Showing posts with label சிறுபான்மை அரசியல். Show all posts
Showing posts with label சிறுபான்மை அரசியல். Show all posts

Tuesday, June 4, 2019

எது பொருட்படுத்தப்பட வேண்டியதோ அதைக் கவனிப்போமே!

முந்தைய பதிவில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக ஒரு கோடி காட்டியிருந்தேன். Delimitation என்றால் என்ன? அதனால் என்ன பயன் விளைந்து விடும்? கொஞ்சம் புரிந்து கொள்வோமே! தொகுதி வரையறை என்பது ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஜனத்தொகை அடிப்படையில் மறுசீரமைப்புச் செய்யப் பட வேண்டியது. காஷ்மீரில் அதைச் செய்யத் தவறியதால் ஜனத்தொகை அதிகமுள்ள பகுதிகளுக்கு குறைந்த தொகுதிகளும் குறைந்த அளவு ஜனத்தொகைக்கு அதிகத்தொகுதிகளும் என்பதான கபடம் செயற்கையாக அரங்கேற்றப் பட்டதை, சரிசெய்கிற முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும்.   
  
  
அமித்ஷாவின் அதிரடி ஆரம்பம்-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரையறுக்கப் பட்ட சட்டமன்ற தொகுதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் பரப்பளவு அடிப்படையிலும் வாக்காளர்கள் அடிப்படையில் காஷ்மீர் ரீஜனை விட பெரியதாக இருக்கும் ஜம்மு ரீஜனுக்கு அதிக சட்டமன்ற தொகுதிகளும் லோக்சபா தொகுதிகளையும் அளிக்கப்பட இருக்கிறது.
ஜம்மு ரீஜனின் பரப்பளவு 26,293 km2 இங்கு உள்ள சட்டமன்ற தொகுதிகள் 37 லோக்சபா
தொகுதிகள் 2 மட்டுமே. ஆனால்15,948 km2 பரப்பளவு கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு 46 சட்டமன்ற தொகுதிகள் 3 லோக்சபா தொகுதிகள் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே பெரிய பகுதியான லடாக் ரீஜனில் ஒரு லோக்சபா தொகுதியும் 4 சட்டமன்ற தொகுதிகளும் இருக்கின்றன.லடாக் 59,196 km2 பரப்பளவை கொண்டு இருந்தாலும் மக்கள் தொகை 4 லட்சத்தை தாண்டாது.
இதனால் ஜம்மு ரீஜனில் மட்டும்சட்டமன்ற மற்றும் லோக்சபா தொகுதிகளை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படை யில் இன்னும் 15 சட்டமன்ற தொகுதிகளும் இரண்டு லோக்சபா தொகுதிகளும் ஜம்மு ரீஜனில் அதி கரிக்க ப்பட்ட வாய்ப்புகள் இருக்கிறது. இத னால் ஜம்மு ரீஜனில் மட்டும் 52 சட்டமன்ற தொகுதிகளாக உயர்ந்து விடும்.
அதே மாதிரி காஷ்மீர் ரீஜனில் 15 சட்டமன்ற தொகுதிகளை குறைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்படி 15 சட்டமன்ற தொகுதிகள் காஷ்மீர் ரீஜனில் குறைக்கப் பட்டால் அங்குள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 46 ல் இருந்து 31 ஆக குறைந்து விடும். இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் உரிமையை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி இழந்து விடும்.
அப்படி ஜம்மு ரீஜனில் சட்டமன்ற தொகுதிகள் அதிகரிக்கப்படும் பொழுது ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 87 ல் மெஜாரிட்டிக்கு தேவையான 44சட்டமன்ற எம்எல்ஏ க்களை ஜம்மு லடாக் பகுதிகளில் இருந்து பெறுகிற கட்சி ஜம்மு காஷ்மீர் மாநில த்தில் ஆட்சி அமைக்க முடியும்.
— Guru Krishna உடன்.

A note regarding the legal position as it applies to the freeze on delimitation as it applies to J&K. It’s important to note that this freeze was only brought to bring the state at par with the rest of the country. This is made clear by the note below. I hope some of the TV channels & experts appraise themselves of these facts என்று 2001 இல் தங்கள் கட்சி அரசு கொண்டுவந்த திருத்தத்தை நியாயப்படுத்துகிறார் ஒமர் அப்துல்லா  ட்வீட்டரில் இப்படி சவால் வேறு! 
ரிபப்லிக் டிவியில் இதைக்குறித்து காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஷேக் அப்துல்லா வாரிசுகளும் முஃப்தி முகமது சயீது வாரிசுகளுமே மாறிமாறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆளவேண்டுமென்கிற நிலைமை மாறுவதை இரு தரப்புமே எதிர்க்காமல் வேறென்ன செய்வார்கள்?

மீண்டும் சந்திப்போம்.
















