Showing posts with label அக்கப்போர். Show all posts
Showing posts with label அக்கப்போர். Show all posts

Monday, May 11, 2020

ச்சும்மா ஜாலிக்கு! ஓடாத படத்துக்கு ஒரு இரவல் வாங்கின விமரிசனம்!

யூட்யூபில் இன்று நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கௌதம் மேனனுடைய படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் இது. பெரிதாகக் கதை என்று எதுவும் இல்லை என்றாலும் சிறுவயதிலிருந்தே அறிமுகமான இருவருடைய காதல், சொல்லப்பட்ட விதத்தில் இன்றைக்குப் பார்க்கும் போது கூட நன்றாக இருக்கிறது. முக்கியமாக இளையராஜாவின் இசை! குழந்தைத்தனமான ஒரு காதலை, வயசாளியாகிப்போன காலத்திலும் கூட ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு கௌதம் வாசுதேவ மேனன் அதிகம் சொதப்பாமல் எடுத்த காதல்கதை இது ஒன்றுதான் என்பதால் கூட இருக்கலாமோ?

 
படத்திலிருந்து கொஞ்சம் காட்சிகள், வீடியோ 15 நிமிடம்!  கதாநாயகன் ஜீவா மட்டுமல்ல, அநேகமாக இயக்குனர் உட்பட அனைவருமே அடக்கி வாசித்திருப்பது படத்தின் சுவாரசியத்துக்கு ஒரு காரணம் என்றால் சமந்தா மிக முக்கியமான காரணம், மறுப்பதற்கில்லை!


ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே! 



சுட்டுப்பிடிக்க    உத்தரவு! இப்படி ஒருபடம் போனவருடம் தியேட்டரில் எத்தனை ஷோ ஓடியிருக்கும்? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? கிழக்கு மேனேஜர் ஹரன் பிரசன்னா இந்தப்படத்தைத் தேடிப் பிடித்தது மட்டுமல்லாமல் முகநூலில் ஒரு முழுநீள விமரிசனமும்  எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களில் அனல் பறக்கிறது

சுட்டுப் பிடிக்க உத்தரவு - கபட நாடகம்

கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.

ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.

பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.

இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் - ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!

தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனாலும் நாம் சில நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்று, இந்தக் குண்டுவெடிப்பைத் திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காண்பிக்கவில்லை என்பது போலவே, இந்த குண்டுவெடிப்பு நியாயமான தேவையான ஒன்றுதான் என்ற அளவுக்கு இயக்குநர் யோசிக்காமல் இருந்திருக்கிறாரே, அதற்கு முதல் நன்றி! இரண்டு, குண்டுவெடிப்பைத் தகர்க்க உதவும் இஸ்லாமிய போலிஸுக்கு உதவும் மற்றவர்கள் ஹிந்துக்கள். அவர்களையும் இஸ்லாமியர்களாகவோ கிறித்துவர்களாகவோ யோசிக்காத இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டாமா! இயக்குநர் இதையெல்லாம் யோசித்து மனதில் வைத்து அடுத்த படத்தில் இன்னும் பதினாறு அடி பாய வாழ்த்துவோம்.  

நல்லவேளை! நான் ட்ரெயிலரில் மிஷ்கின் மூஞ்சியைப் பார்த்ததுமே படத்தைப் பார்க்கவேண்டாமே என்று புறந்தள்ளியதால் பிழைத்துக் கொண்டேன்! 

மீண்டும் சந்திப்போம். 

Wednesday, April 8, 2020

கொஞ்சம் சீரியசாக! ஒரு பழைய படத்துக்கு புது விமரிசனம்! ஹே ராம்!

கமல் காசரை நான் ஒரு நல்லநடிகனாக மட்டும் பார்க்கிறேனே தவிர அரசியலில் வெறும் ஜீரோ தான் என்று உறுதியாக நம்புகிறவன். கமல் காசருடைய தந்தை பரமக்குடி வக்கீல் சீனிவாசன் அந்தநாளைய காங்கிரஸ்காரராக இருந்தவர் என்பதனாலேயே கமலுக்கும் காங்கிரசைப் பற்றியோ நடப்பு அரசியலைப்பற்றியோ கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என்று நம்புவது மிகக் கொடூரமான ஜோக்காக மட்டுமே இருக்கும். 2000 ஆம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படம் கமல் காசருடைய அரசியல் ஞானத்தைச் சொல்வதாக இங்கே இணையத்தில் நிறையப் பீற்றல்கள் உலாவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.


 "தேடிப்பாத்தேன் காந்தியத் தான்  காணோம்காந்தியத்தான் காணோம்ரூபாய் நோட்டில் வாழுகிறார் காந்தி!" இந்தப் பாட்டைக் கமல் ஹாசன் சொந்தக் குரலில் பாடியிருப்பதைக் கேட்கிற  தருணங்களில் பரமக்குடி வக்கீல் ஸ்ரீநிவாசன் நினைவு வரும் என்று எழுதியது 2009 காந்தி ஜெயந்தி அன்று.  இப்படிப்பாடி நடித்தது 1998 இல், அடுத்த இருவருடங்களுக்குள் ஹே! ராம் மாதிரித் தெளிவான அரசியல் படம் எடுக்கிற அளவுக்கு கமல் காசருக்கு ஞானம் பிறந்து விட்டதா என்ன? !! என்னபாவம் செய்தேன் யான்? என்னை அரசியலுக்கு அழைக்கிறார்களே! என்று சிலவருடங்களுக்கு முன்பு டிவிட்டரில் புலம்பிய சரித்திரம் கமல் காசருக்கே மறந்துவிட்டது என்றால் என்னத்தை  சொல்ல?  இப்படி கமல் காசர், அடிப்பொடிகள் பற்றி  யோசித்துக் கொண்டிருந்த போது முகநூலில் திரு B R  மகாதேவன் எழுதிய ஹே! ராம் திரைப்பட விமரிசனம் கண்ணில் பட்டது. 

