது என சட்டத்தை திருத்தினார்
இஸ்லாமிய மக்கள் அவரை நன்றியோடு நோக்கினர், இது காயிதே மில்லத் பிடித்து அழுத கருணாநிதியின் கரம் தொட்டு வளர்ந்த குழந்தை, உங்களுக்கு எக்காலமும் நானே காவல் என உதயநிதி சொன்ன பொழுது வானில் காப்ரியேல் தூதன் தோன்றி "திமுகவில் ஆசீர்வதிக்கபட்டவர் நீரே, உம் தகப்பனான முக ஸ்டாலினும் ஆசீர்வதிக்கபட்டவரே" என சொல்லி மறைந்தது
உதயநிதி என்றொரு போராளி இல்லையென்றால் இந்தியாவில் ஒரு இஸ்லாமியனோ ஒரு பள்ளிவாசலோ இருக்காது, நெல் வயலுக்கும் வாழை இலைக்கும் ஊட்டி காடுகளுக்கும் கூட காவிவண்ணம் அடித்திருப்பார்கள் படுபாவிகள்"
இன்னும் 25 ஆண்டுகள் கழித்து திமுக எழுதும் வரலாறு இப்படித்தான் இருக்கும், ஏனென்றால் பெரியார் பற்றி இப்படித்தான் அன்றே எழுதிவைத்தார்கள்.


தினத்தந்தி நாளைய வரலாற்றை நேற்றே எழுதி முடித்து விடுகிற வித்தியாசமான ஊடகம். ஆயுத எழுத்து என்கிற இந்த நிகழ்ச்சி கூட காஷ்மீர் இளைஞர்கள் 500 ரூபாய் காசுக்கு ராணுவத்தின் மீது கல்லெறிகிற சூரத்தனம் போல, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதே பாவம் என்று ஒரு  பேத்தல். இதை ஆரம்பித்து வைப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அருணன் என்பது கூடுதல் விசேஷம். வீடியோ 46 நிமிடம். பொழுதுபோக்க நல்லதொரு ஊடக விவாதம்.

காசுக்கு கூவுகிற ஊடகங்களில் போய்  யாராவது உண்மை, அறம் என்றெல்லாம் எதிர்பார்ப்பார்களா என்ன?  

மீண்டும் சந்திப்போம்.      
  

Thursday, September 26, 2019

இது யாருடைய மண்? ஒரு அறிமுகத்தெளிவு! மடியில் கனம்!

நாமெல்லாம் இது நம்முடைய மண், நாம் எல்லோருமே இந்த மண்ணின் மைந்தர்கள் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் ஒரு சிலர் இது இவர் மண், இல்லை இல்லை அவர் மண் என்றெல்லாம் அவர்களாகவே பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாட்டுக்கு  சொல்லிக் கொண்டிருக்கட்டும், இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்? நம்மில் யாராவது தெரிந்துகொள்ள எப்போதாவது முயற்சித்திருக்கிறோமா ?



இந்த 39 நிமிட வீடியோவில் பல இளைஞர்கள் கூடி இது ஆன்மீக பூமியா,அல்லவா என்று விவாதிக்கிறார்கள். நெறியாளர் இடைமறித்து திருநள்ளாறுக்கு மேலே அமெரிக்க சாட்டிலைட் கொஞ்சம் தள்ளாடுகிற மாதிரி ஒரு தவறான கற்பிதத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறார். (10வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்!)  இந்த மாதிரிக் கற்பிதங்களுக்கு முந்தைய பதிவில் அரவிந்தன் நீலகண்டன் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார் என்பதை நினைவு படுத்தவேண்டியது என் கடமை. 


இங்கே விவாதம் மிக மேம்போக்காக நடப்பதைப் பார்த்தபிறகு தான் இந்த மாதிரி இளைஞர்களுக்காகவே நண்பர் எழுத்தாளர் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹிந்துமதம்: ஒரு அறிமுகத் தெளிவு என்று (குழுமங்களிலும் பிறகு சந்தியா பதிப்பக வெளியீடாக ஒரு நூலாகவும்) ஏன் எழுதினார் என்பதே  கொஞ்சம் உறைக்கிறது. ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் பலருக்கே  தங்களுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பது என்னென்ன என்பது தெரிவதில்லை என்பது நான் உட்பட, ஒப்புக்கொள்ளவேண்டிய வெட்கக்கேடு! இந்தப் புத்தக அறிமுகமாக எழுதியது இங்கே 


