Saturday, July 6, 2019

அடுத்த வீடு! கர்நாடகா!ஆந்திரா! அங்கேயும் அரசியல்தான்!

இசுடாலின் மகன் உதயநிதி தான் இங்கே அடுத்த வாரிசு என்று அறிவிக்கப்பட்ட அதே நாளில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியை இளைஞர் அணித் தலைவராக தாத்தன் தேவே கவுடா அறிவித்தாராம்! அறிவித்த  ராசி சரியில்லையோ? குமாரசாமியின் நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்திருப்பது இன்றைய பரபரப்பு!.குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது? பாடல் இந்த சிச்சுவேஷனுக்குப் பொருத்தமானதுதான்!  


இதுவரை 12 MLA க்கள் தங்கள் ராஜினாமாக் கடிதங்களுடன் சபாநாயகருக்காகக் காத்திருக்கிறார்கள். சபாநாயகர் தனது அலுவலகத்துக்கு வருவாரா அல்லது இவர்கள் அவரது இல்லம் தேடிப்போயே ராஜினாமாவைக் கொடுப்பார்களா என்கிற பரபரப்பு இன்னும் அடங்கிய பாடில்லை.  


காங்கிரஸ் கட்சி எப்படி அடித்தளம் வரை உளுத்துப்போய்க் கிடக்கிறது என்பதற்கு கர்நாடகா அரசியல்களமே ஒரு நல்ல உதாரணம்.காங்கிரஸ் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் மீள்வதற்கு அதன் எதிர்க்கட்சிகளே உதவியிருக்கின்றன. இந்திரா காலத்தில், ஜனதா கட்சியின் குழப்பங்களும் ராஜீவ் காலத்தில் ஜனதா தளத்தில் நடந்த குழாயடிச் சண்டைகளும் காங்கிரஸ் மீண்டுவர உதவின. சோனியா, ராகுல் காலத்தில் நிலைமை அப்படி இல்லை. காஷ்மீர் முதல் கர்நாடகம் வரை, குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய அளவில் வேரூன்றியிருக்கும் ஒரு தேசியக் கட்சியை முதல்முறையாகக் களத்தில் சந்தித்துத் தோற்றிருக்கிறது காங்கிரஸ். இதுபோன்ற சூழலை காங்கிரஸ் எப்போதும் எதிர்கொண்டதில்லை. என்று விகடன் தளத்தில் சொல்வது  உண்மைக்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறது. சரண்சிங்கின் வெள்ளந்தித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜனதா தளத்தை உடைத்து, பிரதமரான அவரையும் சிறிது நாட்களிலேயே கவிழ்த்த இந்திராவின் வஞ்சகத்தைச் செயல்படுத்த அன்றிருந்த தளபதிகள் யாரும் இன்றைக்குக் காங்கிரசில் இல்லை. பானாசீனா மாதிரிக் காசு எங்கே கிடைக்கும் என்று மோப்பம் பிடிக்கிறவர்களை மட்டும்  வைத்துக் கொண்டு என்ன செய்வது?


ராகுல் காண்டி மாதிரியே இந்தத் தேர்தல் தோல்வியில் சுருண்டு போய்க் காற்றில் அலைக்கழிக்கப்படுகிற சருகு போல ஆகிப்போனவர் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு. முன்பு ஜெயிக்கிற தரப்பின் பக்கம் இருந்தே தானும் ஜெயித்தவர், இன்று அரசியல் எதிர்காலம் என்னாகுமோ என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்கின்றன செய்திகள். ஊழல் வழக்குகளில் எப்போது கைது செய்யப்படுவார் என்கிற தேதி மட்டும் தான் தெரியவில்லையாம்!  "The MLAs are well aware that TDP boss Naidu will soon be in jail on (alleged) multiple charges relating to corruption. Several close aides and family members of Naidu are also involved in corruption. It is for this reason that MLAs are approaching us. They realise that TDP's image of a clean party has taken a beating," said Deodhar who is also BJP's state in-charge for Tripura. என்கிறது எகனாமிக் டைம்ஸ்  மூழ்கும் கப்பலில் இருந்து தப்பித் பிழைக்க விரும்புகிறவர்கள் அணிமாற நினைப்பது இயல்பே. 


ஒரு மாறுதலுக்காக 1977 இல் மொரார்ஜி தேசாய், ஜனதா தளம் என்று ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் குரலாக, இந்திரா தோற்கடிக்கப்பட்டது எப்படி என்று சொல்கிறார், கேளுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.
       

காங்கிரசுக்குத் தான் வெட்கம், சுரணை இல்லை! நமக்குமா....?  இந்தப்பதிவில் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து காங்கிரஸைப் பற்றி பதிவு போடாமல் ஒரு மாதம் இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். என்னால் முடியாது என்று சொன்னேன்.

  

7 comments:

 1. ஹா... ஹா...ஹா... இப்போதும் தோன்றும் அவ்வப்போது!

  ReplyDelete
  Replies
  1. அப்படி அங்கே தோன்றியது இங்கே எதிரொலித்ததால் தான் இங்கேயும், ஸ்ரீராம்!