கமல் தன்னை காந்தியின் சீடனாகச் சொல்லிக்கொள்வதுபோன்ற அபத்தம், அபாயம் வேறெதுவும் இல்லை. அவர் உண்மையில் முஹம்மது அலி ஜின்னாவின் சீடர்.ஹேராம் திரைப்படத்தைத் தனது அரசியல் ஞானத்தின் உரைகல்லாகவும் அவரும் அவருடைய ரசிகக் கண்மணிகளும் சொல்லிக் கொள்வது வழக்கம்.

அந்தப் படம் உண்மையில் காந்தியிஸத்தை அல்ல; ஜின்னாயிஸத்தையே உயர்த்திப் பிடிக்கிறது.

அஹிம்சையே உயர்ந்த தர்மம். அதே நேரம் தர்மத்தை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் ஹிம்சை அதைவிட உயர்ந்தது.

இது அதர்மம் தலை தூக்கும் போது தர்மத்தை நிலை நாட்ட வன்முறையைக் கையில் எடுத்த தெய்வத்தின் குரல். காந்தியின் குரல் அல்ல.

காந்தி எந்நிலையிலும் இந்திய அளவில் ஆயுதத்தை ஏந்தச் சொல்லவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியக் குழந்தையை இஸ்லாமியக் குழந்தையாகவே வளர்த்துவா என்று தன் குழந்தையைப் பறிகொடுத்த இந்து தந்தைக்குச் சொன்னவர்.

ஹே ராம் படத்தில் தன் மனைவியை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றதால் கோபம் கொள்ளும் சாகேத ராம், தான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த இந்து சமூகமே இப்படி பாதிக்கப்பட்டிருப்பது கண்டு குமுறுகிறான். காந்தியின் அஹிம்சையே இதற்குக் காரணம் என்று காந்தியைக் கொல்லப் புறப்படுகிறான்.

அந்த இடத்தில் தற்செயலாகத் தன் இஸ்லாமிய நண்பனைப் பார்க்கிறான். பல இஸ்லாமிய அப்பாவிகள் இந்து அடிப்ப்டைவாதிகளால் தாக்கப்படவிருப்பதையும் பார்க்கிறான். அவர்களைக் காப்பாற்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறான்.

இது காந்தியத்துக்கு முற்றிலும் எதிரானது.

காந்தி எந்த நிலையிலும் யாரையும் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை.

ஜாதி விஷயத்தில் மேல் ஜாதியினரே தமது தவறுகளுக்கு பிராயச் சித்தம் செய்யவேண்டும் என்று சொன்னார்.

மத விஷயத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வன்முறையைக் கையில் எடுத்தால் பேரழிவு ஏற்படும் என்பதால் பொறுத்துக்கொண்டு போகச் சொன்னார். ஆனால், யாரைக் காப்பாற்றவும் ஆயுதத்தை அவர் பரிந்துரைக்கவே இல்லை. ஆயுதத்தை ஏந்தச் சொன்னது ஜின்னா.

சாகேத ராம் அதைத்தான் செய்கிறான். ஆனால், அதை காந்திய சிந்தனையின்படி வந்தடைந்ததாகவும் சொல்கிறான். முழு மடத்தனம்.

பத்து அப்பாவி இஸ்லாமியர்களைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது சரி என்றால் 100 இந்துக்களைக் காப்பாற்ற அதே ஆயுதத்தை ஏந்துவதும் சரியாகத்தானே ஆகும். அப்படியானால், சாகேத ராம் கையில் இருக்கும் ஆயுதம் யாரைப் பார்த்து நீண்டிருக்கவேண்டும்.

அப்பாவிகளைக் கொல்ல வந்த அடிப்படைவாதிகளிடம் காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். என்னை முதலில் கொல் என்று நிராயுதபாணியாக முன்னால் வந்து நின்றிருப்பார். துப்பாக்கியை எடுத்துச் சுட்டிருக்கமாட்டார்.

காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கமல்ஹாசன் செய்தது அப்பட்டமான அசட்டுத்தனமான அபாயகரமான தீவிரவாத ஆதரவு நிலைப்பாடுதான்.

ஒருவகையில் அப்பாவிகளைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்துவது நிச்சயம் சரிதான். காந்தியம் தோற்கும் இடம் அது. மேலும் அந்த நியாயம் இஸ்லாமிய அப்பாவிகளைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தக்கூடாது. ஆனால் ஹேராமில் அதைத்தான் செய்திருக்கிறார் கமல். அப்படியாக அவர் ஜின்னாவின் சீடராகவே அன்றும் இருந்தார். இன்றும் இருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதென்றால், முதல் மனைவி இறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவே வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது (இது ரசிகர்களுக்காகச் செய்த கிளுகிளுப்பு), இயக்கத்துக்காக திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள் எத்தனையோ பேர் இருக்க இரண்டாந்தாரம் கட்டிய சாகேத ராமையே அந்த இயக்கம் காந்தியை கொல்வது போன்ற மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்தது (அதற்கு சப்பைக் காரணம் வேறு சொல்லியிருப்பார்) என ஏகப்பட்ட குறைகள் இருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதானால், தான் எந்த அரசியலைப் பின்பற்றுகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லக்கூட வக்கில்லாத நபும்சகமே கமலிடம் வெளிப்படுகிறது.

 திரு B R  மகாதேவன் சொல்வது எனக்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது என்பதால் இங்கே அவர் அனுமதியில்லாமலேயே பகிர்ந்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.  