சதீஷ் ஆசார்யா சரத் பவாரை விட அதிகமாகக் கவலைப்பட்டு கார்டூன் வரைந்திருப்பது ஏன் என்றுதான் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. இந்தமாதிரி  தேர்தல் சமயங்களில் தான் முறைகேடாக சம்பாதித்த பணம் கொஞ்சம் வெளியே வரும் என்பது ஊரறிந்த ரகசியம்! சரத் பவாருடைய பணத்தொப்பையின் பின்னணி என்னெவென்று சொல்வது? தாவூத் இப்ராஹிமுடன் உள்ள தொடர்புகள், சிவசேனாவின் புலி பால் தாக்கரேவைக் கூட பூனையாக மாற்றி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்த்தி வைத்த சாமர்த்தியம் என்று எத்தனை  எத்தனை விஷயங்களைத் தான்  பட்டியலிடுவது? சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம். 

       
    

Monday, September 2, 2019

சின்னதா பீஸ் பீசா செய்திகள்! ச்சும்மா ஜாலிக்கு!

ஆ!ராசா, கனிமொழியெல்லாம் ஜெயிலா பெயிலா என்று திஹார் சிறையில் தவித்துக் கொண்டிருந்த நாட்களில், பின்னணியில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் பானாசீனா மற்றும் KDசகோதரர்கள் என்பது சிதம்பர ரகசியமாகத்தான் அந்தநாட்களிலேயே இருந்தது. ஆ!ராசா அந்தவிஷயங்களையெல்லாம் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் வெளிப்படையாகவே எழுதியிருந்ததாகவும்  சொல்லக் கேள்வி. இப்போது கர்மா தியரி சீனாதானாவை அதே திஹார் சிறையை வைத்து, கடுமையான நிபந்தனைகளுடன் வீட்டுச் சிறையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், 74 வயதானவரை திஹார் சிறைக்கு மட்டும் அனுப்பிவிட வேண்டாம் என்று மூன்று நாள் தவணை கேட்டு #திஹார்பயம் வந்து ஆட்டுகிறது என்றால் என்னத்தைச் சொல்ல?! 


 

சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, சிபிஐ காவலைநீட்டித்த விதம்  தவறானது என்று அப்பீல் செய்திருப்பதில் இந்த ஆட்சேபணை மனுமீதான விசாரணை நாளை மதியம் நடக்கவிருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வது உண்மைதானோ?  #ஜாமீன்பசி 


சீனாதானா விஷயத்துக்கும் இந்தச் சின்னக்குழந்தை பற்றிய செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. சீனாதானா மாதிரி மேட்டிமைத்திமிர் பிடித்தவர்  பற்றிப் பேசும்போது, ஒரு நல்ல மாறுதலுக்காக ஒரு டைவர்ஷன், அவ்வளவுதான்! #குழந்தையும்தெய்வமும் 


பழ கருப்பையா செட்டியாருக்கு எங்கே போனாலும் ஒரு கெட்ட வழக்கம்! இருக்கிற இடத்துக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்புவது! எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றால் என்ன தான் செய்வார் பாவம்?! #காமெடிப்பீஸ் 
    
மீண்டும் சந்திப்போம்.
                  

Wednesday, July 17, 2019

இரண்டு செய்தி விவாதங்கள்! இருவேறு கண்ணோட்டங்கள்!

என்ன ஒரு அருமையான தீர்ப்பு!
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி.
ரிச்சா பாரதி என்ற முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவி.
தப்ரீஸ் அன்சாரி மரணத்திற்கு பழிவாங்க அன்சாரியின் மகன் பயங்கரவாதியானால் என்ன செய்வீர்கள் என்பது போன்ற டிக்டாக் பதிவுகளை விமர்சித்து,
ரிச்சா பாரதி காஷ்மீர் பண்டிட்கள் யாரும் பயங்கரவாதியாகவில்லையே என பேஸ்புக் பதிவு செய்தார்.
இதனை எதிர்த்து
வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றம் விசாரணையில்,
பெயில் வேண்டுமென்றால் ஐந்து குரான் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று ராஞ்சி நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஒரு பிரதியை அஞ்சுமன் இஸ்லாமியாவிற்கு நகர நிர்வாகம் மூலமாகவும், நான்கு பிரதிகளை காவல்துறை மூலம் நூலகங்களில் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு.
'இவ்வாறு செய்ய முடியாது' என்று ரிச்சா பாரதி கூறினார்.
'இன்று குரான் விநியோகம் செய்யக் கூறியுள்ளது நாளை தொழுகை நடத்த சொல்வார்கள் பிறகு மதம் மாறச் சொல்வார்கள்' என்று கூறியுள்ளார்.
இதே தீர்ப்பை மாற்றி பகவத் கீதை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தால் ஊடகங்கள் 24*7 இதைத் தான் பேசிக் கொண்டிருக்கும்.
மொகலாயர் ஆட்சியில் மதம் மாறினால், குரான் வாசித்தால் தண்டனை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
" வகுப்புவாதிகளுக்கு சட்டம் வளைந்து கொடுத்தால் நாடு கற்காலத்திற்கு சென்று விடும்"
- டாக்டர் அம்பேத்கர்