·













Friday, April 12, 2019

எங்கள் தேசம் இந்தியா! எங்கள் நேசம் இந்தியா!

திருச்சியில் இந்து விரோத காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்க வேண்டாம்னு பிரச்சாரம் செய்த சென்னையை சேர்ந்த இந்த அம்மாவை கைது பண்ணிருக்காங்க. பிரச்சாரம் செய்ய எல்லாருக்கும் உரிமை உண்டு. வளர்மதி நந்தினி எல்லாம் விஷம பிரச்சாரம் செய்து விட்டு வெளியே சந்தோஷமா உலவுறாங்க. திருச்சி மக்கள் கவனிக்க என்று முகநூலில் குமுறியிருக்கிறார் Anish R 


கரைவேட்டிக்கு முன்னால் குனிவதைத் தன் ஜீன்களில் வைத்துள்ள போலீசார் அவரைப் பொது அமைதிக்குத் தீங்கு விளைவிப்பது, தகாத வார்த்தைகளில் திட்டுவது போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.



இந்து மக்களுக்கெதிராக எவர் வேண்டுமானாலும் இழிவாகப் பேசிவிட்டுப் போய்விடலாம் என்கிற நிலைமை மாறிவருவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை! அமைதியாக இருந்த மக்களைத் தூண்டி விடுகிற போலி மதச்சார்பின்மை முற்போக்கு கூட்டணி புண்ணாக்குகளுக்கு இதெல்லாம் வெறும் மதவாதமாக மட்டும் தான் தெரியும் என்றால் காலம் சரியான பாடத்தை அவர்களுக்குப் படிப்பிக்கும். 



  

இன்னும் எத்தனைகாலம்தான் இவர்கள் இப்படிப் பேசிப்பேசியே ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்? இந்து மக்களும் சகித்துக் கொண்டே இருப்பார்கள்? இந்து மக்கள் எழுச்சி ஆரம்பித்து விட்டது.


