Tuesday, July 9, 2019

காங்கிரஸ் அக்கப்போர்! தமிழ்நாடு அக்கப்போர்! எது வேண்டும்?

கர்நாடக அரசியல் விவகாரங்களைக் காங்கிரஸ் தொடர்ந்து தவறான வழியிலேயே கையாள்வதில், கர்நாடக அரசு கவிழ்வதில் இரண்டு மூன்று நாட்கள் வேண்டுமானால் தள்ளிப் போடமுடியுமே  தவிர தவிர்க்க முடியாது என்றாகிக் கொண்டிருக்கிறது. The Print தளத்தின் சேகர் குப்தா, காசுக்குக் கூவுகிறவர்தான், இருந்தாலும் இந்த 17 நிமிட வீடியோவில் ஒரு உருப்படியான யோசனையைச் சொல்கிறார். அதாவது பிஜேபிக்கு ஒரு சான்ஸ் கிடைத்தாலும், இப்போதுள்ள சட்டசபையை வைத்துக்கொண்டே ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்க கூடாது என்கிறார். 


தேவே கவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் பிஜேபி இரு கட்சிகளின் மீதும் சவாரி செய்து மத்தியிலும் கர்நாடகாவிலும் ஆட்சி. அதிகாரத்தை ருசிபார்த்த திருட்டுப்பூனை, மாநிலத்தில் ஒரு சிறுபகுதியில் மட்டுமே செல்வாக்குடன் இருக்கிற ஒரு உதிரிக்கட்சி   கர்நாடக அரசியலில் 20 வருடங்களாக ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறதென்றால் , என்ன சொல்வது? என்ன செய்வது?  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!  

மக்களவையில் காங்கிரஸ் கோஷம், வெளிநடப்பு!
மாநிலங்களவையில் காங்கிரஸ் திரிணாமுல் 
கூட்டாக ரகளை அவை நாளைவரை ஒத்திவைப்பு! 
அட! ராகுல் கூட கூட்டத்தோடு கோஷம் போட்டாராமே!   
  
ஆனால் கர்நாடகாவில் பிஜேபி, குறிப்பாக எடியூரப்பா என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் எது நல்லது என்று யோசனை சொல்லி என்ன பயன்? கர்நாடக அனுபவத்தில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் பழம்பெருச்சாளி கமல்நாத், கொஞ்சம் உஷாராகி இருக்கிறார் என இன்றைய செய்திகள் சொல்கின்றன. முன்னெச்சரிக்கை பலிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!    


பூனைக்கு யார் மணி கட்டுவது? ராகுல் காண்டி ராஜினாமா செய்த பிறகு அடுத்து என்னசெய்வது என்பதை வெளிப்படையாகப் பேசக்கூடக் காங்கிரஸ்காரர்கள் தயங்கும் நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண் சிங் சில விஷயங்களை உடைத்துப் பேசியிருக்கிறார். எடுபடுமா? 

என்னைய்யா எப்போ பாத்தாலும் காங்கிரஸ் அக்கப்போர் மட்டும் தானா என்று சலித்துக் கொள்கிறீர்களா? தமிழகத்து அக்கப்போர் ஒன்று இப்படி! இது தேவலையா?    

இங்கே போராளிகள் எல்லாம் பொம்பள பொறுக்கிகள் தான் என்று கவிஞர் தாமரை சொன்னது பலருக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இயக்குனர் மு களஞ்சியமும் எழுத்தாளர் இளங்கோ பிச்சாண்டியும் இங்கே முகிலன் விவகாரத்தைப் பற்றி உரையாடுகிறார்கள். 


முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டைப் பற்றி எழுத்தாளர் இளங்கோ பிச்சாண்டியின் முகநூல் பகிர்வு இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் வெளியாகியிருக்கிறது  வீடியோ 43 நிமிடம் 

ஒரிஜினல் முகநூல் பகிர்வு இங்கே 

மீண்டும் சந்திப்போம்.



2 comments:

  1. இயக்குநர் களஞ்சியம் மற்றும் இளங்கோ பிச்சாண்டி உரையாடல் - முகிலனின் பாலியல் புகார் பற்றி. நல்ல ஆட்கள்தாம். இந்த இயக்குநர் களஞ்சியம் தானே நடிகை அஞ்சலியின் பணத்தை அடித்து, அவருக்கு பாலியல் பிரச்சனைகள்லாம் கொடுத்தது என்று அஞ்சலி அவர்மீது புகார் கொடுத்திருந்தாரே. (2013ல). அப்புறம் இவர் முகிலனுக்கு சப்போர்ட் பண்ணாமல் வேறு யாருக்கு சப்போர்ட் பண்ணுவார்?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ.த! திங்களன்று தஞ்சையம்பதியில் அத்திவரதர் வைபவம்! இன்று எபியில் கேவாபோ கதையின் முதல் பகுதி, பின்னூட்ட ஊகங்களுக்கு உடனுக்குடன் பதில் என்று ஜமாய்த்துக் கொண்டே இந்தப்பக்கமும் கவனித்திருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம்!

      செய்திகளில் எதை எடுத்துக் கொள்வது என்பதில் சமீபநாட்களில் ஒருவித வறட்சி! அதனால் தான் இந்த மாதிரி வெட்டி அக்கப்போர்களையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டது! களஞ்சியம் அஞ்சலியோடு செய்த அக்கப்போருக்குப் பின்னால் சினிமாவில் காணாமல் போய், இதுமாதிரிப் போராளியாக,ஏதோ ரூ அமைப்பை நடத்திக் கொண்டு அவதாரம் எடுத்திருக்கிறார்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)