நீதிமன்றங்கள் இந்த மாதிரி வினோதமான தீர்ப்பை வழங்குவது இது முதல்முறையல்லதான்! இங்கே தமிழகத்தில் கூட நீதிபதி கற்பகவிநாயகம், ஒரு இன்ஸ்டன்ட் பேச்சுப் போராளியை மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள நூலகத்தில் குறிப்பிட்ட மணிநேரம் காந்தி எழுதிய புத்தகங்களைப்  படிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது உண்டு. ஆனால் இந்தத் தீர்ப்பு மிகவும் வினோதமானது அல்ல, விபரீதமானது. 

     
கர்நாடக அரசியல் குழப்பங்களைக் குறித்து சதீஷ் ஆசார்யா இன்று வரைந்திருக்கிற இரண்டாவது கார்டூன் இது.

காசுக்கு கூவுகிற காங்கிரஸ் வக்கீல் கபில் சிபலிடமே காசு கேட்டுப் போராடுகிறார்களாம் பர்க்கா தத்தும் கரண் தாப்பரும் என்பது காங்கிரஸ் தோல்வியின் பக்க விளைவுகள்!  


மணீஷ் திவாரி கூட காங்கிரஸ் வக்கீல்தான்! ஆனால் சோனியா G இவரையோ சசிதரூரையோ நம்பாமல் சும்மா வெட்டிக் கூச்சல் போடுகிற அதிர் ரஞ்சன் சௌதுரியை மக்களவை காங்கிரஸ் கட்சித்தலைவராக நியமித்தார் என்றால் இவரெல்லாம் வந்து விவாதத்தில் என்ன சொல்வார்?
மீண்டும் சந்திப்போம்.



Monday, July 8, 2019

தந்தி டிவி! இடியாப்பச் சிக்கல்! புதிய தலைமுறை!

ரங்கராஜ் பாண்டே வெளியேறிய பிறகு தந்தி டிவியைப் பார்ப்பது அநேகமாகக் குறைந்தே போனது. ரங்கராஜ் பாண்டே மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்பது காரணமில்லை. திமுக பக்கம் சாய்வதற்காகவே தந்திடிவி எடுத்த முடிவு அது என்பது சிதம்பர ரகசியமாக இருந்தது தான் காரணம்! அது போக பாண்டேவுடன் ஒரு புதியபாணியில் செய்திகளை சுவாரசியமாகத் தருவதில் கூடவே இருந்து தந்திடிவியை ஒரு ப்ராண்டாகவும் மாற்றிய ஹரிஹரன், அசோகவர்ஷினி போன்றவர்கள் இருந்தும் கூட, முதலாளிகளுடைய ஆசைக்கு ஏற்றபடி content தரமுயற்சித்ததில் பார்வையாளர்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதுதான் தந்திடிவி பார்ப்பதைத் தவிர்த்ததற்கான முக்கியமான காரணம். 


செய்தி ஆசிரியர் சலீம், நிதியமைச்சர் திருமதி நிர்மலா ராமனை, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேட்டி காண்கிறார்.முன்னெப்போதுமில்லாத விதத்தில் இந்தக் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி வெறும் 31 நிமிடங்கள்தான் என்பது  மிகவும் ஆச்சரியம். அதைவிட  சம்பந்தமே இல்லாத விஷயங்களில் இருந்து கேள்விகள் ஆரம்பித்தது இன்னொரு ஆச்சரியம். ஆனாலும் நிர்மலா சீதாராமனை இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்ள உதவிய தக்வல்கள் அவை. புறநாநூறிலிருந்து ஒரு பாடலைச் சொன்னதைத்தொட்டு சிலகேள்விகள் அப்புறம்   மெதுவாக பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி, இறக்குமதித் தங்கத்தின் மீது சுங்கவரி இவை அதிகரிக்கப்பட்டதை மட்டுமே கேள்வி கேட்டார் என்பதை விட எல்லாக் கேள்விகளுக்கும்  நிர்மலா சீதாராமன் பொறுமையாக, அதேநேரம் தெளிவாகப் பதில் சொன்னது தான் இந்தநிகழ்ச்சியை அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகப் பரிந்துரை செய்ய வைக்கிறது.  


