2010 ஜூனில் அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் லட்லம், இன்னொரு எழுத்தாளரோடு சேர்ந்து எழுதிய The Hades Factor புதினத்தை அறிமுகப்படுத்துகிற மாதிரி என்று கூடச் சொல்லமுடியாது, முழுக்கதையையும் பதிவில் சொல்லியாயிற்று.
Obamadasan Chennai Cho Fans Club
திடீரென்று பன்னாட்டு ஊடகங்கள், நீதிமன்றங்கள் எல்லாம் கொரோனா விவகாரத்தில் ஒரே குரலில் மோடி மீது சேற்றை வாரி இரைப்பதன் பின்னணி?
கிட்டதட்ட ஒரு வருடம் முன்பே ஃபைசர், மாடர்னா ஆகிய இரு அமெரிக்க கம்பெனிகளும் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துவிட்டன.
ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்திய தயாரிப்பான கோவாக்ஸினும் இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலை கழக கண்டுபிடிப்பான இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டும் பரிசோதனைகள் முடியும் நிலைக்கு வந்தன.
பொதுவாக மருத்துவ துறையில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேடண்ட் செய்யப்பட்டு கொள்ளை லாபத்தில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே இந்தியா போன்ற நாடுகளுக்கு தயாரிக்கும் உரிமை வழங்கப்படும்.
அப்படி இருக்கும்போது சம காலத்தில் இந்தியா தயாரானதை மேற்கத்திய உலகம் ஏற்குமா?
இங்கிருக்கும் அவர்கள் கைக்கூலிகள் மூலம் இந்திய வாக்ஸின் எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய தொடங்கினார்கள்.
முதலில் மேற்கத்திய உலகிற்கே முன்னுரிமை கொடுக்க நினைத்த அமெரிக்க கம்பெனிகளுக்கு இடியாக இறங்கியது ஐரோப்பிய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் சிங்கிள் டோஸ் வாக்ஸின்.
அமெரிக்கா தொடங்கி அத்தனை வளர்ந்த நாடுகளும் இந்த புதிய வாக்ஸின் பக்கம் பார்வையை திருப்ப பல நாடுகளில் தன் ஆக்டோபஸ் கரங்களை பரப்பியிருந்த அமெரிக்க நிறுவனங்கள் அதிர்ந்தன.
132 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்திய நாட்டின் சந்தை அவர்கள் கண்களை உறுத்தியது.
ஒரு வாக்ஸின் ₹500/- என்று வைத்தாலும் இரண்டு டோஸ் மருந்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சத்தி முப்பத்திரெண்டு ஆயிரம் கோடி!
விடுவார்களா?
ஃபைசர் நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சனின் தயாரிப்பால் ஏற்பட்ட நெருக்கடியினால் பெரிய மனதுடன் இந்தியாவிற்கு தன் மருந்தை தர இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணுகியது.
பொதுவாகவே சுதேசி எண்ணம் கொண்ட மோடி அரசு இந்திய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் ஃபைசர் நிறுவனத்திற்கு சில நிபந்தனைகள் விதித்தது.
அவ்வளவுதான்! மோடி அரசு மீது தங்கள் முழு பலத்துடன் சேற்றை வாரி இறைக்கத் தொடங்கின இந்த பன்னாட்டு நிறுவனங்கள்.
இதற்கு ஒரு தெளிவான சான்று, இன்று வந்திருக்கும் லான்செட் என்கிற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டிருக்கும் கட்டுரை.
இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த கொடூர நிலைக்கு மோடி மட்டுமே காரணம் என்பதோடு நிறுத்தாமல் இந்தியா உடனடியாக வாக்ஸினை இறக்குமதி செய்து நிலமையை சீராக்க வேண்டும் என்றும் யோசனையை முன்வைக்கிறது.
மேற்கத்திய நாடுகள் சீனாவை கட்டுப்படுத்த மோடியை ஆதரித்ததும், மோடியின் பாய்ச்சலினால் தங்கள் பொருளாதாரத்திற்கே பாதகம் ஏற்படும் நிலையில் அதே மோடியை வீழ்த்த முனைவதும் மருந்து கம்பெனிகளின் lobbying சக்தியை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்காது.
சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றாலும் விஷயத்தின் ஆணிவேரை மிகவும் சரியாகவே பிடித்திருக்கிறார். கொஞ்சம் மசாலா சேர்த்துத்தான் செய்தியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பதிவின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கிற இணைப்பில் உள்ள கதைச்சுருக்கத்தை படிப்பதொன்றுதான் வழி!
