மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும் மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகிப்போகும் இப்படி ஒருபாட்டு ஒன்பது ரூபாய் நோட்டு திரைப் படத்தில் வரும். மோடிக்கு எதிராக அரசியல் செய்யத் தெரியாதவர்கள் கூட அப்படி மனம் தளர்ந்து மோடி மீது வெறுப்பைக் கக்குவதே அரசியல் என்ற நிலைமைக்குப் பழகிப்போய் விட்டார்கள். விவசாயிகள் போராட்டம் என ஆரம்பித்து திக்குதிசை தெரியாமல் அந்தரத்தில் திரிகிற ஒருகூட்டத்தை, இங்கே உள்ள சில அரசியல்வாதிகள் ஆதரிக்கிற போர்வையில் மோடி மீது வெறுப்பையும் வன்மத்தையும் கக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட நாள் மே 26. அந்த நாளுக்கு என்னவாம்?
சரக்கு, மிடுக்கு என வீரவசனம் பேசிய திருமா கூட இந்த மாதிரி சரக்கு தீர்ந்துபோன காமெடிப்பீசாகி விட்டார். 2014 இல் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்ட தினமான மே 26 ஆம் தேதியை தேசிய கருப்பு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் வேளாண் சட்டங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று படித்துப்பார்த்து விட்டுத்தான் எதிர்க்கிறார்களா? வெறுப்பரசியல் செய்ய அதெல்லாம் தேவையே இல்லை என்பது இந்திய அரசியலின் தலைவிதி!
3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும்! சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோமென இசுடாலின் அறிவித்திருப்பதாக இந்த வீடியோ செய்தி. அதுமட்டும் தானா?
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் கிடைத்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களில் கமல் காசர் கட்சி கரைந்து போனதும் சகாயம் என்கிற உத்தமருடைய சாயம் வெளுத்துப்போனதும் தான்! சகாயத்துடைய சாயம் தேர்தலுக்கு முன்பாகவே கடந்த ஜனவரியில் வெளுத்தது. கமல் காசர் யாருடைய B டீம்/ கைக்கூலி என்பது தேர்தலுக்குப் பின்னால் வெளுத்தது. அவரைக் கருவேப்பிலையாகப்பயன்படுத்திக் கொள்ள அவரே யார் யாரிடம் விலைபோனார் என்பது கொஞ்சமல்ல நிறையவே வினோதமான விஷயம்!
மீண்டும் சந்திப்போம்.
அல்லக்கைகள் எல்லாம் ஜே!.. போட்ட சத்தத்தில் சகாயத்தைப் பற்றி மக்களுக்குத் தெரியாமல் போனது...
ReplyDeleteஆரம்ப நாட்களிலிருந்தே சகாயத்தின் மீது எனக்கு அத்தனை நம்பிக்கை இருந்ததே இல்லை துரை செல்வராஜு சார்! என்னுடைய நண்பர்களில் சிலர் அவருடைய வெறித்தனமான ரசிகர்களாக இருந்து படிப்படியாக நம்பிக்கை இழந்து ஒதுங்கினார்கள். இந்தத்தேர்தலில் சகாயத்துடைய தாக்கம் சுத்தமாகவே இல்லை என்பதால், தேர்தலுக்கு முந்தைய பதிவுகளில் இவரைப்பற்றிப் பேச சந்தர்ப்பம் அமையவில்லை.
Delete