தற்போதைய செய்திகளின் படி கர்நாடக அரசியல் நிலவரம் இன்னமும் குழப்படியாக ஆகிக் கொண்டே வருகிறது. பிஜேபி மீது பழியைப்போட்டு காங்கிரஸ் திசைதிருப்ப முயற்சித்தாலும் இப்போதைய சிக்கலுக்குப் பிரதான காரணம்  காங்கிரசின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் என்கிற வதந்திக்கு இப்போது சித்தராமையாவும் கே சி வேணுகோபாலும் கூட்டாக நிருபர்களிடம் பேசியது, வலு சேர்ப்பதாக இருக்கிறது.  இன்று காங்கிரசின் எல்லா 22 அமைச்சர்களும், பதவியைத் தியாகம் செய்து ராஜினாமா கொடுத்துவிட்டார்கள். அதிருப்தியில் ராஜினாமா செய்து வெளியே போனவர்கள் அவசரப்பட வேண்டாம், மந்திரிசபை மாற்றம் வரும் என்று சொல்வதிலிருந்தே இது பதவிக்கான குடுமிபிடிச் சண்டை ப்ளஸ் சித்தராமையா திரிசமன் என்பது ஈயென்று இளித்து நிற்கிறது. எண்ணிக்கை தொலைந்து போனதில் நம்பிக்கை இழந்து வீட்டா குமாரசாமி, காங்கிரஸ் அமைச்சர்களுடைய ராஜினாமா தியாகம் எந்த அளவுக்கு எடுபடுகிறது என்பதை இன்று  ஒருநாள் பொறுத்திருந்து  பார்த்துவிட்டு, தன்னுடைய ராஜினாமா முடிவை நாளை அறிவிப்பாராம்! 


தமிழக அரசியல்களம் மட்டும்  குறைந்ததா என்ன? வைகோவின் ராஜ்யசபா வேட்புமனு நிராகரிக்கப்படுமா அல்லது ஏற்கப் படுமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் என் ஆர் இளங்கோ திமுக சார்பில் 4வது வேட்பாளராக களம் இறங்குகிறாராம்! அனால் இவர் வைகோவுக்கு மாற்று வேட்பாளர் ஒன்றும் இல்லை, 4வது வேட்பாளர்தான் என்கிறது புதியதலைமுறை!

   
திமுகவுக்கு   சொம்பு தூக்குவதில் பச்சமுத்துவின் புதிய தலைமுறை நம்பர் ! தான்! யாரும் மறுக்கப்போகிறீர்களா என்ன?

மீண்டும் சந்திப்போம்.
           

Wednesday, June 26, 2019

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் பன்ச் டயலாக் பேசி, தரையில் கையையே தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்திருக்கிற போட்டோ எல்லாம் போட்டார். சதீஷ் ஆசார்யாவின் கார்டூன் இது!


ஆனால் பன்ச் டயலாக் பேசமுடியாமல் தன்னிடம் முறையிட வரும் ஜனங்களிடம் மோடிக்குத்தானே ஓட்டுப்போட்டீங்க எதுக்கு எங்கிட்ட வர்றீங்க என்ற ரேஞ்சில் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். இரண்டாவது முறையாக கிராமத்துக்கு விஜயம் செய்யப்போகையில் காத்திருந்த ஜனங்கள் சாலையை மறித்ததும் குமாரசாமி கோபமும்!  இன்றைக்கு நடந்த கூத்தும் செய்தியும்  நாடாளுமன்றத் தேர்தலில் குமாரசாமி மகனும் ஜெயிக்கவில்லை, தேவே கவுடாவும் ஜெயிக்கவில்லை என்ற கோபம் இன்னமும் ஆறவில்லை போல! இது அடுத்தவீடு கர்நாடகா செய்தி என்றால் நம்மூர் செய்தி, நையாண்டி ஒன்றும்  கூடவே வேண்டாமோ? 


மதுரை வைகை பெரிய பாலத்துக்கு வண்ணம் தீட்டுகிறார்கள்! இது செய்தி! திமுகவுக்கு மோடியைக் கண்டாலும் பயம் காவி நிறத்தைக் கண்டாலும் பயம்! எப்படி?


