நம்முடைய ஊடகச் செல்லம் ரங்கராஜ் பாண்டேவை கொஞ்ச நாளாக இந்தப்பக்கங்களில் மறந்து போய்விட்டேனா என்ன?! இந்த வீடியோவில் நரேந்திர மோடியை மார்கெட்டிங் மன்னன் என்கிறார்! மார்கெட்டிங் மன்னன் என்றால் எப்படி? பாண்டே சொல்கிற மாதிரி எதைவேண்டுமானாலும் விற்றுவிடுவார் என்பது எந்த அளவுக்கு உண்மை? எதற்கும் முந்தைய பதிவை ஒரு முறைக்கிரு முறை வாசித்து விடுங்கள்! இங்கே பாண்டே மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருப்பது வேறு சப்ஜெக்ட். போகிற போக்கில் நரேந்திர மோடியைப் பற்றி ஒரு passing comment ஆகச் சொல்லிவிட்டு, தான் எடுத்துக் கொண்ட சப்ஜெக்டைத் தொடர்கிறார் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
என்னதான் மார்கெட்டிங் மன்னன், வித்தகர் என்று சொன்னாலும், மார்கெட் செய்யப்படுகிற பொருள் தரமாக இல்லாவிட்டால் எத்தனை நாள் வண்டி ஓடும்? இதுதான் அந்தப் பதிவில் வெளிப்படையாக சொல்லப்படாத மையப் பொருளாக இருந்தது. ஒரு brand உருவாகிற விதம் வேறு, அதை brand positioning என்று நிலை நிறுத்துவது வேறு.என்பதை இங்கே சுருக்கமாகச் சொல்லியிருந்ததை நினைவு படுத்திக் கொள்ள வேண்டியும் இருந்தது. நம்மூரில் அரசியலும் சரி, மார்கெட்டிங், வணிகம் இவைகளும் சரி, கொள்கை கோட்பாடு என்று uptodate ஆகத் தங்களை வைத்துக்கொள்வதும் இல்லை, வளர்த்துக் கொள்வதும் இல்லை! விடுதலையடைந்து 72 ஆண்டுகள் ஆனபின்னாலும் கூட நமக்கும் சரி நம்மையாளுகிற மக்கள் பிரதிநிதிகளுக்கும் சரி, ஜனநாயகம், நாடாளுமன்ற நடைமுறைகள் எதுவும் தெரியவே இல்லை! சட்டத்துக்கு உட்பட்டு நடப்பது என்பது நம்மூர் அரசியல்வாதிகளுக்குப் பழக்கமே இல்லாமல் போனதில் நம்முடைய பங்கு ஒன்றுமே இல்லையா?
" A brand is the set of expectations, memories, stories and relationships that, taken together, account for a consumer’s decision to choose one product or service over another."
பிராண்ட் என்றால் என்னவென்று இப்படித் தன்னுடைய கருத்தாக சேத் கோடின் சொல்கிறார்!
இந்த அம்சத்தை முந்தைய பதிவுகளில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். சேத் கோடினுடைய இந்தப்பதிவு, பிராண்ட், பிராண்ட் இமேஜ், அப்புறம் சந்தைப் படுத்தும் உத்திகள் குறித்து கொஞ்சம் யோசனைகளைக் கிளப்பி விட்டது.
சேத் கோடின் இந்தப் பதிவில் சுருக்கமாக சொல்வது இது தான்! மார்கெடிங் உத்தியில், நம்மிடம் ஏற்கெனெவே இருப்பதைப் பற்றி, அல்லது உபயோகித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளைப் பற்றிய அதிருப்தியை எழுப்புவதன் மூலம் தங்களுடைய பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள்! நாம் உபயோகித்துக் கொண்டிருப்பதில், நாம் சந்தோஷப் படக் கூடியது அனேகமாக இல்லை என்று சொல்லும் போது, மறைமுகமாகத் தங்களுடைய தயாரிப்பு அப்படி சந்தோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விளம்பரங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?
வாடிக்கையாளருடைய திருப்தி என்பது இங்கே, பெயருக்கு மட்டுமே என்பது தான் உண்மை! இப்படி எழுதியது அக்டோபர் 2010 இல்! இங்கே வாடிக்கையாளர் என்ற இடத்தில் வாக்காளர் என்று வைத்துப்பார்த்தால் இதுவும் அரசியல் பதிவு ஆகிவிடும்.
மீண்டும் சந்திப்போம்.
முதல் பாராவில் "எதற்கும் முந்தைய பதிவை ஒருமுறைக்கிருமுறை" வரிகளில் லிங்க் கொடுக்க மறந்து விட்டீர்கள் போல...
ReplyDeleteமறக்கவில்லை ஸ்ரீராம்! இங்கே என்னதான் லிங்க், தரவுகள் என்று கொடுத்தாலும் யாரும் அதில்போய்ப் பார்ப்பதில்லையே! இந்தப்பதிவுகளுக்கு வந்தபார்வைகளில் மூன்றில் ஒரு பங்குதான் முந்தைய பதிவுக்கு என்றால், என்ன சொல்வது?
Deleteஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துபடிப்பவர்களும் கணிசமாக இருப்பதால், குழப்பம் வராமலிருக்க லிங்க் கொடுத்து விடுகிறேன்! நன்றி ஸ்ரீராம்!