Monday, April 6, 2020

எல்லாம் ஒரு தகவலுக்காகத்தான்! ஆனால் கற்றுக்கொள்வதில் ஏன் மந்தமாக இருக்கிறோம்?

இங்கே திராவிடங்கள் அடித்த கூத்தில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி இன்னபிற வார்த்தைகளுக்கான சரியான பொருளே மாறிப்போய்விட்டதில், இந்தவார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தமென்ன என்பதை மீட்டெடுக்க, ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதைவிளக்க பெரிய அளவில் தீசிஸ் எல்லாம் எழுதிப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை! நடப்பு நிகழ்வுகளை, செய்திகளை சரியானமுறையில் புரிந்துகொண்டாலே போதுமானது. உதாரணமாக TOI நாளிதழில் வெளியான செய்தி இது.

படத்தைப் பெரிதாக்கிப் படிப்பது, செய்தி ஆங்கிலத்தில் இருக்கிறதே என்றெல்லாம் தட்டிக் கழிக்க முடியாதபடி எழுத்தாளர் மாலன் நாராயணன் தமிழ்ப்படுத்தி கொடுத்திருப்பதை கொஞ்சம் வாசித்துத்தான் பாருங்களேன்! அவரது முகநூல் பக்கங்களுக்கு நன்றியுடன்! 

கோவிட் -19 தொற்று உலகெங்கும் பரவிய நிலையில் மார்ச் மாதம் தில்லி நிஜாமுதீனில் கூட்டப்பட்ட மாநாட்டை ரத்து செய்யுமாறு முஸ்லீம் துறவிகள், முஸ்லீம் சிந்தனையாளர்கள், ஏன் அவரது நெருங்கிய உதவியாளர்கள் கேட்டுக் கொண்டும் கூட தப்லிகி ஜமாத் தலைவர் மெளலானா முகமது சாத் அதற்கு இணங்கவில்லை.என்று கூறப்படுகிறது.

அவரது பிடிவாதம் அவர் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அவரது சீடர்களின் வாழ்வை மட்டுமல்ல, முஸ்லீம்களின் இமேஜையும் சீர்குலைத்துவிட்டது என்று அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் கூறுகிறார்கள்.

அவரது நிகழ்வில் (மார்கஜ்) கலந்து கொண்ட பலர் கொரானா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மெளலானா சாத் முஷீர்கள் எனப்படும் தனது ஆலோசகர்களுடன் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரானா தொற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களில் 30% பேர் தப்லிகி ஜமாத்தோடு தொடர்புடையவர்கள். உத்தர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 50% ஆக உயர்ந்துள்ளது ( இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத செய்தி தமிழ்நாட்டில் இது ஏறத்தாழ 80-90%) தில்லி துர்க்மான் கேட்டில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் தப்லிகி ஜமாத்திலிருந்து பிரிந்த இன்னொரு அமைப்பான ஷுரா -இ- ஜமாத், தொறு நோய் பரவும் செய்தி கிடைத்ததுமே தனது எல்லா நிகழ்சிகளையும் ரத்து செய்து விட்டது. ஆனால் அந்தச் செய்தி குறித்துச் சற்றும் கவலைபடாத மெளலானா சாத் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். வைரலாகப் பரவிய அவரது டேப் ஒன்றில் அவர் " மசூதியில் இறப்பது உயர்ந்த சாவு" என்று போதித்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் தப்லிகி ஜமாத்தின் மூத்த உறுப்பினர் முகமது ஆலம் "சாத்திற்கு எல்லாம் தெரியும். அவரது பிடிவாதம் அப்பாவி தப்லிகிகளை (முஸ்லீம்களை) கொள்ளை நோயின் வாயில் தள்ளிவிட்டுவிட்டது" என்கிறார். "தன்னை முஸ்லீம் உலகின் அமீராக (அரசனாக்)க் கருதிக் கொள்ளும் ஒருவர். மெக்கா, மதீனாவிற்கு அடுத்தாற்போல் தப்லிகி மார்கஜ்தான் புனிதமான இடம் எனச் சொல்லும் ஒருவர் எப்படி கொள்ளை நோய் பற்றி அறியாதவராக இருந்திருக்க முடியும்?" எனக் கேட்கிறார் அவர்.

மாவைச் சேர்ந்த இன்னொரு மூத்த தப்லிகி உறுப்பினர் லியாகத் அலி கான், " பொறுப்புள்ள முஸ்லீம் சிந்தனையாளர்களின் அறிவுரைகளை ஏன் மெளலானா சாத் குப்பைத் தொட்டியில் போட்டார்? ஏன் தனனை வைரஸ் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளாமல் ஒளிந்த்திருக்கிறார்?" எனக் கேட்கிறார்.மெளலானா சாத்தின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய பெயரை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒருவர், நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டதற்கு அவர் செவிமடுக்கவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார். "இப்போது அவர் தனது சீடர்களையே அபாயத்தின் விளிம்பிற்குத் தள்ளிவிட்டார்!" என்கிறார்

மீம் அஃப்சல் என்ற காங்கிரஸ் தலைவரும், ஜாபர் சரேஷ்வாலா என்ற முஸ்லீம் தலைவரும், மெளலானாவிற்குப் பல முறை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு தகவல் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்

"ஜனவரி -பிப்ரவரியில் கோவிட்-19 பற்றிய தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கியதும் நாங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தோம், இந்தியாவிற்கு வருகைதரயிருந்த அயல் நாட்டினரைத் தடுத்து நிறுத்தினோம். ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்த்தோம். அதனால் கூட்டங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம்" என்கிறார் மருத்துவரும் ஷுரா பிரிவின் மூத்த உறுப்பினருமான டாக்டர் எம்.எஸ் கித்வாய்

என்றாலும் மெளலானா சாத்தின் நெருங்கிய மற்றொரு உதவியாளர் மெளலானா ஹாரிஸ், " அயல்நாடுகளிலிருந்து வந்த ஜமாத் உறுப்பினர்கள் இந்தியாவில் நுழைய இந்திய அரசு அனுமதித்தது. அது எப்படி எங்கள் தவறாகும்?" என்று தனது தலைவருக்கு ஆதரவாக வாதிடுகிறார்.