முதலில் கூட்டுக்களவாணி காங்கிரசுக்கல்லவா மூவர்ணக்கொடியைப் பயன்படுத்தக்கூடாதென்று சொல்ல வேண்டும் ? !!  காவி மீதுள்ள பயத்தில் மேல்பகுதிக்குப் பச்சை வண்ணம் தீட்டப்படுவதை மறந்ததற்கு  என்ன சால்ஜாப்பு சொல்வார்களோ, அறியேன்! அதனால் ஒரு நையாண்டி!
      

துக்ளக் அட்டைப்பட நையாண்டிக்குத் தனியாக விமரிசனம், வியாக்கியானமெல்லாம் எதற்கு?😀 

அடுத்த வீடு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஒழித்துக் கட்டுவதில் ஜெகன் மோகன் ரெட்டி பிசியாக இருக்கிற அதே வேளையில் மத்தியில் ஆளும் பிஜேபியோடு மோதாமல் ஒரு மாதிரி நீக்குப்போக்காக இருப்பதே ஜெகன் தலைக்குத் தீம்பாகி விடலாம் என்று எச்சரிக்கிறார்கள் இங்கே!


Andhra Pradesh CM Jagan Mohan Reddy is playing nice with the BJP, which is the ruling party at the Centre. He has promised to support BJP’s one nation, one election bid in return for Special Category Status for Andhra, and has generally gone soft against the party, say analysts. He is also an amused spectator as the BJP is on a poaching spree from his main rival in the state, Chandrababu Naidu’s TDP. However, letting the BJP strengthen its roots in the state at the cost of TDP will ultimately affect Jagan’s YSRCP, say experts.
Noted columnist and political scientist professor K Nageswara Rao observes, “Jagan shouldn’t take the bait and play along with the BJP and commit the blunder of weakening the TDP.” என்று சந்திரபாபு நாயுடுவை விட்டுவைக்கும்படி சொல்கிறார்கள். ஜெகன் காதில் வாங்கி கொள்ள வேண்டுமே!   

பக்கத்து வீடு கேரளா செய்தி என்னவாம்?


     

சபரிமலை பிரச்னையே தோல்விக்கு காரணம்: மார்க்சிஸ்ட் விளக்கம்

தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, சபரிமலை பிரச்னையால் தான் கட்சி தோல்வியடைந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சகாவே! மத்திய கமிட்டி சொல்லியாச்சுன்னா அதோட விட்டுடணும்! நோண்டி ஆராய எல்லாம் கூடாது!

மீண்டும் சந்திப்போம்.
 
   

Sunday, June 16, 2019

சண்டே போஸ்ட்! #செய்திக்கலவை #விமரிசனம்

அடக்குவேன் நொறுக்குவேன் என்றமாதிரியே பேசிக் கொண்டிருந்த மம்தா பானெர்ஜிக்கு இப்போது சுருதி குறைந்திருக்கற மாதிரித் தெரிகிறது. கொல்கத்தா உயர்நீதி மன்றம் மருத்துவர்கள் வேலைநிறுத்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்துவிட்டதோடு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி மேற்குவங்க அரசுக்கு ஒரு கொட்டு வைத்திருக்கிறது. 



கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. எனவே  வேலைக்குத் திரும்புங்கள் என்று வேண்டிக்கொள்கிற மம்தாவின் குரல் கொஞ்சம் இறங்கி ஒலித்தாலும் மருத்துவர்கள் மம்தா பானெர்ஜி முதலில் மன்னிப்புக் கேட்கட்டும் என்பதில் கறார்.வெள்ளிக்கிழமை உத்தேசிக்கப்பட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டு, இப்போது மருத்துவர்கள் மம்தா பானெர்ஜியுடன் அவருடைய இருப்பிடத்திலேயே பேச ஒப்புக்கொண்டாலும், பேச்சுவார்த்தை மீடியாக்கள் முன்னிலையில் தான் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையை மம்தா ஏற்பாரா என்பது இன்னமும் தெளிவாக்கப்படவில்லை.




  • Seems the only doctor who can treat Mamata Banerjee in present situation...
    12:09 AM · Jun 16, 2019 · Twitter for Android
    Retweets  இப்போது  மம்தாவுக்கு வைத்தியம் பார்க்கக் கூடிய ஒரே மருத்துவர் மோடி சர்க்கார்தான் என்று ட்வீட்டர் கலகலக்கிறது!

