Monday, July 8, 2019

தந்தி டிவி! இடியாப்பச் சிக்கல்! புதிய தலைமுறை!

ரங்கராஜ் பாண்டே வெளியேறிய பிறகு தந்தி டிவியைப் பார்ப்பது அநேகமாகக் குறைந்தே போனது. ரங்கராஜ் பாண்டே மீதான தனிப்பட்ட ஈர்ப்பு என்பது காரணமில்லை. திமுக பக்கம் சாய்வதற்காகவே தந்திடிவி எடுத்த முடிவு அது என்பது சிதம்பர ரகசியமாக இருந்தது தான் காரணம்! அது போக பாண்டேவுடன் ஒரு புதியபாணியில் செய்திகளை சுவாரசியமாகத் தருவதில் கூடவே இருந்து தந்திடிவியை ஒரு ப்ராண்டாகவும் மாற்றிய ஹரிஹரன், அசோகவர்ஷினி போன்றவர்கள் இருந்தும் கூட, முதலாளிகளுடைய ஆசைக்கு ஏற்றபடி content தரமுயற்சித்ததில் பார்வையாளர்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனார்கள் என்பதுதான் தந்திடிவி பார்ப்பதைத் தவிர்த்ததற்கான முக்கியமான காரணம். 


செய்தி ஆசிரியர் சலீம், நிதியமைச்சர் திருமதி நிர்மலா ராமனை, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேட்டி காண்கிறார்.முன்னெப்போதுமில்லாத விதத்தில் இந்தக் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி வெறும் 31 நிமிடங்கள்தான் என்பது  மிகவும் ஆச்சரியம். அதைவிட  சம்பந்தமே இல்லாத விஷயங்களில் இருந்து கேள்விகள் ஆரம்பித்தது இன்னொரு ஆச்சரியம். ஆனாலும் நிர்மலா சீதாராமனை இன்னும் நெருக்கமாக அறிந்து கொள்ள உதவிய தக்வல்கள் அவை. புறநாநூறிலிருந்து ஒரு பாடலைச் சொன்னதைத்தொட்டு சிலகேள்விகள் அப்புறம்   மெதுவாக பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீதான வரி, இறக்குமதித் தங்கத்தின் மீது சுங்கவரி இவை அதிகரிக்கப்பட்டதை மட்டுமே கேள்வி கேட்டார் என்பதை விட எல்லாக் கேள்விகளுக்கும்  நிர்மலா சீதாராமன் பொறுமையாக, அதேநேரம் தெளிவாகப் பதில் சொன்னது தான் இந்தநிகழ்ச்சியை அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகப் பரிந்துரை செய்ய வைக்கிறது.  


தற்போதைய செய்திகளின் படி கர்நாடக அரசியல் நிலவரம் இன்னமும் குழப்படியாக ஆகிக் கொண்டே வருகிறது. பிஜேபி மீது பழியைப்போட்டு காங்கிரஸ் திசைதிருப்ப முயற்சித்தாலும் இப்போதைய சிக்கலுக்குப் பிரதான காரணம்  காங்கிரசின் முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் என்கிற வதந்திக்கு இப்போது சித்தராமையாவும் கே சி வேணுகோபாலும் கூட்டாக நிருபர்களிடம் பேசியது, வலு சேர்ப்பதாக இருக்கிறது.  இன்று காங்கிரசின் எல்லா 22 அமைச்சர்களும், பதவியைத் தியாகம் செய்து ராஜினாமா கொடுத்துவிட்டார்கள். அதிருப்தியில் ராஜினாமா செய்து வெளியே போனவர்கள் அவசரப்பட வேண்டாம், மந்திரிசபை மாற்றம் வரும் என்று சொல்வதிலிருந்தே இது பதவிக்கான குடுமிபிடிச் சண்டை ப்ளஸ் சித்தராமையா திரிசமன் என்பது ஈயென்று இளித்து நிற்கிறது. எண்ணிக்கை தொலைந்து போனதில் நம்பிக்கை இழந்து வீட்டா குமாரசாமி, காங்கிரஸ் அமைச்சர்களுடைய ராஜினாமா தியாகம் எந்த அளவுக்கு எடுபடுகிறது என்பதை இன்று  ஒருநாள் பொறுத்திருந்து  பார்த்துவிட்டு, தன்னுடைய ராஜினாமா முடிவை நாளை அறிவிப்பாராம்! 


தமிழக அரசியல்களம் மட்டும்  குறைந்ததா என்ன? வைகோவின் ராஜ்யசபா வேட்புமனு நிராகரிக்கப்படுமா அல்லது ஏற்கப் படுமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் என் ஆர் இளங்கோ திமுக சார்பில் 4வது வேட்பாளராக களம் இறங்குகிறாராம்! அனால் இவர் வைகோவுக்கு மாற்று வேட்பாளர் ஒன்றும் இல்லை, 4வது வேட்பாளர்தான் என்கிறது புதியதலைமுறை!

   
திமுகவுக்கு   சொம்பு தூக்குவதில் பச்சமுத்துவின் புதிய தலைமுறை நம்பர் ! தான்! யாரும் மறுக்கப்போகிறீர்களா என்ன?

மீண்டும் சந்திப்போம்.
           

2 comments:

 1. முழுமையாக நிதியமைச்சரை ரசித்துப் பார்த்த நிகழ்ச்சி இது. அவர் முழுக்க சோர்வு அப்பிக் கிடக்கின்றது. ஆனால் கடமைகளில் சரியாக இருக்கின்றார். வருட இறுதியில் தெரியும்? எந்த அளவுக்கு வென்றுள்ளார் என்று? நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஜோதிஜி! நிர்மலா சீதாராமன் எப்போதும் போல உற்சாகமாகத்தான் இருக்கிறார். நம்மூர் எம்பிக்கள் மாதிரி மேக்கப் போட்டுக் கொள்ளாதது, சோர்வாக இருக்கிற மாதிரித் தோன்றுகிறதோ?

   இந்தவீடியோவில் நான் சொல்ல வந்தது இரண்டு விஷயங்கள். தந்திடிவியோ சலீமோ சோபிக்கவில்லை என்பது ஒன்று. கிடைக்கிற வாய்ப்பில், பொறுமையாக தெளிவாக பதில்சொல்கிறார் நிர்மலா என்பது இரண்டு.

   இங்கே முகநூலில் என்னுடைய இளம் நண்பர்கள் குறிப்பாகத் திரு ராஜசங்கர், அதென்ன தந்திடிவிக்கு நிர்மலா பேட்டி கொடுப்பது என்று பொங்கியதை பார்த்துத் தான் நானே இந்த வீடியோவைத் தேடிப்பிடித்தேன்

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

இடுக்கண் வருங்கால் நகுக! கடுப்பேத்துறார் பீர்பால்!

ஐமு கூட்டணிக் குழப்பம் ஆட்சிசெய்த (?) அந்தப் பத்து ஆண்டுகளில், அரசியல் செய்திகளைப் பார்த்து மிகவும் நொந்துபோகிற தருணங்களில் எல்லாம் ஒரு பீ...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (176) அரசியல் (156) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (77) எண்ணங்கள் (36) புத்தகங்கள் (32) மனித வளம் (30) செய்திகள் (23) சிறுகதை (20) எது எழுத்து (13) விமரிசனம் (12) Change Management (11) செய்திகளின் அரசியல் (11) புத்தக விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) ரங்கராஜ் பாண்டே (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) புனைவு (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) பதிவர் வட்டம் (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பானாசீனா (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)