மற்றொரு முஸ்லீம் அமைப்பான தியோபந்த் துறவி அப்துல் காசிம், " தியோபந்த் இஸ்லாமிக் செமினரி மூன்றாண்டுகளுக்கு முன்னரே தப்லிகி ஜமாத்தைத் தடை செய்து விட்டது" என்கிறார்

[ இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தியின் தமிழாக்கம்]

இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஊடகக்காரருக்கும் ஏதோவொரு சார்புநிலை இருக்கிறது. அதையும் தாண்டிக் காசுக்கு கூவுவது ஊடகங்களுடைய இன்னொருபக்கமாகவும் இருக்கிறது. செய்திகளைத் தவிர்ப்பதால் ஊடகப்பொய்களிலிருந்து தப்பித்துவிடுவோம் என்பதுகூடத் தவறான அனுமானம் தான்! வருகிற செய்திகளிலிருந்து உண்மையைப் பகுத்து அறிய முடிவதுதான் உண்மையிலேயே பகுத்தறிவு! செய்திகள் உண்மையா பொய்யா என்பதை அதன் வேரைப் பிடித்துப் பார்க்கப்பழக வேண்டும். தொடர்ந்து பழகினால் எவராலும் முடிகிற விஷயம்தான்!

மீண்டும் சந்திப்போம்.           

Wednesday, April 1, 2020

தெரிந்து கொள்ள சில விஷயங்கள்! சொல்வது பானு கோம்ஸ்!

முகநூலில் பானு கோம்ஸ் நமக்குத் தெரியாத, தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு தகவலை எழுதியிருக்கிறார். #பழைமைவாதம் என்பது எவ்வ்ளவு கோரமாக இருக்கும், செயல்படும் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கவே மாட்டோம் என்று இருக்கிற சமயத்தில், இதுமாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் தவறே இல்லை என்று நினைப்பதால் இதை இங்கேயும் பகிர்கிறேன்.

    

ஜமாத் அல் தப்லிக் ..இந்த பெயரே ..இந்திய பொதுமக்களுக்கு மிகவும் புதிதான ஒன்று.

ஜமாத் அல் தப்லிக் என்பது பழமைவாத இஸ்லாத்தையும், தூய்மைவாத இஸ்லாத்தையும் பேசுகிற , பயிற்றுவிக்கிற / கற்றுக் கொடுக்கிற ஒரு கல்ட் இயக்கம். சுருக்கமாக சொல்வதானால்.. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட 7 ஆ ம் நூற்றாண்டு பழமைவாத ஆதி இஸ்லாம் !

இதன்படி.. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தோற்றுவித்தவர்கள் மத ரீதியாக கற்றுக் கொடுத்தவற்றை மட்டுமே பின்பற்றவேண்டும். அணியும் உடை கூட .. கணுக்கால் வரையிலான கால்சட்டை, முட்டி வரையிலான மேல் சட்டை, நீண்ட தாடிதோலினால் ஆன செருப்பு, என்று 7ஆம் நூற்றாண்டில் அவர்கள் அணிந்திருந்த உடை பாணியை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்த பழமை + தூய்மைவாதத்தின் சட்டதிட்டபடி ..இதில்..பெண்களுக்கு இடம் கிடையாது.

அரசியல், சமூக பிரச்சினைகள், பொது பிரச்சினைகள் என்று எதிலும் ஈடுபடுத்திக் கொள்வதோ, கருத்து தெரிவிப்பதோ கூடாது. என்பது இந்த இஸ்லாமிய அமைப்பின் நடைமுறை. அமைப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை கூட தவிர்க்க வேண்டும் என்று சில நேரங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மதக் கடமையை மட்டுமே செய்ய வேண்டும். மக்களை ...குறிப்பாக இளைஞர்களை இஸ்லாத்தின் பக்கம் வரவழைப்பதும், பழமைவாத இஸ்லாத்தை பரப்பவுதும் தான் தலையாய கடமை & நோக்கம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான ஒன்றுபட்ட இஸ்லாமிய மக்கள் என்கிற கருத்துருவாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பழமைவாத இஸ்லாமிய அமைப்பு உருவான இடம்... இந்தியா ! இந்தியாவின் Mewat-ல் முகமது இலியாஸ் என்பவரால் 1927-ல் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நிகழ்வுக்கு பிறகு...மேற்குலக நாடுகள் & ஆசிய நாடுகளில் இருந்த இஸ்லாமிய பயங்கரவாத அச்சத்தினை பயன்படுத்திக் கொண்டு .....தங்கள் ஜமாத் அல் தப்லிக் அமைப்பு அரசியலில் இருந்து விலகி இருந்து அமைதியை மட்டுமே போதிப்பதாக சொல்லிக் கொண்டு ..எளிதாக காலூன்றியது...

இன்று ..இந்த ஜமாத் அல் தப்லிக்-கு ..உலக முழுவதும் கிளைகள் உண்டு. கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் உண்டு. கிர்கிஸ்தான் நாட்டின் அரசமைப்பு சட்டம் இந்த பழமைவாத இஸ்லாத்தை மட்டும் அங்கீகரித்திருக்கிறது !