உயிர்காக்கும் மருந்தைத் தயாரிப்பவர்கள் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்? கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக, போட்டியாளர்களை ஒழிப்பது முதல் படுகொலைகளைச் செய்வதிலும் கூட வல்லவர்கள் என்பது பொய்யல்ல! யாரோ ஒரு எழுத்தாளனின் கற்பனை, அல்லது எத்தனையோ கான்ஸ்பிரசி தியரி, அதில் இதுவும் ஒன்று என்று புறந்தள்ளிவிட்டுப்போவது உங்களுடைய சாய்ஸ்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குஜராத் சூரத் நகரில் Plague நோய் செயற்கையாகப் பரப்பப்பட்டதில் அமெரிக்கர்களுடைய கரங்கள் பின்னணியில் இருந்ததாகச் செய்தி வந்ததே, நினைவிருக்கிறதா?
மீண்டும் சந்திப்போம்.
//பொதுவாக மருத்துவ துறையில் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேடண்ட் செய்யப்பட்டு கொள்ளை லாபத்தில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னரே இந்தியா போன்ற நாடுகளுக்கு தயாரிக்கும் உரிமை வழங்கப்படும்//
ReplyDeleteஇதில் ஒரு சிறு திருத்தம் எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேடண்ட் செய்யப்பட்டு கொள்ளை லாபத்தில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னர்தான் அமெரிக்காவில் கூட அது lower-priced generic versions ஆக வரும்... ஆனால் அதே பேடண்ட் செய்யப்பட்ட மருந்துக்கள் மற்ற நாடுகளில் விற்கும் போது அந்த நாட்டை அடிப்படையாக கொண்டுதான் அந்த் பேட்ட்ண்ட் கால கட்டத்தில் விலையை நிர்ணயிப்பார்கள். அதி போலத்தான் ரஷ்யா நாடு தயாரித்த ஸ்புட்னிக் கோவிட் மெடிசன் இந்தியாவில் தயாரிக்க அனுமதி பெற்றவுடன் இந்திய நாட்டை கருத்தில் கொண்டு விலை நிர்ணயிக்க யோசிக்கிறோம் என்று சொல்லி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
அமெரிக்காவில் மருத்துவ கம்பெனிகளும் இன்சுரன்ஸ் கம்பெனிகளும் அமெரிக்க மக்களிடம் இருந்து லாப்பத்தை அள்ளும் நிலையில் மற்ற நாடுகளுக்கு மலிவு விலையில் கொடுக்க அவர்கள் பைத்தியக்கார்கள் இல்லை
// ஐரோப்பிய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் சிங்கிள் டோஸ் வாக்ஸின்.//
ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெணி அமெரிக்க கம்பெனி அது எங்கள் வீட்டின் அருகையில்தான் அதன் தலைமையகம் இருக்கிறது..
இந்த கருத்து வாதம் செய்ய பதியப்பட்டது அல்ல எனக்கு தெரிந்தி விஷயத்தை உங்களிடம் சொல்ல எழுதப்பட்டது.. அவ்வளவுதான்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை ஒழுங்காக வினியோகிக்க தெரியாதற்கும் அமெரிக்கதான் காரணம் என்று ஏன் இந்த பதிவை எழுதிய ஒரிஜனல் ஆள் சொல்லவில்லை என்பது எனக்கு ஆச்சிரியம் அளிக்கிறது
ReplyDeleteஇந்த பதிவை எழுதிய ஒரிஜனல் ஆள் இந்தியாவில் கொரோனா இவ்வளவு வேகமாக பரவுவதற்கு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மோடிக்கு கை கூலி கொடுத்து கும்பமேளவை நடத்த சொன்னது என்றுமட்டும் சொல்ல வில்லை ஒருவேளை அவர் பக்தால்ஸாக இருப்பாரோ என்னவோ இல்லையென்றால் அதையும் எழுதி இருப்பார்
ReplyDeleteஒருதலைப் பட்சமா விமர்சனம் பண்ணினா அதுல அர்த்தம் இருக்காது. தேர்தல் பரப்புரை, மக்கள் கூட்டம்தான் தென்னகத்து கொரோனா பரவலுக்குக் காரணம். நம்ம ஊர்ல சட்டத்தை மதிக்கறவங்க ஐந்து சதவிகிதம்கூடக் கிடையாது.
Deleteரமதான், கும்பமேளா போன்றவற்றை ஓரளவுதான் கட்டுப்படுத்த முடியும். கோவில் விழாக்கள் கூடாது, ரமலான் தொழுகை பரவாயில்லை, தேர்தல் பிரச்சாரம் பிரச்சனை இல்லை, ஆனால் திருமண விழாக்கள் கூடாது என்று அரசு மதச்சார்பின்மைனா என்னன்னு தெரியாம சட்டம் போடுது. நாம் நமக்குத் தோதானவற்றை மட்டும் விமர்சனம் செய்து நடுநிலை என்கிறோம். ரொம்ப மாட்டிக்கிட்டா இது என் எண்ணம்னு சொல்லித் தப்பிக்கறோம்.