Kannan Ramasamy Ji :
இங்கு கலவரத்துக்கும் பெரும் சிக்கலுக்கும் காரணம் ஒருவராக இருப்பர் ஆனால் அதன் பழி இன்னொருவர் மேல் விழும். 
இதோ பாருங்கள் நயினார் நாகேந்திரன் மேல் கொலை முயற்சி நடந்திருக்கின்றது
ஆனால் அதை எல்லாம் எல்லா பத்திரிகையும் அமுக்கியது அரசும் எதிர்கட்சியும் அமுக்கியது  ஏனென்றால் சிறுபான்மை வாக்கு சிதைந்துவிடுமாம். இரு நாட்களாக வந்த செய்திகள் அவர்மேல் தாக்குதல் நடந்ததை சொல்லிகொண்டே இருந்தன, இருமுறை நடந்தது. தாக்குதலின் பிண்ணணியில் சில இஸ்லாமிய இயக்கம், அமமமுக அவர்கள் பின்னணியில் திமுக என கரங்கள் நீண்டன‌
இந்நிலையில்தான் கொலை முயற்சி நடந்திருக்கின்றது?
ஒரு வேட்பாளரின் உயிருக்கு பாதுகாப்பில்லை எனும் அளவில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கின்றது, இது நாடா இல்லை கொலைகாரர் வாழும் காடா? நாகேந்திரனுக்கும் அங்கு உள்ளோருக்கும் என்ன சொந்த பகையா? நிச்சயம் இல்லை
மாறாக பாஜக வேட்பாளரை அடிப்போம் என அடித்திருக்கின்றார்கள் அயோக்கியர்கள்.ஏன் பாஜக மேல் அவ்வளவு வெறுப்பு? விசாரித்தால் தகிக்க வைக்கும் விஷயங்கள் வருகின்றன‌
ராமநாதபுரம் கடற்கரை புனிதமான விவேகானந்தர் பெயரை தாங்கி நின்றதெல்லாம் அக்காலம் என்று சேதுபதி மன்னனின் ஆட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கிற்றோ அன்றிலிருந்து அது கடத்தல் கடற்கரை
அவர்களை யாரும் தொடவும் முடியாது, தொட்டுவிட்டு இருக்கவும் முடியாது.இலங்கை கடற்படை தமிழக மீணவர்களை இம்சிப்பதில் 90% இதுதான்
நாட்டுக்கு மிக ஆபத்தான இடமாக இது 1960களிலே மாறிற்று
நிலமை எல்லை மீறி சென்றது , அவர்களை தொட்டால் சிறுபான்மை என கொந்தளித்தார்கள் , நிரம்ப யோசித்த இந்தியா கச்சதீவினை இலங்கைக்கே கொடுத்து நிலமையினை இலங்கை பக்கம் தள்ளியது
அப்பாவி மீணவர் நடுவே கடத்தலரும் தேசவிரோதிகளும் நடமாட துப்பாக்கி சூட்டில் ஏகபட்ட பலி, இடையில் புலிகள் புகுந்தது வேறுகதை. அதாவது அந்த கடற்பகுதியினை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தது சில சக்திகள் முழுக்க தேசவிரோத சக்திகள்
மோடி அரசு வந்தபின் அங்கு கடும் கவனம், பாதுகாப்புகள் இறுக்கபடுகின்றன, தனுஷ்கோடி சீரமைக்கபடுகின்றது இப்பொழுதெல்லாம் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கண்கள் பதிந்துவிட்ட பகுதி அது
அந்த இடத்தில் பாஜக எம்பி வந்துவிட்டால் என்னாகும்?
அதனால்தான் கொல்ல துணிந்திருக்கின்றார்கள் , நாகேந்திரன் செய்த புண்ணியம் அவரை காப்பாற்றியிருக்கிறது ஏன் கொல்ல வேண்டும்?
மற்ற கட்சிகளை போல அல்ல பாஜக அதன் தன்மை வேறு, பாஜக எம்பி வரும் பட்சத்தில் அவர்கள் அஸ்திவாரமே ஆடிவிடும்.இதனால்தான் பெரும் மிரட்டலை உலகிற்கு சொல்லும் விதமாக அவரை கொல்ல முயன்றிருக்கின்றார்கள், இன்னொரு வேட்பாளர் அப்பக்கம் வரநினைக்க கூடாது என்ற அளவில் அவர்கள் திட்டம் இருந்திருக்கின்றது
இதில் உள்ளூர் சில்லுண்டிகள் மட்டுமல்ல ஒழுங்காக விசாரித்தால் சர்வதேச பாதாள கும்பல்கள் வரை தொடர்பு நீளும் என்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, தெய்வம் காத்திருக்கின்றது ஆன்மீக மண் என்பது அதுதான்.நடந்த சம்பவம் மிக கொடுமையானது, தேசமே திகைக்கின்றது
மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது, தேர்தல் கமிஷன் திகைக்கின்றது, துணை ராணுவம் இனி வரலாம்
எனினும் உரிய விசாரணை நடத்தி இந்த தேசவிரோத கும்பலை ஒடுக்கி தண்டனை வழங்க வேண்டியது அரசின் கடமை.மத்திய அரசு அதை செய்யட்டும்
கட்சி மேல் ஆயிரம் விமர்சனம் இருக்கலாம் அதற்காக பாஜக வேட்பாளரை கொல்வோம் என்பது எப்படி நியாயம்?
ராம்நாதபுரம் என்ன பாகிஸ்தானிலா இருக்கின்றது இல்லை அப்படி நினைத்து கொள்கின்றார்களா?
மிக பெரும் தேசவிரோத கும்பல் ஒன்று அடையாளம் ஒன்றை தன் ரத்தத்தை சிந்தி அடையாளம் காட்டியிருகின்றார் நாகேந்திரன்
நல்ல இந்தியன் அதைத்தான் செய்வான் அதை செய்திருகின்றார்.அந்த தேசவிரோதிகளுக்கு திமுக அமமுகவின் ஆதவும் இருக்கின்றது என்பது இன்னொரு செய்தி.நாகேந்திரனின் ஒவ்வொரு சொட்டு ரத்தததிற்கும் நல்ல இந்திய தேசிய உணர்வுள்ள மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள்
மற்றபடி எல்லா அயோக்கியர்களும் எப்படி ஒழிந்தார்களோ அப்படி இந்த படுபாதக செயலை செய்தவர்கள் நாசமாய் போவார்கள்.இவ்வளவுதான் அவர்களால் செய்யமுடியும், இதற்கு மேல் என்ன முடியும்?
நாகேந்திரன் மீது விழுந்த அடி, இங்கு இந்திய இறையாண்மையினை ஏற்றுகொள்ள மாட்டோம் இந்திய சட்டங்களுக்கு வணங்கமாட்டோம் என இந்திய தேசியத்தின் மீது விழுந்த அடி. இந்திரா மேலும் ராஜிவ் மேலும் விழுந்த அந்த அடி..இந்திய சட்டம் இங்கு செல்லாது இது தனிராஜ்யம் என சொல்லி அடித்த அடி
நடக்கும் கொடூரத்தை மக்கள் பார்த்துகொண்டே இருக்கின்றனர்.நல்ல தீர்ப்பை மக்கள் வழங்கட்டும்,, அயோக்கிய தேசவிரோத கும்பல் ஒழியட்டும் அந்த ஆன்மீகமண் தன் பெருமையினை மீட்டெடுக்கட்டும்
பசும்பொன் தேவரும், அப்துல் கலாமும் இன்னும் பலரையும் மிகசிறந்த தேசியவாதிகளாக உருவாக்கிய‌ பூமி அது
இன்னொரு தேசியவாதியினையும் அந்த பூமி கொடுக்கட்டும்

என்ன செய்யப் போகிறோம்? 


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)