இந்த ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள்..உலகம் முழுவதும் ..மத பிரச்சாரகர்களாக... தங்கு தடையின்றி வருடம் முழுவதும் சென்று வருகிறார்கள். 3 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையில் தங்கி இருந்து ..பழமைவாத இஸ்லாத்தை போதிக்கிறார்கள். இவ்வாறு வருபவர்கள்...அந்தந்த இடத்தில் உள்ள தப்லீகிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு நாடுமுழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுப்படுத்துகிறார்கள்.

ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள். அமைப்பையோ.. தங்களையோ வெளிகாட்டிக் கொள்வதில்லை . பொதுவெளியில் அது குறித்து பேசுவதும் இல்லை. பொது சமூக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருக்கிறார்கள். இதனால் பொதுவெளி கவனம் தவிர்க்கப்படுகிறது. இவர்களுக்கென்று ஒவ்வொரு ஊரிலும் மதரஸாக்களை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஆங்காங்கே இருக்கும் மதரஸாக்களை தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

''நேரடியாக''.. ஜமாத் அல் தப்லிக் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு இல்லை. ஆனால்...இவர்களின் இந்த சமூக விலகலோடு கூடிய மறைவான கட்டமைப்பு .. பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் பிடிக்கும் இடமாக மாற்றி இருக்கிறது என்று உலகநாடுகள் அஞ்சுகின்றன.காரணம்...

1990-...2000 களில்..அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த நடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் ...பாகிஸ்தானில் உள்ள ஜமாத் அல் தப்லிக் கூட்டத்திற்கு சென்று வந்ததாக அதன் விசாரணைகள் வெளிப்படுத்தியது.

இதனை தவிர...ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பேசுகிற அதே சமரசமற்ற பழமைவாத தூய்மைவாத இஸ்லாத்தை தான்..அரசியலற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஜமாத் அல் தப்லிக்-ம் பேசுகிறது. அதனாலேயே...பல பயங்கரவாத அமைப்புகளுக்கும் .. ஆள் பிடிக்கும் இடமாக .. ஜமாத் அல் தப்லிக் -ன் கூட்டங்கள் இருக்கின்றன...என்று அஞ்சுகின்றன உலக நாடுகள்.

இன்று  வைரஸ் தொற்று ...டெல்லியில் இயங்கி வந்த ஜமாத் அல் தப்லிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

#Jamaat_Al_Tabligh #DelhiNizamuddin  என்று பானு கோம்ஸ் எழுதியிருப்பதோடு தரவுகளாக சில இணைப்புக்களையும் கொடுத்திருக்கிறார்   


இரண்டாவது தரவு    2003 ஜூலையில் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி  இவை இரண்டும் பயங்கரவாதத்தொடர்பை வெளிக்கொணர்ந்தவை.
 

நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் விடிகாலை 2 மணிக்கு வந்து சொல்லவேண்டிய விதத்தில் சொன்னபிறகுதான் அவர்களுக்குப் புரிந்ததாம்! பெருமைப்பட்டுக் கொள்கிற விஷயமா? 

மீண்டும் சந்திப்போம்

Tuesday, March 3, 2020

#572 வெறும் அக்கப்போர்களால் ஆனது தானா அரசியல்?

இந்திய அரசியலோ தமிழக அரசியலோ எதுவானாலும்  வெறும் அக்கப்போர்களிலேயே நடத்தி முடித்துவிடுவது தானென்பதை நேற்றைய சேனல்விவாதங்களிலிருந்து  மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. நம்மூரில் டிவி சேனல்கள் எதுவும் ஜனங்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிப்பவை அல்ல! அரசியல் எஜமானர்களுக்காக அல்லது காசுக்குக் கூவுகிறவை என்பதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு பாருங்கள்!


ஆதன் தமிழ் சேனலின் மாதேஷ் கேணத்தனமான கேள்விகளிலேயே நேர்காணலை ஓட்டுவதைக் கூட சகித்துக் கொள்ளலாம்!  அதற்காக ரவீந்திரன் துரைசாமியை தமிழகத்தின் பிரசாந்த் கிஷோர் என்று சொன்ன ஒரு நேர்காணலை இன்னமும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இதிலும் கூட ஏகத்துக்கும் பில்டப். ரஜனிகாந்த் இசுடாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவில்லையே என்று ஆரம்பிக்கிறார்கள். சொல்லாவிட்டால்தான் என்ன? வீடியோ 29 நிமிடம்.

      
ராஜனிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்தது மார்ச் முதல் தேதி நடப்பு நேற்றும் கூட அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது தந்திடிவியின் ஆயுத நிகழ்ச்சியில் அரசியல்கட்சிகளைச் சார்ந்த எவரும் பங்குகொள்ளாமல் இருந்ததிலிருந்தே வெளிப் பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். அசோக வர்ஷினி பாவம்! இந்த 42 நிமிட விவாதத்தில் கேள்விகளை சரியாகப் போட்டு பதில் வாங்கத் தெரியாமல் தவிப்பது தமாஷாக இருக்கிறது. சேனல் முதலாளிக்கு, ஏதோ நாங்களும் இதைப்பற்றி பேசிப்  பொழுதைக் கடத்தி விட்டோம் என்று திருப்தி ஏற்பட்டிருக்கும். அவ்வளவு தான்!

