வித்தியாசமான பலநேரங்களில் பத்திபத்தியாக எழுதிக் கொண்டிருப்பதை விட சில படங்களே செய்திகளின் அரசியலைத் தெளிவாகச் சொல்லிவிடுவதை வெகுவாக ரசித்திருக்கிறேன்! சிலநேரம் படத்தோடு ஒருசில வார்த்தைகள் சேரும்போது அங்கே ஒரு அருமையான காமெடியும் சேர்ந்துவிடுவதை உங்களில் எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்?
இந்தப் படத்தை மட்டும் பார்த்தால், நம்மில் பெரும்பாலும் அப்படியே கடந்துபோய்விடுவோம்தான் இல்லையா? ஆனால் இப்படி சில வார்த்தைகளோடு சேர்த்துப் பார்த்தால் எப்படி இருக்கிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!
தேவரய்யாவையும், காமராஜரய்யாவையும் கும்பிடுகிறார் சரி. போட்டோக்கு போஸ் முடிஞ்சது.
அதென்ன மூக்குப்பொடிக்கு செருப்பு துடைக்கிறது கோப்ப்ப்பால்...?🤔
பார்த்தவுடன் பிபி எகிறிடுச்சோ ? தொப்புனு தல சுத்தி விழுந்துட்டீங்க ?
The Accidental Chief Minister கேட்பதாக! சதீஷ் ஆசார்யா கார்டூன் போட்டதே தப்பு என்றொரு கருத்து இருப்பதை நானறிவேன்! அதற்காக? The Accidental Prime Minister, The Accidental Party President இப்படி எல்லாமே காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே நடக்கிறதே! அது ஏன்? எப்படி என்ற கேள்வி வரக்கூடாதா?
சட்டமன்ற உறுப்பினர்களை சில்லறையாகவோ மொத்தமாகவோ பிஜேபியினரால் விலைக்கு வாங்கப் பட்டிருப்பதாக சித்தராமையா இன்றைக்கு சட்டசபையில் பேசியிருக்கிறார், அவர் சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? ஆதாயத்துக்காக சாத்தான் கூட வேதம் போதுமாம்! என் முதுகில் குத்தியவர்கள், அமைச்சர்களாக வரவிடமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் பணப்பெட்டி DK சிவகுமார் உணர்ச்சிவசப்பட்டு சபதம் செய்தது ஆகப்பெரிய காமெடி! இதே சிவகுமார் பிஜேபி என்ன தருவதாகச் சொன்னார்களோ அதை நாங்களே தருகிறோம் என்று பேசியதும் கூட பொதுவெளியில் உலவிக் கொண்டிருப்பதுதான்!
ஆனாலும் வித்தியாசமான கட்சி என்று சொல்லிக் கொண்டு பிஜேபி இப்படிச் செய்வது சரியா தவறா என்று கருத்துச் சொல்வதற்கு முன்னால், கடந்த இரண்டுவாரங்களாக என்ன நடந்தது, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக (??) காங்கிரசும் தேவே கவுடாவின் கட்சியும் என்னென்ன பேரங்களில் இறங்கி எப்படி எப்படியெல்லாம் உருக்கமாக சீன் போட்டார்கள் என்று பார்த்துவிட்டு அங்கே முதலில் காறித்துப்பிவிட்டு, இங்கே வந்து சொல்லலாம்!
இல்லையென்றால் அவரவர் இருப்பிடத்திலேயே #GoBackModi கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அமைதியாகலாம்!
மீண்டும் சந்திப்போம்.
கோபால் பட கமெண்ட்ஸ் சுவாரஸ்யம்.
ReplyDeleteகுமாரசாமி ஆட்சி கலைந்த செய்தி வந்து கொண்டிருக்கிறது.
குமாரசாமி அரசு கவிழ்ந்ததைத் தனிப்பதிவாகவே எழுதிவிட்டேன் ஸ்ரீராம்! இங்கே எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் குமாரசாமி நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது பேசக்கூட ஆரம்பிக்கவில்லை.
Deleteகடவுளை வணங்கும் கொள்கை இல்லாத மூக்குப்பொடி காலில் விழுவதும்,
ReplyDeleteகடவுளை வணங்கியவர்களை கும்பிடுவதும்தான் இதில் முரண்.
காசையே கடவுளாகக் கும்பிடுகிற திராவிடக்கும்பலில் கோப்ப்பால்சாமி முரண்பாடுகளுடைய மொத்த உருவம்! #GoBackModi பலூனைப் பறக்கவிட்டு அரசியல் பேசியவர், மோடியைச் சந்தித்து சால்வை அணிவித்து வணங்குகிறார்! இவரை ராஜ்யசபா எம்பியாகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கூடாது என்று கடிதம் எழுதிய டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைக் கட்டிப் பிடித்துப் பேசுகிறார்! அந்தக் காட்சிகளுக்கு முன்னால் இந்தப்படம் வெறும் ஜுஜ்பிதான்!
Delete