மதுரைத்தமிழனும் நெல்லைத்தமிழனும் இங்கே நடத்திய விவாதத்தை ரசித்தேன். நன்றி.
Deleteஇந்தப்பதிவை ராபர்ட் லட்லம் எழுதிய ஒரு நாவலை வைத்துக்கொண்டு நான் சொல்ல வந்த அடிப்படையான விஷயம் மேற்கத்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாமே பிணம் தின்னிக்கழுகுகள் என்பது மட்டும்தான். இதில் ரஷ்யாவும் விதிவிலக்கல்ல.
இருவருக்கும் நரேந்திர மோடி என்றால் பிடிக்காது இல்லையா? ஆனால் நரேந்திர மோடி ஒருவரை மட்டும் குறைசொல்வதற்கு முன்னால், அவர் இடத்தில் காங்கிரசோ அல்லது வேறு மாநிலக்கட்சி உதிரியோ இருந்திருந்தால், கொரோனா பெருந்தொற்றை எப்படிச் சமாளித்திருப்பார்கள் என்பதை நினைத்துப்பார்த்தாலே, பயங்கரமாக இருக்கிறது.
டெல்லியில் கேஜ்ரிவால் மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே இவர்களெல்லாம் எப்படி நிலைமையை சமாளிப்பதில் மிகமோசமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம் இல்லையா?
அமெரிக்க தேசமே Greed பேராசை என்ற ஒற்றைச் சொல்லால் இயங்குவது. பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை தான்!
குஜராத்தின் பிளேக் பரவலை மறக்கத்தான் முடியுமா!../
ReplyDeleteஅமெரிக்கர்களுக்கு இந்தியா போன்ற நாடுகளை சோதனை எலிகளாக நடத்திப்பார்ப்பதில் இருக்கிற ஆர்வம் இங்கே நிறையப்பேருக்கு அவ்வளவாகத்தெரியாதே துரை செல்வராஜூ சார்! இந்த லட்சணத்தில் உலகத்துக்கே ஜனநாயகத்தை உபதேசிக்கிற கூத்தையும் எப்படி மறப்பது?
Deleteஅமெரிக்க, வெளிநாட்டு மருந்து வியாபாரம் அவர்களுக்கு முக்கியம்.
ReplyDeleteநவம்பரில் கொரோனா தாக்கம் குறைந்ததும், தேர்தல் விஷயத்தில், கொரோனாவை கவனிக்கவில்லை. இதுதான் பரவலுக்கு மிகப்பெரிய காரணம்.
Deleteஅமெரிக்கர்கள் மிக சுயநலவாதிகள்தான் அவர்களுக்கு தான் தன் தேசம் என்பதுதான் முக்கியம் அதை மறுக்கவில்லை.. ஆனால் எங்களைப் போல இங்கே வந்து நிரந்தரமாக குடியுரிமை பெற்றவர்கள் அப்படி இல்லை தாய்ப்பாசம் மாறாதது போல இந்தியாவின் மீதுள்ள பாசமும் அவர்களை என்றும் விட்டுப் போவதில்லை இதை இந்தியாவில் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாக புரியாது ஆனால் அங்குள்ள தேசிய தலைவர்களுக்கு அது நங்கு புரியும் அண்ட் தெரியும்
மதுரை, (இப்படி யார் உங்களைக் கூப்பிடுவாங்க.. இல்லை மதுர...). அதைப் புரிந்துகொள்ள முடியுது. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்.. உணர்வை அழிக்க முடியாது.
Deleteஇந்த ஐந்து மாநிலத் தேர்தல், அதிலும் வங்கத்தில் வெல்லணும் என்ற அதீத ஆர்வம், நவம்பர்ல கொரோனா தாக்கம் மிக்க் குறைந்தது, இனி வராது என்ற நம்பிக்கை ஆகியவை இந்த நிலைக்குக் காரணம். இப்போ கழுகு மாதிரி காத்திருக்கும் அமெரிக்க மருந்து வியாபாரிகள் அரசியல் அழுத்தம் கொடுத்து பணம் சுருட்டப் பார்ப்பாங்க.
நெல்லைத்தமிழன் சார்! வெளிநாட்டில் குடியேறிய அத்தனை இந்தியர்களுக்கும் இந்த தேசத்தின் மீது பற்றும் பாசமும் இருக்கிறதா என்ன? உதாரணத்துக்கு கனடாவில் வாழும் சீக்கிய சமூகம்! அவர்களது ஓட்டுக்காக நாட்டின் பிரதமரே என்னென்ன செய்தார் என்பதை மறந்து விட முடியுமா? அதேபோல இங்கிலாந்திலும். வேரை மறந்த கிளைகள் ஒன்றும் புதிதோ அதிசயமோ இல்லை.