   
WIN News சேனலில் மதன் ரவிச்சந்திரனுக்கு மற்ற சேனல்கள் எதுவும் விவாதிக்கத் துணியாத வேறு ஒரு விஷயம் விவாதத்துக்குக் கிடைத்திருப்பதில் சக்கை போடு போடுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்! இந்த 48 நிமிட விவாதத்தில், தகுதியான கேண்டிடேட் இருந்தும் கூட  ஒரு இஸ்லாமியருக்கு திமுக ராஜ்ய சபா சீட் கொடுக்காமல் விட்டுவிட்டதே என்று நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருக்கும் விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிற துணிச்சல்! அந்தத் துணிச்சலுக்காகவே மதனைப் பாராட்டியாக வேண்டும்!  விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் அதிக அறிமுகம் இல்லாதவர்கள்.  துளசிராமன் என்பவர் இஸ்லாமிய மதகுருமார்கள் ரஜனிகாந்தை சந்தித்ததற்கு, வட்டிக்குப் பணம் வாங்கப் போயிருப்பார்கள் என்று சர்வசாதாரணமாக காரணம் சொல்லி நக்கலடிக்கிறார். ஆனால் இங்கே சரியான கேள்விகளோடு மதன் ரவிச்சந்திரன் விவாதத்தை நடத்தியிருக்கிறார் என்றே உரக்கச் சொல்லுவேன்!

மீண்டும் சந்திப்போம்.            

Saturday, November 30, 2019

உள்ளூர் அக்கப்போர்களின் சிறப்புத் தொகுப்பு!

ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தி.மு.கழகம் செய்து வந்த பிரசார பாணியிலேயே அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பதென்று கச்சை கட்டிக்கொண்டு களம் இறங்கிவிட்டமாதிரியே இங்கே தெரிவது இருவர்! ஒன்று கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் மாரிதாஸ். அடுத்தது காவேரி நியூஸ் சேனலிலிருந்து திராவிடங்களால் துரத்தப்பட்டு இப்போது WIN News சேனலில் பணியாற்றி வரும் மதன்  ரவிச்சந்திரன்! எத்தனை நாட்கள் தனிமனிதர்களாகத் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கவலையும் கேள்வியும் எனக்கிருந்ததுண்டு. ஆனால் இருவரும் வெகுஜன ஆதரவுடன் இன்னும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பது ஊடகத்துறையில் பார்த்துவரும் அதிசயம்! வீடியோ 43 நிமிடம்

    
வத்திக்குச்சி பற்றிக்கொள்கிற மாதிரித் தலைப்பு வைக்கத் தெரிந்தவருக்கு, அதற்கேற்ற மாதிரி பங்கு கொள்கிறவர்கள் வேண்டாமா?  கிஷோர் கே சுவாமி ஒருவரைத் தவிர  எவரும் கிடைக்கவில்லை என்பது மைனசாகத் தெரிந்தாலும்,  தொய்வில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திவருவது பெரிய ப்ளஸ்! 

 

உபிக்கள், ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் இமேஜ் எல்லாம் சின்னதாக ஒரு ஊசிக்கு குத்துக்கே தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்பதைப்  பார்க்கவே பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் கர்மா விடாமல் துரத்துகிறதே! 

                                                        


இந்துக்களை மட்டும் அவமானம் செய்து அதன் மூலம் மதம்மாற்றும் இயக்கங்களை மகிழ்ச்சி அடைய செய்து, அந்த மக்களின் வாக்குக்கு வெக்கம் இல்லாமல் நாக்கை தொங்க போட்டு திரியும் கேடுகெட்ட இயக்கம் திமுக மதசார்பின்மை பேச எந்த தகுதியும் கிடையாது.
சமீபத்தில் ஆ ராசா பேச்சியதற்கு என்பக்க எதிர்வினை இந்த பதிவு.
இந்துகளின் ஒற்றுமையின்மையே பெரும் கேடு. ஒன்றிணைந்து ஒழித்துகட்டப் படவேண்டிய முதல் கும்பல் திமுக தான். - மாரிதாஸ் 
ஏசு பிறப்பிற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை - போப் ஃபிரான்ஸிஸ்.
ஏசு பிறப்பிற்கு ஆதாரம் இருக்கிறது - ஆண்டிமுத்து ராசா.
சொந்தமாக உளறி மாட்டிக்கொள்வது போக , கூடவே இருப்பவர்கள் உளறலும் கூட இசுடாலின் தலையிலேயே விடிகிறதாம்! மாரிதாஸ் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்! வீடியோ 15 நிமிடம்.



இது சீமான் கட்சிக்காரர் துரைமுருகன்  (சே)சாட்டை சேனல் லந்து வீடியோ 6 நிமிடம்தான்!
                                                         
மும்பை அரசியலையே பேசிக்கொண்டிருப்பதாக பதிவைப் படிக்க வராமலேயே இருக்கும் நண்பர்களுக்கு உள்ளூர் அக்கப்போர்களின் சிறப்புத் தொகுப்பு! மகிழ்ச்சிதானே! 

மீண்டும் சந்திப்போம்.       

Tuesday, November 19, 2019

அக்கப்போர்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!

அதென்னவோ தமிழகத்தில் திராவிடங்கள் கழகங்களாய் அரசியலில் வளர்ந்த பிறகு வெட்டி அக்கப்போர்களிலேயே தமிழ்நாட்டு அரசியலும் இலக்கிய சர்ச்சைகளும் மூழ்கிக் குப்பை அள்ளுவதாகவே ஆகிப்போய் விட்டது என்று சொன்னால் நண்பர்கள் உண்மையைக் காணக் கூசி முகம் சுளிக்கிறார்கள்!