   Delete
 2. காங்கிரஸ் தலைவர் இப்போதும் apprentice நிலையிலேயே இருப்பதால், மாநிலத் தலைவர்களும், காங்கிரஸ் முதல்வர்களும் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் மன்மோகன் சிங்கைக் கொண்டு வர (fake) gandhi குடும்பத்தினருக்கு மனம் இல்லை. பக்கத்தில் இருப்பவர் பலமாகத் தும்மினாலே உயிரை விட்டுவிடும் நிலையில் இருப்பவர்களை எல்லாம் தலைவராக நியமனம் செய்ய எத்தனிக்கிறார்கள். காங்கிரசின் நிலைமை இன்றளவில் ஜான் (john இல்லை) ஏறினால் முழம் சறுக்கும் நிலையில்தான் உள்ளது. ஊழல் புகார் எதிலும் சிக்காத, கறை படியாத கரங்கள் உடைய தலைவர் யாராவது கிடைத்தால் காங்கிரசுக்கு விடிவு காலம் பிறக்கும்.

  ReplyDelete
  Replies
  1. காங்கிரஸ் கட்சி என்று இன்றைக்கு சொல்லப்படுகிற ஒரு கும்பல் தன்னுடைய இருப்புக்கான நியாயம் காரணங்களை இழந்து வெகுகாலமாகிறது கௌதமன் சார்!

   காங்கிரசின் இடத்தில், வேறொன்று புதிதாகத்தான்கிளைத்தாக வேண்டும்!

   Delete
  2. அதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் நாமாக ஒரு மூன்றாவது அணி அமைத்தால் எல்லா கட்சிகளிலிருந்தும் யார் யாரை எடுப்பீர்கள் என்று கேட்டிருந்தேன்!

   Delete
  3. மூன்றாவது அணி என்பதற்கு இடதுசாரிகள் முன்வைக்கிற சில விஷயங்களே வேறு, ஸ்ரீராம்! மூன்றாவது அணி என்று இடதுசாரிகள் சொல்வது ஒரு குறைந்த பட்சக் கொள்கை, திட்டங்களின் அடிப்படையில் சேருவது.என்பதும் ஆனால் திமுக மாதிரி மாநிலக்கட்சிகள் மூன்றாவது அணி என்பதற்கு உள்ளூரில் தொகுதி உடன்பாடு, தேர்தல் கூட்டணி என்பதோடு முடிந்துவிடுவதாக வியாக்கியானம் செய்வதும் ஒன்றாகிவிடுமா?

   சிதைந்துபோன காங்கிரசுக்கு மாற்றாக வேறொன்று உருவாகவேண்டும் என்று நான் சொன்னதன் அர்த்தமே வேறு! 1977 ஜனதா தளம் அன்றைய நாட்களில் காங்கிரசுக்கு மாற்றாக உருவான கட்சி! இங்கே ஸ்தாபன காங்கிரஸ், அன்று ஜனசங்கமாக இருந்தவர்கள் இன்னபிற மாநிலக்கட்சிகள் எல்லாம் தங்களுடைய தனித்த அடையாளங்களைத் துறந்து ஒரே கட்சியாக உருவான அமைப்பு ஜனதா தளம்! அப்படி ஒரு புதிய சங்கமம் உருவாகவேண்டுமென்பது! கடந்தகால அனுபவம் என்ன? ஒரே கட்சியாக ஆனாலும் உள்முரண்பாடுகளை சாமர்த்தியமாகக் கிளறிவிட்டு இந்திரா காந்தியால் அதை உடைக்கவும் முடிந்தது.

   RSS இலும் ஜனதா தளத்திலும் ஒரே நபர் உறுப்பினராக இருக்க முடியுமா என்கிற விஷயத்தைக் இடது கம்யூனிஸ்டுகளை வீட்டுக் கிளற வைத்ததில், ஜனசங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் வெளியேறி 1980 இல்
   பாரதீய ஜனதா கட்சியாகத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டார்கள். 1980 முதல் 2014 வரையிலான 34 ஆண்டுகளில் பிஜேபி வளர்ந்த அதே நேரம் காங்கிரசும், இதர மாநிலக்கட்சிகளும், இடதுசாரிகளும் தொடர்ந்து சரிவையே சந்தித்தார்கள். ,

   காங்கிரசுக்கு தன்னைப்புதுப்பித்துக்கொள்கிறஆற்றல் அறவே இல்லாமல் போன பிறகு ஒரு புதிய மாற்று சக்தியைக் காலமே உருவாக்கும்.

   Delete
  4. முதலில் உருவானது ஜனதா கட்சி.(JP) (1977) உள்துறை மந்திரியாக அப்போது இருந்த சரண்சிங்கை பிரதமர் பதவி ஆசை காட்டி, மோசம் செய்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். இந்திரா, ராஜீவ் காலம் வரை தாக்குப் பிடித்திருந்தது, ஆட்சியில் இருந்ததால். நரசிம்ம ராவ் காலத்திற்குப் பிறகு, மன்மோகன் காலம் கூட OK என்றுதான் சொல்லவேண்டும். அதற்குப்பின் நேரு வாரிசுகள் + அவர்களின் ஜால்ராக்கள் காங்கிரசைக் கைப்பற்றியதிலிருந்துதான் சரிவு காலம் ஆரம்பம்.

   Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

சிறுகதை எப்படி எழுதுவது ? அது சிறுகதைதான் என்று எப்படிப் புரிந்துகொள்வது?

எங்கள்Blog இல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கேட்டு வாங்கிப்போடும் கதை என்று வாசகர்களிடமே கதையைக் கேட்டு வாங்கிப்போடுகிற வேலையை செய்து கொண்டு...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (171) அரசியல் (154) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (75) எண்ணங்கள் (35) புத்தகங்கள் (32) மனித வளம் (30) செய்திகள் (22) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) செய்திகளின் அரசியல் (10) ரங்கராஜ் பாண்டே (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) தேர்தல் முடிவுகள் (5) புனைவு (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) பதிவர் வட்டம் (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பானாசீனா (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)