    இது சுப.வீரபாண்டியன் ஒப்பாரி:

    அனிதாவின் மரணம் பற்றி நாடே கொந்தளித்துக் குமுறிய நேரத்தில், ரஞ்சித், இயக்குனர் அமீரின் ஒலிவாங்கியைப் பறித்துப் பறித்துப் பேசினார். உடனே எல்லா ஊடகங்களும், அனிதாவை விட்டுவிட்டு, ரஞ்சித்-அமீர் மோதல் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிட்டன. சென்ற தேர்தல் நேரத்தில், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தலித் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஏழு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றார். அது சரியா, தவறா என்ற விவாதம் கிளம்பியது. இப்போது புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில், மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடுவதை முற்போக்காளர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்துகொண்டிருக்கும் நேரத்தில், ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து வெகுண்டெழுந்து பேசுகின்றார். முற்போக்காளர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார். இப்போது மொழிக்கொள்கை பற்றிய விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ராஜராஜன் முன்னுக்கு வந்து விட்டார்.


    ரஞ்சித்! நீங்கள் யார்? நல்லவரா? கெட்டவரா? ஒண்ணுமே புரியலையே! நீங்க அடிக்கிற கூத்துல திராவிடப்பசப்புகள் எல்லாம் திசைமாறிப் போயிடுதே! அதுதான் சுபவீ செட்டியார்  இவ்வளவு புலம்புகிறார் போல!


    ஜெயமோகன் தாக்கப்பட்டது குறித்து சிரிக்கும் சமூகம் குறித்து கவலையுடன் நிறைய பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
    நானும் நேற்று 'ஜெயமோகன் தாக்கப்பட்டார்!' என்று ஒரு பதிவு பார்த்ததுமே அதிர்ந்தேன். ஆனால் இன்னொரு பதிவில் காரணம் தெரிந்ததும் 'களுக்' என்று தானாகவே சிரிப்புதான் வந்தது. சில அரிய விதிவிலக்குகள் தவிர்த்து, தமிழ் முகநூல் முழுக்க இதற்கு சிரித்து வைத்திருப்பது தமிழர்களின் நகைச்சுவை உணர்வையும், ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் தன்மையையுமே காட்டுவதாக நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை, அது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
    இந்த சம்பவத்தை வைத்து எழுத்தாளர்கள் பாதுகாப்பு, டாஸ்மாக்கின் கொடூரம் என்றெல்லாம் பேசுவதுதான் சோகமான விஷயம். எப்பொழுதுமே விறைப்பாக வால்டர் வெற்றிவேல் மாதிரி இருப்பவர்களை நினைத்துதான் நான் உண்மையில் கவலைப்படுகிறேன்.
    எனவே, ரொம்ப சீரியசாக இதனை அணுக நினைப்பவர்கள் 'நாசமாய்ப்போன தமிழ் சமூகமே!' என்று உரை எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு நல்ல தெரபிஸ்ட் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்துக்கொள்வது உபயோகமாக இருக்கும்.
    அசுர பலத்துடன் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கிறது பி.ஜே.பி. அதன் தவறுகளை வாதத்திறமை மற்றும் அனுபவ அறிவால் உறுதியாகச் சுட்டிக்காட்டி, குட்டக்கூடியவர் யாராவது எதிர்க்கட்சிகளின் வரிசையில் உள்ளனரா?

    ஏ.கே.கோபாலன், சோம்நாத் சாட்டர்ஜி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், வாஜ்பாய் என்று நாடாளுமன்றத்தைத் தெறிக்கவிட்டவர்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள். இப்போது, தேடினாலும் அப்படிப்பட்டவர்கள் கிடைக்க மாட்டார்கள். இந்த 17-வது லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் ஃபரூக் அப்துல்லா, சசிதரூர், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்றவர்கள்தான் உள்ளனர். இவர்களில் பலரும் வாயைத் திறந்தாலே பி.ஜே.பி ‘தெறிக்க’விட்டுவிடும் என்பதுதான் நிதர்சனம்!

    ஜூவி கழுகார் பதிலில் அவ்வப்போது இப்படி சுவாரசியம்!  


    பொறுப்பில்லாத மம்மியா இருக்காங்களே! அங்கேயிங்கே ஒத்தடம் கொடுத்து அடுத்த கோதாவுக்குப் பையனைத் தயார் செய்யறதை விட்டுவிட்டு  இப்படிப்போட்டு மொத்திட்டீங்களேன்னா கையை நீட்டறது? 😆 😊  

    மீண்டும் சந்திப்போம்.
               

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)