பெயரென்னவோ இந்துசமய அறநிலையத்துறைதான்! ஆனால், அறவுணர்வோ அறிவோ இல்லாதவர்கள் கைகளில் போகுமானால் என்ன நடக்கும்? கொஞ்சம் ரங்கராஜன் நரசிம்மன் சொல்வதைக் கேட்டுத்தான் பாருங்களேன்! வீடியோ 27 நிமிடம் ஸ்ரீரங்கம் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை மோசடிகள் குறித்து இன்னொரு வீடியோ இங்கே 32 நிமிடம்   


சிறீலங்கா தேர்தல் முடிவுகள் அங்குள்ள தமிழர்களுக்கு  சாதகமா? பாதகமா? இதை     இங்கே விவாதிப்பதில் இங்குள்ள தமிழர்களுக்கு என்ன உபயோகம்? இங்கே ஈழத்தமிழ் ஆதரவு வியாபாரம் செய்பவர்களுக்கு பாதிப்பு இருக்கலாம்! அவர்களும் கூடக் கூவி முடித்து விட்டார்களே!


அடுத்தவர்கள் மீது நரகலை வீசுவதில் வல்லவர்கள் கழக உடன்பிறப்புக்கள் என்பது தெரிந்த கதைதான்! ஆனால் சேறு வீசுவது அவர்கள் தலீவர்  பக்கமே சமீப காலமாகத் திரும்பி அடிப்பது  இசுடாலின் வகையறாவுக்கு சங்கடத்தை தோற்றுவித்திருக்கிறது. ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம்! சமூக வலைத்தளங்களில் கிழிகிழியென்று கிழிக்கப் படுவதை நிறுத்திவிட முடியுமா? 
முத்தமிழ்னு சொல்லியே விக்கிற சாமர்த்தியம் 
இருந்த கலீஞனின் மகனா இப்படி? 


வருகிற தைப் பொங்கலோடு 50வது ஆண்டில் துக்ளக். அதையொட்டி வருகிற ஞாயிறு திருச்சியில் ஒரு சிறப்புக் கூட்டம். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளலாமே!

மீண்டும் சந்திப்போம்.    
      

Monday, November 11, 2019

திருவள்ளுவர் சர்ச்சையும் தமிழ் சாக்கடைகளும்!

நக்கீரன் தளச் செய்தி, வீடியோக்களையோ, அதுபோல சிலரது  பேச்சையோ ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டு பகிர்வதில்லை என்பதை ஒரு பாலிசியாகவே சில ஆண்டுகளாக வைத்திருப்பதை, கொஞ்சம் யோசனையுடன் இந்த ஒரு வீடியோவுக்காகத் தளர்த்திக் கொள்ள வேண்டிய நிலை வந்திருப்பதற்காக நிஜமாகவே வருந்துகிறேன்.


நெல்லை கண்ணன். தமிழ்க்கடல் என்று அவருடைய அபிமானிகளால் கொண்டாடப்பட்டவர். தமிழகத்தில் அறிஞர், கலைஞர், பேராசிரியர் என்ற அடைமொழிகள் எல்லாம் தகுதியில்லாதவர்களுக்குச் சுமத்தப்பட்டு அர்த்தமிழந்து போன மாதிரியே சாக்கடைக்குப்போய் கடல் என்று அடைமொழி கொடுத்ததும் ஆகிவிட்டதோ? 
வீடியோ 22 நிமிடம். ஆனால் சொத்தைக்கடலையைக் கடித்த மாதிரியாகிப்போன அனுபவம் நீளுவது இன்னும் அதிக நேரம். கண்டனக்குரல்கள் எழுவதும் இயற்கைதானே! 

மதிப்பிற்குரிய திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு,
திரு.நெல்லை கண்ணன் என்கிறவர் தம்முடைய பேச்சில் நம் பாரத பிரதமர் முதல் பலரை மிக கீழ்த்தரமாக பேசுவதுடன் ஒரு குறிப்பிட்ட சாதியை வன்மத்துடன் பேசுகிறார். மாநில அரசின் அமைச்சரை நாய் என்றெல்லாம் ஏக வசனத்தில் குறிப்பிடுகிறார். இவர் உங்கள் நண்பர் என கேள்விப்படுகிறேன். இவர் மீதான நீதி நடவடிக்கைகளுக்கு எதிராக தங்கள் செல்வாக்கை எவ்விதத்திலும் பயன்படுத்த மாட்டீர்கள் என்றும், நட்பு, இனப்பற்று ஆகியவற்றுக்கு மேலாக அடிப்படை மனிதப்பண்பாடு முக்கியம் என கருதும் பண்பு கொண்டவர் நீங்கள் என நம்புகிறேன். ஏற்கனவே தரம் கெட்டு கீழே விழுந்து வரும் தமிழ்நாட்டின் பொதுப்பேச்சு பண்பாட்டில் வழிகாட்ட வேண்டியவர்கள் ஆபாச பேச்சுகள் மூலம் பொதுப்பண்பாட்டை சீர்குலைப்பவர்களுக்கு எவ்விதத்திலும் துணை போக மாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்ட வழிகாட்டியாக இருப்பீர்கள் என கருதுகிறேன். Muthaiah Marudhavaanan
அரவிந்தன் நீலகண்டன் மிகநாகரிகமாக  தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நெல்லை மண்ணின் வாசனையோடு வட்டார வழக்கில் பேசுவதாலேயே..அதன் பின் ஒளிந்து கொண்டு..நாய், பேய், என்றெல்லாம் பேசலாம் என்பது...தான் கற்று அறிந்த அறிவையும் , நெல்லை பண்பையும் அரசியலுக்காக விற்றதற்கு சமம்.
வட்டாரமொழியில் பேசுகிறேன் என்று.. ''ஏல சவத்த மூதி.. ஒரு பேட்டி கொடுல'' ...என்று யாராவது கேட்டால் சரியாகுமா ? 
எதிர்கருத்துக்களாக இருந்தாலும்..பொதுவெளி பேட்டிகளுக்கு என்று ஒரு நாகரீகம் இருக்கிறது.
பேட்டியிலும்...ஏகப்பட்ட முன்பின் முரண்கள் .
கருத்துகள்
  • A Senthil Kumar காசுக்கு விலை போய் விட்டார் என்று தெரிகிறது.... கட்சி மாறுவது போல சித்தாந்தம் மாறுதலை யும் தொடங்கி வைக்கிறார் போல