Deleteஐந்து மாநிலத்தேர்தல்களில் கவனம் செலுத்தியதாலேயே பிரதமரோ உள்துறை அமைச்சரோ தங்களுடைய கடமைகளை மறந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியுமா? தேர்தல் நடக்காத மாநிலங்களில் மட்டும் கொரோனா வேகமாகப்பரவவில்லையா என்ன?
நீங்கள் மம்தா பானெர்ஜி சொன்னதையே வழிமொழிகிறீர்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எந்தவிதத்திலும் கட்டுப்படமாட்டோம் யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்றிருக்கிற ஜனங்கள் இருக்கிற தேசம் இது.
அப்புறம் அந்த லான்செட், மருத்துவ சஞ்சிகையா அல்லது மருந்துக்கம்பெனிகளின் அரசியல் அஜெண்டாவை முன்னெடுக்கிற ஊதுகுழலா? அதைப்பற்றியோ, அல்லது அவர்கள் சொன்னதையே தூக்கிப்பிடித்துப் பேசிக்கொண்டிருக்கும் ராகுல் காண்டி, சேகர் குப்தா, பர்கா தத் போன்றவர்கள் பற்றியோ நீங்கள் எதுவும் சொல்லவில்லையே!
அடிப்படையில் கோவாக்ஸின் / கோவிஷீல்டு வாக்ஸின்கள் பைசர்/மாடெர்னா வாக்சின்களை விட வித்தியாசமானது. கோவாக்ஸின் / கோவிஷீல்டு தட்டுப்பாடு இருக்கிறதா ? எதனால்?
ReplyDeleteமருந்தின் பேடண்ட் ரிலீஸ் செய்து எல்லா நாட்டினரையும் காப்பாற்ற பல நாடுகளும் இந்த கம்பெனிகளை கேட்க ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு முன்னுதாரணமாகி மற்ற மருந்துகளுக்கும் பேடண்ட் ரிலீஸ் செய்வது என்று ஆரம்பித்தால் இந்த மருந்து கம்பெனிகளின் லாபம் அடிவாங்கும் என்பதால் இதை செய்ய தயங்குகிறது. பேடண்ட் ரிலீஸ் செய்வது நடக்காது என நினைக்கிறேன்.
மொத்த அமெரிக்காவை வாக்ஸினேட் செய்ய அமெரிக்க அரசு $10 பில்லியன் வரை இந்த மருந்து கம்பெனிகளுக்கு கொடுக்கிறது. இதே வருடா வருடம் பண்ண வேண்டும் என்றால் இதுவரை இல்லாமல் இருந்துவந்த ஒரு புது வியாபாரம் இந்த கம்பெனிகளுக்கு கிடைத்திருக்கிறது. பொன் முட்டை இடும் வாத்து! யார் விடுவார்கள்?
கும்பமேளா இந்த பரவலுக்கு காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் / நியூயார்க் டைம்ஸ் / பிபிசி போன்ற மீடியாக்கள் சொல்கிறது. ஆனால் இந்த மீடியாக்கள் பொதுவாகவே இந்தியா என்றால் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு நாடு என்பதையே முன்னிறுத்துகிறது.
இந்த ஊரில் தினமும் 3000 பேர் இந்த கோவிடினால் இறந்து கொண்டிருந்த போது சவப்பெட்டிகள் போட்டோக்கள் வெளியே வரவே இல்லை. அதன் காரணம் to preserve the dignity of the dead . ஆனால் இப்பொது தினமும் நம் ஊர் சவக்கிடங்குகளையும் சுடுகாட்டில் பிணங்கள் எரிவதையும் காட்டிக்கொண்டிருக்கின்றன. இவ்வளவுதான் இவர்கள் லட்சணம்.
இந்தியாவின் இமேஜை சில வருடங்களாக உயர்ந்து வருவது பலருக்கும் கண் உறுத்துகிறது. கோவிட் விஷயத்தில் இந்திய அரசு சில விஷயங்களில் சொதப்பியதை இவை ஊதிப்பெருக்குகின்றன.
வாருங்கள் பந்து!
Deleteபிரச்சினையைப் புரிந்து கொண்டு ஒரு சமநிலையில் உங்கள் பார்வையைப் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி.
நரேந்திர மோடியை வெறுப்பவர்கள் தெரிந்து கொல்வதற்காக சில தகவல்களை இங்கே சொல்கிறார்கள்
ReplyDeletehttps://threadreaderapp.com/thread/1391305159523794946.html