WIN TV News சேனலுக்குப் போன பிறகும் கூட   மதன் ரவிச்சந்திரனுக்கு திராவிடங்களிடமிருந்து  மிரட்டல் வந்துகொண்டே இருப்பதைக் குறித்து ஒரு 3 நிமிட video
தனித்தவர்கள் மீதான திமுக அராஜகம்
கடந்த ஐந்து வருடங்களில் social mediaவில் ஒரு தீவிர பாஸிஸபோக்கைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும் dpயில் திராவிடத் தலைவர்களின் படங்களை வைத்துக்கொண்டிருப்பவர்கள்; திமுகவிற்கு எதிராக ஏதாவது கேள்வியை முன்வைத்தாலோ பகுத்தறிவு சார்ந்து எதிர்க்கருத்துகள் எழுதினாலோ கும்பலாகத் திரண்டு நம்முடைய comment boxஇல் மிரட்டல்களில் ஈடுபடுவதும் கேவலமான வார்த்தைகள் பேசுவதும் வழக்கமான ஒன்று. தொடக்க காலத்திலிருந்தே எல்லா நேரத்திலும் இந்த நான்காம்தர ரௌடியினருக்கு எதிர்நிலையில் நின்று ஏகப்பட்ட வசைகளும் மிரட்டல்களும் பெற்றிருக்கிறேன்.
இன்றைக்கு இதே நான்காம்தர கும்பல் நெறியாளர் மதனுக்கு தொலைபேசி வாயிலாகவும் பற்பல fake idக்களில் வந்தும் கொலைமிரட்டல் விடுப்பதையும் வன்மத்துடன் memes அனுப்புவதும் குடும்பத்தைக் கேவலமாகத் திட்டுவதையும் கடந்து அவரது twitterஇல் accountஐ முடக்கியுள்ளனர். இதில் பெரிய தமிழ்ச் செய்தி ஊடகங்களென அறியப்படும் திமுக சார்பு ஊடகங்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது. ஒருவர் ஒரு கொள்கைக்கு எதிராக கேள்வியை முன்வைத்தால் அவரது உடமை, உயிர் என்று அனைத்திற்கும் அச்சுறுத்தல் விடுப்பதும் மனவுளைச்சல் ஏற்படுத்த முயல்வதும் அவரைச் சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக மிரட்டுவதும்தான் சமூகநீதியா? இவ்வளவு மிரட்டல்கள் விடுப்பதற்கும் எல்லா பக்கமும் ஊம்..... என்று கமெண்ட்டில் வாய் வைப்பதற்கும் பதிலாகத் தூக்கிக் காட்டிய அந்த ஆவணத்தில் பக்கங்களை வெளியிடலாம்தானே?
மற்றொரு விஷயம் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தி விடக்கூடாது என இல்லீகல் இணைய அணி என்கிற பெயரில் fake idக்களாகச் சேர்ந்து இந்த நற்செயலை செய்கின்றனர். உண்மையாகவே ஸ்டாலின் நல்ல ஆளுமை கொண்ட தலைவராக இருப்பின் இந்த கும்பலை அழைத்துக் கண்டித்து அவரே தன்குறித்த ஆவணத்தை வெளியிட வேண்டும். மேலும் வழக்கமான பேக்கேஜ் வாங்குகின்ற ஊடகங்கள் வாங்கும் பேக்கேஜ்களுக்கு மட்டும் உழைத்தல் நலம். மற்றவர்களை அவர்களது பணியை செய்வதற்கு வழிவிட வேண்டும். மதன் திமுக சார்பு ஊடகவியலாளர்களைப் போல எதிர்தரப்பை வசைபாடியும் கேலிசெய்தும் இழிவுபடுத்தியும் நேர்காணல்கள் செய்ததில்லை. அவர் மக்களுக்காக மக்களின் கேள்விகளையும் சந்தேகங்களையும் மட்டும் முன்வைப்பவர். மதனுக்கு இத்தகைய மிரட்டல்கள் வருவதற்கு முன்பே என்னிடம் தனிப்பட்டமுறையிலும் தொலைபேசியிலும் நீங்கள் மதனுக்கு support செய்யாதீர்கள், இதன்மூலம் பெரும் ஆபத்துகளை சந்திக்க நேரும் என்று மென்மையான(?!) மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. நான் இத்தகைய கூச்சல்களை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. ஆனால் மதனை இந்த கும்பலிடமிருந்து பாதுகாப்பது காலத்தின் அறம். அராஜகங்கள் எல்லா காலத்திலும் உதவாது. அத்துடன் வாக்கிங் சென்ற காலமெல்லாம் இறந்தகாலம் என்பதை உடன்பிறப்புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த முகநூல் பகிர்வுக்கு வந்த பல பின்னூட்டங்கள் நாராசம், ஆபாசத்தின் உச்சம்.
    
இவைகளைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் போகிற  ஜனங்களாக இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கப் போகிறோம்? #கருத்துசுதந்திரம் சாக்கடை நெல்லை கண்ணன்களுக்கும் திராவிடங்களுக்கும் மட்டும் தானா? அப்படியெல்லாம் இல்லை என்பதை எப்போது உரக்கச் சொல்லப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம். 
       

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)